
பதிவு 25: பொங்கல் வாழ்த்து
எல்லாருக்கும் வணக்கம்பா. பொங்கல் கொண்டாட்டம் பற்றி மிக விரிவாக எப்படிக் கொண்டாட வேண்டும் என்று எழுத நினைத்து இருந்தேன். பல காரணங்களால் அதை எழுத முடியவில்லை. சமயம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன். இந்த கொண்டாட்ட நேரத்தில் எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.
பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுத்து உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும் கவலை இல்லை. ஆனால் இந்துக்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் , இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் செய்யும் இறைவழிபாட்டு முறைகளைக் காரணம் காட்டி மற்ற மதத்தினர் இந்த நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.
சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.
அன்புடன்.
கல்வெட்டு (எ) பலூன் மாமா
பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html
தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html
போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html
பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html
பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html
சோதனைப் பின்னூட்டம்
ReplyDeleteபொங்கல் நல்வாழ்த்துகள் கல்வெட்டு. அப்புறம் இந்த புதிய தமிழ்மணப் பட்டையை நீங்க பதிவின் மேலேயும் கீழேயும் போட்டிருக்கீங்களே. எப்படிச் செஞ்சீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனி மடல் அனுப்பினா வசதின்னா என் மின்னஞ்சல் முகவரி kumaran.malli at gmail dot com
ReplyDeleteபொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஇதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தங்களுக்கும் எனது இணிய நல் வாழ்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
ReplyDeleteஅண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ReplyDeleteஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteNanri Baloon mama..ungalukum kudubathinarkum iniya pongal valthukal.
ReplyDeleteanbudan
Snegethy
கல்வெட்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது உளமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களது இந்தப் பதிவிலிருக்கும் கருத்தோடு நான் உடன்படுகிறேன். நம்முடைய தமிழ்மண அன்பர்களுக்கு என்னுடைய கோரிக்கையும் இதுவே.
பலூன் மாமா,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கு நன்றி.
கல்வெட்டு,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
நண்பன்
பொங்கல் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை!
ReplyDeleteஉங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! :)
பலூன் மாமா அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள். - சிறீதரன்
ReplyDeleteஎன் வீடு (புளக்) தேடி வந்து பொங்கல் வாழ்த்தையும் உங்கள் அன்பையும் தெரிவித்த பலூன் மாமாவிற்கு எனது குடும்பம் சார்ந்த தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ReplyDelete-அன்புடன் இளந்திரையன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழிய நலமே!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக.
ReplyDelete-மதி
எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதெக்கிக்காட்டான்.
தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் ,தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன்
கீதா
Kalvettu,
ReplyDeletePongal greetings to All...!
But the theme & your request in this post needs more discussion..
We will do that sometime later..
Meanwhile check these links..
http://www.hinduonnet.com/thehindu/holnus/000200601140399.htm
http://www.lohrifestival.org/harvest-festival-of-punjab.html
நண்பரே!
ReplyDeleteஉங்களூக்கும், குடும்பத்தார் அனைவருக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
பரஞ்சோதி
இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteஎன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.
ReplyDeleteபலூன் மாமாவுக்கும் உங்கள் குடும்பத்து உறவுகளுக்கும் அன்பர்கள் நண்பர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபலூன்மாமாவிற்கு எமது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபலூன் மாமா,
ReplyDeleteஉங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்! பொங்கலை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தமிழர் திருநாளாக கொண்டாட வைக்கும் முயற்சிக்கு என் பாராட்டுகள்!