Monday, November 14, 2005

17: ஜம்மு-காஷ்மீர் வரைபடம்(Map) குழப்பும் இந்தியா


இந்தியனாப் பொறந்த ஒவ்வொருவனுக்கும் இன்னமும் விடைதெரியாத அல்லது குழப்பமான கேள்வி எதுன்னு கேட்டா இந்த பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றிய வரைபடம் முக்கியமா இடம் பெறும். அப்படி உங்களுக்கு இது அவ்வளவு முக்கியமாத் தெரியலைனா ப்ளீஸ் கொஞ்சம் ஒதுங்கிப் போங்க. உங்களுக்குப் பிடிக்காதத படிச்சுட்டு சும்மா என்னைய போட்டு தாக்கக்கூடாது.இப்போதைக்கு ஜனரஞ்சகமான, சுவாரசியமான விவாதம் குஷ்பூ பற்றியதுதான் அதப்பத்தி இங்க நிறையப் படிக்கலாம். இதைவிடக் கொடுமை என்னன்னா இந்த திருப்பதி சாமி சும்மா இருந்தாலும் அவரோட அடிப்பொடிகள் பெண்கள் பூ வச்சா சாமி கோச்சிக்கும் அப்படீன்னு சொல்லியிருக்கிறதா ஒரு கேள்வி. குஷ்பூவைப் பத்தியோ அல்லது வெறும் பூவைப் பத்தியோ நம்ம அறிவுக்கு ஒரு மண்ணும் புரியல. சுகாசினி மேடம் வந்து குட்டைய குழப்புறாங்க . வழிதவறி இங்க வந்தவங்கள் எல்லாம் உஷாவோட பதிவுல போயி குஷ்பூ ஜோதில ஐக்கியமாயிருங்க. பின்னால குஷ்பூ முதலமைச்சரா வந்தாலும் வந்துருவார்.

சரி இப்ப நம்ம மேட்டருக்கு வருவோம்.தமிழ் இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், யாகூ குழுமங்கள் போன்ற பலவற்றில் இருக்குற குழாச்சண்டை தெருச்சண்டை போதாது என்று கருத்து என்ற புதிய விவாதத் தளம் வந்து இருக்கிறது. நாம இங்கே செய்ற விவாதங்கள் நமது முன்னோடிகளான சட்டசபை, மக்களவை உறுப்பினர்களின் விவாதங்களைவிட படு சுவராசியமாக போய்க்கொண்டு இருக்கும் போது இதற்கென்றே ஒரு விவாதத் தளமா? எது எப்படியோ அவர்களும் அவர்கள் பங்குக்கு பேசிவிட்டுப் போகட்டும். தமிழன் பேசாம இருந்தா டீக்கடை பிஸினஸ் எல்லாம் படுத்திடும் . அப்புறம் என்னையமாதிரி எழுதற ஆளுங்களை யாரு படிக்கிறது?

கருத்து இணையத்தளத்துல வந்திருக்கும் இந்தியாவின் வரைபடம் தப்பும் தவறுமா இருகிறதா நம்ம ரவி புலம்பியிருக்கார். அவர் கருத்துவின் இந்தியா படம் பற்றி புலம்பினா நம்ம பத்ரி "...இந்த விவாத மேடைக்கோ, இதைப்போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிற விவாத மேடைகளுக்கோ அவசியமே இல்லை. இவை எவையுமே உபயோகமாக எதையும் சாதிக்கப்போவதில்லை. வலைப்பதிவுகள் இந்த விவாத மேடைகளை விட உயர்தரமான தொழில்நுட்பத்தை உடையவை..." அப்படீன்னு சொல்கிறார்.


ரொம்ப நாளைக்கு முன்னேலேயே நம்ம இளவஞ்சி இந்த வரைபட குழப்படிகளை தனது "இருவகை இந்தியா"
என்ற பதிவுல சொல்லிய்ருந்தார். அப்போதே நான் இது பற்றி அவரது பதிவில் நான் எனது கருத்தைச் சொல்லி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு.

இந்தியாவில் பிறந்த/ கல்வி பயின்ற / ஓரளவு இந்தியாவைப் பற்றி அறிந்த அனைவரும் முழுமையான தலையுடன் கூடிய இந்தியாதான் உண்மையான இந்தியா என்று நம்புவார்கள். எங்காவது தலையற்ற இந்தியாவைப் பற்றிப் படிக்க/பார்க்க நேர்ந்தால் இவர்களுக்கு(இவர்களில் நானும் ஒருவன்) கோவம் வருவது இயல்பு. இந்தக் கோவச் சமாச்சாரத்தை எல்லாம் ஒதுக்கி வைத்திவிட்டு உண்மை என்ன என்று அறியவேண்டுமானால் நமக்கு உள்ள ஒரே வழி நமது அரசாங்கத்திடம் கேட்பது. கேட்பது என்ன அவ்வளவு சுலபமா என்ன? யாருகிட்ட கேட்கிறது? சும்மா நாட்டை விட்டு அனாதையா ஊர்சுத்திக்கிட்டு இருக்கிற என்னைய மாதிரி பரதேசிகளுக்கெல்லாம் இணையமே உலகம். அதில் வரும் தகவல்களே உண்மை.


