தாழ்த்திக்கொண்ட மக்கள் அல்ல, தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுங்கிய மக்கள் அல்ல, ஒடுக்கப்பட்டவர்கள்.
சனாதன வேதமதம் (aka இந்து) என்பது, அதன் பார்ப்பனிசத் தத்துவங்களை(வருண பேதம்) கடவுள் உருவாக்கியதாகச் சொல்கிறது.
கீதை - அத்தியாயம் 4 சுலோகம் 13
------------------------------------------------------------
சதுர் வர்ணம் மயா சிருஃச்டம் (catur-varnyam maya srstam)
குண கர்ம விபாசக (guna-karma-vibhagasah)
தஃச்ய கர்த்ரம் அபிமாம் (tasya kartaram api mam)
வித்தய கர்த்தார அவ்யம் (viddhy akartaram avyayam)
இதன் பொருள்:
------------------------
நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை.
அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும்.அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.
இப்படிக்கு,
கிருட்டிணன் (கடவுள்)
**
இதைச் சொன்னால் பார்ப்பனிசம் கடைபிடிப்பவர்கள் (நவ பார்ப்பனர் உட்பட) இதன் பொருளை மாற்றி, "அப்படியெல்லம் இல்லை. இது குணத்தால் வருவது.திராவிடம்தான் மாத்திச் சொல்கிறது" என்பார்கள். சரிதான் எந்த நூற்றாண்டிலாவது, அப்பா அம்மா அய்யர்/அய்யங்காரா இருந்து, அவர்களின் பிள்ளைகள் குணத்தால் வேறு வர்ணத்திற்கு மாறிய எடுத்துக்காட்டு உண்டா? அய்யர் அய்யங்காராக இருந்து அருந்ததி சாதிக்கு மாறிய, அல்லது அருந்ததி சமுதாயத்தில் இருந்து அய்யராக மாறிய ஒரு குடும்பத்தைக் காட்டுங்கள். ஏன் ஆயிரம் ஆண்டுகளாக குணத்தால் மாற்றம் நடக்கவில்லை வர்ணத்தில்.
இதைத்தான் மிசுடர் இந்துக் கடவுள் சொன்னார், "அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது" என்று.
வேலைக்குப் போகும் பெண்களை விலைமாதர்கள் என்று சொன்ன ஒரு சாமியாரை அய்யர் இனத்தில் இருந்து விலக்கியா வைத்தார்கள்? பெண்கள் படுத்துதான் முன்னேறுகிறார்கள் என்று சொன்ன சிரிப்பு நடிகர் ஒருவர் இன்றும் அய்யராகவே உள்ளார். அவரின் குணத்தால், "தம்பிராசு சங்கம்" அவரை வேறு வர்ணத்திற்கு மாற்றி அறிவுப்பு வெளியிட்டுவிட்டதா என்ன?
**
சனாதன வேதம் என்பது, அய்யர் அய்யங்கார்களுக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மதம். அய்யர் அய்யங்கார்களின் உளவியல் அடக்குமுறை என்பது, கடவுள் என்ற கான்செப்டை ஒட்டியது. அவர்களின் அனைத்துச் சித்தாந்தங்களும் கடவுள் என்னும் ஒன்றைக் கற்பித்து, அதற்கு அருகில் தாம் மட்டுமே இருக்க தகுதியானவர்கள் என்று சொல்லி, சாமான்ய மனிதனை நம்பவைத்து, காலம் காலமாக செய்துவரும் உளவியல் ஒடுக்குமுறை. Yes , continuous reinforcement of dogmatism.
இப்படியான ஒடுக்குமுறைகளில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும் என்று சொல்லி கேள்வி கேட்டால், இத்தகைய செயல்களை விமர்சிப்பது மற்றவர்களின் தாழ்வுமனப்பான்மை என்று சுலபமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.
சாசுதிரம், சடங்கு மற்றும் பயமுறுத்தல் போன்றவை இத்தகைய irrational behavior களை மக்களிடம் ஊக்குவிக்கிறது. சாதரண மக்களை ஆட்டுவிக்கும் உளவியல் சுமைகள் அதிகம். ஒரு காணொளியில், (https://twitter.com/_karunai_malar/status/1058957980878557185?s=09) அய்யர் அய்யங்கார்கள் தின்ற எச்சில் இலையில் அடுத்தவர்கள் உருள்கிறார்கள். இதை தாழ்வு மனப்பான்மையால் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அதைவிட மனித குரூர சிந்தனை இருக்க முடியாது.
**
கோவிலில் பூசை செய்யும் அய்யர் அய்யங்கார் போல, தானும் கருவறைக்குள் நுழைய, சக "பறைய இந்து" போராடினால், அது அவர்களின் தாழ்வு மனப்பான்மையா? அல்லது எல்லா இந்துக்குமான உரிமை கோரலா?
