Tuesday, April 29, 2008
ரெண்டு ஐட்டம் ஆட்டம் + நாலு சண்டை+கொஞ்சம் அழுகை + காமெடி (கிரிக்கெட்) = சூப்பர் எண்டெர்டெயின்மென்ட்
எல்லாம் இருக்கு காமெடி இல்லையா? -ன்னு கேட்க வேண்டாம். இவனுக விளையாடுற ஆட்டம், அது பேரு என்ன கிரிக்கெட்டா? அதே பெரிய காமெடிதானே?
அப்புறம் மைக்கைப்பிடிச்சு பெனாத்திகிட்டு இருக்கும் ரிட்டையர்டு ஆசாமிகளுக்குப்பதிலா சின்னி ஜெயந்தை வச்சு மிமிக்ரி பண்ணலாம். அதுவும் நல்ல எண்டெர்டெயின்மென்ட் தான்.
Harbhajan Singh slapping Sri Sreesanth
http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article3835496.ece
பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்
http://kalvetu.blogspot.com/2008/04/20-20.html
படங்களுக்கு நன்றி:
http://www.chennaisuperkings4u.com/04/27/ipl-cheerleaders-photos-during-the-cricket-matches/
Sunday, April 27, 2008
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
****
இன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்சிங் புனிதர்களா?
Bad News India என்ற பதிவில் நாராயனமூர்த்தி,மன்மோகன் சிங்கைப் பற்றி உயர்வாக எழுதப்பட்து உள்ளது.எனக்கு இவர்கள் ஒன்றும் பெரிய புரட்சியாளர்களாகத் தெரியவில்லை.ஒருவர் சராசரி முதலாளி இன்னொருவர் சராசரி அரசியல்வாதி அவ்வளவே.
இவர்களை சும்மா இந்தியாவின் ரோல்மாடல்களாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.சினிமா காமடியில் செந்தில் சிறப்பாக நடிப்பதற்காக அவரை புரட்சியாளராகக்கருத முடியாது. ஒரு சிறந்த சினிமா காமெடியனாக வேண்டுமானால் அங்கீகரிக்கலாம்.
என்னளவில் துறை சார்ந்த வெற்றி என்பது வேறு, சமூக அக்கறை/முன்னேற்றம் எனபது வேறு.
நாராயணமூர்த்தி:
இவர் செய்தது என்ன?
தான் ஆரம்பித்த தொழிலை சிறப்பாக நடத்தி ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றியுள்ளார்.ஒரு மளிகைக் கடைக்காரர் அல்லது சரவணாஸ் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிகள் தெரு அல்லது ஊர் அளவில் செய்ததை இவர் உலக அளவில் செய்துள்ளார்.
சிறந்த முதலாளி!
சிறந்த நிர்வாகி!
சிறந்த மேலாளர்!
இதுபோல் இந்தியாவில் ஏற்கனவே பல முதலாளிகள் உள்ளனர்.பிரபலமான TATA,Birla, or Ambani நிறுவனங்களைக் கூறலாம்.
நாராயணமூர்த்தி இவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுகிறார்?
(வியாபார வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் இனிமேல் என்ன செய்கிறார் என்பதை கவனிப்போம். அதைவைத்து வேண்டுமானால் புனிதர் பட்டம் கொடுக்கலாம்.)
மன்மோகன்சிங்:
மன்மோகன்சிங் தாராள வர்த்தகம் ,பன்னாட்டு முதலீடு போன்றவற்றிற்கு காரணமாகக் கூறலாம்.
அதனால் இந்தியாவில் இதுவரை என்ன பயன்?சும்மா GDP வளர்ச்சி இந்தியாவிற்கு உதவாது.இன்னும் குடிதண்ணீர்,ஆரம்ப சுகாதாரம்,கழிப்பிட வசதி..எண்ணற்ற விசயங்களில் நாம் சொரணையற்றவர்களாகவே இருக்கிறோம்.
IT வளர்ச்சிமட்டும் நாட்டுக்கு உதவாது.உடம்பின் ஒரு பகுதி (தொப்பை) மட்டும் வீங்குவது உடம்பிற்கு எப்படி அழகில்லையோ அதுபோலதான்.சமத்துவமான வளர்ச்சிக்கு நீண்டகால திட்டமிடல் தேவை.
இப்போ இதுதானய்யா பேஷன் என்று IT/GDP ல் மட்டுமே கண்ணாய் இருப்பது நாராயணமூர்த்திகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். நாட்டின் மூர்த்திகளுக்கு சரியல்ல.
