Monday, January 28, 2008

குடியரசுதின நிகழ்ச்சி சென்னை/டெல்லி

சென்னையில் சனவரி,26, 2008 இல் நடந்த குடியரசுதின நிகழ்ச்சி


1.அனைத்து பள்ளி /கல்லூரி குழந்தைகளும் பாரதியின் "ஒளி படைத்த கண்ணினாய் வா வா" என்றே ஒரே பாடலையே பின்னனியாகக் கொண்டு நடனமாடினார்கள். வேறு வேறு பாடல்களைக் கொண்டு நடனம் அமைத்து இருக்கலாம்.


2.தப்பாட்டம் ஆடிய குழு மட்டுமே , திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்தவர்கள், மற்ற அனைத்துப் பள்ளிகளும் சென்னை என்றுதான் நினைக்கிறேன்.


3. தஞ்சாவூர் கலை பண்பாட்டு மையம் - ஏற்பாடுசெய்திருந்த வெளி மாநிலத்தவரின் நடனங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு வேளை , ஒரே பாடலை (ஒளி படைத்த கண்ணினாய் வா வா) கேட்டுக் கொண்டிருந்த போது இவர்கள் வந்து கலக்கிய கலக்கல் தனித்து தெரிந்து இருக்கலாம்.


அ.அஸ்ஸாம் மாநில குழு ஆடிய "பிகு" நடனம்

ஆ.நாகலாந்து குழு ஆடிய "டாரா" நடனம்

இ.ஒரிசா குழு ஆடிய "சம்பல்புரி" நடனம்

...உள்ளத்தை கொள்ளை கொண்டது.
நாகலாந்து ஒருமுறை சென்றுவர வேண்டும். மைய நீரோட்டத்தில் இல்லாத இவர்களின் வாழ்வியல் அறிய.


4.பார்வையாளர்கள் பகுதியில் , பொது மக்களை பொதிகை காட்டவில்லை. பொது மக்களையும் காட்டுவது நல்லது.


5.குடியரசு விழாவிலும் , பிரச்சார வாடையில் முதல்வர் படம் பொறித்த துறை சார் ஊர்திகள். முதல்வர் படங்களை தவிர்க்கலாம். மாற்றுக் கட்சியினரை நிச்சயம் இது கவராது.


6.எதிர்கட்சித்தலைவர் அல்லது மற்ற கட்சித் தலைவர்களைக் காணவில்லை. (தமிழர் பண்பாடு? ). யார் ஆட்சியில் வந்தாலும் இனிமேல் இது மாறப்போவது இல்லை என்றே நினைக்கிறேன். அரசியல் சாசன அடிப்படையில் அமைந்த கட்சிகளின் தலைவர்கள், குறைந்த பட்சம் குடியரசுதின நிகழ்சியில் ஒரே மேடையில் கலந்து கொள்வது நல்லது. மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தரலாம்.


7.பொதிகை தவிர யாரும் இதை ஒளிபரப்பினார்களா தெரியாது. பல தமிழ்ச்சேனல்களை மாற்றி மாற்றி பார்த்தேன். அந்த நேரத்தில் அனைவரும் சினிமா-கலைஞர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


புது டெல்லி சனவரி,26, 2008 இல் நடந்த குடியரசுதின நிகழ்ச்சி


1.எதிர்கட்சித் தலைவர் அத்வானி இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. சேது,இராமர்,குஜராத் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழகத் தலைவர்களிடம் இல்லாத ஒரு நல்ல பண்பு. ஒரு வேளை தமிழகத்தில் இந்தப் பண்பு இல்லாமல் போய்விட்டதால், சாதாரணமான ஒரு விசயம் கூட "நல்ல பண்பு" என்ற ரேஞ்சுக்குப் போய்விட்டதோ? :-(


2.தனியார் தொலைக்காட்சிகளில் "ஆஜ்தக்" மட்டுமே இந்த நிகழ்ச்சியை கவர் செய்து கொண்டு இருந்தது.


3 .நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும்வரை,குடியரசுத் தலைவர் சிரித்து நான் பார்க்கவே இல்லை. இறுக்கத்துடனே இருந்தார் (அதுதான் இயல்போ?). இராணுவ அணிவகுப்பில் சல்யூட் எப்படி அவசியமோ, அது போல் குழந்தைகளின் நிகழ்ச்சியில், ஒரு சின்ன கைதட்டலாவது அவசியம். தேமே என்று இருப்பதுதான் இந்திய ஸ்டைலா? :-( .


4. பிரான்ஸ் அதிபர் ஆர்வத்துடனும் , மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார்.


5.துணை ஜனாதிபதி அன்சாரி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.


6.பக்கத்தில் கவுடா இருந்த காரணத்தினால் என்னவோ, சோனியா ஒருவித இருக்கத்துடனே காணப்பட்டார்.****
குறைந்த பட்சம், மாநில , மத்திய கொடியேற்ற நிகழ்ச்சிகளின் முதல் 10 நிமிடமாவது அனைத்து தொலைக்காட்சிகளாலும் காட்டப்ப்படவேண்டும் என்ற கட்டாயச் சட்டம் வந்தால் நல்லது. இல்லை என்றால் இது ஏதோ பக்கத்து ஊர் சமாச்சாரம்போல் , இவர்கள் சினிமா பின்னாலேயே குடியரைசைத் தேடுவார்கள்.5 comments:

 1. உங்கள் பரிந்துரை நியயமானதே.

  நடிகை நடிகர்களை அன்றைய தினம் திரையில் தோன்றாதவாறு ஒரு தடைச்சட்டத்தையும் ஏற்படுத்தலாம். ;)

  ReplyDelete
 2. TBCD ,

  // நடிகை நடிகர்களை அன்றைய தினம் திரையில் தோன்றாதவாறு ஒரு தடைச்சட்டத்தையும் ஏற்படுத்தலாம். ;)//

  :-)))

  ReplyDelete
 3. //3 .நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும்வரை,குடியரசுத் தலைவர் சிரித்து நான் பார்க்கவே இல்லை. இறுக்கத்துடனே இருந்தார் (அதுதான் இயல்போ?).//

  அவருடைய(குடியரசுத் தலைவரின்) இயல்பாக வேண்டுமானால் இருக்கலாம் தெரியாது! ஆனால் குடியரசுத் தலைவரின்(பொதுவாக) இயல்பு இல்லை, டெல்லியில் நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் அப்துல் கலாம் குதூகலமாகத்தான் இருந்தார்.

  ReplyDelete
 4. மோகன்,
  நான், மேதகு பிரதீபா அவர்களின் இயல்போ? என்றுதான் கேட்டிருக்க வேண்டும். அவரின் தனிப்பட்ட குணமா என்றுதான் கேட்க நினைத்தேன்.

  அதுபோல், அப்துல் கலாம் அவர்கள் , கொஞ்சம் வித்தியாசமான குடியரசு தலைவர். அவர் சகஜமாகப் பழகும் ஒரு மனிதர். நிச்சயம் அவர் குததூகலமாகத்தான் இருந்திருப்பார்.

  ReplyDelete
 5. /தேமே என்று இருப்பதுதான் இந்திய ஸ்டைலா? :-( .
  /

  ம்ம்.. வேதனையான விசயம்தான்!

  இங்க என்னடானா...."State of the Union" எல்லா சேனல்களும் "போட்டி போட்டுகொண்டு" காட்டுராங்க...!

  நம்ம ஊருல - தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவர் பேசினாகூட அது என்னவோ 'பொதிகை' யோட வேலைனு மத்தவங்க கண்டுக்காம விட்டுறாங்க ;(

  ReplyDelete