எ ன்னளவில்....அம்பேத்கர், பெரியார் போன்றோர்களின் சாதிய நிலைபாடுகளுக்கும்
காந்தியின் சாதிய நிலைப்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மதங்களில்
காந்தி ஒரு வகையான நிலைப்பாடு கொண்டவர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட
மனிதர்கள் கிடையாது அது காந்தியே என்றாலும். காந்தி குறித்த உரையாடல்கள்
மாசி (மா. சிவக்குமார்) அவர்களின் வலைப்பதிவில் நிறைய நடத்தி ஓய்ந்தாகிவிட்டது.
அம்பேரிக்காவில் கருப்பின இளைஞர்கள் ஒருகாலத்தில் நடத்திய "உணவகங்களில் அமர்வுப்போராட்டங்கள் Greensboro sit-ins (http://en.wikipedia.org/wiki/Greensboro_sit-ins) எல்லாம் காந்தியின் பாதிப்பு என்று நினைக்கும்போது "அமைதியாக எதிர்த்தல்" என்ற காந்தியவழியில் மதிப்பு வருகிறது. உணவகங்களில் உணவு பரிமாற மறுத்த வெள்ளையின மக்களை அமைதியாக எதிர்கொண்டார்கள் கருப்பின இளைஞர்கள். இப்படி பல அமைதிப் போராட்டங்கள் இந்த மண்ணில் நடந்துள்ளது.
ஆனால் அவை எல்லாம் இன்றைய காலகட்டத்தில் ஏட்டுச்சுரைக்காய் ஆகிவிட்டது. அம்மாவின் உண்ணா நோன்பும் அய்யாவின் உண்ணா நோன்பும் கசாரேவின் உண்ணாநோன்பும் இராம்தேவ் உண்ணா நோன்பும் நகைப்பிற்கு உரியது.
***
குட்ரோச்சி ( Ottavio Quattrocchi ) மற்றும் சவார்க்கர் ( Vinayak Damodar Savarkar ) வகையறாக்கள் எல்லாம் காந்தியை சொந்தம் கொண்டாடும் போது கெதக் என்று இருக்கிறது. கள்ள நோட்டு அடிப்பவர்கள்கூட அதிக காந்திபடம் வெளியிடுவதால், காந்தியவாதிகளாக காட்டிக்கொள்ளலாம. எல்லாம் அவர்கள் உரிமை.
***
மக்களின் பேரன்பை பெற்ற காந்தியையும் , இன்று நான் உட்பட பலர் பொட்டிதட்ட , கல்வி கற்க காரணமாய் இருந்த காமராசரையும் நினைவில் கொள்கிறேன்.