
ஹுசைன் பெண் தெய்வத்தை நிர்வாணமாக வரைந்தார் என்பதெல்லாம் பழைய செய்தி. இங்க பிள்ளையாரே வந்து பரிமாறுகிறார். ம்ம்.... வேண்டினாலும் எளிதில் வரம் கொடுக்காத விநாயகா இப்படி வெளியூர்க் காரங்களுக்கு மட்டும் பரிமாறலாமோ?
//சென்ற வினாயக சதுர்த்தியன்று, சென்னை அண்ணாசாலையிலுள்ள பிரபல ஓட்டலொன்றின் சர்வர்களுக்கும், மேஜை துடைப்பவர்களுக்கும் வினாயகர் வேடமிட்டு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற வைத்துள்ளனர். இதன் வண்ணப் புகைப்படத்தைத் தமிழகத்தின் பிரபல தினசரியான ‘தினமணி’ பத்திரிகை, அதன் 8.9.2005 ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது.//
படம் மற்றும் தகவல்:
குமுதம் சோதிடம். 23/12/2005
இனியும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?
http://www.kumudam.com/jothidam/231205/231205-01.php
****************
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
****************
அன்புள்ள கல்வெட்டு,
ReplyDeleteநியாயமான கேள்வி. நானும்கூட எனது பதிவில் கண்டனம் தெரிவித்து இருந்தேன்.
இது போன்று மதங்களையும், இனங்களையும் மட்டம் தட்டும் செயல்களை உடனே தடுக்க வேண்டும்.
ReplyDeleteஅப்புறம் பார்தீங்கன்னா, இந்து கடவுள்களின் வேடமிட்டு பிச்சை எடுப்பவர்களை என்ன செய்யலாம்?
இந்த மாதிரி செயல்களால்தான் இந்துத்வா வலிமை பெறுகிறது. நள்ளிரவில் நாட்டியமாடியதை தடைசெய்த அரசு, இத்தகைய செயல்களை எப்படி பார்த்துக் கொண்டிருந்தது ? உலகளவிலும் மத சார்பான விதயங்களை வணிகப்படுத்துவதில் ஒரு ஒழுங்குமுறை (Code of Conduct) ஏற்படவேண்டும்.
ReplyDeleteஎன்ன சார் ஆளைக் காணோம்? எங்க போனீங்க?
ReplyDeleteவணக்கம் நண்பரே!
ReplyDeleteஉங்களை ஆறு பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்.
பார்க்க:-http://karuppupaiyan.blogspot.com/2006/06/blog-post_22.html
தங்களுக்குப் பிடித்த ஆறு பற்றி எழுதவும்.
அன்புடன்,
கறுப்பு.