Saturday, March 28, 2020

தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா Coronavirus? COVID-19 FAQ-3

Q1: சாதரண  Flu  காய்ச்சலே அதிகப்பேரைக் கொல்லும்போது எதற்கு இந்த கொரானோ வைரசு (coronavirus) பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்?

டிவி ரங்கராசு கூமுட்டையான் மாதிரி பேசாதீங்க தோழர்.

  • சாதரண Flu வைவிட கொரானோ வைரசு அதிக தொற்றும் தன்மை (contagious) கொண்டது. 
  • இந்த நோய் இருந்தாலும் 14 நாட்கள் வரையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். 
  • இருப்பது தெரியாமலேயே அடுத்தவருக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது. 
  • Flu க்கு தடுப்பு மருந்து உள்ளது. இதற்கு இல்லை.
  • நோய் வந்தவர்களில் இறப்பு சதவீதம்  flu வைவிட கொரானோ வைரசு க்கு அதிகம்.

Q2: எப்போது இந்த‌ social distancing  முடிவிற்கு வரும்?
தெரியாது .
என்ன அவசரம்? வீட்ல தான இருக்கீங்க.ஏப்ரல் மே வரை கூட போகலாம். இது போன்ற அறிவிப்புகளுக்கு உள்ளூர் அரசாங்கம் சொல்வதை கவனியுங்கள். அரசாங்கமே சொன்னாலும், அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு எட்டியே இருங்கள்.
Q3. இந்த கொரானோ வைரசு நீச்சல்குளம், ஆறு, ஏரி போன்றவற்றில் குளிக்கும்போது ஒட்டிக்கொள்ளுமா/பரவுமா?
இன்றுவரை* தண்ணீர்மூலமாகப் பரவியதாக தகவல்கள் இல்லை. உங்களுக்கு இந்த வைரசு இருந்தால் போகாதீர்கள் பிறர்நன்மைக்காக. உங்களுக்கு இந்த நோய் இல்லாவிட்டாலும் தவிர்த்துவிடுங்கள் இந்த நேரத்தில். குளிக்காமல் இருங்கள் வீட்டுக்குள்தானே இருக்கின்றீர்கள். கவலை வேண்டாம்.
Q4: குறைந்த வெப்பத்தில் அல்லது அதிக வெப்பத்தில் இந்த வைரசு செத்துவிடுமா?
வாட்சப்பு மேட்டரா தோழர்?
இதுவரை நேரடியான அறிவியல் சோதனைத் தகவல்கள்  இல்லை. ஆனால், பொதுவாக வைரசுகளின் அதிக வெப்பநிலையிலும், அதிக ஈரப்பதம் உள்ள இடத்திலும் இதன் ஆயுட்காலம் குறைவு. இதற்காக முடி உலர்த்தும் ட்ரையரை மூக்கில் வைக்காதீர்கள்.
Q5. கொசுவால் இது பரவுமா?
இல்லை.
இதுவரை கொசுவால் பரவியதாக World Health Organization (@WHO)சொல்லவில்லை. அதற்காக கொசுவோடு விளையாடவும் வேண்டாம். அறிமுகமே இல்லாத அழகிக்கு கொசுவலைக்குள் முத்தம் கொடுத்தால் நோய் வராது என்று நினைக்கவும் வேண்டாம்.
Q6. ஏன் மக்கள் தண்ணீர் பாட்டில்களை வாங்கி அடுக்குகிறார்கள் அமெரிக்காவில்? தண்ணீர் வழங்கலில் சிக்கல் வரப்போகிறதா?
இல்லை.
முனிசிபல் தண்ணீர் வழங்கலில் சிக்கல்  இல்லை. வரப்போவதாக வதந்திகூட இல்லை. எதையாவது வாங்கி குமித்தால்தான், நாமும் இந்த pandemic க்கில் பங்குகொண்ட திருப்தி வரும் என்பதற்காக, எதையாவது வாங்கி அடுக்குகிறார்கள்.
Q7. உணவகங்களில் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது ஆனால், takeout /curbside delivery /home  delivery சரியா? உணவு மூலமாக பரவுமா?
ஏம்பா வீட்லதான இருக்க. சமைச்சு சாப்ட வேண்டியதுதானே?
ரைட்டு விடு.
இதுவரை உணவு மூலமாக பரவியதாக தகவல்கள் இல்லை.
யாரும் வேண்டும் என்றே, இந்த வைரசால் பாதிக்கப்பட்டவரை வேலைக்கு வைக்க மாட்டார்கள். ஆனால், இந்த வைரசு இருப்பது தெரியாமலேயே யாராவது வேலை செய்து, அவர்கள் உங்களுக்கு பொட்டலம் கொடுக்கும்போது கைபட்டு ஒட்டிவிட வாய்ப்புள்ளது.
உணவு கொடுக்கப்படும் டப்பாக்களை துடைத்துவிடுங்கள். கவனமாக இருக்கவும். 
Q8. இந்த வைரசு தரையில் விழுந்தால் (சளி, தும்மல் வழியாக) எவ்வளவு நாள் பிழைத்திருக்கும்?
மூன்று நாள் வரை இருக்கும். அதுவும் தரையின் தன்மையைப் பொறுத்து.
எடுத்துக்காட்டாக எவர்சில்வர் & பிளாச்டிக் பாத்திரத்தில் ஒட்டிய இந்த வைரசு 72 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும்.
தாமிரத்தில் 4 மணி நேரம், அட்டையில் 24 மணி நேரம்.
Q9. பல் வலி. பல் டாக்டரிடம் போகலாமா?
உப்பு வச்சு தேய்க்கவும். இல்லாட்டி சிரிக்காமல் இருக்கவும்.
அமெரிக்காவில் அவசர சிகிச்சை தவிர அனைத்தையும் "எப்படியோ காலத்தை கடத்துங்கள்" என்று சொல்லிவிட்டார்கள் பல் மருத்துவர்க்ளின் அமைப்பு.
Q10. இந்த கொரானோ வைரசு என் தம்பிக்கு வந்த Flu வைவிட மோசமானதா என்ன?
ஆமா ஆமா ஆமாய்யா.
எத்தனை தடவை சொல்வது. போய் உட்காருப்பா. வாட்சப்பை நம்பாதே
Q11: கொரானோ வைரசு இருந்தும், அந்த COVID-19 நோய்க்கான அறிகுறியே இல்லாமல் ஆட்கள் இருக்கலாம் என்கிறீர்களே, அப்படியான நிலையில், யாருக்கு இது உள்ளது என்று தெரியும்?
எல்லாருக்கும் இருப்பதாகவே நினைத்து கவனமாக இருப்பதே நல்லது.
உயிர் முக்கியம் என்றால் social distance ஐ தொடரவும். கைளைக் கழுவவும். வெட்டியாக சுத்தாமல் வீட்டில் இருக்கவும்.சிலைகளை வேடிக்க பார்க்க போகவேண்டாம். அதுகளே மெரண்டு போய்க்கெடக்காம்.  
Q12: என் மனைவிக்கு உடல் சரியில்லை (கொரானோ வைரசு இல்லை வேறு ஏதோ பிரச்சனை) எப்படி கவனிப்பது?
ம்ம்....
எப்படிக் கவனிப்பதுன்னு கேள்வியா எப்படி சமாளிப்பதுன்னு கேள்வியா?
மகிழ்ச்சியாக கடையில் போய் சரக்கடிக்க இது நேரமில்லை தோழர். முதலில் இது கொரொனாவுக்கான அறிகுறியா என்று பாருங்கள். மருத்துவமனையை நாடவும்.
எதற்கும் வழியில்லை என்றால், மனைவிக்கு என்று தனி அறையை ஒதுக்கவும். கதவை மூடியே வைக்கவும்.
ஒருவர் மட்டுமே அவரைக் கவனிக்கவும். குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.
13. COVID-19 நோய்க்கான அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், வற‌ட்டு இருமல் (dry cough), மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை. இதற்கான அறிகுறிகள்.
ஏற்கனவே உங்களுக்கு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இருந்தால் கவனமாக இருக்கவும். 
Q14. எப்படித்தான்யா இது பரவுது?