இந்தியாவின் புதிய இணையவாசல் http://www.india.gov.in/ ல் தேடியபோது, அவர்கள் அட சும்மா போய்யா POK (Pakistan Occupied Kashmir ) என்பதெல்லாம் கதை, நம்ம தலை நம்மகிட்டத்தான் இருக்கு. வேணுமின்னா நீயும் வந்து நிலம் வாங்கிக்க அப்படீன்னு சொன்னாங்க. http://www.india.gov.in/maps/jammu.php அடடா எவ்வள்வு சுலபமா போச்சு நம்ம கேள்வி. அப்படீன்னு சந்தோசப்பட்டுக்கிட்டேன். இது போன்ற இணையத்தகவல்களால் என் போன்றவர்களுக்கு எவ்வளவு வசதி. சும்மாவா பின்னே? சின்ன வயசில தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனப் புத்தகங்களில் பார்த்த , படித்த இந்தியா உண்மைதான். POK எல்லாம் சும்மா டுபாக்கூர் மேட்டர் என்று தெரியவரும் போது எவ்வள்வு மகிழ்ச்சி. நம்ம ஆசை அதோட நின்னு இருந்தா பரவாயில்லை. ஆசை யாரவிட்டது. தமிழ் நாட்டுல யார் யாரோ கட்சி ஆரம்பிக்குறாக, எல்லாரும் அகில இந்திய கட்சியாத்தான் ஆரம்பிக்குறாங்க. தமிழ் நாட்டுல இருக்குற ஒரு அகில இந்திய கட்சியில இருந்து நாளைக்கே எனனை ஒரு M.P யாத் தேர்ந்துடுக்க விருப்பம் தெரிவிச்சா சும்மா தொகுதிக்காக லோக்கல் மக்களிடம் சண்டை போடக்கூடாதுன்னு ஒரு பரந்த
மனப்பான்மையில் ஜம்மு-காஷ்மீர் பக்கம் ஒரு தொகுதியைத் தேடினால் அதைவிட எனக்குப் பேரானந்தம். ஆமா POK ல நம்ம நிக்கலாம். நம்ம தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ஜே. அவர்கள் இணையத்தளத்துல, POK உட்பட எல்லாப் பகுதியையும் தொகுதியாப் பிரிச்சு வச்சுருக்காங்க.இப்படியே இந்த ஆசைய நான் நிறுத்தி இருந்தாப் பரவாயில்லை. கொஞ்சம் பேராசைப்பட்டு, நம்ம M.P தொகுதில (அதாவது உயிருக்குப் பயப்படாம நான் இந்த POK பகுதில நின்னு ஒருவேளை வெற்றி பெற்றால்) எத்தனை M.L.A இருக்குறாங்க அப்படீன்னு பார்க்க ஆசைப்பட்டதுதான் தப்பாப் போச்சு. பின்ன என்னங்க ஒரு Assembly Constituency கூட இந்தப்பக்கம் கிடையாது ,தமிழ்நாட்டுக்கே ஓடிப்போயிடு அப்படீன்னு அதே தேர்தல் ஆணையம் சொல்லுது. ஒரு பக்கம் M.P தொகுதி இருக்குன்னு சொல்றாங்க. மறுபக்கம் ஒரு Assembly Constituency யைகூட POK பக்கம் காட்ட மாட்டேன்னு சொல்றாங்க. .( http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm , http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm )


இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா என்னையப் போட்டு குழப்பினபடியால் , தீவிரவாதிகளின் குண்டுக்குப் பயப்படாவிட்டாலும் நம்ம அரசாங்கம் படுத்தும் இந்தத் தகவல் குழப்பத்துக்குப் பயந்து கொஞ்ச நாளைக்கு ஜம்மு-காஷ்மீர் M.P ஆசைக்கு மூட்டை கட்டி வைக்குறதா இருக்கேன்.

யாருங்க இதப் படிச்சுட்டு கருத்து சொல்லாமப் போறது. ப்ளீஸ் நம்ம தலை எங்க, எப்படி இருக்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்.

காஷ்மீர் சம்பந்தமான சக வலைப்பதிவர்களின் கருத்துக்கள்:
தருமியின் "MY KASHMIR PROBLEM"
http://data-entry-bpo.com/data-entry/2005/08/03/my-kashmir-problem/

தமிழ் சசி யின் காஷ்மீரின் விடுதலைக் கட்டுரைகள்
http://thamizhsasi.blogspot.com/2005/06/1.html
http://thamizhsasi.blogspot.com/2005/07/2.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/3.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/4.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/5.html
http://thamizhsasi.blogspot.com/2005/08/6.html


என்னால் முடிந்தது இந்தக் கடிதத்தை அனுப்பியது மட்டுமே
-----------------------------------------------------------------

Greetings NIC Team (National Informatics Centre),
I am very happy to see our new website http://www.india.gov.in/. It looks great. I want to thank and appreciate your work. NIC team deserves lot for this for great work.

