Friday, March 27, 2020

Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2

ன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் கரோனா வைரசு ஒரு வைரசுக் குடும்பம் என்பதைப் பார்த்தோம் முந்தைய கட்டுரையில். ஆம் அது நமக்கு புதிதல்ல. மனிதர்களிடம் பரவிய Corona Virus கள் இதுவரை ஏழு. இன்று வந்துள்ளதையும் சேர்த்து. அனைத்தும் அதே அந்த ஒரே கரோனா வைரசு குடும்பத்திலிருந்து வந்தவைகளே. இன்று நம்மை வாட்டி வதைப்பது அதில் ஒரு புதிய கிளை SARS-CoV-2 கரோனா வைரசு அதனால் இன்று வந்துள்ள நோய்க்கு பெயர் COVID-19.

SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ

http://kalvetu.blogspot.com/2020/03/sars-cov-2-covid-19-faq.html

நாம் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளோம். இதை இந்த நேரத்தில் பகிர்வது அவசியமாகிறது. இதைப் படித்து. உங்களின் புத்திக்குச் சரியென்று பட்டால் மட்டுமே பிறரிடம் பகிரவும். 

(1) இது பற்றி நமக்கு முன்னமே தெரியாதா?
தெரியும். ஆம் தெரியும். இந்த கரோனா வைரசு குடும்பம் என்றுமே அழியப் போவதில்லை. அது வெவ்வேறு பரிமாணங்களில்  நம்மை வந்து தாக்கலாம் அல்லது புதிய ஒரு வைரசு வரலாம் என்பது World Health Organization(WHO) க்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், அவர்களால் ஏதும் செய்ய முடியாது அல்லது முடியவில்லை. ஏன் என்றால் அது ஒரு ஐநா சபை போன்ற ஒரு அமைப்புதானே தவிர, பெரிய முதல் போட்டு, மருத்துவர்கள & ஆராய்ச்சியாளர்கள் படையை வைத்து தொடர் ஆராய்ச்சி செய்யக்கூடிய அளவிற்கு வசதி படைத்தது அல்ல.

(2) சரி மற்றவர்கள் என்ன செய்தார்கள்?
ன்றும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்த மற்றவர்களில் நீங்களும்,நானும், நம்மை ஆள நாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்களும், நாம் அடிமையாக கிடக்கும் அல்லது நம்மை பொருளாதார அடிமைகளாக வைத்து இருக்கும் பெருநிறுவன அமைப்புகளும் அந்த அமைப்புகளின் முதலாளிகளும் காரணம்.

(3) ஒருவர் கூடவா இதைக் கணிக்கவில்லை?
நீங்கள் நம்மூர் சோசியப்பயல்களை மனதில் வைத்து கேட்கிறீர்களா அல்லது சக்கி வகையறா சாமியார்ப்பயல்களை மனதில் வைத்து கேட்கிறீர்களா என்று தெரியாது. அவனுகள் கூமுட்டைகள் அவஅறிவியலாளர்கள். 
(4) மேட்டருக்கு வாங்க. வேறு யாராவது கணித்தார்களா இல்லையா?
தை கணிக்க வேண்டியதும், கண்காணிக்க வேண்டியதும் அறிவியாலாளர்களின் பொறுப்பு & கடமை. என்னைப்போன்ற ஒரு எட்டணா பிளாக்கர் எதையாவது சொல்லி, அதை பத்தணா மனிதர்கள பத்துபேர் படித்து, அது கவனம் பெறாமல் போயிருந்தால் வருத்தம் இருக்கப்போவது இல்லை எனக்கு. பல ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை பேசி இருக்கலாம். 
ஆனால், இதை அன்றே கணித்து பொது அரங்கில் உங்களுக்கும் எனக்கும் புரியும்படி பலர் முன்னிலையில் சொன்னார் ஒருவர். அவர் சொன்ன நாள் Apr 3, 2015 . ஆம் அன்றே நாம் அனைவரும் அறிந்த, ஏன் உலகமே அறிந்தவரே இதைச் சொல்லி நம்மை எச்சரித்தும் உள்ளார். உங்களின் பலர் இதை ஏற்கனவே பார்த்து கேட்டு இருக்கக்கூடும். அப்போதெல்லாம் இது ஒரு சினிமா கதைபோல இருந்து இருக்கலாம். தோழர்களே இன்று அது நம் தெருக்களுக்கு வந்துவிட்டது.
The next outbreak? We’re not ready Apr 3, 2015 | Bill Gateshttps://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI
(4.1) Apr 3, 2015 ல் அப்படி Bill Gates என்னதான் சொன்னார்? 
Bill Gates மிகத் தெளிவாக, Ebola virus நேரத்தில் நடந்த மாதிரிகளை முன்வைத்து, "இப்படி ஒரு வைரசு, அல்லது ஏதேனும் ஒரு புதிய Flu வைரசு அடுத்த பத்தாண்டுகளில் வந்தால் அதைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு நாம் இல்லை". என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி, அதனால் வரக்கூடிய பொருளாதர இழப்புகளை 3 trillion என்றும், மில்லியன் கக்கில் மனித உயிர்கள் போகும் என்றும் சொல்லியிருந்தார். அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்.