அலோ மப்புல இருந்தீங்களா? இதோடோ பலமுறை சொல்லீட்டேன். கைகடுக்க பல கட்டுரை எழுதிட்டேன்.

  • Respiratory Droplets எனப்படும் இருமல், தும்மல், எச்சில்  போன்றவற்றின் மூலமாக இந்த வைரசு பரவுகிறது. ஒருவர் தும்மும் விலகி இருக்கவும். அல்லது ஓடிவிடவும்.
  • அதுபோல பேசும்போது இயல்பாக வாயில் இருந்து வரும் காற்றில் , நம் எச்சிலின் துளிகள் இருக்கும். அது அடுத்தவர் வாய்க்கு அல்லது மூக்கிற்கு சென்று பரவும்.
  • ஏற்கனவே ஒரு ஆள் தும்மிய இடத்தில், நீங்கள் கை வைத்து உங்கள் விரலை உங்கள் முதத்தில் சொறிந்து , உங்கள் வாயில் விரல்பட்டு , உங்கள் வயுத்துக்குள் வைரசு போக வாய்ப்புண்டு.

Q15. தோழிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா?
எது? அன்பா? வைரசா?
யோவ் கொஞ்ச நாளைக்கு மூடிக்கிட்டு இருய்யா.
Q16. மனைவிக்கு முத்தம் கொடுத்தால் பரவுமா?
ஏன்யா இம்சிக்கிற?
Q17. பிறர் என்னைத் தொட்டால் பரவுமா தோழர்?
அடங்குய்யா. கொஞ்ச நாளைக்கு Massage Parlor போவதைத் த‌விர்த்தால் நல்லது தோழர். அழகிகள் தொட்டால் சூடும் பரவும். அழகிக்கு கொரானோ இருந்து உங்களுக்கும் பரவ வாய்புள்ளது.
Q18. முத்தமெல்லாம் இல்லீங்க. சும்மா தோளோடு தோள் சேர்த்தாலுமா பரவும்?
யோய் ஏன்யா உசுர வாங்குற?
தோலோடு தோல் சேர்ந்தால் பரவியதாக தகவல்கள் இல்லை. தோளோடு தோள் சேரும் போது, வாயில் ஒட்டிய வைரசு, தோலில் இருந்து வாயிக்குப் போனால் சங்குதான?
பேசாமா ஊட்ல இருங்க தோழர்.
 Q19. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நாளைக்கு பிறரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்? அல்லது எவ்வளவு நாள் அவர்கள் ஆபத்தானவர்கள்?

அலோ, அவர்கள் ஆபத்தான தீவிரவாதிகள் இல்லை. பாவம் பாதிக்கப்பட்டவர்கள்.

  • எந்தவித காய்ச்சல் மருந்தும் எடுக்காமல் இருந்து காய்ச்சல் குறைந்து இருந்தல்.
  • இருமல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு வாரம் இருத்தல்.
  • COVID-19  பரிசோதனையில் negative போன்றவை அவர்களுக்கு அந்த வைரசு போய்விட்டது என்பதை உறுதி செய்யும். 
  • மருத்துவர், மருத்துவமனையின் பரிந்துரைப்படி செயல்படவும்.