இன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்களால் நாட்டுக்கு என்ன பயன்? பிட்சா சாப்பிடும் புது வர்க்கம் வந்துள்ளது வாழ்க. ஆனால் மாட்டுச்சாணியில் வறட்டி தட்டி விற்கும் கூட்டம் தண்ணீருக்கு இன்னும் கொலை வெறிச் சண்டை போட்டுக்கொண்டே உள்ளது.
வேண்டுமானால் இந்த கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்:
Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear
இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
தமிழ்ப்பதிவுகள்
தமிழ்
Friday, April 25, 2008
பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்
கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாடாய்யா? எந்த விளையாட்டிலாவது ஆட்டையில இருக்கவன் குண்டியை சொறிந்து கொண்டே பராக்கு பார்த்துக்கிட்டு இருக்குற கொடுமையைப் பார்க்க முடியுமா? கள்ளன்-போலிஸ் விளையாட்டில்தான் பயலுக அவனுகளுக்கு பிடிச்ச பிகர்களோட சேர்ந்து ஒளிஞ்சுக்கிட்டு கடலை போட்டுக்கிட்டே விளையாட முடியும். அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற ரெண்டு விளையாட்டு இருக்குன்னா அது கிரிக்கெட்டும் , கோல்ப்பும்-தான். அப்படியே சாவகாசமா விளையாடலாம். கனவான்களின் விளையாட்டாமில்ல இது. கொடுமைடா சாமி.
சினிமா,கரகாட்டம்,டான்ஸ்,மானாட-மசிராட போல கிரிக்கெட்டும் சும்மா பொழுது போக்குச் சமாச்சாரம்தான்னு ரொம்ப காலமா நான் சொல்லிக்கிட்டு வந்தாலும், ஒரு பயலும் நம்பல. பாவம் இவனுகளும் எத்தனை நாளைக்குத்தான் கோமணத்துல கரட்டாவண்டிய கட்டிக்கிட்டு இருக்க முடியும். இப்ப வெளில வந்துருச்சு இந்தப்பயல்களின் வண்டவாளம். அவன்க வாயாலெயே
Pakistan' all-rounder, Shahid Afridi, who is playing for the Deccan Chargers has said, "The girls in skimpy dresses should be removed from the ground as this is distracting the batsmen. Cricket itself is an entertainment. It does not require such cheerleaders to entertain." http://www.ibnlive.com/news/restrictions-imposed-on-ipl-cheerleaders/63889-3.htmlநாமளே என்டர்டெயின் பண்ணுவமோ இல்ல, பொண்ணுங்கள ஜட்டி , டவுசர், அரைப்பாவடை அப்ஸ்கர்ட் கேமரா ன்னு ஆடவச்சு வச்சு கூட்டம் கூட்டி காசுபாக்கலாமான்றது தான் இப்ப இவனுக பிரச்சனையே. எப்படியோ போகட்டும். ஆனா, ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதயா இவனுக பொழப்பு நாறாமா இருந்தாச்சரி.
நம்ம பயலுக சும்மாவே அதிகமா ஜொள்ளுவிடுறவனுக. கணுக்கால் தெரிந்தாலே போர்னோ அளவில் உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள்ஸ். சினிமா நடிகைகள் காட்டுற பிலிம் கவர்ச்சிக்கே கோவில் கட்டுறவனுக. இப்படி பிதுங்கிய மார்போட வெள்ளைப்பொண்ணுகள கண்ணு முன்னால இப்படி ஆடவிட்டா? கிரிக்கெட்டை விட்டுட்டு இவளுக பின்னாடி போயிருவானுக. சாக்கிரதையப்பு. அப்புறம் உங்களுக்கு சங்குதான்.
இந்தியாவில சினிமாக்காரப் பயல்களுக்கும், இந்த சோம்பேறி விளையாட்டு கிரிக்கெட்டுக்கும் இருக்கும் மருவாதி யாருக்கும் கிடையாது. பெரிய காமெடி என்னன்னா இந்த இரசிகப்பயலுக பன்ற அலும்புதேன். தோத்துப் போயிட்டானுகன்னா டோனி வீட்டை இடிக்கிறதும் , அதே மனுசன் எப்படியோ ஜெய்ச்சிட்டானா அவனுக்கு கவருமெண்டு வீடு கொடுக்கிறதும் காமெடியான விசயம். எல்லாத்துக்கும் மேலே ,தேசப்பற்றைக் காக்க இந்தியா விளையாடும் போது சப்போர்ட் பண்ணிய ஆக வேண்டும். ஒரு நா அப்படித்தான் சும்ம டீ குடிச்சுக்கிட்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்து ஸ்கோர் என்னனு கேட்டான். நான் எதுக்குன்னு சொன்னேன். அவ என்ன ஒரு மாதிரி டேப்பரா பார்த்துட்டு கிரிக்கெட்டுன்னு சொன்னான். சாரி பிரதர் எனக்கு அந்த கருமாந்திரத்த பாக்க நேரம் இல்லைன்னு சொன்னேன். இந்த மட சாம்பிராணிகளைப்போல நானும் பொழப்பத்தவன்னு நினைச்சுட்டானுக கிரிக்கெட்டைப் பார்த்து தேசப்பற்றை வளர்க்க.
