Thursday, February 14, 2013

காதலர் தினத்தில் வெட்கப்படுவோம் வாருங்கள்

கோ வாவில் நடந்த சம்பவம், பெங்களூர் சம்பவம், டெல்லி சம்பவம் இன்று காரைக்கால் இளம்பெண் வினோதினி   ......இந்த சம்பவங்கள் எல்லாம் ஒரு செய்தியைச் சொல்கிறது...

பசியோடு அலையும் மிருகங்களாகவே ஆண்கள் இருக்கிறார்கள் அல்லது வாய்ப்புகள் வராதவரை நல்லவர்களாக இருக்கிறார்கள். பாட்டி தொடங்கி தன் அம்மா முதல் சகோதரி வரை பிகினியில் பார்த்து சேர்ந்து வாழும் , சேர்ந்தே குளிக்கும் ஒரு மேற்கு கலாச்சார ஆணுக்கு , தன் அருகில் ஒரு பெண் அரை நிர்வாணத்துடன் படுத்து சூரியக் குளியல் செய்தாலும் , புணரும் வெறி வராது. ஆனால் பாரதிராஜா நாயகிகள் காட்டும் கணுக்கால் கொலுசில்கூட சொப்பன ஸ்கலிதம் வரும் அளவிற்கே ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள் தமிழகத்தில். இந்த வியசத்தில் வடக்கு பரவாயில்லை. மும்பையில் ஆண் பெண் பேருந்தில் சேர்ந்து அமரலாம். சூரத் போன்ற இடங்களில் ஷேர் ஆட்டோவில் தெரியா ஆண் பெண் இடித்துக்கொண்டுதான் அமருவார்கள்.

சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

ம் சமுதாய அமைப்பில் பிழை உள்ளது. உடல்சார்ந்த புரிதல்கள் தமிழகத்தில் (இந்தியாவில்) குறைவு ஒப்பீட்டளவில். ஏன் இப்படி இந்திய சமுதாயம் உள்ளது என்று சிந்திக்கலாம். பெண்களை ஈவ் டீசிங் செய்யும் வகையிலேயே திரைப்பாடல்கள் (கும்பலாக 10 பேர்  ஆட்டம் போடுவது... என்னாடி பந்தாடும் பாப்பாக்களே என்று ) இன்றுவரை உள்ளது. அதைப்பார்த்து ஆண் ஏன் இரசிக்கிறான்? மெய் வாழ்க்கையில் தன்னால் செய்ய இயலாத, நினைத்துப் பார்க்கவே முடியாத செயல்களை (பெண்ணுடன் பேசுவது, சேர்ந்து சில இடங்களுக்கு போவது) , சமூகம் இன்னும் அங்கீகரிக்காத செயல்களுக்கு , க‌தாநாயகன் செய்யும் அடாவடி ஈவ்டீசிங் பாடல்களை ஒரு வடிகாலகப் பார்க்கிறான். நிச வாழ்வில் அவன் பார்க்கும் பெண்கள் திரையில் அவன் கண்ட நாயகிகளையே உணர்த்துகிறாள் என்று எண்ணுகிறேன். கும்பலுடன் அவன் இருக்கும்போது , படங்களில் பார்த்த நாயகன் நாயகியைக் கூட்டமாக சேர்ந்து பாட்டுப்பாடி கலாய்க்கும் காட்சிகள் வந்துபோகுமோ என்னவோ.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படகுக் குழு ( rowing team from Groningen, Netherlands  ) "Why this Kolaveri Di?"  என்ற தமிழ்ப்பட பாடலுக்கு அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில் இவர்கள் எப்படி பெண்ணைக் கையாள்கிறார்கள் என்று பாருங்கள்.

"Why this Kolaveri Di?" goes Dutch
http://www.youtube.com/watch?v=Cd77LenKLHgஅதே சமயம் இந்தப்படத்தின் அதிகாரபூர்வமான பாடலில் பெண்கள் (வெளிநாட்டுப் பெண்களும் உண்டு) எப்படி கையாளப்படுகிறார்கள் என்றும் பாருங்கள்.

