Wednesday, March 31, 2010

அகில வொலக டமில் வலைப்பதிவர் சங்கத் தலைவர் பேட்டி - நினைத்தாலே கொலைநடுங்குகிறது

 தே வையிலிருந்தே அமைப்புகள் உருவாகுகிறது. அமைப்புகள் தேவைகளை உருவாக்காது. ஏன் அமைப்பாக வேண்டும்? தேவை என்ன என்பது முக்கியம்.
-  ஜமாலன் .

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?
http://pktpariarasu.blogspot.com/2010/03/blog-post_31.htmlரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளீர்கள் ஜமாலன்.
இந்த உப்புமா மட்டும் அல்ல பெட்னா என்ற xxxxx எந்த தேவைக்காக உருவாக்கப்பட்டது என்று கேட்டால் தெளிவான பதில் இருக்காது.

பார்க்க பழைய பெட்னா சண்டை:
http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html


" னமகிழ் மன்றம்"  என்ற அளவிலோ அல்லது "ரோட்டரி" ,  "இரத்தக்காட்டேரி" என்ற அளவிலோ யாரும் எங்கும் செயல்படலாம். எதற்கு இல்லாதவர்கள் , சேராதவர்கள் என்று அனைவரையும் குறிக்கும் விதமாக அனைவருக்கும் பொதுவான அர்த்தம்தரும்  "வொலக டமிள் வலைப்பதிவர் சங்கம் - தலிமை சென்னை" பெயர் வைத்து அசிங்கப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.

தி கந்தசாமி ன்னு ஒருத்தர் அதற்குமுன் யார் யாரோ உலகின் எந்த எந்த மூலையிலோ அவர்கள் பாட்டுக்கு தமிழில் டப்பா தட்டிக்கிட்டு இருந்தார்கள். அவர்களில் ஆரம்பித்து நாளை வரப்போகும் எல்லாருக்கும் சேர்த்து "மன்னார் அன்ட் கம்பெனி"  தலைமை வகிக்கும் ( லெட்டர்பேட் அளவில் என்றாலும்)  என்று சொன்னால்..எப்படி?   ஏம்பா உங்களுக்கு மனச்சாட்சிதான் இல்லை வெட்கம் கூடவா இல்லை?
 • "அறுபத்தின்மூவர் அணி"
 • "சென்னை சிட்லப்பாக்கம் 4 ஆவது குறுக்குத்தெரு சேஷாமணி தவிர்த்த (இன்னும் ரங்கபாஷ்யம் சேரவில்லை)மற்ற 3 பேர் கொண்ட தமிழ் வலைப்பதிவர் அணி"
‍  என்று ஒரு வரையறைக்குள் பெயரை வைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது. தமிழில் எழுதுகிறோம் என்பதற்காக  "வொலக டமிள்" சங்கத் தலைவர் என்று  ஒரு 1000 பேர் அல்லது  இலட்சம்பேர்  அவர்களாகவே சொல்லிக்கொள்வது "உலக நாயகன்"  என்று நமக்கு நாமே திட்டம் போல் அல்லவா இருக்கிறது.

மிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது மற்ற நாட்டில் உள்ள தமிழர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை என்று முணுமுணுத்தனர் . இது ஏற்கனவே பல பெரியோர்கள் எடுத்த முடிவு என்று சொல்லி கலைஞர் ஒதுங்கிவிட்டார். கனடா,ஈழம், சிங்கை,மலேசியா போன்ற நாட்டின் தமிழ்ப் பிரதிநிகளுடன் சேர்ந்து ஒரு மேடையில் அறிவித்து இருந்தால் ஒரு நல்ல அங்கீகாரமாய் இருந்து இருக்கும். அதைச் செய்ய கலைஞர் தவறிவிட்டார்.

சி ல வருடங்களுக்குமுன்னால் "தமிழில் பதிவு எழுத சொல்லிக் கொடுப்பது" என்ற ஒற்றை நோக்கத்துடன் சிலர் சில இடங்களில் பட்டறைகளை நடத்திக் களைந்துவிட்டனர். தலையும் இல்லை வாலும் இல்லை சங்கமும் இல்லை என்றே நினைக்கிறேன். தேவையின் பேரில் சேர்வது. நோக்கம் முடிந்தவுடன் அவரவர் வேலையைப் பார்ப்பது என்ற இருந்தார்கள். இணையத்தில் அந்தமுறைதான் நல்லது.
நோ க்கம், தேவையைப் பொறுத்து தேவைப்பட்டவர்கள் மட்டும் அந்த நிகழ்வில் மட்டும் இணைத்துக் கொண்டு அது முடிந்தவுடன் வேறு வேலையைப் பார்க்கலாம்.
மு ழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் வேண்டுமானால் "தமிழ் வலைப்பதிவு உழைப்பாளர் மற்றும் அவர்களுக்கு பின்னூட்டம் இடுவோர் சங்கம்" என்று வைத்துக் கொண்டு புத்தகத்தில் கழிவு மற்றும் வடைக்கு சாம்பார் பெறலாம். அல்லது பேட்டி கொடுக்கலாம்.  ஏன் அய்யா அப்புராணிகளுக்கும் தலைவன் நானே என்று பொருள் வரும்படி "வொலக டமிள் பதிவர் சங்கம்" என்று பேசி இம்சிக்கிறீர்கள்.

