Wednesday, March 17, 2010

கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்



பெ ரியாரிஸ்ட் என்றும் பெரியார்தாசன் என்றும் சொல்லிக்கொள்பவர்களை பார்த்தால் காமெடியாய் இருக்கிறது. பெரியார் சொல்லிக்கொடுக்க முயற்சித்தது பகுத்தறிவு. பகுத்தறிவின் ஒரு உப-விளைபொருள் கடவுள் என்பது பற்றிச் சிந்தித்து அவனவன் அவனுக்காக முடிவெடுப்பது. எதையும் புரிந்து கொள்ளாமல் சடாரென்று காலில் விழுவது, அல்லது எந்த தலைவனுக்காவது தன்னை ஒப்புக்கொடுத்து தாசன், இரசிகன், அல்லக்கை, சொம்பு என்று அலைந்து  திரிந்துவிட்டு; மறுநாள் இன்னொரு சமாச்சாரத்திற்கு தாசன்,இரசிகன்,அல்லக்கை,சொம்பு என்றாவது....அவர்களின் விருப்பம்.

விடாமல் சொம்பையும் முதுகில் கருத்துக் குப்பைகளையும் யாருக்காகவாது சுமந்துகொண்டு அலைவது என்பது தாசநோய் - க்கான அறிகுறி.


காட்சி1:
'சேசாஷலம்' என்ற ஒருவர் 'பெரியார்' என்ற ஒருவருக்கு , தன்னை ஒப்புக்கொடுத்தார். பெரியார்தாசன் ஆனார்

காட்சி2:
இடையில் அம்பேத்காரின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு புத்த மத சித்தாந்ததுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து சித்தார்த்தன் ஆனார்.

காட்சி3:
இப்போது சித்தார்த்தன் என்ற மனிதர் இஸ்லாத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அப்துல்லாஹ் ஆகியுள்ளார்


சேசாஷலம்  என்ற ‌ பெரியார்தாசன் என்ற சித்தார்த்தன் என்ற அப்துல்லாஹ் - எப்போது? யாருக்கு? அடிமையாய் அல்லது தாசனாய் இருக்கிறார் என்று பார்த்தால் , அனைத்தும் கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டில் அவருக்கு விளைந்த மாற்றங்களாகவே இருக்கும்.  அவர் இதுவரை கடவுள் என்ற ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்துள்ளார். அதைத்தாண்டி அவர் பயணிக்கவே இல்லை. கடவுள் என்ற ஹருத்தை ஒட்டி அமைந்த ஆற்றில் ஒரு கரையில் இருந்தவர் மறு கரைக்குப் போய் உள்ளார் அவ்வளவே. 


இது எல்லாம் அவரின் சுய உரிமை என்றாலும், பப்ளிக்கில் எதையாவது மேடை கட்டி உளறிவிட்டு , கொஞ்சம்காலம் கழித்து அந்தர் பல்டி அடிக்கும் 'நித்தியானந்தாதனத்திற்கு'  விமர்சனம் தான்.  அதைத்தாண்டி,  'யாருக்கு சொம்பெடுப்பது' என்பது ஒருவரின் தனிமனித உரிமை.

அவர் இதுநாள் வரை வருணாசிரமத்தைத்தான் எதிர்த்தார் என்றால் அது உண்மையல்ல. இஸ்லாம் என்ற மதத்தையும், கிறித்துவம் என்ற மதத்தையும்  கலந்துகட்டித்தான் கேசட் போட்டார். அவருக்கு இருந்தது மதவிமர்சனம்.

இன்று கடவுளைக்கண்டுவிட்டார் . எப்படி? அதே மதங்களின் மூலமாக.

இது போன்ற தாச/இரசிக/தொண்ட/வாசக/ அடிமைகள் யாருக்காவது அடிமையாகவே இருப்பார்கள். சுயமாக இருக்கமுடியாத ஒரு வித ஜன்னிசார்ந்த மோன நிலை.  பாவம் இவரை வைத்து கேசட் போட்டு சம்பாரித்த மக்களும் இவருக்கு கைத்தட்டி இரசித்தவர்களும்.

குத்து அறியும் திறன் கொண்டவன்,  நாத்திகவாதியாகவோ அல்லது ஆத்திகவாதியகவோ இருக்க முடியாது. மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பாட்டைக் கடந்து செல்ல முடியும்.  நிச்சயம் அதை ஆதரித்து, அதற்கு 'சொம்பு தூக்கும் ஆத்திகவாதியாகவோ' அல்லது அதை எதிர்த்து 'தெருமுனையில் சொம்புவிற்கும் நாத்திகவதியாகவோ' இருக்க முடியாது.   அப்படி இல்லாமல் ஆத்திகம் அல்லது நாத்திகம் என்ற ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால், ஒன்றிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது சகஜம்.

"சின்ன வயசில் இரசினி இரசிகனா இருந்தேன் , இப்ப கமலுக்கு மாறிட்டேன்" என்பது போன்றது ஆத்திக <- ->நாத்திக கட்சி மாற்றம்.

ஆத்திகத்திற்குள் ஏற்கனவே இருக்கும் ஒருவர், ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதம் போவதும் இப்படித்தான். ஆனால் அது, கட்சிக்குள் அணி மாறுவது போன்ற ஒரு செயல். ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதா அணிக்குப் போவது போன்றது

பகுத்து அறிய முடிந்தவன் , கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டை (சித்தாந்தம்,/கருத்து)  ஒன்றைக் கடந்தவனாகவே இருப்பான்.
கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

சுயம் இழந்தவர்ககளுக்கு  " யாருக்காவது அல்லது எந்த இசத்திற்காவது சொம்புதூக்காவிட்டால்" ஜன்னி வந்துவிடும் . சுயமாக இருக்கமுடியாது.

பகுத்தறிவு என்பது இசமா?
அதுவும் ஒரு இசம்தான்,  எல்லாவற்றையும் (பகுத்தறிவு  என்ற இசம் உட்பட) அலசி ஆராய்ந்து , பிறர் சொன்னதையும் அறிந்து, தாண்டி , கடந்து .... பயணித்துக் கொண்டே இருப்பதுஒன்றைப் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் அல்லது அறிந்தவுடன் ஜன்னி வந்து சொம்பெடுப்பது அல்ல. 

.
மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

 .
Picture courtesy
When I Saw God in Valparai...
http://radz-cookiespensieve.blogspot.com/2009/07/when-i-saw-god-in-valparai.html