Friday, May 01, 2020

May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது? Coronavirus COVID-19 FAQ-4

Q1: May 01, 2020 அமெரிக்கா எப்படி உள்ளது?   இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள்?
இதுவரை,  COVID-19  உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103,225. இறந்தவர்களின் எண்ணிக்கை 64,808.
மாநிலங்கள் வாரியாக எத்தனைபேர் என்ற புள்ளிவிவரங்கள் இங்கே கிடைக்கிறது.
https://coronavirus.jhu.edu/us-map

உலக அளவிலான கணக்கும் இதே தளத்தில் உள்ளது.
https://coronavirus.jhu.edu/map.html

Q2: அதிகமாக பாதிக்கப்படுவது வயதானவர்கள் என்று தெரியும். ஆண் பெண் விகிதங்கள் உள்ளதா?
ஆம்.  உலக அளவில் அதிகமாக ஆண்களே இறந்துள்ளார்கள். இதற்கான தெளிவான மருத்துவ விளக்கங்கள் இல்லை. இனிமேல் வரலாம்.
ஆனால், இந்தியாவில் இது தலைகீழாக உள்ளது. ஆம் இந்தியாவில் அதிகமாக பெண்கள் இறந்துள்ளார்கள் ஆண்களைவிட.
DEATHS AMONG CONFIRMED CASES %. MALE 2.6  FEMALE 3.1 RATIO 0.9
https://fivethirtyeight.com/features/why-are-more-men-than-women-dying-of-covid-19/

Q3: அமெரிக்காவில் #StayHome ஆர்டர் விலக்கப்ப‌ட்டுவிட்டதா?
ஆம் மற்றும் இல்லை.
நான் ஏற்கனவே பல இடங்களில் சொன்னது போல, அமெரிக்கா ஒரு சனநாயக நாடு. மாநிலங்களின் கூட்டமைப்பு & கூட்டாட்சி தத்துவத்துவம் கடைக்கோடி கிராமம் வரை செயல்படுத்தப்படும் ஒன்று. 
அமெரிக்கா:
அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா முழுமைக்கும் #StayHome ஆர்டர் விலக்கப்படும் என்று ஒருமுறை சொல்லப்போக, அதற்கு வந்த எதிர்ப்பினால் பின்வாங்கிவிட்டார். இன்று, இப்போது, அமெரிக்க பெடரல் அரசு ஒவ்வொரு மாநிலமும், அவர்கள் மாநில நிலைமைக்குப் ஏற்ப #StayHome ஆர்டரை விலக்கிக்கொள்ளலாம் என்று சொல்லி, பெடரல் அரசு சார்பாக , மூன்று கட்டங்களாக எப்படி செயல்படுத்தலாம் என்று சில பரிந்துரைகளை (guidelines)செய்தததோடு நிறுத்திக்கொண்டார்.
https://www.whitehouse.gov/openingamerica/#guidelines
மாநிலங்கள்:
இப்போது ஒவ்வொரு மாநிலமும், அவர்களின் மாநில நிலைகளுக்கு ஏற்ப #StayHome ஆர்டரை விலக்கிக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, வடக்கு கரொலைனா (North Carolina) மாநிலத்தில் May 8.
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
https://files.nc.gov/governor/documents/files/EO135-Extensions.pdf
கவுண்ட்டிகள்:
North Carolina மாநிலம் இப்படி சொன்னாலும், அதே மாநிலத்திற்குள் உள்ள கவுண்ட்டிகள், அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் சொல்லவேண்டும். ஏனென்றால் கவுண்ட்டிகள் (County) அதற்கான தனி ஆணையைப் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. இதுவரை தனியாக ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்த "Wake County", நாங்கள் இன்று முதல் மாநில கவர்னரின் வழிமுறையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி அவர்களும் May 8 வரை நீட்டித்து விட்டார்கள். https://covid19.wakegov.com/wake-county-to-follow-governors-stay-at-home-order-starting-may-1/
முனிசிபாலிட்டிகள்:
இந்த Wake County யில் 12 முனிசிபாலிட்டிகள் உள்ளது. அதில் ஒரு மினிசிபாலிட்டி மட்டும், நாங்கள் உங்கள் ஆட்டைக்கு வரலை. நாங்கள் எங்களுக்கான முடிவை நாங்களே எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். இவர்களும் May 8 வரை நீடித்துள்ளார்கள் என்றாலும், இவர்களுக்கான தனி "PROCLAMATION CONTINUING TOWN OF APEX STATE OF EMERGENCY AND TERMINATION OF WAKE COUNTY EMERGENCY RESTRICTIONS IN FAVOR OF STATE RESTRICTIONS" ஐ அறிவித்துள்ளார்கள்.
https://www.apexnc.org/1407/COVID-19
ஆம் முனிசிபாலிட்டி அளவில் அவர்கள் அவர்களாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்தியா போல ஒரே நாடு , ஒரே மாநிலம், ஒரே மாவட்டம் என்றெல்லாம் ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்த முடியாது.
Q4: Coronavirus? COVID-19  வந்ததால் பொதுவாக என்ன மாற்றங்கள் நடந்துள்ளது? இனிமேல் எப்படி இருக்கும் வாழ்வு? உங்களின் #StayHome அனுபவம் & கருத்து?
வீட்டில் தண்ணீர் மின்சார செலவு அதிகமாகிறது. வாகன எரிபொருள் தேவை குறைந்துவிட்டது. அலுவலகம் என்ற கட்டிடங்கள் Duplicate home போன்றே தெரிகிறது. இவையெல்லாம் தேவையா? கொரானோ பலவற்றை புரட்டி போட்டு சிந்திக்க வைத்துள்ளது. சிலையைவைத்து பிழைக்கும் so called கோவில் தொழில் உட்பட.

