Friday, November 19, 2010

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்

ரசியல்வாதிகள் எல்லாம் சாக்கடை, குப்பை என்று சொல்லுபவர்கள்,  கல்லூரிப்ப‌டிப்பு படித்த சில கனவான்களை 'அறிவாளிகள்' ,  'திறமைசாலிகள்' என்று எளிதாக நம்பிவிடுவார்கள். மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பள்ளியில் இங்கிலீஸ் மீடியத்துல படித்தவர் என்பதற்காகவே அவரை அறிவாளியாகப் பார்த்தவர்கள் நம்மக்கள். ‌அந்த வகையில், மாண்புமிகு மன்மோகன்சிங்கும் ஒருவர். ஆளைப்பார்த்து 'நல்லவர்', 'நியாயவாதி', 'சே சே அப்படி எல்லாம் தப்புச் செய்யமாட்டார்' 'அறிவாளி'   என்றே நினைக்கப்பட்டவர்.

னது பார்வையில் மக்களின் தலைவராக இருக்க சில அடிப்படைத் தகுதிகள் , பண்புகள் வேண்டும் .பாடப்புத்தக கல்வி நிச்சயம் அந்த அடிப்படைத்தேவை இல்லை. காமரசர் நல்ல உதாரணம்.

ல்லவன் படித்தால் நல்லது செய்வான்.
திருடன் படித்தால் நூதனமாக திருட தன் கல்வியைப் பயன்படுத்திக்கொள்வான்.
அடிப்படையில் நீ யார்? நீ என்னவாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் . கல்வி "அந்த" உன் அடிப்படையில் இருந்து அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

நாய் கல்வி கற்றால், அழகாக எப்படிக் குரைக்கலாம் என்பதற்குத்தான் அந்த கல்வி பயன்படுமே தவிர, கல்லூரிப்படிப்பு கற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த நாய் இனிமேல் பேண்ட் சட்டை போட்டுத்தான் வெளியே வரும்,கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்காது என்று எதிர்பார்க்கக்கூடாது.

த்தி என்பது ஒரு ஆயுதம் அது சமையலுக்கு காய்வெட்டவும் பயன்படும் , அதே சமயம் தலையை வெட்டவும் பயன்படும். அதுபோலத்தான் கல்வியும். அது யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்தே அதன்பயன்பாடு இருக்கும். பல நேரங்களில் "படிச்சவனா இப்படி?" என்று கேட்பார்கள். படிப்பிற்கும் "நீ யார்?" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படிப்பு என்பது,  நம்பர் "0" போன்றது. அதை "1" க்குப்பின்னால் போட்டால் "1" ஐ  -> பத்தாக்கும் , "5"  க்குப்பின்னால் போட்டல் "5" ஐ -> ஐம்பதாக்கும்.


சூட்சுமம் உன்னில் உள்ளதே தவிர கல்வியில் இல்லை.

மேலும் சொல்வதானால் கல்வி என்பது நீர் போல. கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றினால் அது மாங்காய் கொடுக்கப்போவது இல்லை.

The Radia Papers– Raja, Tata, Ambani connection
http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.
http://lawforus.blogspot.com/2010/11/blog-post_313.html

Performance Audit Report on the by the Department of Telecommunications Ministry of Communications and Information Technology
http://www.scribd.com/doc/42774182/CAG-2GSpectrum-20101115

ன்னளவில் மதிபிற்குரிய மன்மோகன் அவர்கள்,  ஒரு குமாஸ்தாவாக இருக்கலாம். மற்றபடி மக்கள் தலைவராக இருக்க முடியாது. பல கோடி ரூபாய் கொடுத்தாலும் விண்ணப்பிக்காத‌  வேலைக்கு நான் போக மாட்டேன். அப்படியே ஒன்று வந்தாலும், அந்த வேலையில் எனது பங்கு, கடமை போன்றவை தெரிந்துதான் சேருவேன்.  அம்மா சொன்னார் , அப்பா கேட்டார் என்பதற்காக சும்மாகாச்சுக்கும் இருக்க நான் எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிட்டுப் போகலாமே?

இவர் இருக்கிறார் என்றால் ..அது ஏன்? என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது. இவரைபற்றி நான் ஏற்கனவே எழுதிய சில.

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


தாரம் இல்லை அய்யா. உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று உண்டா? நாட்டை வன்புணர்ந்தவன் யாரென்று தெரியவில்லை. எங்களால் அடையாளம் காட்டமுடியவில்லை. நிரூபிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வன்புணரப்பட்டது என்னவோ உண்மை அய்யா.  அரசியல் புரிய ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது , யாரவது நாட்டை வன்புணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். போபார்ஸ் ஊழல், ஹர்சத் மேத்தா ஊழல், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக் கல்லூரி பெர்மிசன் ஊழல்..இப்போது ஸ்பெட்ரம் ஊழல். என்ன செய்யலாம்? எங்களுக்கே வெக்கமாக உள்ளது.  எந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்பது எங்கள் முடிவு இல்லை.  பிறந்துவிட்டோம்.