WHY THIS KOLAVERI DI - Official Movie Full Song Video
http://www.youtube.com/watch?v=5DK-ZWyxZ8k

ப்படி ஆணையும் பெண்ணையும் பிரித்து வைத்து , புணருவதை நோக்கிய மிருகமாகவே ஆண்கள் தயார் செய்யப்படுகிறார்கள் நமது சமுதாயத்தில் என்பது என் எண்ணம். திருமணமே பெண்ணின் அருகாமைக்கான  ஒரே வழி என்றே இன்னும் உள்ளது. காமம் வேறு , காதல் வேறு என்பது புரியவில்லை. சளிக்காமல் உடலுறவு கொண்டாலும் , அதைத்தாண்டி காதல் வேண்டும் என்னை மணந்துகொள் என்று சொல்லும் ஆண்களையும் காட்டும் படங்கள் உண்டு மேற்குலகில். (http://www.imdb.com/title/tt1411238/) ஆனால் பெண்ணிடம் உடல் சார்ந்த உறவே , ஆண் பெண் உறவின் உட்சம் என்பதுபோலத்தான் நம் சமுதாயம் உள்ளது.

வ் டீசிங் பாடல்களை எந்த புரிதலும் இல்லாமல் இன்றுவரை கேட்டுக்கொண்டுள்ளோம், ஆனால் சின்னச் சின்ன ஆண் பெண் அணைத்தலைக்கூட கொலைக்குற்றமாகப் பார்க்கிறோம். சேலை கட்டிக்கொண்டு வக்கிரமாக ஆடுவதை குடும்பத்துடன் இரசிக்கும் நாம், மேலை நாட்டுப் பெண்கள் பிகினியில் குளித்தால்கூட அவர்களின் கலாச்சாரத்தை
 கேலிசெய்கிறோம். மேற்குலகில் குற்றமே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உடல் விரட்டல் இப்படி இல்லை என்று என்னால் சொல்லமுடியும். பிகினியோடு ஒரு பெண் என்னருகில் வந்தால் அது இயல்பாய் இருக்கிறது. உடல் ஈர்ப்பு என்பது (வெறி) முதன்மை இல்லை.
முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் எனது அனுபவம் (பல பதிவுகளில் நான் ஏற்கனவே சொல்லியுள்ளது)

நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.

டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும்.  ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம்.  நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன்.  நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.  இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.  நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை.  நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது. மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

ந்தாம் வகுப்பிற்குப் பிறகு உடன் படித்த பெண்களின் கையைக்கூட தொட முடியாது. இப்படி விலக்கியே வளர்க்கப்பட்ட நம் சமுதாய ஆணையும்
பெண்ணையும் சட்டென்று திருமணம் செய்து  வைத்து, முதல் நாள் இரவிலேயே போய் புணருங்கள் என்று சொல்லி கதவடைத்தால் அதில் எங்கே காதல் வரும்.
காதல் என்றால் என்ன?

சின்ன வயதில் வரும் பாலியல் ஈர்ப்ப்பு என்பது வெறும் Crush. பலர் இந்த வெறும் Crush  ஐ புனிதமாக கருதுவதுபோல ஒரு உருவாக்கம் தமிழகத்தில் உள்ளது. அதனாலதான் அழகான பெண்ணை தூரத்தில் இருந்து இரசிப்பதுடன் நிறுத்தாமல், ஒருதலைக்காதல் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருதலைக்காதல் என்ற ஒன்று இல்லை. அது ஆசை (Crush) மட்டும். இது ஒரு நோய்க்கூறு. அதாவது ஒருதலைக்காதல் என்பதே நோய். அப்படி ஒன்று இல்லை. அதற்குப் பெயர் ஆசை Crush . Love கிடையாது .

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வருவது ஆசை (Crush) , அதை எப்படி காதலாக (Love) மாற்றுவது... அதாவது அந்தப் பெண்ணை அணுகி (approach) எப்படி தன் விருப்பத்தை தெரிவித்து அந்தப்பெண் விரும்பும் பட்சத்தில் பழக ஆரம்பித்து,  அதற்குப் பின்னால் திருமண விருப்பதைச் சொல்வது என்று கற்றுத்தரப்பட வேண்டும். இடையில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும்  அழகாகப் பிரியவும் கற்றுக்கொள்ள வேண்டும். எனது உடன் வேலை பார்க்கும் பெண் விவகாரத்துப் பெற்றவர். இன்னும் அவர் கார் நடுவழியில் பழுதாகி நின்றால் அழைப்பது அதே விவகாரத்து செய்யப்பட்ட பழைய /முன்னாள் கண‌வனைத்தான்.

காதலைக் கற்றுக்கொடுப்போம்.
ணுக்கால் தெரிந்தவுடன் வருவது காதல் அல்ல. அது பெண்ணுடல் பார்த்தவுடன் வரும் காமம். அதில் தவறு இல்லை. ஆனால் பார்த்தவுடன் புணரவேண்டும் அதற்கு தமிழகத்தில் ஒரே வழி கல்யாணம் என்பதால், அதைக் காதலாகக் கருதி அலையக்கூடாது. No Strings Attached (2011) என்ற படத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் , காமம் தாண்டி தவிப்பது, காதலுக்காக. திகட்ட திகட்ட உடலுறவு கிடைத்தாலும் அதையும் தாண்டி காதலிக்கப்பட வேண்டும் , காதலிக்க வேண்டும் என்பது தேவை என்று கதை சொல்லப்பட்டு இருக்கும்.  காமம் என்பது காதலைத்தூண்ட ஒரு வாசனைத் திரவியம் மேஜிக். ஆனால் காதல் என்பது புரிந்துகொள்ளல் அன்பு செலுத்துதல் ப்ரியமாய் இருத்தல் துணையாய் இருத்தல். அது உள்ளதா?

Valentine's Day
மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine's Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் . அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அண்ணன், ஆசிரியர், அக்கம் பக்கம் என்று யாரும் யாருக்கு வேண்டுமானலும் வாழ்த்துகள் சொல்லலாம்.  அதாவது காமம் கடந்த ஒரு வழக்கமாக மாறிவிட்டது.  இருந்தாலும், காமம் கலந்த காதலில் (கணவன்-மனைவி) இது புது அர்த்தம் பெறுகிறது. தமிழில் காதல் என்பது காமம் கலந்த ஒன்றைத்தவிர மற்றதற்கு பயன்படுத்த முடியாது. எனது தோழர்களிடம் உங்களைக் காதலிக்கிறேன் என்று சொன்னால் தவறாகிவிடும். சரி உங்களுடன் அன்பாகியிருக்கிறேன் என்று சொன்னாலும் ஏதோ சப்பென்று உள்ளது. என்ன சொல்லலாம்...

தமிழ் இணையைப் பயனாளர்கள் அனைவருக்கும் எனது அன்பும் ப்ரியங்களும் I love you all .

காதலைக் கற்றுக்கொடுப்போம் இளைஞர்களுக்கு. ஆரோக்கியமான‌ நல்ல ஆண் பெண் உறவுகளை வளர்த்தெடுங்கள்


.

7 comments:

 1. வாலண்டைன்ஸ் தின நல்வாழ்த்துகள் கல்வெட்டு. :)

  ReplyDelete
 2. நன்று. மொத்தமாக ஆண் பெண் சிக்கலுக்கான தீர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. இது போன்ற எதிர் கருத்துக்களை ஒரே பதிவில் சராசரியான அல்லது எதிரான மனப்பான்மை கொண்டவர்களால் மாற்றிக் கொள்வது கடினம். காதல், பாலியல், சுதந்திரம், புரிதல் என்பதற்கு இந்தியாவுக்கும் மேலைநாடுகளுக்கும் மிகத் தொலைவாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாறி வருகிறது. பொருளாதார சுதந்திரம் முன்னேற்றம் ஓரளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அது பக்குவம் என்ற அளவில் அல்லாமல் நுகர்வு என்பதாகவே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வெளிநாடு சென்று வாழ்கிறவர்கள் ஓரளவுக்கு தனிமனித சுதந்திரம் பற்றி புரிதலுடன் இருப்பதால், பெண்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் வெளிநாடு சென்ற பல இந்தியர்களுக்கு அதை ஏற்றுக் கொள்ளாமல் மினிஸ்கர்ட்டைப் பார்த்தால் நல்ல தரிசனம் என்றுதான் குதூகலிக்கத் தோன்றுகிறது சராசரி மனத்துக்கு.

  இந்தியத் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் என்பதே ஒரு வகையில் போர்ன் மாதிரிதான் இருக்கிறது. அமெரிக்காவில் பிகினி போன்றவை சாதாரணமாக இருந்தாலும் பல ஹாலிவுட் படங்களில் பெண்கள் உள்ளாடையில் இருப்பதை ஆண்களுக்காகவே வைக்கும் காட்சிகளாகத் தோன்றுகிறது.

  //மேலைநாடுகளில் காதலர் தினத்தில் யாருக்கு வேண்டுமானாலும் Happy Valentine's Day என்று வாழ்த்துகள் சொல்லலாம் .// இங்கும் கூட அதுமாதிரித்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். வானொலிகள் நிறைய வந்துவிட்டன. நடிகர்களின் பிறந்த நாளுக்குக் கூட நாள் முழுக்க கும்மியடிக்கிறார்கள். காதலர் தினமென்றால் கேக்கவா வேண்டும் ? வாலன்டைன் டே கொண்டாட்டத்தில் காதலல்லாமல் பிடித்தவர்களுக்கும் வாழ்த்துக் கூறலாம் மாதிரியான கருத்துக்களும் சொல்கிறார்கள்.

  அந்த விநோதினி பிரச்சனை ஒருதலைக்காதல் அல்ல. அவர்கள் ஏற்கெனவே காதலர்கள், படிப்பதற்குக் கூட அந்த நபர் உதவி செய்து வந்ததாகவும், பின்பு பிரிந்ததால்தான் பிரச்சனை என்றும் கேள்விப்பட்டேன்.

  ReplyDelete
 3. //அவர்கள் ஏற்கெனவே காதலர்கள், படிப்பதற்குக் கூட அந்த நபர் உதவி செய்து வந்ததாகவும், பின்பு பிரிந்ததால்தான் பிரச்சனை என்றும் கேள்விப்பட்டேன். //

  நன்றி தமிழானவன்

  1.காதல் என்றால் என்ன என்ற புரிதல் இல்லை என்பதுதான் நான் வைக்கும் குற்றச்சாட்டு.

  2.பணம் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரன், லோன் கொடுத்த பேங்க் மேனஜர் , வேலை வாங்கிக்கொடுத்த உறவினர் என்று எல்லாரையும் ஒரு பெண் அல்லது ஆண் காதலிக்க முடியாது. காதல் என்பது நிர்பந்தமோ அல்லது கடனோ அல்லது செய் நன்றியோ அல்லது இரக்கமோ அல்ல

  3.அப்படியே ஒரு காலத்தில் விரும்பி பரஸ்பரம் இருவரும் காதலித்து இருந்தாலும், அது மாறக்கூடாதது அல்ல. கால ஓட்டத்தில் பிடிக்காமல் போனால் , விலகிவிட இருவருக்கும் உரிமை உள்ளது.

  4.சேர்த்து வைக்க வேண்டும் என்று காவல்நிலையத்தை அணுகுவது காமடி. பெண் அல்லது ஆண் என்ன பொருளா? பெண் அல்லது ஆணிற்கு விருப்பம் இல்லை என்றால் காட்டயப்படுத்தி பயமுறுத்தி சேர்த்து வைக்க திருமணம் என்ன தண்டனையா?

  5.மறுபடியும் காதல் என்றால் என்ன என்றும் ஆண் பெண் உறவுகள் என்ன என்ற புரிதல் இல்லை என்பதுதான் நான் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். நான் ஏற்றுக் கொண்டேன் நீங்கள் சொல்வதை.

   அதே போல் காதலித்து ஏமாற்றி விட்டார் என்று சொல்வது எல்லா இடத்திலும் சரியான வாதமாகது. பிடிக்கவில்லை, விருப்பமில்லை என்பதே சரியானது. காதல் பற்றிய புரிதல் இல்லை.

   //கால ஓட்டத்தில் பிடிக்காமல் போனால் , விலகிவிட இருவருக்கும் உரிமை உள்ளது.// அதை ஏற்கும் பக்குவமின்னு வரவில்லை என்பதையே நானும் சொல்கிறேன்.

   Delete