Thursday, September 07, 2006

சமணமும் கோவணமும்

ரு மதம் அல்லது ஒரு சில மக்களின் மதம் சார்ந்த செயல்பாடுகள் அந்த மதம் அல்லது அந்த மக்களை அறிந்தவர்களின் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. சமணர்கள் நிர்வாணமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், மக்களினூடே நடந்து செல்வதையும்,ஆண், பெண் அனைவரும் அவர்களை வணங்குவதையும் நேரில் பார்த்து இருக்கிறேன்(சூரத்).

ஒரு இடத்தில் தவறாகப்படாத ஒரு செயல் எல்லா இடங்களிலும் அப்படியே பார்க்கப்படும் என்று நினைப்பது அறியாமை.குளியல் அறையில் நிர்வாணமாக இருக்கும் நாம் வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் அப்படிச் சுற்றித் திரிவது இல்லை.அது போலதான் இதுவும். அதனால்தான் கக்கூஸில் கடவுள் படம் இல்லை.எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தவன் என்பதற்காக கக்கூஸில் கடவுளின் படத்தை எந்த பக்தனும் வைத்துக் கொள்வது இல்லை.

சூரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தமிழகத்தின் கிராமங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. Due diligence என்பது அனைவருக்கும் பொதுவானது. அது கடவுளாகவே இருந்தாலும்.

Due diligence (also known as due care) is the effort made by an ordinarily prudent or reasonable party to avoid harm to another party or himself. Failure to make this effort is considered negligence.

Gestures - The DO's and Taboos of body language around the worldWritten by: Merkel
http://www.planetpapers.com/Assets/1848.php

ஆண்குறியை மட்டுமே மறைத்து கட்டப்படும் கோவணம் (அதன் மறுபக்கத் துணி பின்புறம் சொருகப்பட்டு இருந்தாலும் அது புட்டங்களின் இடுக்கில் சென்று மறைந்து கொள்ளும்) விவசாய பூமியில் வித்தியாசமாக பார்க்கப்பட மாட்டாது.அங்கேயும் பெண்கள் இருப்பார்கள். அதே விவசாயி கிராமம் தாண்டி நகர எல்லையைத் தொடும் போது வேட்டிக்கு மாறிவிடுவான்.குறைந்த பட்சம் துண்டாவது கட்டுவான்.

தமிழக விவசாயி என்பதற்காக அவனுக்கு கோவணச் சுதந்திரம் எல்லா இடத்திலும் இல்லை. Due diligence என்பது அவனுக்கு தெரிந்த அளவிகூட இந்த சாமியார்களுகுத் தெரியவில்லை.

பார்ப்பணீயச் சாமியார்களின் அரை நிர்வாணத்திலும் சமணச் சாமியார்களின் முழுநிர்வாணத்திலும் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? சமணத்தில் அனைத்தும் செத்து உடல்-நிர்வாணம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மதங்களால் யாருக்கு இலாபம்?

பிணந்திண்ணி மதங்கள்
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?

சமணர் நிர்வாணம் பற்றி பிறரின் பார்வைகள்:

1. ‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை --விடுதலை ராஜேந்திரன்
2. சமண முனிக்கு கோவணம் கட்டுவதா பகுத்தறிவு? --செல்வன்
3. பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம். --ரோசாவசந்த்
3 comments:

 1. அய்யா கல்வெட்டு,
  இங்கே பிரச்சினையே நிர்வானத்தை எதிர்ப்பவர் யார் என்பதால் தானே தவிர்த்து யார் அவிழ்த்து போட்டு ஆடுகிறார்கள் என்பதில் இல்லை.

  இவ்வளவுக்கும், நிர்வாண எதிர்ப்பை அரங்கேற்றியது பெரியார் திராவிட கழகம். இவர்கள் தூற்றுவதோ தி.க மற்றும் தி.க, மேலும் தி.க தான்.

  இதெல்லாம் 'பரம்பரை பகை' வெளிப்படுத்தும் புகை. வேறென்ன சொல்ல?

  ReplyDelete
 2. அன்பின் கல்வெட்டு... அந்த சுட்டிகள் இரண்டுமே ஒரே இடத்திற்கு இட்டுச் செல்கிறது கவனித்தீர்களா????

  ReplyDelete
 3. தெக்கித்திக்காட்டான்,
  //அன்பின் கல்வெட்டு... அந்த சுட்டிகள் இரண்டுமே ஒரே இடத்திற்கு இட்டுச் செல்கிறது கவனித்தீர்களா???? //

  சுட்டியமைக்கு நன்றி . திருத்தப்பட்டு விட்டது.

  வணக்கத்துடன்,

  பெரியார் திராவிட கழகத்தின் இருப்பு இன்னும் பலருக்குத் தெரியாது. திராவிடர் கழகம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வீரமணியும் தி.க வும் தான். இரண்டு அமைப்புகளின் கொள்கையில் எந்தவேறுபாடும் இருப்பதாத் தோன்றவில்லை. அது அவர்களின் சொந்த சண்டை.

  இரண்டு கழகங்களின் செயல்பாட்டிலும் என்னளவில் ஆதரவோ ஒப்புதலோ கிடையாது என்பது வேறு விசயம். :-)

  ReplyDelete