  1. ஏழை நாடுகளில் வலுவுள்ள மருத்துவக் கட்டமைப்பு 
  2. Army Reserve போல Medical Reserve Corps .
    (எப்போதும் தயார் நிலையில் இராணுவம் போல இறங்கிச் செயல்பட கட்டமைப்பு வசதிகளுடன் மருத்துவர்கள் & மருத்துவம் சார்ந்த உதவியாளர்கள்.)
  3. இந்த புதிய  Medical Reserve வை ஏற்கனவே இருக்கும் Army Reserve உடன் இணைந்து செயல்பட வைக்க ஒரு கட்டமைப்பு.
    (அவசர காலத்தில் இராணுவத்தின் logistics  க்கை பயன்படுத்திக் கொள்ள இது உதவும்.)
  4. Germs Games. (virus simulations)நாம் துப்பாக்கிகளாலும் தோட்டாக்காளாலும் பல சோதனைகளை ஏன் இன்று குழந்தைகளின் விளையாட்டுவரை கொண்டு வந்துவிட்டோம். ஆனால் அதைவிடப் பெரிய வைரசு க்கு நாம் தயாராகவில்லை.
  5. Large research & development setup 

ப்போது 2020 இன்றுவரை நாம் இதை எதுமே நாம் செய்யவில்லை. பலனை அனுபவிக்கிறோம்.

(5) மன்னிச்சிருங்க தோழர். சொதப்பிட்டோம். சரி இப்போது, இந்த COVID-19 க்கு என்ன செய்வது?
இங்குதான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு தளங்களில் நமக்கு தாக்குதல்களும் சிக்கலும் வருகிறது, வரலாம், வந்துவிட்டது. 
(5.1) ஒரு சமுதாயமாக என்ன செய்யவேண்டும் என்ன செய்யலாம்?
நான் Yuval Noah ன் கட்டுரையை ஏற்கனவே உங்களை வாசிக்கச் சொல்லியிருந்தேன். அதில் இல்லாத புதிய ஒன்றை என்னால் சொல்லிவிட முடியாது.Yuval Noah Harari: the world after coronavirusThis storm will pass. But the choices we make now could change our lives for years to comehttps://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75
சமுதாயமாக செய்ய வேண்டியது ஒன்றுதான். அரசாங்கம் இந்த நேரத்தில், "உங்களின் நல்லதுக்காகவே செய்கிறோம்" என்று அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடலாம். அதை சில நிசப்த உப்புமாக்களும், " லத்தில அடிச்சா இந்த நேரத்துல குண்டிய மூடிக்கணும். எல்லாம் நம்ம நல்லதுக்கே" என்று சொல்லலாம். ஆம், பெருவாரியான மக்கள் முட்டாள்களே. அதற்காக அவர்களின்மீதான அடக்குமுறையை நீ இன்று சரி என்று சொன்னால், நாளை உனக்கு வரும்போது, உனக்கு அழக்கூட.எந்த முட்டாளும் இருக்கமாட்டான்.
  • உலகின் எல்லா அடக்குமுறைகளும், ஏதோ ஒன்றை, யாரோ ஒரு பகுதிக்கு நல்லது என்று நம்பவைத்து , அடுத்த ஒன்றை அழிப்பது என்றே தொடங்கும். 
  • இந்த நேரத்தில் சகோதரத்துவத்துடனும், சமுதாயப் பொறுப்புடனும், தன்மரியாதையுடனும் நடந்துகொள்ளவேண்டும்.உன் சகோதரன் முட்டாள் என்பதற்காக அவனை அதிகாரத்தின் அடக்குமுறைக்கு பலிகொடுக்கும் சடங்கைச் செய்யாதே.
  • சாமி பொம்மைகளும், பொம்மைச் சாமியார்களும் உதவப்போவது இல்லை. ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதே நாம் செய்ய வேண்டியது. 
(5.2) தனிமனிதனாக தன்னையும் காப்பாற்றி மற்றவர்களுக்கும் பரவாமால் காக்க என்ன செய்யலாம்?