ட்டா ,வரி சக‌லமும் சரியா உள்ள‌ உள்ள அக்மார்க் சுத்தகிரய வீட்டிற்கு , கக்கூஸ் இணைப்பு கொடுக்க முனிசிபாலிட்டிகளால் , எங்களின் டவுசர்வரை கிழிக்கப்படுகிறது. ஆனால் பலகோடி வியபாரச் சமாச்சாரங்கள் மிகச் சுலபமாக நடக்கிறது.  எப்பூடி இப்படி?


ங்கள் ஊரில் சைக்கிள் திருடி மாட்டினவன் , ஏட்டய்யாவின் ஒரு அதட்டலுக்கே டவுசரில் ஒன்னுக்குப்போவான். படித்த மேன்மக்கள் என்ன ஆனாலும் வெக்கப்பட்டதாகவே தெரியவில்லை. எப்பூடி இப்படி?

ம்பானி , டாட்டா போன்றவர்கள் பணம் செய்யும் மிசின்கள் அவர்களிடம் மக்கள் நலன் இல்லை என்று குற்றம்சாட்டுவது, ஆடு கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவகாருண்யம் இல்லை என்று சொல்வது போன்றது. அவர்களின் தொழில் பணம் செய்வது. ஒருமுறை ரத்தன் டாடாவின் பேட்டியைப் பார்த்து "கொஞ்சம் நல்லவரா இருக்காரே" என்று நினைத்தேன்.

Polyester Prince-The Real Story of Dhirubhai Ambani
http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India


சென்னையைத்தவிர எந்த மாவட்டத்திலும் அல்லது மாநிலத்திலும் ஒரு நாளைக்கூட தங்கி செலவழித்திராத மண்டூகங்கள், கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள், இன்னும் அதுஅதுகள் சார்ந்த கட்சிக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டுள்ளது. எப்பூடி இப்படியெல்லாம்...? மூளையை எப்படி அடகு வைக்கிறீர்கள்?

சோ ற்றால் அடித்த பிண்டங்கள், அடுத்த தேர்தலில் யார் அதிக காசு கொடுப்பார்கள் ஓட்டுப்போடலாம் என்று இருக்கும். இவர்களுக்கு காசு கொடுப்பதற்காகவே அரசியல்வாதிகள் நிறைய தவறு செய்ய நேரும்போலத் தெரிகிறது. ( கலாச்சார கூமுட்டைகள் இதுக்கெல்லாம் வெட்கப்ப‌டுதுகளா என்று தெரியவில்லை. மதவாதிகளுக்கும் , கலாச்சார கூமுட்டைகளுக்கும் பொம்பளப்பிள்ளைகள் டவுசர் ஒழுங்காப்போடுதுகளா என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் போல.)

பிழைத்திருப்பதற்கும் வாழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.


எதைப்படிப்பது எதைவிடுவது ?

Scam
 
http://news.outlookindia.com/item.aspx?701401

http://www.outlookindia.com/article.aspx?268064

http://www.outlookindia.com/article.aspx?268066

http://www.outlookindia.com/article.aspx?268068

http://www.outlookindia.com/article.aspx?268065
5 comments:

 1. கலாச்சார கூமுட்டைகளுக்கும் பொம்பளப்பிள்ளைகள் டவுசர் ஒழுங்காப்போடுதுகளா என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் போல..//

  அது புண்ணிய பூமியின் மான்புபது. அதனை மானிடர் செய்து வந்தால் மாதம் மும்மாரி பொழியும். எவன் யார் வீட்டை சுரட்டினால் எங்களுக்கென்னா...

  ஸ்கண்டல்ஸ் பத்தியெல்லாம் உங்களுக்கு அக்கறையில்லயான்னு கேட்டதிற்கு ஒரு பய மூச்சு விடலையே. என்னமோ டவுசர் மேலதாம்ப்பா ஒரே குறியா இருக்காய்ங்க.

  ReplyDelete
 2. ஆங்காங்கே அருமையான எள்ளலோடு அருமையான இடுகை.

  ReplyDelete
 3. தெகா, கையேடு ‍- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. //சென்னையைத்தவிர எந்த மாவட்டத்திலும் அல்லது மாநிலத்திலும் ஒரு நாளைக்கூட தங்கி செலவழித்திராத மண்டூகங்கள், கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள், இன்னும் அதுஅதுகள் சார்ந்த கட்சிக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டுள்ளது//

  ரசித்தேன்....:)))

  ReplyDelete
 5. உங்கள் கருத்துக்களை படித்து முடித்து சற்று தாழ்வு மனப்பான்மை இயல்பாக உருவாவதை தடுக்க முடியவில்லை. இது போன்ற பல எண்ணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு வினோத முயற்சியில் இறங்க வைத்துள்ளது. இரண்டு மூன்று நாட்களில் அதைப் பற்றி எழுதுகின்றேன். இப்போது சொல்ல சற்று தயக்கம். முடிவு வரட்டும்.

  பல கருத்துகள் அப்பட்டமாக இருப்பதோடு சம்மட்டியால் அடிப்பது போலவே உணர்கின்றேன்.

  ReplyDelete