இதில் மேலும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.இதற்குமுன் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தாவூத் பக்கத்து நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது உண்மை.அப்படியே பிடித்தாலும் மறுபடி ஒரு விமானத்தை சிறையாக்கி அதில் உள்ள பயணிகளுக்காக குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அப்படியே குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டாலும் இறந்தவர்கள் திரும்ப வரப்போவது இல்லை.
தீவிரவாதமும் உயிர்ப்பலிகளும் மனிதன் உள்ளவரை அழியாது. மதம்,மொழி,சாதி,பொருளாதாரம் ..என்று ஏதோ ஒருவடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.
நாளை என்பது நிச்சயம் இல்லாதது.ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் இருக்கும் உறவுகள்,நண்பர்களை நட்பு பாராட்டுங்கள்.மறந்தும் பகை வேண்டாம்.நாளை அவர்கள் இருப்பார்களா என்று தெரியாது.
மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!
கல்வெட்டு