முதலில் எங்கள் ஊரில் பாப்புலராக இருந்தது "அசோகன் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், அசோகன் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள். ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு மூன்று சைக்கிள்களில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபையர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெளம்பிவிடுவார்கள். சிலகாலம் கழித்து இவர்கள் மூன்று சக்கரவண்டி வாங்கியதாக நினைவு.
சின்ன வயதில் என் அண்ணன் இவர்களுடன் ஒட்டிக்கொண்டே சுத்துவான். வீட்டில் சண்டை நடந்தால் அவன் கோவித்துக்கொண்டு போகும் இடங்களில் 'அசோகன் சவுண்ட் சர்வீஃச்' ஒன்றாக இருக்கும். ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, என் அண்ணன் போன்ற பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் அசோகன், யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி இவனுக்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, அசோகன் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.
கல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக" , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள். தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.
அரசியல் மேடைகளில் பெரும்பாலும் ஒரு மைக் இருந்தாலே ஒப்பேற்றிவிடலாம். எப்பவாவது இரண்டு மைக் வைக்க வேண்டி வரும். ஆனால் நாடக மேடைகளில் அதிக மைக் தேவைப்படும். பெரும்பாலும் மேளக்காரரருக்கு மைக் தேவைப்படாது. ஆனால் ஆர்மோனியத்திற்கு ஒரு மைக் அவசியம். நாதசுவரம் ஊதுபவர் அவர் முறை வரும்போது மைக் இருக்கும் பக்கம் திரும்பி ஊதித்தள்ளிவிடுவார். பொதுவிதியாக ஆர்மோனியம், நாதசுவரம், மேளம் அடங்கிய வாத்தியக் குழுவிற்கு இரண்டு மைக் வைக்கப்படும். நாடக நடிகர்கள் பேச ஒன்று அல்லது இரண்டு மைக் வைக்கப்படும். ராசபாட் நடிகராக இருந்தாலும் , பபூனாக இருந்தாலும் இருக்கும் மைக்கைத்தான் மாற்றி மாற்றிப் பயன்படுத்த வேண்டும். இப்போது இருப்பதுபோல வயர்லெஃச் மைக்குகள் , மேடையில் தொங்கும் மைக்குகள் கிடையாது அப்போது. மேடையில் எங்கு ஆடிக்கொண்டு இருந்தாலும் , வசனம் பேச வேண்டும் என்றால் மைக் அருகில் வந்தே பேச வேண்டும்.
சத்தம் ..சத்தம் ..சத்தம் மட்டுமே. சத்தத்தை கூட்ட மற்றும் குறைக்க மட்டுமே முடியும். இப்போது இருப்பதுபோல வாத்தியங்களுக்கு தக்கவாறு தனித்தனி அலைவரிசையில் தனித்தனியாக மிக்சிங் செய்ய முடியாது. சத்தம் அதிகம் வந்தால் "நல்ல மைக்செட் பார்ட்டி" இல்லை என்றால் வாடிக்கையாளர் குறைந்துவிடும். போட்டியே இல்லாத ஊரில் புதிதாக "திருமலை ஒலி&ஒளி அமைப்பு" கடை போட்டது. இவர் அருகில் உள்ள கிராமத்துக்காரர். எங்கள் ஊரில் வந்துது கடை போட்டார். காலப்போக்கில் இருவருக்கும் தனித்தனி ஆர்டர்கள் கிடைத்து இருவரும் நன்றாகவே தொழில் செய்துகொண்டு இருந்தார்கள். காலத்திற்கு ஏற்ப இருவரும் ஃச்பீக்கர் டப்பாக்கள் வாங்கி அடுக்கி வைத்தார்கள்.
குழாய் வடிவ ஃச்பீக்கரில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அதை எங்காவது கட்ட முடியுமே தவிர அருகில் வைத்து கேட்க முடியாது. விழாவீடுகளுக்கு வெளியே நல்லா கேட்கும் பாட்டு, அந்த வீட்டின் பந்தலின் உள்ளே கேட்காது. அந்தக் குறையை ஃச்பீக்கர் டப்பாக்கள் நிவர்த்தி செய்தன. அடுத்து வந்த தலைமுறையினர் மதுரையில் இருந்து பெரிய மைக்செட் பார்ட்டிகளை கொண்டுவந்து அதிக வித்தைகள் காட்டினார்கள். பம்பர் குலுக்கல் பரிசுடன் நடந்த பெரிய நாடகத்திறுகு மைக் செட்டு அமைக்க ஒரு பெரிய கம்பெனி மதுரையில் இருந்து வந்தது. போகஃச் லைட்டுகள் , கலர் கலர் மேடை லைட்டுகள் , 5 க்கும் மேற்பட்ட மேடை மைக்குகள் என்று வைத்தபோது அது பெரிய ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. அசோகன் மற்றும் திருமலை குழுவிற்கு இப்படியான நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குறைந்துகொண்டே போனது.
ஒரு கட்டத்தில் அவர்களின் அலுமினிய கூம்பு ஃச்பீக்கர்கள் படிப்படியாக சத்தத்தை குறைத்து மெளனமாகிவிட்டன.

Picture courtesy: wikimedia.org