Wednesday, December 12, 2018

When it's useful and obvious you don't care to understand: God's Manual. Why do you Bother?

காரின் பெருமை பற்றி நிறைய பேசினார் அவர். அவருக்கு கிடைத்த‌ காரை பலமைல் தூர ஓட்டிய அனுபவத்தையும், அப்போது அவர் பார்த்த இடங்களையும் அழகிய கவிதைகளில் விவரித்தார். அவர் பேசப் பேச எனக்கும் காரில் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஆசையை அவரிடம் சொன்னேன். மகிழ்ந்து போய் எனக்கு கார் நிச்சயம் கிடைக்கும் என்று கூறி, கார் manual புத்தகத்தை கொடுத்துவிட்டு, வாரவாரம் அதைப் படிக்கச் சொன்னார். சரி கார் எங்கே என்றேன்? "உனக்கான கார், மேல் மாடியில் உள்ளது. நீ இறந்த பிறகு உனக்கு கிடைக்கும்" என்றார்.
**
நேற்று நண்பருடன் காரில் பயணிக்கும் போது, அவரின் கார் நின்றுவிட்டது. காரில் சில எண்களும் எழுத்துகளும் மின்னி மின்னி ஏதோ ஒரு குறையைச் சொல்லிக் கொண்டிருந்தன. காரின் manual எங்கிருக்கிறது என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. தெரிந்திருக்க தேவையும் இல்லை. அவரின் அலைபேசியின் இணைய இணைப்பின் மூலம், இணையத்தில் யூட்யூப்பில் தேடுகிறார். இரண்டு வருடங்களாகிவிட்டது கார் வாங்கி. இதுவரை நின்றது கிடையாது இப்படி நடுவழியில். அவருக்கும் கார் manual குறித்த தேவை இதுவரை வந்ததே இல்லை. அவர் நாளை புதிய கார் வாங்கினாலும், பயன்படுத்துவாரே தவிர , manual விரித்து மோட்டுவளையை வெறித்து தவம் செய்ய மாட்டார்.

காரின் உட்கூறுகள் குறித்தும், அதன் மூலம் குறித்தும், அது எப்போது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்தோ சிந்திப்பதே இல்லை. வாராவாரம், அதை விற்ற கம்பனிக்குப் போய் மன்றாடி, manual படித்து விரதமும் இருப்பதில்லை.

Useful things don't require reinforcement.

தினமும் விற்கிறார்கள் கதவு தட்டி.கார் கொடுப்பார்கள் என்று கதவு திறந்தால், manual கொடுத்து, யாரோ ஒருவனுக்கு, ஏதோ ஒரு காட்டில், என்றோ ஒருநாள், கார் கிடைத்த கதையைச் சொல்லி, அவர்களையும் தேற்றி என்னையும் எமாற்றி அழுகிறார்கள்.

செத்த பிறகு எனக்கான கார்  கிடைக்கும் என்கிறார்கள். இதுவரை செத்துப் பார்த்திராத மனிதர்கள். கடவுளின் வார்த்தைகளை மனிதர்களே கூவி விற்கிறார்கள்.

No comments:

Post a Comment