Friday, November 18, 2005

பதிவு 19: இராஜாமணி (UTD) guilty in Waterview rape

நேற்று இரவு abc தொலைக்காட்சியில் Primetime என்னும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அமெரிக்க கல்லூரிகளில் மற்றும் Dorm எனப்படும் கல்லூரி விடுதிகளில் நடக்கும் திருட்டு,வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களைப் பற்றிக் காண்பித்தார்கள். நம்மூர் போன்று ராகிங் கொடுமை போல் இது அமெரிக்க மாணவர்களையும் ,பெற்றோர்களையும் கவலை கொள்ளச் செய்யும் செய்தி.


முதலில் பார்த்தது ஒரு கல்லூரி மாணவியிடம் காரைப் பறிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கடுமையான தலைக்காயம் அடைந்து இப்போது அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு 8 வயது குழந்தைபோல் பேச எழுத கற்று வருகிறார்.


இரண்டாவது சம்பவத்தில் ஒரு மாணவி அவளது அறையிலேயெ உயிருடன் கொளுத்தப்பட்டு விடுகிறார். இதற்கு காரணமானவன் கல்லூரிக்குச் சம்பந்தம் இல்லாத வெளிநபர்! எப்படி உள்ளே வந்தார்? கல்லூரி பாதுகாப்பு சரியில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் வாதம். பாதிக்கப்பட்ட பெண்ணே அவனை உள்ளே அழைத்து வந்து இருக்கலாம் என்பது வேறுசிலரின் வாதம். எது எப்படியோ இது கொடுமை.


மூன்றாவது பார்த்த சம்பவம்தான் நான் இதை இங்கே எழுதக் காரணம்.
தொலைக்காட்சியில் வந்த மூன்றாவது சம்பவத்தின் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் இந்தியர்.அவர் செய்த குற்றம் தன்னுடன் சேர்ந்து படிக்க வந்த (Join Study ??) தனது சக வகுப்பு தோழியை மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது. அவரது பெயர் "பிரதாப் இராஜாமணி" (University of Texas at Dallas) .

பார்க்க இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் போல இருக்கிறார். இவர் செய்த அனைத்தையும் ஒத்துக் கொள்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணும் (Amy Smith) இந்தியராகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன்.இவர்கள் இருவரும் இந்தியாவில் கல்லூரிக் காலத்தில் இருந்தே நண்பர்கள் என்று இருவமே ஒத்துக் கொள்கிறார்கள். இராஜாமணி இவர்களின் உறவைக் காதல் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணோ இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.


"..Smith testified that Rajamani, a "best friend" she knew from her college days in India..."
Rajamani maintained throughout the trial that his relationship with Smith had been an intimate one, while the victim maintained the two were "best friends," but not intimate.


இராஜாமணி தான் செய்த செயலுக்கு கூறும் காரணம்தான் என்னை நோகடித்தது.


Rajamani testified he planned the attack after learning of Smith's impending arranged marriage....."In Southern India ... they marry them if someone does what I did, rape," he said. "I was looking for an opportunity to convince her parents for this particular marriage.

வன்புணர்வின் மூலம் திருமணம் சாத்தியமாகலாம் என்று ஊடகங்களின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் சொல்லிவந்த குப்பையான கருத்துக்கள் இவரை இவ்வாறு எண்ண வைத்துவிட்டது.இவர் தனது நெடுநாளைய தோழிக்குச் செய்த நம்பிக்கைத்துரோகம் இவரை ஒருநாளாவது வருத்தமடையச் செய்யும்.

மேலும் படிக்க:
http://www.utdmercury.com/media/paper691/news/2005/07/18/WebExclusive/Rajamani.Guilty.In.Waterview.Rape-967777.shtml

7 comments:

 1. ராஜாமணி நிச்சயமாய் தமிழ்க்குடிமகனாய்த்தான் இருக்கவேண்டும்.சில கலாச்சார அடையாளங்களுக்காக காலரை உயர்த்தி விட்டுக்கொள்ளும் நாம் இத்தகைய கலாச்சார பதிவுகளுக்காக கூனி குறுகித்தான் போகவேண்டியிருக்கிறது.வெட்கம்...(தமிழினத்தின் சார்பாக நான் வெட்கப்பட முடியுமா...அதற்கு நம் கலாச்சார காவலர்கள் அனுமதிப்பார்களாவென்றும் தெரியவில்லை....அதனால் மனசாட்சியின் சார்பாய் வெட்கப்படுகிறேன்)

  ReplyDelete
 2. //வன்புணர்வின் மூலம் திருமணம் சாத்தியமாகலாம் என்று ஊடகங்களின் மூலமும் திரைப்படங்களின் மூலமும் சொல்லிவந்த குப்பையான கருத்துக்கள் இவரை இவ்வாறு எண்ண வைத்துவிட்டது.//

  அதேதான். இப்படி மடத்தனமான விஷ வித்துகளை தொடர்ச்சியாக வீட்டு வரவேற்பறைவரை ஊடகங்கள் மூலமாக விதைத்துவருபவர்களை எந்த கலாசாரப் பாதுகாப்பு கோஷ்டியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. மிட்நைட் மசாலாக்கள் என்ன, கவர்ச்சிப் படங்கள் என்ன என்று ஆபாசத்தின் உச்சத்தில் ஊடகங்கள் தலைவிரித்தாடுகின்றன.

  இவையே குஷ்புவையும் சுகாசினியையும் சானியாவையும் எதிர்த்துத் தொடர்ச்சியாக திரித்த செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருப்பது மகா எரிச்சல். முதல் பக்கத்தில் தமிழ்க்கலாசாரப் பாதுகாப்பு கோஷங்கள். இரண்டாம் பக்கத்திலிருது தொப்புள் படங்கள்.

  தலையிலடித்துக்கொள்ள வேண்டியதுதான்.!

  ReplyDelete
 3. //இராஜாமணி இவர்களின் உறவைக் காதல் என்று சொல்கிறார்.//

  இவரு காதல்னா இடுப்புக்கு கீழேன்னு எப்படித் தெரிந்து கொண்டார் ?

  ReplyDelete
 4. அமெரிக்காவில வந்து 'கெடுத்தவனுக்கே கல்யாணம் பண்ணி குடுக்கிற' கதையா?

  ReplyDelete
 5. திரைப்படத் தணிக்கையென்பது ஆபாசங்களைவிடவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இம்மாதிரியான வறட்டுக் கருத்துக்களையும் காட்சிகளையும்தான்.

  வல்லுறவு புரிந்தால் அவனை மணந்துகொள்வதென்பது குறைந்தது நூறு தமிழ்ப்படங்களிலாவது வந்த காட்சி.

  அதேபோல் சின்ன வயசிலயே பேசி முடிச்சாச்சு என்றும், முறைமாமன், முறைப்பெண் என்றும் விரும்பாத கட்டாயக் கலியாணங்களைக் கொண்ட படங்களும் நூறாவது தேறும். இவற்றைத்தான் முதலில் தணிக்கைக்குட்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 6. thamiznaatu kalachara pugaz ulagengum parappugirar. thalayile adichuka kai paththavillai.

  vivek naditha padathil ippadi oru katchi vandhadhu. oru aal panjayathuku advanceaka 2000 ruvai fine kuduthuvitu oru pennai karpazhipaar. adhu dhan nyabagam varudhu.

  ReplyDelete