Q20. Mask  அணிய வேண்டுமா?
யோவ் என்னிக்காவது நீ Helmet போட்ருக்கியா?? இப்ப உயிர் பயம் வந்திருச்சு உனக்கு சரியா?
  • உங்களுக்கு COVID-19 நோயில்லை என்றால் வேண்டாம்.
  • உங்களுக்கு COVID-19 நோய் உள்ளது என்றலோ COVID-19 நோய் உள்ளவருக்கு உதவிகள் செய்பவர் என்றாலோ அணியலாம்.
மருத்துவர்களுக்கே கிடைக்காமல் தட்டுப்பாடாக உள்ளது.
தேவை இல்லாமல் வாங்கி தட்டுப்பாடை உண்டாக்க வேண்டாம்.
Q21. Flu காய்ச்சலும் கொரானோ வைரசும் ஒரே நேரத்தில் வருமா? வாய்ப்புள்ளதா?
வாய்ப்புள்ளது.
எனக்கு Pollen Allergy உள்ளது. இதனால் தும்மல் வந்துக்கிட்டே இருக்கும்.
COVID-19 Respiratory droplets , Restaurant, Coffee shop, Brewery and my Pollen allergy
http://kalvetu.blogspot.com/2020/03/covid-19-respiratory-droplets.html
எனக்கு, இப்போது கொரானோ வைரசும் வந்தால் இரண்டும் சேர்ந்த இம்சைதான்.
Q22. ரொம்பவே பயமுறுத்திறீங்களே. எப்ப முடியும் இது?
யாருக்கும் தெரியாது தோழர்.
அதுதான் உண்மை.
Q23. எங்க ஆத்துல யாருக்கும் COVID-19 இல்லை. ராகவன் சாசுதிரி குடும்பத்திலும் யாருக்கும் இதுவரை COVID-19 இல்லை. அத்திம்பேர் ஆத்துலயும் நன்னா இருக்கா. எல்லாரும் ஒரே அபார்ட்மென்டுதான். எல்லாரும் சேர்ந்து ஒரு கோமம் செய்யலாமுன்னு இருக்கோம் தேச நன்மைக்காக. செய்யலாமா?
அவா அவா ஆத்துல அவா அவா இருங்கோ மாமி. ஏன் இம்சையக் கூட்டுறேழ்? இந்த தேசம், நீங்க உங்க ஆத்துல கெடந்தாலே நன்னா இருக்கும். யாரு? எங்க? யாரைத் தொட்டாகன்னு நோக்குத் தெரியாது மாமி. ராகவன் சாசுதிரிக்கு மாம்பலத்தில் ஒரு தென்கலை தொடுப்பு இருக்கு நோக்குத் தெரியுமோ?
ஆத்துலயே கெடங்கோ மாமி. தேசம் நன்னா இருக்கும்.
Q24. வயதானவர்கள் அதிக கவனமா இருக்கனும் சொல்றீங்க. எந்த வயது வயதான வயது?
புரியும்படி சொல்லனும்னா, வொலகநாயகன், சங்கி'கந்த்' வயசுக்காரர்களில் இருந்துன்னு சொல்லலாம். குத்து மதிப்பா 60 வயதுன்னு வச்சுக்கோங்க தோழர். ஆனா ஏதாவது ஏற்கனவே உடல்  பிரச்சனைகள் உள்ளவர்கள் அனைவருமே அதிக கவனமா இருக்க வேண்டும்.
Q25. குழந்தைகள் நிலைமை எப்படி?
இந்த வைரசு குழந்தைகளுக்கு தொற்றினாலும் அவ்வள‌வாக பாதிப்பது இல்லை. ஏதோ ஒரு காரணம், நல்லதுதான். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வேறு எந்த நோய்களிம் இல்லாததால் இருக்கலாம். ஏன் என்று இதுவரை தெரியவைல்லை. ஆனால் ,அவர்கள் மூலம் பெரியவர்களுக்கு பவரவும் அபாயம் உள்ளது.
அதிக தவல்களுக்கு.
Where did we screw up & What can you do, if you survive this pandemic? FAQ 2
http://kalvetu.blogspot.com/2020/03/where-did-we-screw-up-what-can-you-do.html
Q26. கர்ப்பிணிப் பெண்களுக்கு?
அது என்னயா கர்ப்பம்+பிணி. அது என்ன நோயா? பிணி பனி ன்னுகிட்டு இருக்க. தன் வயிற்றில் புள்ளையைச் சுமப்பவள். வயுத்துப்புள்ளக்காரின்னு சொல்லுய்யா.