IT எனப்படும் பொட்டி தட்டும் தொழிலில் #StayHome அதாவது #WorkFromHome என்பது பரவலாக இருந்தது என்றாலும், வீட்டில் இருந்து வீடியோவில் மொகரையை காட்டியதில்லை. அலுவலக பிம்பங்களை கலைக்க மனமில்லாமல். இப்போது கலைந்த முடியுடன் மேக்கப் இல்லாமல், பெண்களே வீடியோ வழியில் இணைந்து பேசுகிறார்கள்
ணையம் மற்றும் அதுசார்ந்த கட்டமைப்புகள் இந்த அளவு வளர்ந்திருக்காவிடில் #StayHome வேறுவிதமாக இருந்திருக்கும். அறிவியல் ஒரு கலங்கரை விளக்கம் போல. கொரானாவிற்கு முன் இணையத்தை விரிவுபடுத்தியதால் பல நன்மைகள். மதங்கள் மயிரைக்கூட பிடுங்கவில்லை. அது இனிமேலும் மனிதகுலத்திற்கு தேவையா?
மதம் & Idea of god, கருமா குருமா சோசியம் வாச்து எல்லாம் தேவையற்ற ஆணிகள் என்பதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
Online ordering, curbside pickup, போன்றவை கொரானாவுக்கு முன்னரே இருந்தது. ஆனால், இப்போது அது ஒரு தவிர்க்கமுடியாத ஒன்றாகி வருகிறது. அறிவியல் /தொழில் நுட்பம் சாதித்தது இது. இன்றுவரை திருப்பதி சிலை நட்டமாகவே நிற்கிறது. ஏதாவது பயன் உண்டா? அதை ஓரமாக வைத்துவிட்டு கல்வி நிலையமாக்கலாம்.

வீட்டில் சமையல் வேலை கூடிவிட்டது. பெண்கள் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற (கொடுமைக்காரர்களின் ) வீடுதவிர, மற்றவர்கள் வீடு தேவலை. பெண்கள் மட்டுமே சமைக்கும் அடிமையகங்களில் அவர்களுக்கு வேலை அதிகமாகிவிட்டது.
ரே ஒரு குழந்தை மட்டும் உள்ள வீடுகளில் , அந்தக் குழந்தைகளுக்கு மனப் பாதிப்புகள் வரலாமா? என்ற ஒரு ஆராய்ச்சி நடக்கிறது.இப்படியான ஒரு குழந்தை குடும்பங்களில் அவர்களை மற்ற குழந்தைகளுடன் இணைப்பது இணையமே. பெற்றோர்களே online game களை ஊக்குவிக்கும் நிலையும் வந்துவிட்டது.