  • வீட்டில் இருங்கள். மூடிக்கிட்டு இருங்கள். தேவையானதை வாங்க ஒருவர் மட்டுமே போய்வாருங்கள். இந்த வைரசை பரப்புவதும் அந்த வைரசால் சாவதும் மனித‌னே. ஆரம்பத்தில் இது விலங்குகளிடம் இருந்தே மனிதனுக்கு தொற்றிக்கொண்டாலும், இன்றையை தேதியில் நாமே இந்த வைரசின் "கொலைபரப்புச் செயலாளர்கள்". எப்படி சனாத வர்ணத்தை ஆரம்பித்தவன் ஒரு கேடுகெட்ட பார்ப்பன விலங்கு என்றாலும், இன்று அதைத் தூக்கி, பரப்பித் திரிவது சூத்திர தீச்சட்டி பரம்பரைகளோ அதுபோல.
  • வெளியில் போய் வருபவர்கள், வீட்டிற்குள் வந்தவுடன் வேறு எதையும் தொடும்முன், கைகளை நன்றாக சோப்புப்போட்டு, தேய்த்துக் க‌ழுவுங்கள். முடிந்தால் குளித்துவிடுங்கள்.
  • மற்ற வைரசு போல் அல்லாமல் SARS-CoV-2  சிறிது வித்தியாசமாகச் செயல்படுகிறது. இது உங்களை நேரடியாக மட்டும் கொல்லாமல், ஏற்கனவே இருக்கும் உங்களின் உடல்சார் பிரச்சனைகளை பெரிதாக்கி அல்லது வைரசுடன் சண்டை போட முடியாத அளவிற்கு நோய்த்தடுப்பு ஆற்றல் (immunity) இல்லாதவர்களை கொல்கிறது. 
ல்ல நிலையில் உள்ளவர்களிடம்  இந்த SARS-CoV-2  வைரசு  போனாலும், அவர்களுக்கு சின்ன பாதிப்பு அல்லது எந்த பாதிப்பும் இல்லாமலும் இருக்கலாம். இதுதான் மிக ஆபத்தானது.
ஏதாவது நோக்காடு symptom வந்தால், மட்டுமே மருத்துவரைப் பார்ப்போம். எல்லாம் நல்லபடியாக இருக்கும் ஒருவர், நல்ல  நோய்த்தடுப்பு ஆற்றல் (immunity)  கொண்ட ஒருவர், அவரிடம் இந்த வைரசு இருந்தாலும், அவருக்குத் தெரியாது.  அதே சமயம் ,அவர் அந்த வைரசை சுமந்து மற்றவர்களிடம் பரப்பிவிடுவார். அவரிடம் இருந்து வாங்கியவர் ஏப்பை சாப்பை என்றால், மரணம்தான்.

வேறு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். என் மகன் வயது 19. அவன் என் சொல்பேச்சு கேட்காமல், வெளியில் போய் அவன் நண்பர்களைப் பார்க்கிறான். அவன் நண்பர்களில் ஒருவன் வேறு எங்கிருந்தோ இந்த வைரசை பிடித்து வந்தவன். அவனிடம் இருந்து என் மகனுக்கு வந்தாலும், அவன் வயது காரணாமக மிகவும் இயல்பாக எந்த நோக்காடு அறிகுறியும் இல்லாமல் இருக்க 100% வாய்ப்புள்ளது. ஆனால், நான் ஒரு 59 வயது அல்பகேசு. அந்த வைரசுஎன் மகன் மூலமாக எனக்கு வந்தால், அது என்னைத் தூக்கிவிட வாய்ப்புள்ளது.