வயதானவர்களுக்கு அதிகம் பாதிப்பு என்று சொல்ல அதிக சான்றுகள் உள்ளது. ஆனால், வயுத்துப்புள்ளக்காரிகளுக்கு பாதிப்பு என்று சொல்ல  சான்றுகள் இல்லை. தாயும் சேயும் இந்தக் காலத்தில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.
 Q27. வாடிப்பட்டில‌, அக்காவுக்கு புள்ள பொறந்திருக்கு. தாய் மாமான் நானு. போய் பார்த்து மோதிரம் போடலாமா மருமவனுக்கு?
மூடிட்டு வூட்ல இருய்யா.
Q28. காய்கறியை சுத்தப்படுத்த வேண்டுமா? ஆட்டுக்கறி கோழி மாடு சாப்பிடலாமா?
காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னர் பயன்படுத்தவும்.
பாட்டில், டப்பாக்களில் வரும் உணவுப் பொருட்களை, பயன்படுத்தும் முன் டப்பா, பாட்டிலை சுத்தம் செய்யவும். கறி உணவுகளிலும், அது தயாரிக்கப்படும் இடம், என்று தெரிந்து வாங்குவதே நல்லது.
இதுவரை அவரைக்காய் பொரியலாலும், ஆட்டுக்கால் சூப்பாலும் நோய் பரவியதாக ஏதும் சான்று இல்லை. 
நன்னா கறி சாப்பிடலாம் நம்ம ராகவ ஆச்சாரி மாதிரி.
Q29. பினாயிலோ ,டெட்டாலோ கிடைப்பது இல்லை. நானே வீட்டில் மூலிகை முறையில் செய்யலாமா ?
யோவ் எதுக்குய்யா? வைரசைக் கொல்றேன்னு வாயில ஊத்தவா? பீதியக் கெளப்பாதய்யா. நீ அந்த முன்னோர்கள் முட்டாள்கள் இல்ல பார்ட்டியா?
முதலில் சமைக்க கத்துக்கோங்க இந்த Stay home காலத்தில்.
கை கழுவ சோப்பு இருக்கா? கக்கூசு கழுவ வெளக்கமாரு இருக்கா? அது போதும் இந்தக் காலத்திற்கு. 
ஏற்கனவே ஆசுபத்ரில கூட்டம். நீ ஏதாவது ராமரு பிள்ளைத்தனமா எதையாவது ஒன்னுகெடக்க ஒன்னப்பண்ணி, இம்சையக் கூட்டாத சரியா?
நாதக பக்கம் போகாத வைரசு முடியுற வரைக்கும். சரியா? 
Q30. அரிசி ,பருப்பு எவ்வளவு மூட்டை வாங்கி அடுக்க வேண்டும்?
யோவ். லூசாப்பா நீயி?
அப்ப மத்தவன் என்ன செய்வான்? சங்கி மாதிரி சிந்திக்காதீங்க.
ஒரு முறை கடைக்குப் போனால், ஒரு வாரத்திற்கு தேவையானதை வாங்கிவரவும். அடிக்கடி போவதைக் குறையுங்கள்.
Q31. ஊபர், ஓலா, போன்றவை பாதுகாப்பானதா?
பாதுப்பு இல்லைன்னு சொல்ல முடியாது பாதுகாப்பானதுன்னும் சொல்ல முடியாது. வெளியில் போவதைக் குறையுங்கள், தவிருங்கள். இப்படியான சேவைகளை பயபடுத்த நேர்ந்தால், கவனமாக இருக்கவும். ஓட்டுபவருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.
Q32. பாட்டி ஏழுமலையானைப் பாக்கனும்றா. அழைச்சிண்டு போலாமா?
யாரு அதே மாமியா? ஊட்க்கு போலயா மாமி இன்னும்?
கொரானோ வைரசுஅழிச்சிண்டு போயிருவா மாமி. பாட்டியை அடக்கி வைங்கோ. பாட்டிக்கு குவார்ட்டர் கொடுத்து மகிழ்ச்சியாக ஆட விடுங்க மாமி.
Q33: நல்ல‌ வாழை எலை கிடைக்கவே மாட்டன்றதே லோகத்தில. கலிகாலம் வந்திடுத்து.
யாருப்பா அது குச்சி மட்டும் தெரிது?
அவனவன் சோத்துக்கு சிங்கி அடிசிக்கிட்டு இருக்கான். நீர் பேளுவதற்கு வாய எய இல்லைன்றீர். போங்க தல அக்கிட்டு.