வீடுகளில் நடக்கும் சாயிபாபான்,சத்யசாயிபாபன் பசனைகள் ஏன் இன்சா முனியாண்டியின் விரதமே டப்பா டான்சாகி அடங்கிவிட்டது.மதங்கள் எந்த அறிவியலை வெறுத்ததோ அந்த அறிவியலைப் பயன்படுத்தி வெட்கமே இல்லாமல் ஆன்லைன் பசனைகளை ஆரம்பித்து விட்டன.
னக்கென அதாவது தான் தனியாக இருந்தாலும் தனக்கென பொழுது போக்குகளை ஆர்வங்களை தேடல்களை வைத்துக் கொள்ளாதவர்கள், மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.சோசியல் skill என்பது இணையத்தின் வழியேமட்டுமே நடப்பதாகிவிட்டதால், விட்டத்தை வெறிப்பது அதிகமாவிட்டது.
It's THE right time to reset your compass.
டற்பயிற்சி செய்வதற்கென்றே தனியான அமைப்புகளில் (monthly payments gym) சேர்ந்தவர்கள், இப்போது அப்படியான இடங்களுக்கு செல்ல முடியாமல் இருப்பதை ஒரு excuse ஆகக் கொண்டு, சும்மா வெட்டியாக இருப்பதும் நடக்கிறது. நம்முடன் கூடவே வருவது நம் உட‌ம்பும் தரையும்தான். ஆம் சாகும் வரை. எனவே எப்போதும், 30 min floor floor exercises routine களை உங்கள் உடற்பயிற்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள்.(Please don't even mention yoga to me .Its good for old people. பாயை விரித்து படுத்துக்கொண்டே உருள்வதற்கு )
க்களின் நடமாட்டத்தை நம்பியே இருக்கும் நடைபாதை வியாபாரிகளின் நிலைமைதான் பாவம். அது போல அலுவலகத்துக்கு போவோரின் ஆடை மிடுக்கிற்காக, அதை நம்பி துணி தேய்ப்பவர்கள் போன்ற தொழிலாளிகளின் நிலை.இவர்கள் என்ன மாற்று தொழிலை செய்துவிட முடியும்?
திகமாக ஒரு ரூம் கட்டுவதே நல்லது என்பது போன்ற வீட்டு அமைப்புகள் இந்தியாவில் அதிகம். நிலத்தின் பாதியை திறந்தவெளியாக விட்டு, மரம்செடி தோட்டம் என்று வீடு கட்டி அதில் வாழப் பழகுவது நல்லது.தோட்டங்கள் நல்ல பொழுதுபோக்கு. மேலும் சில உணவுத்தேவைகள் நிறைவேறும். சிறுகக்கட்டி பெருகவாழ்.  அம்பேரிக்காவில்கூட அதிகமான ரூம் உள்ள வீடுகளையே நம்மவர்கள் விரும்புகிறார்கள். காலியிடம் இருந்தால் அதிலும் sunroom கட்டுகிறார்கள். நிலத்தை அப்படியே விடுவது, அதில் தோட்டம் வைப்பது என்பதை அவசியத் தேவையாகவே நினைப்பது இல்லை.Self sustaining க்கு மட்டுமல்லாமல் இவைகள் பல வகைகளில் நல்லது.
முந்தைய‌ FAQ கள்
தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus? COVID-19 FAQ-3
https://kalvetu.blogspot.com/2020/03/covid-19-faq-3.html

Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2
https://kalvetu.blogspot.com/2020/03/where-did-we-screw-up-what-can-you-do.html

SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ1
https://kalvetu.blogspot.com/2020/03/sars-cov-2-covid-19-faq.html


No comments:

Post a Comment