  • எனவே, உங்களின் குழந்தைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள். கண்காணியுங்கள். அல்லது கட்டிப் போடுங்கள். இவர்களே இந்த வைரசின் ஆக்கபூர்வ "கொலைபரப்புச் செயலாளர்கள்". 

நான் ஒரு டுபாக்கூர் என்று தயவுசெய்து சொதப்பிவிடாதீர்கள். தென் கொரியாவும் இப்படி மக்களின் நடமாட்டத்தை கவனித்து, கண்காணித்து இதனை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. நான் பெரிதும் மதிக்கும் @RichardDawkins Richard Dawkins
(Ethologist, evolutionary biologist, and author) பரிந்துரைத்த @mattwridley ன் கட்டுரை இது. இதையும் படித்துவிடுங்கள். 

THE CURIOUS AGE DISCRIMINATION OF CORONAVIRUS
http://www.rationaloptimist.com/blog/age-discrimination-of-coronavirus/

ஆங்கிலம் தெரியாத உங்களின் வீட்டு பாட்டிகளிடம் சொல்லுங்கள். அவர்களின் பேராண்டிகளே எமனை அழைத்து வரலாம் என்றும், அந்த எமன் பேராண்டியிடம் நட்பாகவே இருப்பான் என்றும் , பாட்டியைத் தூக்கிடுவான் என்றும் சொல்லுங்கள்.

கட்டுரையில் உள்ள "டைபாயிடு மேரி" கதையைப் படித்துப் பாருங்கள். எப்படி இந்த டைபாயிடு அவளிடம் இருந்தும் அவளை ஒன்றும் செய்யாமல், ஆனால் அவள் மூலம் மற்றவர்களுக்கு பரவி ஊரை காலி செய்தது என்றும், ஒன்றுமே செய்ய முடியாத அரசு அவளை சாகும்வரை வரை சிறையில் அடைத்தே வைத்து இருந்ததும் தெரியவரும். 

எப்போதும் நான் சொல்வதுதான். வரலாறு தெரியாதவனால் அவனுக்கான எதிர்காலத்தை உருவாக்க‌ முடியாது.

//Typhoid Mary was a cook who moved from one rich employer to another in New York and Long Island, infecting seven households with typhoid between 1900 and 1907 before doctors traced her as the common cause of the infections. The key point is that she was in good health herself throughout. When confronted, she indignantly refused to submit stool samples for analysis, until eventually imprisoned for this refusal.

After three years she was released while promising not to work as a cook. -Unhappy with the low wages of a laundress, she changed her name, resumed cooking and resumed causing typhoid. After a 1915 outbreak in a hospital for women in which 25 people fell ill and two died, Mary Mallon/Brown was again arrested and kept in quarantine for the rest of her life, refusing to have her gall bladder removed. When she died in 1938, an autopsy revealed a thriving colony of typhoid bacteria in her gall bladder. For some genetic reason they had not caused any symptoms in her.//

