Tuesday, May 29, 2012

நீயா? நாயா?

னது அம்மா- in - law வுடன் பேசுவதற்காக (மனைவியின் அம்மா.. தமிழில் சொல்வது என்றால் மாமியார்) கோலங்கள் தொடங்கி கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வரை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வேன்.  சும்மா வெறுமனே சாப்டீங்களா? என்ன சாப்டீங்க என்பதைத்தாண்டி , அவருடன் உரையாடலைத் தொடர,  அவர் இரசிக்கும் செய்திகளைத் தொட்டு உரையாடலை வளர்த்து செல்வது அவருடன் என்னை தொடர்பில் வைத்திருக்க உதவுகிற‌து. உரையாடல் விவாதமானாலும் எங்களுக்குள் ஒரு நல்ல உறவை தக்க வைத்துக்கொள்ள இத்தகைய உரையாடல்களை நானே வலிந்து செய்வது வழக்கம்.

அந்தவகையில்தான் கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வையும் அவ்வப்போது பார்த்து வைப்பது வழக்கம்.

சமீபத்தில் பேசப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் என்பரை இணையத்தில் உலாவும் பல சுவரொட்டிகளில் (போஸ்டர்களில்) பார்த்துமட்டுமே இருக்கிறேன். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.
சூப்பரு ஸ்டாரு, 
இளவட்ட தள , 
உண்மையான தல, 
வொலக டமிள் தலவைர் ,
கேப்டன் ஆப் சினிமா , 
வொலக நாயகன் ......
வரிசையில் இவரும் ஒரு அடைமொழி வைத்துக் கொள்கிறார்.

தனக்கென ஒரு அடையாளத்தை பிச்சாத்து டிவி சோவில் தக்கவைக்க பம்மாத்திற்காக (போலி அடையாளம் ) கோட்டு சூட்டு போட்டுக் கொல்லும் ஒருவர், அதைவிட பெரிய வெள்ளித்திரையில் , ஒருவர் அவருக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொள்ள‌ செய்யும் முயற்சிகளை கிண்டல்தொனியில் கேட்பது மொள்ளமாரித்தனம்.

உண்மையிலேயே சமுதாயத்தைப் புரட்டிப்போடும் நிகழ்ச்சிகளை செய்ய தில் வேண்டும். எங்கே நெஞ்சில் மாஞ்சா இருந்திருந்தால் பர்தா குறித்த விவாதத்தை ஒளிபரப்பி இருக்கலாம் அல்லது வொலக நாயகன்  எப்போது எப்படி யாரால் வொலக நாயக பட்டம் வாங்கினார் என்று கூப்பிட்டு கும்மி அடிக்கலாம்.

***

அவமானப்படுத்த வேண்டும் என்ற மறைமுக எண்ணத்தோடு கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொன்ன பவர்ஸ்டார் என்ற ஒரு சராசரி மனிதன் உயர்ந்து நிற்கிறார் என் மனதில்.