Monday, October 26, 2015

மதம் குறித்தான‌ ராபி மற்றும் ரிச்சர்டின் விவாதம்

ராபி மற்றும் ரிச்சர்டின் உரையாடல் சிறப்பான ஒன்று. இப்படியான உரையாடல்கள் இரு தரப்பையும் புரிந்துகொள்ள உதவும்.

ரிச்சர்ட் டாக்கின்ஃச் ( Richard Dawkins)

இவர் கிறித்துவ மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்து , பின்னர் கடவுளின் இருப்பை கேள்வி கேட்ட ஆரம்பித்தவர். இவர் பெரும்பாலும் கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ( Old Testament )சொல்லப்படும் கடவுளை ஒட்டி கேள்விகளை எழுப்புபவர். பல புத்தகங்கள் , விவாதங்கள், மற்றும்  உரையாடல்கள் மூலம் அவரின் கருத்தை கொண்டு செல்பவர். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் (Evolutionary Biologist). இவர் தனது அமைப்பின் குறிக்கோளாக சொல்வது   https://richarddawkins.net/aboutus/
//The mission of the Richard Dawkins Foundation is to promote scientific literacy and a secular worldview. Some might see this as two distinct missions: 1) Teaching the value of science, and 2) Advancing secularism.//

ராபி சாக்ஃச் (Rabbi Jonathan Sacks)

இவர் ஒரு யூதர். இவர் தான் ஏன் ஒரு யூதர் என்று அவரே சொல்கிறார்.
"Why I am a Jew”  http://www.rabbisacks.org/why-i-am-a-jew/ . இவரும் பல புத்தகங்களை எழுதியுள்ளவர். இவர் எழுதிய Not in God’s Name ( Confronting Religious Violence) பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று.

தகவலுக்காக:
 • ஆபிரகாமிய மதங்களில் கிறித்துவம் மற்றும் இசுலாம் போலில்லாமல் , யூத மதம் இரண்டு அடையாளங்கள் கொண்டது. அடிப்படையில் அது ஒரு இனம் ( race ). இந்த இனத்தில் பிறந்தவர் தான் இயேசு (Yeshua) .  யூத மத நம்பிக்கைகளை  எதிர்த்து புரட்சி செய்தவரும்கூட‌. பிற்காலத்தில் அவரது பேரில் ஒரு மதம் உருவானது வரலாறு.
 • ஒருவரின் யூத அடையாளம் என்பது இரண்டு வழிகளில் வருவது.  “Descent,”  &  “Consent.” தாய் (mother) யூதராக இருந்தால் , குழந்தையின் யூத அடையாளம் Descent Jew .வேறு மதத்தில்  இருந்து மாறுவதால் வரும் அடையாளம் Consent Jew.