கழுதைக்குன்னு ஒரு பிட்னஸ் உண்டு. அதாவது பொதி சுமக்க முடியுமா? அப்படீன்னு பாக்குறது. கழுதை அதில் பிட்ன்ஸ் ஆகிருச்சுன்னா , அதை குதிரையோட ரேசிலயா விட முடியும்? இந்த கிரிக்கட்காரப் பயலுகளுக்கும் பிட்னஸ் டெஸ்ட் உண்டு. அது என்ன கருமமோ இவனுக பிட்டா இருந்தாலும் மலையாளப்பட பிட்டில் வரும் குண்டு நடிகை போலத்தான் பெரும்பாலும் இருக்கானுக. தொந்தியோட உள்ள வாலிபால்,பேஸ்கட்பால அல்லது புட்பால் (சாக்கர்) வீரனைக் காட்டமுடியுமா? பேஸ்பாலில் அதிகம் தொந்திகளைப் பார்க்கலாம்.
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆன கதையா இவனுக இப்ப அயிட்டம் சாங் சேர்த்துருக்கானுக. ரொம்ப நல்ல விசயம். எத்தனை காலத்துக்குதான் இவனுக மொகரையையே பார்த்துக்கிட்டி இருக்கிறது? பிகர் ஆடுவதும் அதைப் பார்ப்பதும் தப்பே இல்லை. ஆனா, கூட்டம் சேக்கவே இப்படி அயிட்டம் சேர்க்கிறோம் என்றால் என்னா மசுருக்கு விளையாட்டு? சும்மா நூறு பிகர்களை வைத்து சினிமாக்காரர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி போல அல்லது நாலு அல்லக்கைகளை வைத்து மானாட மசிராடன்னு எதோ ஒரு ஷோவை சோக்கா நடத்தலாமே.
கானும், மல்லையா கும்பலும் சேர்ந்தா இப்படித்தான் இருக்கும். மல்லையா சார் பிக்னி டான்ஸ் உண்டா? காலண்டருக்கு போஸ் கொடுக்கும் நாலு பிகர்களை பிக்னியில் வந்து போகச் சொல்லுங்கள் இன்னும் கூட்டம் வரும். அய்யா கானு , ஓம் சாந்தி ஓம் ரேஞ்சில் அப்படியே எல்லா சினிமா மக்களையும் வந்து ஒரு கூத்துக் கட்டச்சொல்லுங்க சார். நன்னா கூட்டம் வரும். பணத்தை அள்ளலாம்.
பிகர்கள் வந்து ஆடுவது தப்பே இல்லை. ஆனா தமிழ்சினிமாக்காரங்க அடுத்த மாநில பிகர்களைக் கொண்டு வந்து சேலை அவுக்கிற மாதிரி , நீங்க என்னண்ணா வேற நாட்டு பிகர்களை கொண்டுவந்து ஜட்டியோட ஆடவிடுறீக? அப்படியே பொண்ணுங்களை காட்டித்தான் கூட்டம் சேக்கனும்னா கரகாட்டம் போல நம்ம ஊரு டான்சை வச்சுக்கலாமே?
கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!
http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_19.html
அந்த கரகாட்டப் பயபுள்ளைக சோறு தண்ணியில்லாம பிறந்த கொடுமைக்கு ஆடிக்கிட்டு அலையுதுக. நீங்க அப்படிச் செஞ்சா புண்ணியமாப்போகும். கரகாட்டாமும் நீங்க எதிர்பாக்கூரமாதிரி இருக்கும். நீங்க கஸ்டப்பட்டு காலுக்கு கீழே கேமரா வச்சு படம் புடிக்க வேனாம். மைனருக்கு மட்டும் லைட்டா பாவடையை விசுறுரமாதிரி எங்களுக்கும் கொஞ்சம் செய்யுங்கன்னு கேமராக்காரர் சொன்னா போதும். கரகாட்டகோஷ்டில வர்ர ஆம்பளை ஆட்டக்காரர்களை எல்லாம் பந்து பொறுக்கச் சொல்லலாம். இரும்பு அடிக்கிற இடத்துல ஈ-க்கு என்னெ வேலை?