I was comparing the information found in ECI ( Election Commission of India) pages and new website http://www.india.gov.in/ and I got confused. I wanted to bring this to your knowledge.

This is about the Jammu & Kashmir Map that you put on this site.Jammu & Kashmir map displayed in this http://www.india.gov.in/maps/jammu.php page does not match with the Election Commission's Map.

Conflict found within the ECI webpage information.

ECI website agrees that POK is not a part of INDIA. http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm

There is NO Assembly Constituency defined in this POK area by ECI. http://eci.gov.in/ElectionMaps/AC/S09/index_fs.htm .

But for some reason they (ECI) have highlighted the POK area for Parliamentary Constituencies in a different page. http://eci.gov.in/ElectionMaps/PC/S09/index_fs.htm

Conflicts between ECI and www.india.gov.in page.

As per ECI map POK is a separate area and not a part of our country. Also we do not see any Assembly Constituencies in that area. Your site http://www.india.gov.in/maps/jammu.php
shows that POK is within the (part of) Jammu & Kashmir state.I do not want to debate on the Jammu & Kashmir issue and it is not my point. But as a citizen of India I expect that our website should show the correct information. There should not be any conflict between two government WebPages.

Since http://www.india.gov.in is the India's main Website, I would request you to fix this conflict. ECI website is maintained by CMC http://www.cmcltd.com/ may be you can work with them to put a SOLID and correct information about our country.
=============================================

மேலே கண்ட கடிதம் Feedback option வழியாக "http://mit.gov.in/" க்கும் அனுப்பினேன். மேற்கொண்டு email வழியாக CMC ( lh_corp@cmcltd.com ) மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் ( feedback@eci.gov.in) அனுப்பிவிட்டேன்.


********************************

5 comments:

 1. கல்வி என்பதே பொய்ப் பிரச்சாரமாகி விட்ட நிலையில், நம் கல்வியாளர்களிடமும் அரசுகளிடமும் நேர்மையை எதிர்பார்ப்பது நேர விரயம்தான். இளவஞ்சியின் பதிவில் ஜே.கே என்பவர் தெரிவித்த கருத்துதான் எனது கருத்தும்.
  ----------------------
  At 1:18 AM, October 10, 2005, ஜேகே said...

  காஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்ற பின் தான் தெரிந்து கொண்டேன். இந்த உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் வண்ணம் பள்ளிகளில் நமக்கு பாடம் சொல்லித்தருவது கண்டனத்திற்குறியது. இப்படி போலி வரை படம் போட்டுத்தான் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டுமா என்ன?
  ------------------------------

  ReplyDelete
 2. வாஸ் ஆன் விங்ஸ்,
  உங்கள் கருத்தே எனது கருத்தும். நானும் அதையே இளவஞ்சியின் பதிவில் சொல்லி இருந்தேன்.மத்திய அரசின் இரண்டு இணையத் தளங்கள் இருவிதமாக கருத்துக் கூறும்போது என்னால் சும்மா இருக முடியவில்லை. POK இன் உண்மையான நிலையை அர்சு மக்களுக்குச் சொல்ல வேண்டும். எது இருக்கிறதோ அதை உண்மையாக சொல்லிவிடலாம்.

  ReplyDelete
 3. உண்மையில் நாம் தோற்ற 1967ம் ஆண்டுப் போரினால் இந்தப் பகுதிகள் நம் வசமிருந்து போய்விட்டன. ஆனாலும், 'அந்தப் போரில் நாம்தான் வென்றோம், அந்தப் பகுதி நம்முடையதுதான்' என்று கூசாமல் அரசுகள் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாமும் அப்படியே நம்பி கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
 4. சுதர்சன், PoK பகுதிகள் 1947இலிருந்தே நம் வசம் இருக்கவில்லை. காஷ்மீரின் மன்னர் பாகிஸ்தானிடம் இழந்த பகுதிகள் அவை. அதன் பிறகுதான் அவர் இந்திய உதவியைக் கோரி, காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதலளித்தார். 1965 போரில் தோற்றோமா என்பது பற்றியும் ஐயமே. ருஷ்யாவின் தலையீட்டால் சமரசத்தில் முடிந்தது என்பதே நான் கேள்விப்பட்ட செய்தி. எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. :)

  ReplyDelete
 5. Hi there!
  I would like to burn a theme at here. There is such a thing, called HYIP, or High Yield Investment Program. It reminds of financial piramyde, but in rare cases one may happen to meet a company that really pays up to 2% daily not on invested money, but from real profits.

  For quite a long time, I make money with the help of these programs.
  I don't have problems with money now, but there are heights that must be conquered . I make 2G daily, and my first investment was 500 dollars only.
  Right now, I managed to catch a guaranteed variant to make a sharp rise . Turn to my blog to get additional info.

  http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]

  ReplyDelete