Thursday, January 26, 2006

காசி, முடிந்தால் இவைகளை விளக்கவும்

அன்புள்ள காசி,
முடிந்தால் இவைகளை விளக்கவும்

1.சின்னவன், நல்லடியார்,குசும்பன் போன்றவர்களின் பதிவுகளை பல காரணங்கள் காட்டி விலக்கி வைத்து இருந்தீர்கள். இப்போது அவர்களின் பதிவுகள் இங்கே காணக்கிடைக்கிறது.

அவர்கள் எல்லாம் திருந்தி விட்டார்களா?

அதாவது நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் எழுத்தத் தொடங்கி விட்டார்களா?

எந்த அடிப்படையில் மறுபடியும் அனுமதித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?

நீங்கள் அப்போது இவர்களை விலக்கியது தவறு என்று சுட்டிக்காட்டியவர்களில் நானும் ஒருவன்.

பார்க்க: காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றிhttp://kalvetu.blogspot.com/2005/10/13.html


சிலரை விலக்கும் போது வரும் அறிவிப்பும் அதற்குத் துணையாக நீங்கள் அடுக்கும் வாதங்களும் ஏன் மறுபடி சேர்க்கும் போது வரவில்லை. நீங்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் மன்னிப்பல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஒரு வேளை நீங்கள் அவ்வாறு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டு இருக்கலாம். ஆனால் அனைவரும் அறியும்படி அவர்களின் பச்சை விளக்கை அணைத்த நீங்கள் அதே போல் அனைவரும் அறியும்படி அவர்களை மறுபடியும் சேர்த்த காரணத்தையும் சொல்லவேண்டும்.


2.போலிப் பின்னூட்டங்கள் பற்றி டோண்டு பல காலமாக புலம்பி வருகிறார். அப்போதெல்லாம் நீங்களும் ,பல எக்கியவாதிகளும் சொன்னது.

-பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை.

-தமிழ்மணம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு திரட்டி மட்டுமே.


இப்போது மட்டும் ஏன் "comment moderation" ஐ கட்டாயப் படுத்த வேண்டும்?பாதிக்கப்பட்டது நீங்கள் என்று வரும்போது நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே?

திரட்டி உங்களதாக இருந்தாலும்,என்னதான் இலவசமாக சேவைகள் வழங்கினாலும் உங்களின் இந்த செயல்கள் ஏற்புடையவை அல்ல.


திரட்டுவதில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்பதற்குப் பயந்தும்,தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,சக பதிவாளர்களை திட்டி வரும் பின்னூட்டங்களைத் கண்காணிக்க முடியும் என்பதாலும் நானும் "comment moderation" செய்து விட்டேன்.

பி.கு:மேலே உள்ள கடிதம் "thamizmaNam. com" <adm@thamizmanam.com> க்கு மயில் வழியாக அனுப்பியாகிவிட்டது.****************


****************

29 comments:

 1. தமிழ்மணம் சார்பு நிலைகளை எடுக்காமல் எல்லோருக்கும் பொதுவான அடையாளமாய் இருக்கவேண்டும்....செய்வீர்களா காசி!

  ReplyDelete
 2. கல்வெட்டு,

  இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல்களை ஒதுக்கி வைத்து விட்டுப் பாருங்களேன் - மட்டுறுத்துதல் எந்த விதத்திலும் உங்கள் கருத்துகளில் தலையிடாது என்பதே ஆகும்.

  கீழ்க்கண்ட பின்னூட்டத்தை, சதயம் வலைப்பூவிலும் வைத்திருக்கிறேன்:

  தமிழ் மணத்தின் நிலைபாடு சரியெனவே படுகிறது. சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஆபாச பின்னூட்டங்கள் மட்டுமின்றி, அவதூறு செய்யும் பின்னூட்டங்களையும் இட்டு வருகின்றனர். சிலருடைய பின்னூட்டங்களோ வெறுப்பு உமிழும் பின்னூட்டங்களாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் அநாமதேயங்களால் எழுதப்படுகின்றன. சில, வலைப்பதிவாளர்களின் பின்னணியைத் தெளிவாக தெரிந்து கொண்டு தான் எழுதுகின்றனர். அதனால், ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தங்கள் வலைப்பூவில் மட்டுறுத்தம் செய்ய வேண்டும். பதிக்கத்தக்க கருத்தாக இருந்தால், அதை அந்த வலைப்பதிவாளர் பதிப்பித்து விடலாமே - அப்பொழுதும், அவர் அருவருக்கத்தக்க, ஆபாச, வெறுப்புமிழும் பின்னூட்டங்களை வைப்பாரானால், அந்த வலைப்பூவாளாரின் தரமும் தெரிந்து விடும். கருத்து சுதந்திரத்தின் குறுக்காக புகுந்து நான் விளையாடுவதில்லை என்ற போலித்தனமான வாதங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பின்னர் அந்த வலைப்பதிவை தடை செய்யலாம்.