(6) ரைட்டு எல்லாம் செய்தும் நான் (நீங்கள்தான்) போய்ச்சேர்ந்துவிட்டால் என்ன செய்வது?
  • ப்போதுள்ள சூழலில், எரிப்பதா புதைப்பாதா என்ற கேள்வியே இருக்காது. பொசுக்கி சாம்பலைக்கூட த‌ருவார்களா என்று தெரியாது. எனவே எனது கல்லறை பளிங்கில் இருக்க வேண்டும்,அய்யப்பய‌லுகளை வைத்து பிண்டம் கொடுக்கனும் என்று மேலும் எழவைக் கூட்டாதீர்கள். நிம்மதியாக போவோம் இருப்பவர்களை பாதிக்காமல்.
  • எல்லா வங்கி கணக்குகள், கடன் பத்திரங்கள், நிலம்,வீட்டு பத்திரங்கள் இருக்கும் இடம் , காப்பீட்டு கணக்கு, வைப்பாட்டி கணக்கு என்று எல்லாவற்றையும் மனைவியிடம் கணவனும், மனைவி கண்வனிடமும் சொல்லிவிடுங்கள்.
  • வைரசுக்குப்பிறகு பணம் என்ன ஆகும் என்று தெரியாது. அயோத்தி ராமுக்கு அட்டிகை செய்ய வேண்டும் என்றால். பிரதமர் வைரசு அரித்த உங்களின் கோவணத்தைக் கூட உருவுவார்.
  • பிழைத்து இருப்பவர்களுக்கு வாழ பணம்முக்கியம். எனவே தகவலகளை ஆவணப்படுத்துங்கள்.
  • உங்கள் அலுவலத்தில் மேனேசரின் எண், அவரும் போயிட்டால் தொடர்பு கொள்ள வேறு ஒரு அலுவலக நண்பனின்/தோழியின் எண் என்று வீட்டில் கொடுத்து விடுங்கள். அலுவலகம் சார்ந்த நடைமுறைகளை முடிக்க சுலபமாக இருக்கும்.
  • இது போன்ற வேலைகளை வைரசுக்கு பயந்தோ அல்லது வப்பாட்டிக்கு பயந்தோ மட்டும் செய்வது சரியில்லை. இது போன்ற திட்டங்களை "What to Do When I'm Gone" என்று எப்போதும் தயார் நிலையில் ஒரு நோட்டில் எழுதி வைத்து விடுங்கள். 

(7) நான் போயிட்டேன் (நாந்தேன் கல்வெட்டு என்ற தோழர்) என்றாலும், இந்த pandemic ல் தப்பி பிழைப்பவர்கள்  இருப்பவர்கள் இனி என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?
முதலில், உங்களின் பீர் பாட்டிலை உயர்த்தி அல்லது காஃபி கோப்பையை உயர்த்தி எனக்கு மகிழ்ச்சிவிடை கொடுங்கள். எப்போதாவது காடுகளுக்கோ மலைகளுக்கோ ஆறுகளுக்கோ ஏரிகளுக்கோ கடலுக்கோ வானத்துத்துக்கோ சென்றால், உரக்க என் பெயர் சொல்லுங்கள் அங்கே. 'அவனும் இயற்கையின் காதலனே" என்று. 
மேலே சொன்னதைச் செய்யாட்டிக்கூட மன்னித்துவிடுவேன். கீழே சொல்லப்போவதைச் செய்யவில்லை என்றால் பேயாக வந்து படுத்துவேன்.


  1. இனிமேல் இப்படி ஒரு வைரசு pandemic வந்தால்  என்ன செய்யவேண்டும் என்பதை உடனே தொடங்கிவிடுங்கள். சாமி,பூசாரி என்று எந்த எழவும் உதாவது என்பதை இந்த வைரசில் இருந்து கற்று இருப்பீர்கள். மேலே பில் கேட்சு அண்ணாத்தே சொன்னதைச் செய்யுங்கள். உடனே.
  2. இப்படியான வைரசு pandemic ஒருபுறமென்றால்,Global warming  ஒருபுறம். அதன் தாக்கம்/அழிவு எப்படி இருக்கும் என்றே தெரியாது. அது வந்தால் இப்படிகட்டுரை எழுதக்கூட நேரம் கொடுக்காமல் நம்மை (உங்களை) தூக்கியடிக்கும். Its real and its coming அதற்காக திட்டமிடுங்கள்.
  3. இந்த கருமம் பிடித்த சனாதன வர்ண சாதி எழவுகள், சாமி, சாமியார்ப் பயலுகளைவிட்டு அறிவியலைக் காதலியுங்கள். அறிவிலைக் கும்பிட்டு படையல் போடு அதையும் சிலையாக்கிவிடாமல், அறிவியலைக் கேள்வி கேட்டு , அறிவியலை அலற‌விட்டு, அதன் மூலம் அறிவியலை வளர்த்து, empathy  யோடு global well-being க்காக நேரம் செலவிட்டு வாழுங்கள்.

2 comments: