சமீபத்திய நீயா நாயா நிகழ்ச்சியில் (March 19, 2017) இருந்து எனக்கு தெரிவது
இது காசுக்காக நடக்கும் தொலைக்காட்சியின் சம்பாதிக்கும் வேலை
அல்லது உண்மையில் இப்படி ஒரு தறுதலைச் சமுதாயம் வளர்ந்து வருகிறது
பெற்றோருக்கான கேள்வி:
"அண்ணனுக்கு கல்விக்கு காசு உனக்கு சீர் வரிசைக்கு காசு" என்ற ஒற்றை நிலைப்பாட்டில் இவர்களை பிரியாணிக்கு வளர்க்கப்படும் ஆடு போல, இந்த நூற்றாண்டிலுமா நீங்கள் வளர்க்கிறீர்கள்?
தறுதலைப் பிள்ளைகளுக்கு கேள்வி:
திருமணம் என்பது இணைந்து வாழும் வாழ்க்கை. நீங்கள் அதைச் சுற்றியுள்ள சடங்குகளில்தான் இன்னும் இருக்கிறீர்கள். உங்களின் கல்வி உங்களை வேற்று மொழியில் இருந்து ஆடம்பரத்தை அறிந்து கொள்ள கற்றுத்தந்துள்ளதே தவிர வேறு எதையும் அல்ல.
நான் தெரிந்து கொண்ட வார்த்தைகள்:
சங்கீத் , மெகந்தி, லெகங்கா, சிரிவாரி மண்டபம், காசா கிராண்டே வில்லா.
என்ன கருமங்கள் இது? இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?
இன்றைய திருமணங்களில் ஆண்களும் சிகினா வேலைப்பாடுகள் கொண்ட சுரிதார்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு "குருதா குருமா" என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளார்கள்.
முட்டாள்களே, 5 பேரை வைத்து டவுசர் போட்ட மாப்பிள்ளையுடன் பீச்சில் எளிய முறையில் இன்றும் திருமணங்கள் நடக்கிறது அம்பேரிக்காவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் இன்றும் எளிய திருமணங்கள் நடக்கிறது.
இந்த தறுதலைப் பெண்களை இப்படி ஆக்கியது சம்முவம் என்று சொல்லிவிடாதீர்கள். இதே சம்முவத்தில்தான் நல்ல பெண்களும் உள்ளார்கள். தறுதலைகளாக வளர்த்த பெற்றோர்கள் முக்கிய குற்றவாளிகள் இதில்.
#நீயா_நாயா
இது காசுக்காக நடக்கும் தொலைக்காட்சியின் சம்பாதிக்கும் வேலை
- வேண்டும் என்றே இவர்கள் இப்படி திரைக்கதை தயாரித்து நடிக்கச் சொல்கிறார்கள்.
- அல்லது மதில்மேல் இருக்கும் அரைகுறைகளை இப்படி தள்ளிவிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாரிக்கிறார்கள்.
அல்லது உண்மையில் இப்படி ஒரு தறுதலைச் சமுதாயம் வளர்ந்து வருகிறது
- இருப்பாங்களோ இருக்க மாட்டாங்களோ (பெற்றோர்) சாகுறதுக்குள்ள சொத்தை மாத்திக்கொடுத்தா நல்லது. பத்திரம் பதிவுன்னு அலைச்சல் இல்லை.
- திருமணம் என்பது மண வாழ்க்கையின் தொடக்கம் அல்ல. அடுத்தவன் வயுறு எரிய வைக்கும் ஆடம்பரம்.
- அதுதான் பொம்பளப்பிள்ளை பொறந்துருக்குல்ல ஏன் சேத்து வைக்கைல. அது உன் குற்றம் இப்ப கடன் வாங்கு.
- எங்க அப்பா நல்ல வாழ்க்கை வாழவே இல்லை. இன்றும் கடின உழைப்பு உழைக்கிறார். அது போல என் கணவன் கசுடப்படக்கூடாது. அதனால என் அப்பா இன்னும் நாசமாப் போனாலும் எனக்கு 50 பவுன் போட வேண்டும்.
- சாகுறவரை பென்சன் வருது, செஞ்சா என்ன குறைஞ்சிருவியா நீயி? ( பெற்றோரைப் பார்த்து)
- 365 சேலைகள் வேண்டும். நாளுக்கு ஒன்றாக கட்ட.
- சிம்பிள் கொசுட்டின் "வெட்னரி டாக்கடர். அப்பா மேனசர் செஞ்சா என்ன?. கண்டிப்பா செய்யலாம்" பெற்றோரைப் பார்த்து காசு கேட்பவர்கள்.
- அப்பா கார் ஓட்டி காசு சம்பாதித்தாலும், கடன்பட்டாவது எனக்கு கார் வாங்கிக் கொடு. என்ன குறைஞ்சா போவாங்க. இசுசேட்டட்சு இருக்கில்ல.