Wednesday, October 12, 2005

பதிவு10: கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்





கே ளா ... சொல்லும் போதே ஒரு மகிழ்ச்சி, கண்ணுக்குள் வெளிச்சங்கள், மனதில் பல நினைவுகள் வந்து போகின்றன.

சிறுவயதில் நாயர் டீக்கடையையும், ஐயப்பன் கோவிலையும் மட்டுமே கேரளாவுடன் இணைத்துப் பார்த்திருக்கிறேன். விடலைப் பருவத்தில் கேரளா என்றாலே "மாமனாரின் இன்ப வெறி" போன்ற படங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் ஒரு காமக் கோட்டையாக நினைத்து இருந்திருக்கிறேன்.

கல்லூரிக்குச் சென்ற பிறகு எனக்கு இருந்த கேரளா பற்றிய அடையாளங்கள் முற்றிலும் மாறியது. நல்ல மலையாளப் படங்களும் கேரளப் பெண்களின் அழகும் என்னுள் கேரளா பற்றிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்தின.

நான் படித்த கல்லூரி கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சிறுவாணிப் பகுதியில் உள்ளது. எப்போதும் மிக இரம்மியமான சூழல் கொண்டது. மலைக்கு அந்தப்பக்கம் கேரளா. உடன் படிக்கும் கேரள நண்பர்கள். அதே கல்லூரியில் வேறு பாடப் பிரிவுகளில் படிக்கும் கேரளத்துப் பெண்கள் என்று ஒரே மலையாள வாசனையாக இருந்தது. அப்போது எனக்கு இருந்த கூச்ச சுபாவத்தால் அந்தப் பெண்களுடன் பேசிப் பழக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்தக் கல்லூரியில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

அதற்குப் பிறகு பலமுறை கேரளா சென்றுள்ளேன்.

எனக்கு மிகவும் பிடித்த விசயம் "ஓணம்" .
ஓணம் என்றாலே சந்தனக்கலர் புடவைப் பெண்களும், நீண்ட படகுப் போட்டியும் தான் வருகிறது.



இந்தப் பண்டிகையின் தோற்றம் இந்துக் கடவுள்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நான் அறிந்த வரை இந்தப் பண்டிகை சாதி, மத, சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து கேரள மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களுக்கென்று ஒரு விழா!

சாதி சமய வேற்றுமை இல்லாமல் அனைவரும் சேர்ந்து கொண்டாட ஒரு வாய்ப்பு!!

http://www.southindia.com/onam.htm
Onam is one of the greatest festivals of Kerala. It is the festival, which the keralites celebrates unitedly without the differecnce of caste and religion.


http://www.malayalifestivals.dgreetings.com/malayalifestivals/onam/
This festival is not celebrated by Hindus only but by Christians and Muslims as well. It is one festival that unites all people regardless of race and religion

http://hinduism.about.com/od/festivalsholidays/a/onam.htm
Onam is For AllAlthough this festival has its origin in Hindu mythology, Onam is for all people of all class and creed. Hindus, Muslims and Christians, the wealthy and the downtrodden, all celebrate Onam with equal fervor. The secular character of Onam is peculiar to this land where unity had always coexisted with diversity, especially during festivals, when people come together to celebrate life's unlimited joys.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது?

1 comment:

  1. பண்டிஹை -- திருவிழா என்பவை அந்தந்த குறுநிலங்களைப் பொறுத்து அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கை முறையின் முதிர்ச்சி நிலைமுறைகளான மதக்கோட்பாடுகள், சடங்குகள், இவை உறுவாதற்கு காரணங்களான அப்பகுதியில் நிலவும் வெட்ப தட்ப நிலை, பொருளாதாரம், போன்றவற்றைக் கொண்டு அமைவதாகும்.(உதாரணம்: குளிர்காலம் தொடங்குவதை கொண்டாட "தீபாவளி"-- குளிர்காலம் முடிவதை கொண்டாட "பொங்கல்" மற்ற அண்டை நிலங்களிலே "ஸங்கராந்தி"--- ஆங்கில புது வருட தொடக்கம் "1 ஜனவரி, ஹிந்து புது வருட தொடக்கம் 13 மார்ச்--தமிழ் நாட்டில் தமிழ் புத்தாண்டு , கேரளத்திலே "விஷு" இப்படி ஏராளமான விழாக்கள்)

    ஒரு பகுதியில் உருவாகிய மதம் மற்றொரு பகுதிக்கு பரவும் பொழுது, அப்பகுதிக்கே உரித்தான தட்ப வெட்ப நிலைக்கும், இயற்கைச் சூழ்நிலைக்கும் ஏற்ப அமைந்த மத்க்கோட்பாடுகளும் எடுத்துச்செல்லப்படுகின்றன.

    அந்த மாற்று மதத்தை தழுவியர்கள் ஆரம்ப நிலையிலிருந்து கடைபிடித்து வரப்படும் மதக்கோட்பாடுகளை புதிய நிலத்தில் எந்த ஒரு மாற்றமுமின்றி கடைப்பிடித்து வருவதே வழிவழி வரும் சந்ததிகளுக்கு வழக்கமாகி வருகின்றது. இவை அம்மக்களின் மனதுக்கு திருப்தியை அளிக்க வல்லது. இருப்பினும் புதிய நிலத்தின் விழாக்கோலங்கள் தாம் வாழும் நிலத்திற்கே உரியதாகும் என்பதால் அவற்றையும் கொண்டாடுவது அம்மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கவல்லது. எனவே கற்றறிந்த மக்கள் தம் நாட்டிற்கே உரித்தான அனைத்து விழாக்களையும் கொண்டாடி மகிழ்வர்.

    GOPU

    ReplyDelete