Mumbai Muslims give blood to bomb victims
http://www.expressindia.com/fullstory.php?newsid=70963
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=97119&version=1&template_id=40&parent_id=22
மதங்களை மீறிய மனித உணர்வுகள் இருக்கும் அனைவருக்கும் ஒரு
Royal salute !
ஒவ்வொரு மதமும் தீவிரவாதிகளுக்கு மத ரீதியான தடையை பகிங்கரமாக விதிக்க வேண்டும். கோட்பாடுகள்/விதிகள்/மறை/வேதம் என்று வரையறுத்து இயங்கும் மதங்கள் அந்த விதிகளை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதை முதல் பக்கத்திலேயெ கூற வேண்டும்.
இராணுவ முறைகளை மீறும் இராணுவ வீரர்களுக்கு இருக்கும் Court-martial போல் நிறுவனமயமாக்கபட்ட மதங்களும் ஒரு தெளிவான நடைமுறையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சும்மா மறுமையில் நரகம் என்பெதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது.
- ஒரு பெண் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்று கூறும் மடையர்கள் அதே மதத்தைச் சார்ந்த ஒருவன்/ஒருத்தி வேற்று மத மக்களை கொழுத்தினால் அவனது பாவச் செயலால் மதத்திற்கே தீட்டு வந்துவிட்டதாக கூப்பாடு போட்டதாக எங்கும் நான் படித்ததில்லை.
- அது போல் ஒரு எழுத்தாளன் தனது மதத்தை விமர்சித்து எழுதிவிட்டான் என்று கூப்பாடு போட்டு அவனுக்கு மரணதண்டனை விதிக்கும் மத குருக்கள் அதே மதத்தைச் சார்ந்தவர்கள் 9/11 3/11 7/11 என்று ஊரைக் கொழுத்தும் போது தனது மத கயவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பதில்லை.
- அமைதியே வடிவான பிட்சுகள் இன்னும் இனக்கொலைகளை அமைதியாகவே பார்க்கிறார்கள்.
பிணந்திண்ணி மதங்கள்
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்