ல நேரங்களில் தொழில் நடத்த அல்லது அந்த இடத்தில் புள்ள குட்டிகளோடு வாழவேண்டி,  விரும்பினாலும் விரும்பாவிடாலும் சில சங்கங்களுக்கு சந்தா அழுது, அதன் தலைவர் என்ற சாம்பிராணிகளுக்கு சலாம் போடும் அவலம் வரும். ஆனால் இணையத்தில் எதற்கு?

ப்படியே இவர்கள் ஆரம்பித்து ஒரு நாள் தினத்த‌ந்தியில் "அகில வொலக டமில் வலைப்பதிவர் சங்கத் தலைவர்ஜி அண்ணன்ஜி டுபுக்குஜி  அவர்கள்......"........................"  இவ்வாறு சொன்னார் " ...என்று வந்து,   அதை  எந்த மாங்காயாவது பார்த்துவிட்டு "என்ன நீயும்தான தமிழில் எழுதுகிற?"  (ஆங் அப்படியா நானா?  )   என்று கேட்டு மறைமுகமாக   "அப்ப  நீயும் அந்த டுபுக்கிற்கு தொண்டன்தானடா"    என்று நாக்கில் பல்லுப்பட கேட்டுவிட்டால் என்ன ஆகும் . நினைத்தாலே கொலைநடுங்குகிறது.


.
படம் உதவி:
picture courtesy
apollo-magazine.com

.

9 comments:

 1. போற போக்கப் பாத்தா, அகில ஒலக டமில் வலைப்பதிவாளர் சங்கத்தில் சேராதோர் சங்கம்ன்னு கூட ஒன்னு வந்துரும் போலிருக்கு :-)

  ReplyDelete
 2. //ம தி கந்தசாமி ன்னு ஒருத்தர் அதற்குமுன் யார் யாரோ உலகின் எந்த எந்த மூலையிலோ அவர்கள் பாட்டுக்கு தமிழில் டப்பா தட்டிக்கிட்டு இருந்தார்கள். அவர்களில் ஆரம்பித்து நாளை வரப்போகும் எல்லாருக்கும் சேர்த்து "மன்னார் அன்ட் கம்பெனி" தலைமை வகிக்கும் ( லெட்டர்பேட் அளவில் என்றாலும்) என்று சொன்னால்..எப்படி?
  உங்களுக்கு மனச்சாட்சிதான் இல்லை வெட்கம் கூடவா இல்லை?
  //

  அப்படின்னா ஏதும் சரக்கா!? எங்கேயும் விற்கிறார்களா!?
  :)))

  நன்றாக விலாசி இருக்கிறீர்கள். சிரித்துக்கொண்டே படித்தேன்.

  ReplyDelete
 3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது உங்களின் இந்த பதிவு ..

  :)))

  ReplyDelete
 4. இதைப்படிச்சீங்களா?
  http://www.jeyamohan.in/?p=6954

  ReplyDelete
 5. //கும்மி said...

  போற போக்கப் பாத்தா, அகில ஒலக டமில் வலைப்பதிவாளர் சங்கத்தில் சேராதோர் சங்கம்ன்னு கூட ஒன்னு வந்துரும் போலிருக்கு :-)//

  அதுக்கு பதவி சண்டை இங்கிருந்தே ஆரம்பிப்போமா!?

  ReplyDelete
 6. வாரமான சங்கம் கூட்டி சரக்கடிக்கனும், அப்படினா நான் சங்கத்துல இருக்கேன், இல்லைனா நான் வெளிநடப்பு செய்கிறேன்!

  ReplyDelete
 7. வால்பையன் said...
  //அதுக்கு பதவி சண்டை இங்கிருந்தே ஆரம்பிப்போமா!? //

  சின்னபொன்னுக்கு சொல்லிவிட்டா ஆரம்பிச்சிரவேண்டியதுதான்.

  ReplyDelete
 8. வீக்கிபீடியா போலவே கலந்து கட்டி கதைக்கீறீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
 9. ஹாஹாஹா... கல்வெட்டு செம தட்டு போங்க... சிரிக்க, சிரிக்க படிச்சேன். அவனவன் பாட்டுக்கு தோணினப்போ தோணினதை கிறுக்கி வைச்சிட்டுப் போன அத govern பண்ண - மன்னார் அன்ட் கொம்பெனி தேவையா, தேவையா, தேவையா ...

  ReplyDelete