Debate - Richard Dawkins vs Jonathan Sacks


விவாதம் குறித்தான எனது பார்வை
 1. இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒரு யூதருக்கும், கிறித்துவப் பின்னனியில் இருந்து வந்து, தற்போது கிறித்துவம் காட்டும் கடவுளை கேள்வி கேட்கும் ஒருவருக்கும் நடக்கும் விவாதமாகவே உள்ளது. இதனை பொதுவான கடவுள் நம்பிக்கை குறித்தான விவாதமாக என்னால் ஏற்க முடியவில்லை.  ராபி எல்லா இடத்திலும் கிறித்துவத்தைவிட யூதம் சிறந்தது என்ற ஒப்பீடுகளை வைத்தே அவரின் தரப்பை நியாயப்படுத்துகிறார்.
 2. ராபி , உலம்/அண்டம் குறித்த உரையாடலின் போது இவ்வாறு ஒன்றைச் சொல்கிறார்  ..to understand the system you need to be outside of system  ..... இப்படிச் சொல்லி, அதனால் படைத்தவன் ( creator  )  system - ற்கு வெளியேதான் இருக்க முடியும் என்று நிறுவ முயல்கிறார். @ 10:22
 3. கடவுள் உலகைப் படைத்தவர், அவர் உலகிற்கு வெளியே உள்ளவர் என்றால், அந்த கடவுளைப் படைத்தவர் யார்? என்ற  கேள்விக்குள் அவர் போக நினைக்கவில்லை. அதுவே போதும் என்று அவரது பயணத்தை சராசரி மதப் பற்றாளர்கள் போல நிறுத்திக்கொள்கிறார்.  அவர் சொல்லும்   to understand the system you need to be outside of system  முக்கியமானது.  இதை கடவுளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிய , அதையும் தாண்டிப் போக வேண்டும்.
 4. @ 21:29 ‍- 22:30 ராபி,  விவிலியத்தை கிறித்துவத்தின் வழியில் படிக்கக்கூடாது என்கிறார் ( don’t read bible in Christian way  ).  @ 27:02 -27:39 அவர் யூதம் கிறித்துவத்தை, இசுலாத்தைவிடச் சிறந்தது என்கிறார். இங்கே ஒரு சராசரி மதப் பிரச்சார‌ யுத்தியே தெரிகிறது. இவர் பொதுவான "கடவுள்" என்ற கருத்தாக்கம் குறித்து பேசவில்லை. இந்த வாய்ப்பில் தனது ம‌தத்தைச் சரி என்று நிறுவ முயல்கிறார் என்றே நினைக்கிறேன்.
 5. ராபி சொன்னதில் பிடித்த ஒன்று , "அறம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று" சொன்னதே. பெரும்பாலன மத குருக்கள் "மதம் அற்றவன் அறம் அற்றவன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர், "மதத்திற்கும் அறத்திற்கும் தொடர்பில்லை" என்கிறார். @ 31:00-34:20  (  Religion don’t have any role in Moral   )
 6. சல்மான் ருஃச்டி பற்றிய உரையாடலின்  @ 45:03 - 41:00 போது 'ராபி' கருத்துச் சுதந்திரந்தை ஆதரிக்கிறார். "மதங்களை எதிர்த்துப் பேசும் சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்" என்கிறார். 'ஒரு மதம் அதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று மூடிவைத்து காலம் தள்ள முடியாது' என்கிறார். இங்கேயும் இவர் யூதம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். ஆனால் வசதியாக இயேசுவின் கருத்துச் சுதந்திரத்திற்கு யூதம் என்ன செய்தது, என்பதை  மறந்து விடுகிறார். இவரே இந்த உரையாடலின் ஆரம்பத்தில் ரிச்சர்டின் புத்தகம் தனது நம்பிக்கையை புண்படுத்தியது ( offended ) என்றும் புலம்புகிறார்.  இரட்டை வேடம் போல் உள்ளது இவரது பேச்சு.
 7. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதச் சுமைகளை சுமத்த வேண்டாம் என்று நான் சொல்வது போல , ரிச்சர்டும் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 28:21 - 29:12 12  (Labeling a child) . ஆனால் இதை ராபி , குழந்தையின் குடியுரிமை மற்றும் மொழி அடையாளம் போல இதுவும் ஒன்று என்று சொல்லி சமாளிக்கிறார்.  @ 30:49 - 31:02   ராபி அதுகுறித்து பேசுவதை அவசரமா தவிர்ப்பது போலவே எனக்கு தெரிந்தது.
 8. "தேங்கிவிடும் குட்டை" என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுபோலவே ரிச்சர்டும்  super natural  குறித்தான ஒரு கருத்தை முன் வைக்கிறார். @ 42:40- 44:05  "When you admit it is super natural, by definition it is not understandable" .  தெரியாத ஒன்றை தெரியாது என்று சொல்லும்போது,  அதை தேடலுக்கான ஒரு வாய்ப்பாக அறிவியல் எடுத்துக்கொள்கிறது.  மதம் இன்றைய அறிவியலால் நிரப்பமுடியாத கேள்விகளை கடவுள் என்று சொல்லி , துதிப்பாடல் தயார் செய்ய ஆரம்பிக்கிறது.
  The concept (theory) of god
  http://kalvetu.balloonmama.net/2015/10/the-concept-theory-of-god.html
Image courtesy: https://en.wikipedia.org/wiki/African_art
நன்றி சித்தார்த் மற்றும் தமிழழகி (G + வழியாக)

.

No comments:

Post a Comment