ஆரம்பிச்சுட்டானுக அடுத்த ரவுண்டை. நல்ல நாள்யே இவனுக இம்சை தாங்க முடியாது. கக்கூசுல தனியா இருக்க நேரம் தவிர எந்தப்பக்கம் போனாலும்
ஸ்கோர் என்ன ? , அவன் எவ்வளவு ரன்? போனவருசம் நடந்த மேட்சுல அவன் புடிச்ச கேட்ச் இருக்கே, எனக்கு பார்க்கறப்பவே ஒண்ணுக்கு வந்துருச்சுப்பா... அப்படி ஊரே பினாத்திக்கிட்டு இருக்கும். வேற எதையாவது டிவில பாத்தாலும் செய்தியை அடில ஓடவிட்டு இம்சை பண்றானுங்க. அம்மணமா இருக்க ஊருல கோவணம் கட்டிய கிறுக்குப்பயலா தேமேனு வேற நியூஸ்கள பேப்பரில் படிச்சுக்கிட்டு இருந்தாலும், சுத்தி இருக்கவனுக சும்மா இருக்க மாட்டானுக.
"ஸ்கோர் பாக்கனும் பேப்பர் கொடு" என்பானுங்க. கிரிக்கெட் சும்மா ஒரு பொழுது போக்கு அயிட்டம் சார். இந்தக் கருமத்தை எல்லாம் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் போட்டு நம்ம உயிரை வாங்குறானுக. இதெல்லாம் சினிமாக்கான பக்கத்தில் அல்லது "டைம்ஸ் ஆப் இந்தியா" பார்ட்டி போட்டோ பக்கத்தில் போட வேண்டிய சமாச்சாரம்.
கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாடாய்யா? எந்த விளையாட்டிலாவது ஆட்டையில இருக்கவன் குண்டியை சொறிந்து கொண்டே பராக்கு பார்த்துக்கிட்டு இருக்குற கொடுமையைப் பார்க்க முடியுமா? கள்ளன்-போலிஸ் விளையாட்டில்தான் பயலுக அவனுகளுக்கு பிடிச்ச பிகர்களோட சேர்ந்து ஒளிஞ்சுக்கிட்டு கடலை போட்டுக்கிட்டே விளையாட முடியும். அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற ரெண்டு விளையாட்டு இருக்குன்னா அது கிரிக்கெட்டும் , கோல்ப்பும்-தான். அப்படியே சாவகாசமா விளையாடலாம். கனவான்களின் விளையாட்டாமில்ல இது. கொடுமைடா சாமி.
சினிமா,கரகாட்டம்,டான்ஸ்,மானாட-மசிராட போல கிரிக்கெட்டும் சும்மா பொழுது போக்குச் சமாச்சாரம்தான்னு ரொம்ப காலமா நான் சொல்லிக்கிட்டு வந்தாலும், ஒரு பயலும் நம்பல. பாவம் இவனுகளும் எத்தனை நாளைக்குத்தான் கோமணத்துல கரட்டாவண்டிய கட்டிக்கிட்டு இருக்க முடியும். இப்ப வெளில வந்துருச்சு இந்தப்பயல்களின் வண்டவாளம். அவன்க வாயாலெயே
Pakistan' all-rounder, Shahid Afridi, who is playing for the Deccan Chargers has said, "The girls in skimpy dresses should be removed from the ground as this is distracting the batsmen. Cricket itself is an entertainment. It does not require such cheerleaders to entertain." http://www.ibnlive.com/news/restrictions-imposed-on-ipl-cheerleaders/63889-3.html
நாமளே என்டர்டெயின் பண்ணுவமோ இல்ல, பொண்ணுங்கள ஜட்டி , டவுசர், அரைப்பாவடை அப்ஸ்கர்ட் கேமரா ன்னு ஆடவச்சு வச்சு கூட்டம் கூட்டி காசுபாக்கலாமான்றது தான் இப்ப இவனுக பிரச்சனையே. எப்படியோ போகட்டும். ஆனா, ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதயா இவனுக பொழப்பு நாறாமா இருந்தாச்சரி.
