வழி நெடுக பல கொடிக் கம்பங்களைக் கடந்து செல்வேன். பள்ளிகள், கார் விற்பனை நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் என்று. கடந்த சில வருடங்களாக, மாதங்களில் ஒருமுறையேனும் இந்தக் கொடி, தன்னை இறக்கிக் கொண்டு, யாருக்காவது அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும்.
இது வாடிக்கையாவிட்டத்து. Becoming a new normal.
எனது வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டுள்ளேன். இந்த நாட்டின் அரசியலை, தேர்தலை புரிந்து கொள்ள வெகு நாளாயிற்று எனக்கு. அமெரிக்காவின் சட்டம், அது கொடுக்கும் சுதந்திரம் என்று பலமுறை அதிசியத்திருக்கிறேன். அதிகமாக கிராமங்கள் பக்கம் செலவழிப்பவன் என்ற முறையில், இவர்களின் துப்பாக்கித் தேவையின் அரசியல் அறிந்தவன். அதன் நியாயம் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே.
அந்த சுதந்திரம், அந்த தேவையின் நியாயம், கணநேர கோப வெளிப்பாட்டின் கொலையாகவும், அரசியல் மதம் சார்ந்த பிரிவுகள் கொடுக்கும் அழுத்தங்களின் கொடுங்கொலைக்களமாகவும் மாறி வருகிறது.
பெரும்பான்மை மக்களின் ஓட்டுதான் அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அந்த பெரும்பான்மை மக்களின் இதயங்கள் அழுகிவிடும் நிலையில், மனிதம் மாண்டுவிடுகிறது. துப்பாக்கிக்கான கட்டுப்பாடுகள், சட்டவடிவாக மாறும் என்பது என் நம்பிக்கை மற்றும் ஆசை.
கலிபோர்னியாவில் நேற்று இரவு நடந்த துப்பாக்கி சூட்டுக் கொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!
12 dead in California bar shooting
https://www.cnn.com/us/live-news/california-shooting-intl/index.html