  இந்த செயல்பாடினால், கருத்து சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படபோவதில்லை. மாறாக, கருத்து சுதந்திரத்தின் மீதான மதிப்பு அதிகமாகும். எந்த வகையான கருத்துகள் மதிக்கப்படுகின்றன என்பது வெளியாகும். தங்களுடைய கருத்துகள் நியாயமானவை அவை பிரசுரிக்கப்படவில்லையென்றால் அவற்றை தங்கள் வலைப்பதிவிலே வைக்கலாமே - மறுக்கப்பட்ட பின்னூட்டம் என்று. இவ்வாறு செய்வது நேர்மையானதாக இருக்கும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாடகமாடும் நபர்களையும், தவறான பாதையில் வாதங்களை திசை திருப்ப முனையும் நபர்களையும் இந்த மட்டுறுத்தல் இனம் காட்டி விடும்.

  என்ன, வலைப்பதிவாளர் வந்து வாசித்து அனுமதிக்கும் வரை, பின்னூட்டங்களை வாசிக்க காத்திருக்க வேண்டும். ஒரு வகையில் பார்த்தால், இதுவே கூட வலைப்பதிவாளரை பொறுப்புள்ளவராக்கும். தினமும் எல்லா பின்னூட்டங்களையும் படித்து அதை வெளியிடுவதும் ஒரு வகையான திட்டமிடுதல் தானே.

  சகல விதத்திலும் வசதியான இந்த பின்னூட்ட மட்டுறுத்தலை எல்லாரும் நிறுவுவதில் எந்த தவறும் காண முடியாது!!! இப்படி செய்தாலும் - ஒன்றிலிருந்து தப்ப முடியாது - அது நீங்கள் அந்த மடல்களை வாசித்தே ஆக வேண்டும். அதனால், மட்டுறுத்தல் நிறுவுதல் என்பது அடுத்தவர்களுக்குப் பாதுகாப்பு தரும் அதே சமயத்தில் - வலைப் பதிவாளருக்கு எந்த பாதுகாப்பையும் உண்டாக்கித் தருவதில்லை. அதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி - anonymous மின்னஞ்சல்களை திறக்கக்கூட செய்யாமல், அழித்து விட வேண்டியது தான். ஆனால், அதனால் என்ன நிகழ்கிறது என்றால், சில அநாமதேயங்கள் எடுத்து கொடுக்கும் சில அற்புதமான தகவல்களை இழந்து விட நேரிடலாம். ஆனால், அதெல்லாம் தெரிந்தால் தானே வருத்தப்பட வேண்டியதிருக்கும்? தெரியாமலே இருக்கும் வரையிலும் பிரச்சினை இல்லை தானே?

  ஆக மட்டுறுத்துங்கள். அது ஒரு வலைப்பதிவாளர் தன் சகவலைப்பதிவாளருக்குக் கொடுக்கும் மரியாதையாகும். பின்னூட்டங்கள் மூலம் பிறர் மீது சேறடிக்க வழி திறந்து வைப்பது அநாகரீகம்.

  ReplyDelete
 3. நண்பன்,
  நான் இங்கே தமிழ்மணம் எனது கருத்துகளில் தலையிடுகிறது என்று சொல்லவில்லை.

  நான் கேட்டிருக்கும் கேள்விகள் வேறு.
  (கருத்துக்களிலும் தமிழ்மணம் தலையிட்டு இருக்கிறது. இல்லாமலா சிலரின் பதிவுகளை தனிப்பட்ட காரணங்கள் என்று சொல்லி காசி தூக்கினார்)

  ReplyDelete
 4. //சின்னவன், நல்லடியார்,குசும்பன் போன்றவர்களின் பதிவுகளை பல காரணங்கள் காட்டி விலக்கி வைத்து இருந்தீர்கள். இப்போது அவர்களின் பதிவுகள் இங்கே காணக்கிடைக்கிறது.//

  கல்வெட்டு,
  எனக்கு தெரிந்தவரை ,பொங்கலுக்கு வந்த புதிய தமிழ்மண வடிவத்தில் எல்லோருமே புதிதாகத்தானே இணைந்தோம் .எனவே முன்பு நீக்கபட்டவை,இப்போது அவர்களால் மீண்டும் சேர்க்கப்படலாம் .இப்போது பச்சை விளக்கு இருக்கிறதா என்ன? என்னையா? ஒரே குழப்பமா இருக்கு.

