இவர்களின் கதைகளும் நம்முடையது போலவேதான். பதின்ம வயதில் தந்தையை இழந்தவர், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் அவருக்கு. தன் அம்மா மற்றும் குடும்பத்தை தாங்கும் பொறுப்பு அவருக்கு சின்ன வயதிலேயே வந்துவிட்டது. 1935 ல் வெர்சினியா மாநிலத்தில் பிறந்தவர், 1962 ல் வடக்கு கெரொலைனா மாநிலத்தில் ஒரு சின்ன ஊருக்கு வேலை காரணமாக வந்தார். வந்த இடமே சொந்த இடமாகி, மூன்று பையன்கள், மனைவியுடன் வாழ்ந்து 83 வயதில், இறந்துவிட்டார்.
அழகான குடும்பம். மூன்றும் மகன்கள் அவருக்கு. மூத்த மருகமகள், குடும்பத்தினர் சார்பாக, பேசினார். ஆம் அவர் மட்டுமே மொத்தக் குடும்பத்தின் சார்பாக மேடையேறி பேசினார். மகன்களுடன் வாழ்ந்த ,தனது father-in-law, வீட்டுக்கு வந்த மருமகள்களிடம், கனிவாக இருந்ததையும், அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததையும் சொன்னார். He didn't know what to do with three girls. He was used to live with three boys as a king" என்று சொல்லி அவரின் முதல் Thanksgiving Dinner சவால்களை நகைச்சுவையாக சொன்னார். பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் மொத்தக் குடும்பத்தின் சார்பாக. தனது மாமியார் சார்பாகவும் அவரே பேசினார்
பல வருடங்களுக்குப் பிறகு இன்று , இப்படி ஒரு நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். இறந்தவரின் நண்பர் ஒருவர், நண்பர்கள் சார்பாக பேசினார். நண்பர்களுக்குள் நடந்த சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.
American White குடும்பம். கிறித்துவத்தை practice செய்பவர்கள். இயேசு யூதர் என்பதற்காக, ஃகீப்ருவில் யாரும் மந்திரங்களைச் சொல்லவில்லை. சடங்கு என்றளவில் சில பைபிள் வரிகளை மேற்கோள்காட்டி பாதிரியார் சிறிது நேரம் பேசியது மட்டுமே. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, இறந்தவரின் நினைவுகூறலாக பலவற்றை எளிய ஆங்கிலத்தில்தான் அனைவரும் பேசினார்கள்.
அந்த பேச்சுகள் முடிந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரும் ஒரு அறையில் வரிசையாக நின்று கொண்டனர். நண்பர்கள் உறவினர்கள் ஒவ்வொரிடமுமாக சென்று ஆறுதல் சொன்னோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து என்னையும் சேர்த்து நான்கு பேர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும், கைகொடுத்து, தோள் தட்டி,அணைத்து ஆறுதல் சொன்னோம்.
இறந்தவரின் மனைவியிடம் (80 வயது இருக்கலாம்) பேசி , அவரின் மகனுடன் நான் வேலை பார்ப்பதைச் சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியாக என்னை அணைத்தவர் "நான் என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. எனக்கு திருமணமானால் அதிக பிள்ளைகளைப் பெறுவேன் என்று சொல்லி, மூன்று குழந்தைகளைப் பெற்றேன்" என்றார். "Big family is good" என்றார்.
உண்மைதான், மூன்று மகன்கள் அவர்களின் மனைவிமார்கள், பேரக்குழந்தைகள் ,அவர்களின் spouse என்று நிறைந்து இருந்தது அந்த அறை. பெரும்பாலான பெண்கள் , அறிமுகமாயிருக்கா விட்டாலும், 'I want to give you a hug. Thanks for coming " என்று அறிமுகம் இல்லாத என்னை அணைத்து, you too belong here with our relatives and friends என்பதைச் செய்கையில் சொன்னார்கள்.
சின்ன வயதில் வாரமலர் வழியாக அறிந்த ஃபிகினி அமெரிக்கா வேறு. இன்று இந்த 20 வருட அமெரிக்க வாழ்க்கையில், நான் காண்பது வேறு. இவர்களின் குடும்பங்கள் நம் விக்ரமன் திரைப்பட குடும்பத்தைவிட சிறப்பாகவே மெய் வாழ்க்கையில் இருக்கிறது.