நம்ம பயலுக சும்மாவே அதிகமா ஜொள்ளுவிடுறவனுக. கணுக்கால் தெரிந்தாலே போர்னோ அளவில் உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள்ஸ். சினிமா நடிகைகள் காட்டுற பிலிம் கவர்ச்சிக்கே கோவில் கட்டுறவனுக. இப்படி பிதுங்கிய மார்போட வெள்ளைப்பொண்ணுகள கண்ணு முன்னால இப்படி ஆடவிட்டா?
கிரிக்கெட்டை விட்டுட்டு இவளுக பின்னாடி போயிருவானுக. சாக்கிரதையப்பு. அப்புறம் உங்களுக்கு சங்குதான்.
இந்தியாவில சினிமாக்காரப் பயல்களுக்கும், இந்த சோம்பேறி விளையாட்டு கிரிக்கெட்டுக்கும் இருக்கும் மருவாதி யாருக்கும் கிடையாது. பெரிய காமெடி என்னன்னா இந்த இரசிகப்பயலுக பன்ற அலும்புதேன். தோத்துப் போயிட்டானுகன்னா டோனி வீட்டை இடிக்கிறதும் , அதே மனுசன் எப்படியோ ஜெய்ச்சிட்டானா அவனுக்கு கவருமெண்டு வீடு கொடுக்கிறதும் காமெடியான விசயம். எல்லாத்துக்கும் மேலே ,தேசப்பற்றைக் காக்க இந்தியா விளையாடும் போது சப்போர்ட் பண்ணிய ஆக வேண்டும். ஒரு நா அப்படித்தான் சும்ம டீ குடிச்சுக்கிட்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்து ஸ்கோர் என்னனு கேட்டான். நான் எதுக்குன்னு சொன்னேன். அவ என்ன ஒரு மாதிரி டேப்பரா பார்த்துட்டு கிரிக்கெட்டுன்னு சொன்னான். சாரி பிரதர் எனக்கு அந்த கருமாந்திரத்த பாக்க நேரம் இல்லைன்னு சொன்னேன். இந்த மட சாம்பிராணிகளைப்போல நானும் பொழப்பத்தவன்னு நினைச்சுட்டானுக கிரிக்கெட்டைப் பார்த்து தேசப்பற்றை வளர்க்க.
கழுதைக்குன்னு ஒரு பிட்னஸ் உண்டு. அதாவது பொதி சுமக்க முடியுமா? அப்படீன்னு பாக்குறது. கழுதை அதில் பிட்ன்ஸ் ஆகிருச்சுன்னா , அதை குதிரையோட ரேசிலயா விட முடியும்? இந்த கிரிக்கட்காரப் பயலுகளுக்கும் பிட்னஸ் டெஸ்ட் உண்டு. அது என்ன கருமமோ இவனுக பிட்டா இருந்தாலும் மலையாளப்பட பிட்டில் வரும் குண்டு நடிகை போலத்தான் பெரும்பாலும் இருக்கானுக. தொந்தியோட உள்ள வாலிபால்,பேஸ்கட்பால அல்லது புட்பால் (சாக்கர்) வீரனைக் காட்டமுடியுமா?
பேஸ்பாலில் அதிகம் தொந்திகளைப் பார்க்கலாம்.கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆன கதையா இவனுக இப்ப அயிட்டம் சாங் சேர்த்துருக்கானுக. ரொம்ப நல்ல விசயம். எத்தனை காலத்துக்குதான் இவனுக மொகரையையே பார்த்துக்கிட்டி இருக்கிறது? பிகர் ஆடுவதும் அதைப் பார்ப்பதும் தப்பே இல்லை. ஆனா, கூட்டம் சேக்கவே இப்படி அயிட்டம் சேர்க்கிறோம் என்றால் என்னா மசுருக்கு விளையாட்டு? சும்மா நூறு பிகர்களை வைத்து சினிமாக்காரர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி போல அல்லது நாலு அல்லக்கைகளை வைத்து மானாட மசிராடன்னு எதோ ஒரு ஷோவை சோக்கா நடத்தலாமே.