Q34. ஒருவாரமா வீட்ல இருந்து பால பெரியவா மாதிரி ஆயிட்டேன். என்ன செய்யலாம் வீட்டில் இருக்கும்போது?
  • வீட்டிற்குள் சின்னச் சின்ன Floor Exercises செய்யலாம்.ஏறி இறங்கவும்.
  • வீட்டில் மாடிப்படி இருந்தால் ஏறி இறங்கவும்.
  • மச்சினி இருந்தால் அவளை உப்பு மூட்டை தூக்கவும். இதுல ரெண்டு வசதி. தூக்கி முடிச்சவுடன் பொண்டாட்டிகாரி மிதியும் போனசாக கிடைப்பதால் நல்ல உடற்பயிற்சி தோழர்.
    நான் யோகாவுக்கு எதிரி. ஆனால், இந்த காலத்தில் நீங்கள் செய்ய ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். 
    தயவு செய்து சக்கி போன்ற தாடிப்பயல்களின் யோகா அல்லது பதஞ்சலி கோமணான்டியின் யோகா என்று பார்த்து , கொரானோ வருவதற்கு முன்னாலேயே செத்துடாதீங்க தோழர்.
    Shilpa Yoga வை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
    மனம் உடல் கொரொனா என்று அனைத்தும் சாந்தியாகும். 
    Shilpa Yoga
    https://www.youtube.com/watch?v=mFvF9WYbz8k

    பெண்களே மன்னிக்க!
    உங்களுக்கு சக்கி போன்ற தாடிப்பயல்கள் அல்லது பதஞ்சலி கோமணான்டியின் யோகா வீடியோக்களைதவிர விடிவே இல்லை போல. நல்ல வேளை ரசினி போன்ற பாட்டையாக்கள் யாரும் யோகா வீடியோ போடல இன்னும். இல்லாட்டி உயிர்ச் சேதம் அதிகமாயிருக்கும்.

    ****
    குறிப்பு
    A: கொரானோ/கரோனா வைரசு என்று சொல்வது = SARS-CoV-2 
    அதனால் வரும் நோய்= COVID-19 

    B: CNN ல் வந்த கேள்வி பதில் பகுதியில் இருந்து தேவையானதை எடுத்து , எனது கருத்தும் சேர்த்து இந்த கேள்வி பதில் உருவாக்கப்பட்டது. எனது பதில்களில் உள்ள மருத்துவ, statistical data சான்றுகளுக்கு இந்த தளத்தை பார்வையிடவும். இதில் அமெரிக்கவாசிகளுக்கான பல தனி செய்திகளும் உள்ளது.
    https://www.cnn.com/interactive/2020/health/coronavirus-questions-answers/