  ReplyDelete
 5. //1.சின்னவன், நல்லடியார்,குசும்பன் போன்றவர்களின் பதிவுகளை பல காரணங்கள் காட்டி விலக்கி வைத்து இருந்தீர்கள். இப்போது அவர்களின் பதிவுகள் இங்கே காணக்கிடைக்கிறது.அவர்கள் எல்லாம் திருந்தி விட்டார்களா?//

  கல்வெட்டு/பலூன் மாமா,

  சுமூகமாகவும் பரஸ்பம் தமிழர்கள் என்ற உரிமையிலும் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வலைப்பூக்களில் இஸ்லாத்தைப் பற்றி தரக்குறைவாக எழுதி வருபவர்களிடையே, இஸ்லாம் போதிக்கும் வாழ்வியல் முறையை சக தமிழர்களுக்கு கண்ணியாமாகவே சொல்லி வந்திருக்கிறேன்.

  நான் எதில் திருந்த வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள் என்று சுட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 6. Your questions make sense

  ReplyDelete
 7. நல்லடியார் அவர்களே,
  நான் நீங்கள் தவறு செய்ததாகக் கூறவும் இல்லை. இப்போது திருந்த வேண்டும் என்றும் கூறவில்லை. என்னங்க நீங்க உங்களைப்போய் நான் ஏன் சொல்கிறேன்.
  முதற்கண் உங்களை எல்லாம் நீக்கியது தவறு என்று வாதிட்டவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

  நான் காசியிடம் கேட்பது இதுதான்.

  தனிப்பட்ட காரணங்கள் என்று சொல்லி உங்களை எல்லாம் நீக்கிய காசி இப்போது அனுமதிப்பது எப்படி. அவர் மாறி விட்டாரா அல்லது நீங்கள் மாறி விட்டதாக அவரிடம் சொன்னீர்களா என்றுதான் கேள்வி.

  ஜோ,
  புதிய தமிழ்மணத்தில் அனைவரும் இணைய விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அனுமதிப்பது தமிழ்மண நிர்வாகிகளே. :-)
  கொஞ்ச நாளைக்குமுன் விளக்கை அணைத்த நிர்வாகிகள் இப்போது அனுமதிப்பது ஏன்? இடையில் என்ன நடந்தது?

  அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது நிலைமை. ஆனால் தேவை இல்லாமல் பச்சை விளக்கு குழப்பத்தை கொண்டுவந்து விட்டு இப்போது அனைவரையும் அனுமதிக்கிறேன் என்று சொல்லிக் கொள்வது நல்லதல்ல..

  விலக்கப்பட்டவர்களிடம் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்க வேண்டும்.

  ReplyDelete
 8. பிரகாஷ் முதலில் இதை பதிவாக்குங்கள்.
  பிரகாஷ் சொல்வதில் வரிக்கு வரி உடன்பாடு. கல்வெட்டுவின் பதிவிலும், இன்னொருவர் பாராட்டினாரே அவரது பதிவிலும் எழுதலாம் என்று போனால் ப்ளாக்கர் வேலை செய்யவில்லை.

  கல்வெட்டுவுக்கு சொல்வது இது: டோண்டுவையும் , சொந்தமாக வாலண்டரி சர்வீஸ் செய்துகொண்டு வரும், **தமிழ்மண நிர்வாகி** காசியையும் ஒன்றாக பார்க்கமுடியாது. முன்னது அவரது சொந்தக்கருத்து வேறுபாட்டால் போலிடோண்டுவுடன் அல்லல்படுவது. பின்னது நல்லதை செய்ய நினைப்பவருக்கு அருவருக்கத்தப் பரிசு கொடுப்பது.

  நீங்கள் எல்லாம் முன்ன பின்ன எந்த ஃபோரம்களிலும் எழுதியது கிடையாது என்பதைத்தான் இப்படி பதிவுபோட்டு காண்பித்துக் கொண்டுள்ளீர்கள். எங்காவது ஃபோரம்களில் எழுதினால் நிர்வாகி என்னவெல்லாம் செய்யமுடியும் என்று தெரிந்திருக்கும். இது ஃபோரமா என்று கேட்பீர்களானால், தமிழ்மணம் இல்லாமல் இயங்கவேண்டியதுதானே என்ற கேள்வியையும் கேட்கவேண்டிவரும்.

  ReplyDelete
 9. கார்த்திக்ராம்ஸ்,
  "தல அவனுங்க எல்லாம் சின்னப் பயலுக.ஃபோரம் பத்திக்கூட தெரியாதவனுங்க. நீங்க என்ன வேணுமின்னாலும் செய்யுங்க நாங்க இருக்கோம் " என்று சொல்லாமல் சொல்றீங்க. சரி சரி சொல்லுங்க

  1.காசிக்கு வந்த துன்பத்தையும் டோண்டுவுக்கு வந்த துன்பத்தையும் ஒன்றாக பார்க்க (உங்களால்) முடியாது என்று விளக்கியமைக்கு நன்றி.

  2.நாங்கள் (என்னைத் தவிர வேறு யார் யார் இந்த லிஸ்டில் உள்ளார்கள் என்று சொன்னால் நல்லது) எல்லாம் எந்த ஃபோரம்களில் எழுதியது கிடையாது என்றும்,அதன் நிர்வாகி என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் தெரியாத அப்பாவிகளாக இருப்பதனால்தான் இப்படி பதிவு போட்டு எங்களின் சின்னப்புள்ளத்தனத்தை காட்டிக் கொண்டுள்ளோம் என்பதை கண்டிபிடித்தமைக்கு மிக்க நன்றி.

  நான் எங்கெல்லாம் என்ன பெயரில் எப்போது எழுதுகிறேன் என்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது? ஆச்சர்யமான விசயம்.

  பயப்பட வேண்டாம் தமிழ் மணம் ஃபோரமா? அல்லது ஃபோரம் என்றால் என்ன என்று கேட்டு எனது அறியாமையை இங்கே காட்டிக் கொள்ளமாட்டேன்.

  தமிழ்மணம் இல்லாமல் இயங்க வேண்டியதுதானே என்ற கேள்வியைத்தான் மறைமுகமாகக் கேட்டு விட்டீர்களே :-)
  நான் காசியிடம் கேட்ட கேள்விகள் பகுதியிலேயே நான் ஏன் இன்னும் தமிழ் மணத்தில் இருக்கிறேன் (அல்லது அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறேன்) என்பதை சொல்லி விட்டேன். மறுபடியும் பார்க்க.

  ReplyDelete
 10. 'விலக்கல்களும் விளக்குகளும் ஒரு தற்காலிக ஏற்பாடு' என்றுதான் தன்னிலை விளக்கத்தில் காசி விளக்கியதாக நினைக்கிறேன்.

  மேற்கொண்டு இதைப் பெரிது படுத்துவது பண்பாடன்று என்பது என் கருத்து.

  ReplyDelete
 11. கல்வெட்டு, எதையும் காட்டமாக உங்களை குறித்து எழுத வேண்டும் என்று எழுதவில்லை.
  மேலே இட்ட பின்னூட்டம், வாய்ஸ் -இன் பதிவில் இட்டது, அப்படியே ஒரு பிரதி இங்கேயும் இட்டேன். நிற்க.

  உங்களுக்கு காசியிடம் விளக்கம் கேட்க உரிமை உள்ளதுதான், அதே உரிமை தமிழ்மணத்தில் அங்கத்தவர்களாக் இருப்பதால் வருகிறது என்பதையும் உணரவேண்டும். சுருக்கமாக சொன்னால்,
  நாமெல்லாம், (என்னயும் சேர்த்துதான் )ஏதாவது தலவலிவந்தா மட்டும் மாத்திர போட்ற மாதிரி,தமிழ்மணத்தைப் பத்தி பதிவுபோடலாம், ஆனால் உணமியில் வருடக் கணக்கில் இப்படி ஒரு காரியத்தை செய்வது எத்தகைய உழைப்பைக் கோருவது என்பதையும் , அதன் மூலம் வரும் தார்மீகமான உரிமையில் சிறு கட்டுப்பாடுகள் விதிப்பது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை
  என்பதுதான் சொல்ல விழைவது. நானும் யாரையும் விலக்கக் கூடாது என்று அந்தப் பழைய பதிவின் போதே எழுதியிருந்தேன் என்பதையும் உங்கள் கவனத்துக்குமுன் வைக்கிறேன்.

  ReplyDelete
 12. சரி. என்னால் முடியவில்லைதான் ஒத்துக்கொள்கிரேன். டோண்டுவையும் காசியையும் ஏன் ஒன்றாக பார்க்கவேண்டும் என்று விளக்குங்களேன். உணமையில் தெரியாமல்தான் கேட்கிறேன்.

  ReplyDelete
 13. கல்வெட்டு, நான் சொன்னவற்றை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை. இப்போ காசி என்ன செய்துவிட்டார் என்று குதிக்கிறீர்கள். "எது வேண்டுமானாலும் செய்ய " என்ன இருக்கிறது தமிழ்மணத்தில்?
  கமண்ட் மாடரேஷன் , வெர்ட்ப்ரெஸ் வச்சிருக்கும் எல்லோரும் ஏற்கனவே செய்வதுதான். அதைச் செய்யச் சொல்வதில் என்ன பிரச்சினை உங்களுக்கு? விளக்கினால் மேற்கொண்டு பேசலாம்.

  ReplyDelete
 14. கல்வெட்டு,
  உங்களைப் போலவே நானும் ஆரம்பத்தில் எதிர்த்தேன், குறிப்பாக மத விஷயங்களை எழுதியவர்களை நீக்குவது எனக்கு உடன்பாடில்லை. மதநம்பிக்கை இல்லாவிட்டாலும் கருத்தளவில் இன்றும் இதுவே நிலைப்பாடே. ஆனால் நடைமுறையில் வேறு சிக்கல்கள் முளைத்து அவற்றின் வக்கிரம் பரவிக்கொண்டு வருகிறது. அது ஒருநாள் உங்களையும் தொடலாம். முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு எழுதுபவர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்கள் என்னவேண்டுமானாலும் எழுதிவிட்டு நண்பர்களுக்கிடையில் கூட யோக்கியமானவர்களாக வலம் வரலாம். ஆனால் முகத்தை வெளியில் காட்டி இயங்குபவர்களுக்கு அது சாத்தியமில்லை. முகமூடிகள் அணிந்து எழுதுவது கூட சில நேரம் தேவையாயிருக்கும். ஆனால் வெளியே தெரிந்த முகங்களைத் திருடி முகமூடிகளாக அணிந்து அவர்களைப் பற்றியே வக்கிரமாக எழுதுவதை எந்த வகைக் கருத்துச் சுதந்திரத்தில் சேர்ப்பது? கருத்து சொல்வதற்குள்ள சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, சொன்ன கருத்துக்கு பொறுப்பேற்பதும் முக்கியமானது. அப்படிப் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடியவர்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தான் நாம் பாதுகாக்க முயலவேண்டும். போலி முகங்களுடன் எச்சம் கழித்துவிட்டு பொறுப்பேற்காமல் ஓடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்காக சிலர் போராடுவது வேடிக்கையாக உள்ளது. நம் கேள்வியும், கோபமும் இத்தகைய வக்கிரங்கள் மீது இருக்கவேண்டுமேயன்றி தமிழ்மணம் நிர்வாகிகள் மீதல்ல.

  இவ்விஷயமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க யாரேனும் முன்வந்தால் என் முழு ஆதரவும், உதவியும் உண்டு. அதுவரை தமிழ்மணம் நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

  ReplyDelete
 15. கார்த்திக்ராம்ஸ்,
  1.காசியையும், டோண்டுவையும் வலைப்பதிவாளர்களாகவே பார்க்கிறேன். இருவருக்கும் வந்தது ஒரே வகையான துன்பமே. பல மாதங்களாக டோண்டு புலம்பிய போதெல்லாம் ஒன்றும் செய்யாத தமிழ்மண நிர்வாகம் அதன் நிர்வாகிக்கு என்று வந்தவுடன் சட்டம் போடுவது ஏன். தனக்கு என்று வந்தவுடன்தான் ஏதும் செய்யப்படும் என்றால் ...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

  2.கட்டுப்பாடுகள் விதிப்பது நிர்வாகியின் உரிமை, துன்பம் நிர்வாகிக்கு வந்தால் மட்டுமே புதுச் சட்டம் வரும் என்றால்...அது நல்ல நிர்வாகம் அல்ல. அவ்வளவே.

  ReplyDelete
 16. டோண்டுவையும் காசியையும் ஒன்றாக பார்க்கமுடியாது என்று சொன்னால், போலிப்பெயரில் வந்து
  அசிங்கமாக எழுதுவதை ஆதரிக்கிறேன் என்று எப்படி புரிந்து கொண்டுள்ளீர்கள். அப்படி புரிந்துகொள்ளாதவரை, நான் சொல்வதில் என்ன பிரச்சினை?

  துன்பம் நிர்வாகிக்கு வந்தால் பராவாயில்லை, நிர்வாகியும் ஏதாவது செய்யலாம். ஆனால் "நிர்வாகியின் அடையாளத்தி" நிர்வாகியின் பேருக்கு வருகிறது. அதுக்கு ஒன்னும் எபெக்ட் இல்லையென்றவுடன் நிர்வாகியின் குடும்பத்து அங்கத்தினவர்களுக்கு வருகிறது. டோண்டு தனால் இயன்றதைச்செய்தார். காசியும் "தன்னால் இயன்றதை" செய்கிறார். உங்கள் புரிதலுக்கு நன்றி. மேற்கொண்டு சொல்ல எதுவுமில்லை என்னிடம்.

  ReplyDelete
 17. சுந்தரமூர்த்தி,
  எனது கருத்தும் ,உங்களது கருத்தும் பெரும்பாலானவர்களின் கருத்தும் ஒன்றே.

  "ஆபாசப் பின்னூட்டங்கள் நல்லதல்ல. கட்டுப்படுத்தப்பட வேண்டும். வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் தனிமனித தாக்குதல்களை ஊக்குவிக்கக் கூடாது"

  நான் தமிழ்மண நிர்வாகியிடம் கேட்பது வேறு.

  தமிழ்மணம் திரட்டிதான்.

  பின்னூட்டத்தை அவர் அவர் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, நிர்வாகி பாதிக்கப்பட்டவுடன் சட்டம் போடுவது...நல்லதா? நிர்வாகி நேரடியாகப் பாதிக்கப்பட்டால் மட்டுமே நல்லது நடக்கும் என்றால் ..அது நல்ல தீர்வல்ல

  ReplyDelete
 18. //காசியையும், டோண்டுவையும் வலைப்பதிவாளர்களாகவே பார்க்கிறேன். இருவருக்கும் வந்தது ஒரே வகையான துன்பமே. பல மாதங்களாக டோண்டு புலம்பிய போதெல்லாம் ஒன்றும் செய்யாத தமிழ்மண நிர்வாகம் அதன் நிர்வாகிக்கு என்று வந்தவுடன் சட்டம் போடுவது ஏன்//
  இப்போதும் சொல்கிறேன். எனக்கும், மத சம்பந்தமான பதிவுகளை நீக்குவது உடன்பாடில்லைதான். அவரவர் எழுதுவதற்கு அவரவர் பொறுப்பு என்று சொல்லியிருக்கலாம்.
  கமண்ட் மாடரேஷன் செய்த பின்னராவது மதப்பதிவுகளை சேர்க்கலாம்.

  --
  ஆனால் டோண்டு தான் எழுதும் பதிவுகளில் சம்பாதித்த எதிர்ப்புக்கும், தமிழ்மணம் வைத்துக்கொடுத்து எழுத, ஊக்குவித்து, நிமிசத்துக்கு பின்னூட்டம் பார்த்து புளகாங்கிதம் அடையச் செய்த உதவிக்கும் எதிர்ப்பு வந்தால் அதையும் **இதையும்** ஒன்றாகப் பார்க்கும் உங்களை எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை. வணக்கம்.

  ReplyDelete
 19. ellaarum arivippunu edho sollreengale adhu enna. nan miss panniten pola iruku.

  nanum comment moderationai edhirkiren. commen moderation pottal, indha all thanaku piditha karuthai mattum poduvan, edhir karuthukalai anumadhika maatan endru artham varum.

  silar ippadithan seigirargal.
  decentaga ezudhiya edhir karuthaga irundhalum amuki viduvargal.

  ReplyDelete
 20. கார்த்திக்ராம்ஸ்,
  நான் டோண்டுவின் கருத்துக்களுக்கோ அவரின் சாதி/மத சம்பந்தமான
  அல்லது வேறு பதிவுகளுக்கோ வக்கலாத்து வாங்கவில்லை.

  அவரது பதிவுகளில் பொங்கல் வாழ்த்து தவிர இதுவரை ஏதும் பின்னூட்டம் இட்டதாகக் கூட ஞாபகம் இல்லை.

  ஒரே கருத்தை நாம் இருவரும் வெவ்வேறாகப் பர்க்கிறோம் அவ்வளவே. இதற்கு ஏன் நீங்கள் என்னை மெச்ச வேண்டும்?

  எனது பார்வை வேறு உங்களின் பார்வை வேறு. நான் உங்களைப்போலவே பார்த்தால் கல்வெட்டாக இருக்கமாட்டேன் கார்த்திக்ராம்ஸ்-ஆக மாறிவிடுவேன். :-))

  அப்புறம் நான் பின்னூட்டம் பார்த்து எல்லாம் நான் புளங்காகிதம் அடைவதில்லை. :-))

  ReplyDelete
 21. கல்வெட்டு அவர்களே,

  காசி அவர்கள் பாதிக்கப்பட்ட பின்னால்தான் இந்த நடவடிக்கை என்பது சரிஅல்ல. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே காசி அவர்களைத் தாக்கியும் அவரது குடும்பதை குறித்தும் மிக கேவலமான பின்னூட்டஙலை பல பதிவுகளில் கண்டு வருகிறேன்.
  அவை பதிவர்களால் அழிக்கப்பட்டு வந்தன. இனியும் பொறுக்க இயலாத நிலையில் எடுக்கப்பட்ட முடிவாகவே தோன்றுகிறது

  ReplyDelete
 22. கல்வெட்டு,

  கேள்விகள், நீங்க கேட்டது அத்தனையும் ரொம்ப சரியானதுதான்.

  தூக்கும் போது, இப்படி செய்யப்போறேன்னு ஒரு அறிவிப்பு கூட இல்லை. ஏன் செஞ்சீங்க கேட்டா, தெனாவட்டான பதில்.! இப்படி நடந்துகிட்ட ஒருத்தர்... இப்ப எந்த காரணமும் சொல்லாம, சேர்த்துக்கறாரு, யாரும் கேட்காம பூம் பூம் மாடு மாதிரி சேர்ந்துக்கறாங்க! கேள்வி கேட்கறதும் பண்பாடில்லைனு 'அழகு' காட்டறாரு ஒரு ஆளு. விளக்கே தெரியாதுங்கற மாதிரி இன்னொருத்தரு பேசறாரு... அடேங்கப்பா.. என்னே தன்மான உணர்ச்சி தமிழனுக்கு... நினைச்சா புல்லரிக்குது மாமே!
  விட்டா கேள்வியே கேட்கக்கூடாதுன்னு சொல்லிடுவீங்க போல. இங்கன பேசுறவக எல்லாரும், இந்த கேள்விகள விட்டுட்டு, அடுத்தத பத்தி மட்டும் பேசுறது நல்லவேடிக்கையாயிருக்கு..

  ReplyDelete
 23. காசிக்குப் பிரச்சினை வந்து ஏறத்தாள 2 மாதக்கணக்காகிவிட்டது.
  நான் இதை எப்படிப் பார்க்கிறேனென்றால் ஆபாசப் பின்னூட்டங்களினதும் அதைச் செய்பவர்களினதும் தொல்லை அதிகரித்தே செல்வதால் ஒரு கட்டத்தில் நிறுத்த வழி செய்யப்படுகிறது. அவ்வளவுதான்.

  பதிவுகளை நிறுத்தி, பின் அவற்றைச் சேர்த்ததையும் இப்போதைய மட்டுறுத்தும் பிரச்சினையையும் சேர்த்துக்குழப்ப நான் விரும்பவில்லை. மட்டுறுத்துவதற்கு என் பூரண ஆதரவுண்டு.
  ----------
  இப்போதெல்லாம், பின்னர் வரப்போகும் கேள்விகளுக்காக முன்கூட்டியே பதிவுபோட வேண்டுமென்ற நோக்கில் பல பதிவுகள் வருவதாகப் படுகிறது.

  ReplyDelete
 24. சரியான கேள்விகள் கல்வெட்டு,

  நீங்க கேட்டதில எதுவுமே தப்பில்லை. என்னங்க இது, ஒரு வார்த்தை கூட சொல்லாம நினைச்ச பதிவை எல்லாம் ஒரு நாள் தூக்கிகினாரு. என்னங்க இதுன்னு கேட்டா, தெனாவட்டான பதில். இப்ப சேர்த்துக்குவாராம், ஆனா, யாருமே கேள்விகேட்கக் கூடாதாம்.

  அதுலயும் மேல போயி ஒருத்தரு, என்னது விளக்கா? அப்படின்னா? அப்படிங்கறாரு. இன்னொருத்தரு, பண்பு பத்தி விளக்கம் சொல்லி அழகு காட்டறாரு. பதில் சொல்றவங்க எல்லாம், ஏதோ சம்பந்தமே இல்லாம எதை எதையோ பேசிட்டு போறாங்க.
  நல்லா வேடிக்கையா கீதுங்க. கேள்வியே கேட்காம, பூம் பூம் மாதிரி திரும்ப சேர்ந்து அதுக்கும் கேள்வி கேட்கக்கூடாதுன்னு தனக்குத்தானே சொல்லிக்கிற தமிழர்களோட தன்மான உணர்ச்சி நினைச்சா புல்லரிக்குது மாமே.

  என்ன நடக்குதுன்னு, ஒரு விளக்கம் குடுத்து எழுதக்கூடக் கூடாதா? இங்க இருக்கறவங்க எல்லாம் என்ன ஆட்டு மந்தையா?

  ReplyDelete
 25. //பாதிக்கப்பட்டது நீங்கள் என்று வரும்போது நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே?//
  சரியான பொயின்ரைப் பிடித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 26. -பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை.

  -தமிழ்மணம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு திரட்டி மட்டுமே.


  இப்போதும் மேல் சொன்ன கருத்துக்களில் மாற்றமேதும் இல்லையென்பதே உண்மை. இன்றும்... பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது ப்ளாக்கரின் (blogger.com & we as a blogger) வேலைதான்.

  அதே போல், மட்டுறுத்தாமல் விட்டால் - இப்போதும் தமிழ்மணம் ஒன்றும் செய்யமுடியாதுதான்.

  ReplyDelete
 27. அண்ணே ரகு,
  உங்க கருத்துக்களையும் ,ஆவேசத்தையும் பார்த்தா "சும்மா குடுத்த மாட்ட பல்ல புடிச்சு பார்த்தானாம் ".."இருக்க இடம் குடுத்தா,மடத்தையே கேப்பானாம்" -ன்னு பல பழமொழி ஞாபகம் வருது.

  ஏதோ நீங்க தமிழ்மணத்து ஷேர் ஹோல்டர் மாதிரி பேசுறீங்க .ஓசில ஒரு வசதி குடுத்தா ,கஷ்டப்பட்டு அவர் சொல்லுறத கேட்டு நடந்துக்குறது தான் முறை ..நீங்க தன்மானப் புலியா இருந்தா தாராளமா வெளிய போலாமே? யார் உங்கள கட்டுபடுத்துறாங்க?என்னய்யா இது அநியாயமா இருக்கு ?

  ஊர் பஞ்சாயத்துகள்ல ஒரு பொறுப்பு எடுத்து நடத்த தெரியாட்டாலும் ,கேள்வி மட்டும் கேக்குறதுக்கு ஒரு வீராப்பு கூட்டம் இருக்கும் .அதான் ஞாபகம் வருது.

  ReplyDelete
 28. //"சும்மா குடுத்த மாட்ட பல்ல புடிச்சு பார்த்தானாம் ".."இருக்க இடம் குடுத்தா,மடத்தையே கேப்பானாம்" -ன்னு பல பழமொழி ஞாபகம் வருது.
  //
  எனக்கும், "ஓசின்னா.. பினாயிலை கூட குடிப்பாங்கன்னு கூட சொல்வாங்க" -னு பல பழமொழி ஞாபகம் வருது.

  //ஏதோ நீங்க தமிழ்மணத்து ஷேர் ஹோல்டர் மாதிரி பேசுறீங்க //
  கேள்வி கேட்க, ஷேர் ஹோல்டர்தான் வேணும்னு உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னாங்க? உபயோகப்படுத்தறவங்க யார் வேணும்னாலும் கேட்கலாங்க..பொதுவுக்குன்னு வந்தத்துக்கப்புறம்.
  //ஓசில ஒரு வசதி குடுத்தா ,கஷ்டப்பட்டு அவர் சொல்லுறத கேட்டு நடந்துக்குறது தான் முறை//

  நல்லதுங்க. கஷ்டப்படுங்க.

  ReplyDelete