கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது, கள ஆய்விற்காக ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்களுடன் கனடிக்கட் ஆற்றுப் பக்கம் செல்கிறார் குளோரியா ஃச்டைனம் (Gloria Steinem) . அப்போது ஒரு பெரிய ஆமையொன்று (Turtle) ரோட்டின் அருகே மெதுவாக வந்து கொண்டுள்ளதைப் பார்க்கிறார். ரோட்டைக் கடக்கும் போது அது கார் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிடும் என்று எண்ணி, அந்த ஆமையை உடனடியாக காப்பாற்ற விளைகிறார் குளோரியா.
பெரிய ஆமை அது. இரண்டு கைகளாலும் அதை தூக்கி ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். வழியில் தன்னை விடுவித்துக்கொள்ள அந்த ஆமை தனது கால்களைக் கொண்டு பட் பட் என்று அறைந்து கொள்கிறது.
பெரிய ஆமை அது. இரண்டு கைகளாலும் அதை தூக்கி ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார். வழியில் தன்னை விடுவித்துக்கொள்ள அந்த ஆமை தனது கால்களைக் கொண்டு பட் பட் என்று அறைந்து கொள்கிறது.
ஆனால் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மிகவும் சிரமப்பட்டு குளோரியா அதை விடாமல் தூக்கிச் சென்று ஆற்றில் விடுகிறார். அப்போது அங்கே வந்த அவரின் ஆசிரியர், " இந்த ஆமை பல நாட்கள் அல்லது வாரங்கள் பயணப்பட்டு இங்கே வந்து இருக்கலாம். பல சிரமங்களுக்கு இடையில் முட்டை இட நல்ல இடம் தேடிக்கொண்டு இருந்த ஒன்றை, நீ மறுபடியும் ஆற்றில் கொண்டுபோய் விட்டுவிட்டாய். அது மறுபடியும் இப்படி ஒரு இடத்தை அடைய இன்னும் பல வாரங்கள் ஆகலாம்" என்று சொன்னார்.
இந்த சின்ன அனுபவம் இருக்கு சில புரிதல்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார். இதையே அவர் " Always Ask the Turtle " என்கிறார். http://www.mollylarkin.com/ask-the-turtle/
இவரின் புதிய புத்தகம் " My Life on the Road " இப்போது வந்துள்ளது.
http://www.latimes.com/books/la-ca-jc-gloria-steinem-memoir-20151108-story.html
இவரின் சிறுவயதில் இருந்தே பயணம் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்துள்ளது. இவரின் அப்பா ஒவ்வொரு வருடமும் இலையுதிர்காலத்தில் குடும்பத்துடன் பயணங்களை மேற்கொள்வார். வழியில் பொருட்களை வாங்கி விற்றுக்கொண்டு, அதில் வரும் வருமானத்தில் பயணத்தை தொடர்வார்கள். இந்தியாவில் இரண்டு வருடங்கள் இருந்துள்ளார். அப்போது அவரின் பயணக் கதைகளை நியூயார்க் டைம் ல் எழுதி வந்துள்ளார். http://india.blogs.nytimes.com/author/gloria-steinem/
பயணங்கள் புதிய ஒரு புரிதலைக் கொடுக்கும் என்று சொல்லும் இவர் இன்றும் எங்காவது பயணத்தில் இருக்கக்கூடும்.