வெள்ளையர்களைப் (white race) பார்த்து கருப்பின மக்களுக்கு தாழ்வுமனப்பான்மை என்று racism த்திற்கு சப்பைக்கட்டு கட்ட முடியுமா? அமெரிக்க கருப்பின அடிமைக்காலத்தில், அம்மக்களின் போராட்டம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையால் வந்ததா? அடிமைத்தனத்தை உயர்வா எடுத்து அப்படியே வாழ்ந்திருக்கனும் அதுதான் சரிபோல.
**
அய்யர் அய்யங்கார் எச்சிலில் மற்ற மக்கள் உருளும் இப்படியானதொரு இழிநிலையில் அவர்களை வைத்துள்ள வேத சனாதனமதம்(aka இந்து) எப்படி அன்பே உருவானதொரு கடவுளின் மதமாக முடியும்? உருள்பவர்களைவிட, அப்படி உருள்வார்கள் என்று இப்படி எச்சில் இலை விழாக்களில் உட்கார்ந்து சாப்பிடும் மனிதர்களை என்ன செய்வது?
அய்யர் அய்யங்கார்களை முன்னிலைப்படுத்தும் Irrational சடங்குகளின் உளவியலில் இருந்து எப்படி சாமான்ய மனிதனை விடுவிப்பது என்பதே பேச்சாக இருக்க வேண்டும். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அதற்குத்தான் உழைத்தார்கள். அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலையை "அவர்களின் தாழ்வுமனப்பான்மை" என்று கார்பெட்டுக்கு அடியில் தள்ளிவிடுவது victim shaming.
**
பாசிய , ரேசிச, நாசிச வரிசயில் உலகிற்கு இந்துமதம் கொடுத்த கொடை பிறப்பால் இழிவு அட்டவணை தயாரிக்கும் பார்ப்பனிசம்.
அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை.
-------------------------------------------------------
இந்த பார்ப்பனியத்தனம் அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை.
ஆணிவேர் வரை எல்லா சாதிகளிலும் உள்ளது.. திருப்பூரை அடுத்துள்ள அலகுமலை கிராமத்தில் சக இந்து (தாழ்த்தப்பட்ட) சமூகத்தினர் ஈசுவரன் கோயில்(??) வழியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துக்காக சக இந்து ஆதிக்கசாதி மக்கள் (அது என்ன சாதி??) கம்பிவேலியை அமைத்திருக்கிறார்கள். இது இன்று நடப்பது.
https://www.vikatan.com/news/tamilnadu/141413-untouchability-issue-at-a-village-in-tirupur-district.html
"உங்களுக்கு வேணுமின்னா தனிக்கிணறு வெட்டிக்கோங்க" என்பது போல, "இந்தச் சாலை வழியேதான் போகனுமா என்ன?" என்றும் கேட்கலாம். இப்படி ஆதிக்க சாதியைப் பார்த்து போராடுவது, இந்தக் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். அப்படிச் சொல்பவர்கள் நிச்சயம் கடவுள்கள்.
**
ஈசுவரன் கோயில் வழியாகச் செல்ல குழந்தைகளைத் தடுத்து வைத்துள்ளார்கள். இப்படியான கொடுமைகளைப் பார்த்தும் அந்த ஈசுவரன் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாத்துக்கும் காரணமான, அனைத்தையும் அறிந்த, நம் தலைவிதியை ஏற்கனவே தீர்மானித்த, நம் துயரங்களையும டிசைன் செய்த, ஆர்க்கிடட்டான ஈசுவரனிடம் முறையிடமுடியாது. அப்படிச் செய்வது, மலேரியா குறித்து கொசுவிடம் பேசுவது போன்றது. "You cannot discuss your Malaria with the Mosquito!".
Rational thought process கொண்ட மனிதர்கள்தான் சத்தம் எழுப்ப வேண்டும்.
**
Rational thought process கொண்ட மனிதர்களுக்கு moral (ஒழுக்கம்) கிடையாது, அவர்கள் ஏன் இதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவஅறிவிலார்கள் (irrational people) . அல்லது, "அறிவியலார்கள் இரகசியமாக கடவுளை ஏற்கிறார்கள்" என்ற சந்தேகம் அவர்களுக்கு.
இது எப்படி உள்ளது என்றால், "தள்ளுவண்டி வச்சு நடக்கும் குழந்தை, அப்பா அம்மாவும் இரகசியமாக தள்ளுவண்டி வைத்துள்ளார்கள். இல்லாட்டி அவர்களால் நடக்க முடியாது" என்று நம்புவது போன்றது. மதக் கதைப்புத்தங்களை மறைத்து வைத்துவிட்டால், நீங்கள் (irrational people) உங்களின் moral (ஒழுக்கம்) value களை இழந்து, திருடனாக, கொள்ளைக்காரனக மாறிவிடுவீர்களா என்ன?
Irrational people can be happy with their stupidity but looks like they won’t be
happy until all believe in that stupidity.
*