இதுவும் பத்தாதுன்னா, இருக்கவே இருக்கு சின்னத்திரை மழை-டான்ஸ். கிராமத்து ரெக்கார்ட் டான்ஸை எல்லாம் தூக்கிச் சாப்புடுறமதிரி செயற்கை மழையில் நனைந்து மக்களை மகிழ்விக்க ஒரு குருப்பே இருக்கு. மானாட மசிராட நீ வாடா பன்னாடைன்னு ஆட்டம் கட்டுவானுக.
Apparently, it was pretty disappointing to see that they were all
firangs(foreigners). It would be exciting to see some Indian
Cheerleaders. http://digitallife.co.in/indian-cheerleaders-for-ipl/
தர்ம தொரை பவாரு அண்ணே ஒருத்தர் விவசாய அமைச்சரா இருந்துகிட்டு இருக்கார். ஆனா வேலை செய்ரது எல்லாம் கிரிக்கெட்டுக்கு. விவசாயி தினமும் தூக்குப்போடுச் சாகுறான். அதுக்கு ஏதாவது பண்ணுசாரே. IPL க்கு மட்டும் இப்படி சிந்திச்சு சிந்திச்சு பண்றீகளே பாவம் விவாசாயத்தையும் கொஞ்சம் பாருங்க தல. இல்ல, பேசாம ஒரு சியர் குருப்பை ஆரம்பித்து நடத்துங்க. தயவு பண்ணி விவசாய அமைச்சரா இருந்து உயிர வாங்காதீக.
கிரிக்கெட் பெரிய காமெடின்னா அதவிடப் பெரிய காம்டி கலாச்சாரக் காவலர்களுன்னு இருக்க ஒரு கூட்டம். இவனுங்க அளும்பு தாங்கல. எதோ கலாச்சாரம்னாலே பொம்பளனற மாதிரி ஆஜராயிடுவானுக. இந்திய சினிமால ஆடாத ஆட்டமாயா இந்தப் பிகருங்க ஆடுதுங்க? அதுகளுக்கு அதுதான் புரபசன். நீ ஒன்னோட கட்சி மாநாட்டுக்கு குப்பிட்டாக்கூட வந்து ஆடுங்க. என்ன சு.சாமிக்கு அதிமுக கொடுத்த சேலை டான்ஸ் போல இது இருக்காது.
ஆணும் பொண்ணும் இருக்க உலகத்துல , பொண்ணுகளை மனுசப்பய இரசிக்காம மாடா வந்து இரசிக்கும். கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டே சினிமாவுல ஜட்டியோட ஆடுறது மட்டும் தப்பில்லையாம், மல்லிகா கோஸ்டிகல் புது வருசத்துக்கு ஆடுறது தப்பில்லையாம்,மும்பை பார்ல வயித்து பொழப்புக்கு ஆடுனா தப்பாம்.
பணம் பாக்குறதுதான் நோக்கமுன்னு இந்தப்பயலுகள ஏலம்விட்டப்ப எல்லாம் எங்கே போயிருந்தீங்கப்பு. போட்ட பணத்தை அவுக எப்படி எடுப்பாக? வாழ்க்கையை கொண்டாடட்டும். போங்கப்ப்பு போயி பொழப்பப்பாருங்க.
Shatrughan Sinha:
"If you are so interested in deploying these cheer girls who dance
after hits of fours and sixes, it is better to give chance to the bar girls who
have been rendered unemployed after Maharashtra government put a ban on the
dance in bars,"
"I am afraid that cricket, which has been shortened from
five days to one day and now to the T 20 format, might be reduced to 'Toss-Toss'
in which the winner will be decided through toss," http://www.ibnlive.com/news/bjp-leaders-raise-stink-over-ipl-cheerleaders/63872-3.html
இவ்வளவு சொல்றயே வெண்ணை ஒனக்கு எந்த ஸ்போட்ஸ் பிடிக்கும் அப்படீன்னு சந்துல சிந்து பாட வேண்டாம். அதையும் நானே சொல்லீறேன். பேஸ்கட்பால்தான் நம்ம பேவரிட். எனக்கு விளையாடத் தெரியாட்டியும் அதுதான் நம்ம பேவரிட். அதுக்கு அப்புறம் வாலிபால்,புட்பால்ன்னு வரும். நிச்சயம் கிரிக்கெட் இல்லை. பிடிச்ச இன்னொன்னு ஜொள்ள மறந்துட்டேன் அது தான் பிகர் ஸ்கேட்டிங்.
