Friday, May 12, 2006

தேர்தல் அலசல்2: You too Vaikoo?


னுசன் இப்படி ஆவாருன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.நடைப் பயணம், ஊரில் கண்மாய் வெட்டுதல், பிரதமர் மற்றும் எல்லா அரசியல் பிரமுகர்களிடம் நல்ல உறவு.நல்ல பேச்சாற்றல் இப்படி பல இருந்தும் தேர்தல் என்று வந்ததும் இவர் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை.சரி அதுதான் தேர்தல் நேரம் எல்லாரும் மனட்சாட்சியை தூக்கி பரணில் போட்டுவிட்டு தேர்தல் கூட்டணிகள் அமைக்கலாம். ஏனென்றால் தேர்தல் கூட்டு என்பது வெட்கம் அறியாதது.

ஒருவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றால் பிற்காலங்களில் அதுவே சாணக்கியத்தனமாகவும், தோல்வி அடைந்தால் கேவலாமாகவும் பார்க்கப்படும். சரி இப்போதுதான் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் ஏன் அம்மா புராணம். கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தால் போதும். தேவை இல்லாமல் அங்கேயே குடியிருப்பது நல்லதல்ல.

எப்படியோ முதல் முதலாக சட்டசபையில் கணக்கு தொடங்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

ஏற்கனவே தமிழகத்தில் தனி மனிதப் பண்புகள் செத்து சுண்ணாம்பாகி விட்டது.போன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர், முதல்வராக இருந்தால்தான் சட்டசபைக்குப் போவேன் இல்லாங்காட்டி கையெழுத்து மட்டும் போடுவேன் என்று புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்தார்.அப்போது இருந்த முதல்வரோ மத்தியில் இருக்கும் பிரதமர்,மற்றும் அமைச்சர்களை மதிப்பது, பார்ப்பது தன்க்கு இழுக்கு என்று இருந்தார்.தமிழகம் அரசியல் பண்புகளை இழந்து குப்பையாகி விட்டது.

தனது தந்தையின் இறுதிக் காரியத்துக்குப் போகாத இன்பத்தமிழனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

அது என்ன அந்தக் கூட்டணியில் இருந்தால் எல்லாரும் மாறி விடுகிறார்கள்?
அய்யா, தமிழக இளைய தலைமுறைக்கு நல்ல பண்புகளைக் காட்டுங்கள்.

புரியவில்லை ?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்துச் சொல்லுங்கள்.

அவரின் கொள்கையும்(?) உங்களின் கொள்கையும்(?) வேறாக இருக்கலாம்.அதற்காக இப்படி எல்லாம் நீங்கள் மாறிப் போனது உங்களுக்கே வெட்கமாக இல்லை?ஒருவேளை நீங்கள் வாழ்த்து தந்தி அனுப்பி இருக்கலாம். அது போதாது.

தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்காக என்ன உருப்படியாக செய்யலாம் என்று சிந்தித்து தொண்டாற்றுங்கள். நீங்கள் இப்போது செய்யும் செயல்கள் உங்களின் வருங்காலத்திற்கு அடித்தளமாக மாறும்.பொட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு வெளியே வாருங்கள் போதும் தேர்தல் அலசலும் அறிக்கைகளும்.

****************


****************

2 comments:

  1. ஜெ:

    அடிச்ச கைப்புள்ளைக்கே(வைகோ) இவ்வளவு இரத்தம்னா....

    அடி வாங்னவன் உயிரோட இருப்பாங்கிரா...!!??



    நாஞ்சில் சம்பத்:

    இப்படி.. உசுப்பேத்தியே....உசுப்பேத்தியே....வைகோவை... சைகோ அக்கிவிட்டுட்டுடானுங்க.....



    வைகோ:

    இன்னும் நம்மள இந்த ஊரு நம்புதாடா??

    ReplyDelete
  2. உண்மையிலேயே நல்ல பதிவு. அரசியல் நாகரீகம் வளர வேண்டும். அதற்கு நீங்கள் சொல்லியிருப்பது மிகப் பொருத்தமானது.

    ReplyDelete