கிரிக்கெட்டில் அடுத்து பெல்லி டான்ஸும் வரவேண்டும். அப்படியே காலப்போக்கில் பிக்கினி 20 பெல்லி 20 கிரிக்கெட் 1 ஓவர் என்றாக எல்லாம் வல்ல கான் & மல்லையாக்களை வேண்டிக் கொள்கிறேன்.
ஐட்டம் நம்பர், குத்துப்பாட்டு, கிரிக்கெட்டு அப்படிப்போடு ...
நான் கலாச்சாரக் காவலனா .....? :புதசெவி
http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html
T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி
http://jyovramsundar.blogspot.com/2008/04/t20.html
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)
http://pktpariarasu.blogspot.com/2008/04/blog-post_24.html
Top political agenda: ban IPL cheerleaders
http://www.ibnlive.com/news/restrictions-imposed-on-ipl-cheerleaders/63889-3.html
Sports Weds Entertainment
http://www.ibnlive.com/blogs/rohitkhilnani/1844/50939/sports-weds-entertainment.html
Indian Cheerleaders
http://digitallife.co.in/indian-cheerleaders-for-ipl/
IPL: Foreign cheerleaders shake India!
http://economictimes.indiatimes.com/News/IPL_Foreign_cheerleaders_shake_India/rssarticleshow/2979153.cms
Picture courtesy
digitallife.co.in
நடைவண்டி-ஆழியூரான்.
Video courtesy
YouTube
Tuesday, April 22, 2008
பார்ப்பனீயச் சுவர் - உத்தப்புரம்
நாய்,பன்னி,ஆடு,மாடு,எருமை,கழுதை,கோழி,கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.
நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?
ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.
ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது.
ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.
செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.
ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.
1.தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.
2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை.
3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)
4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.
5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.
இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.
தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.
இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும்.
சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.
சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.
ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.
மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).
18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?
இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.
சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’
(புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)
- ஆதவன் தீட்சண்யா
கட்டுரை கீற்றில் இருந்து பதியப்பட்டது.
http://www.keetru.com/literature/essays/aadhavan_9.php
******
தொடர்புடைய மற்ற செய்திகள்.
Dalits face discrimination in southern Tamil Nadu
http://news.webindia123.com/news/articles/India/20080227/895128.html
The dividing wall remains but loses its electric sting
http://www.hindu.com/2008/04/18/stories/2008041860891700.htm
Struggles On Dalit Issues Continue
http://pd.cpim.org/2008/0309_pd/03092008_tn.htm
Dividing wall -Opinion http://www.thehindu.com/2008/04/21/stories/2008042155391002.htm
Friday, April 11, 2008
நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு
கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?
எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?
அங்கே..
நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும் தரப்போகிறார்கள்.
அவன் எழுதும் விடையையும், அதே ஆசிரியர்கள்தானடா திருத்தப்போகிறார்கள்.
அப்படி ,இருக்கையில் என்ன புண்ணாக்கு தரம் குறையும் அவன் வாங்கும் டிகிரிக்கும் நீ வாங்கும் புண்ணாக்கு டிகிரிக்கும்?
போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு மட்டுமே கோட்டாவில் கொடுக்கப்படுகிறது. கல்வித் தேர்ச்சியில் சலுகை அல்ல. அதுவும் இந்த வாய்ப்பு அவனின் உரிமை , சலுகை அல்ல.
**
வர்ணாசிரம வழியில் மேல்-கீழ் பிரித்தபோது ஒன்றும் பேசாமல் பல நூறு ஆண்டுகாலம் சுக வாழ்வு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித உண்ணிகள் , இன்னும் பிறப்பின் வழி வரும் சமூக ஏற்றத் தாழ்வை ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் , அதே அளவுகோலில் உரிமை கொடுத்தால் , கேஸ்ட் பேஸ்டு ரிசர்வேசன் கூடாது என்கின்றனர்.
முதலில் கேஸ்டு பேஸ்டு வர்ணாசிரமத்தையும் பூணூலையும் தூக்கி எறிந்துவிட்டு சிறிதுகாலம் பீயள்ளுங்கள் அப்புறம் பேசுவோம் பொருளாதார பேஸ்டு ரிசர்வேசன்."Do not divide us" என்று கோட்டாவிற்கு கொடிபிடிப்பதற்கு முன் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து கொடிபிடியுங்கள். Divide என்பது அங்கேதான் ஆரம்பித்தது.
இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_23.html
The great OBC myth has been busted!
http://kalvetu.blogspot.com/2006/10/great-obc-myth-has-been-busted.html
The reservation debate
http://sify.com/news/fullcover.php?event_id=14206451