1,439,323,776 மக்களைக் கொண்டு உலகில் முதல் இடத்தில் உள்ள சீனாவில் நடந்த உயிர்ப்பலிகளின் எண்ணிக்கையை, உலகின் 23 ஆவது இடத்தில் 60,461,826 மக்களைக்கொண்ட இத்தாலி முந்திவிட்டது என்றால் நம்புவீர்களா?
https://www.cnn.com/world/live-news/coronavirus-outbreak-03-19-20-intl-hnk/h_338a9e3e86c965845d14e33d17c45d68
//Italy has just surpassed China for the most number of deaths related to COVID-19.//
ஆம் , இத்தாலியில் நடந்த சில தனிநபர்களின் individual social responsibility கொடுமைகளால், அந்த நாடு பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டுள்ளது.
இதை தெளிவாக ஆங்கில கட்டுரையில் பார்க்கலாம்.
@JasonYanowitz
https://twitter.com/JasonYanowitz/status/1238977743653687296?s=20
//
around 10k people from the red zone escape from the area that same night to return to their homes in the rest of Italy (this will be important later).//
Thread Reader
https://threadreaderapp.com/thread/1238977743653687296.html
ஒரு தோழர் தமிழில் இதை மொழிபெயர்த்துள்ளார்
@iworkforcrows
https://twitter.com/iworkforcrows/status/1239492426143682561?s=20
Thread Reader
https://threader.app/thread/1239492426143682561
அமெரிக்காவில் எப்போதும் கடைகளுக்கு வெளியே, Wipes Floor Stand வைத்து அதில் Free Sanitizing Wipes வைத்து இருப்பார்கள். கடைகளில் உள்ள Shopping Cart அல்லது Shopping Basket களை பயன்படுத்தும்முன் துடைத்துக்கொள்ள. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் இதை நூறில் பத்துபேர் பயன்படுத்துவார்கள். சிறுகுழந்தைகள் உள்ளவர்கள் கவனமாய் பயன்படுத்துவார்கள். பல நேரம் அந்த Free Sanitizing Wipes சீந்துவாரின்றி கிடக்கும்.
நேற்று எங்கள் ஊரில், எங்கள் வீட்டின் அருகே உள்ள கடையில், வெளியில் வாடிக்கையாளர்களுக்காக வைக்க Free Sanitizing Wipes இல்லை. அவர்களிடம் விற்பதற்கும் ஏதும் இல்லை. ஆம் Sanitizing Wipes,Soap,Hand Sanitizers,Toilet Paper,Kitchen Paper Towel என்று எந்த Personal Hygiene cleaning supplies கிடைப்பது இல்லை. தட்டுப்பாடாக உள்ளது. பலர் தேவைக்கு அதிகமாக வாங்கி, செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்கிவிட்டார்கள். இப்போது, கடைகள் சுதாரித்துக்கொண்டு, ஒருவருக்கு இவ்வளவுதான் என்று விற்க ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த கட்டுப்பாட்டு விநியோகமுறையை அரசாங்கம் சட்டம் போட்டு இவர்களைச் செய்யச் சொல்லவில்லை. அவர்களாகவே மக்கள் நலன் கருத்தி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்கிறார்கள். Costco, Sam's Club, BJs போன்ற பேரங்காடிகளிலும் இதே நிலைமைதான். மக்கள் கொள்ளையடிப்பதுபோல வாங்கிச் சென்றார்கள். அதனால் ,அவர்களின் மொத்த supply chain process பாதிக்கப்பட்டு, இப்போது பால்,முட்டை, personal hygiene cleaning supplies போன்ற அவசியத் தேவைகளை, ஒருவருக்கு ஒன்று என கட்டுப்பாட்டு விநியோகமுறையிலேயே விற்கிறார்கள்.
கொரானோ வைரசு வாழ்க்கையை திருப்பிப்போட்டுள்ளது. மக்கள் இதுபோல வாங்கிக் குவிப்பது அமெரிக்காவிற்கு புதியது அல்ல. Hurricane போன்ற இயற்கை பேரிடர்களின்போதும் இப்படி நடக்கும். ஆனால், பெரும்பாலும் அது ஒருநாள் அல்லது இரண்டுநாள் கூத்தாக முடிந்துவிடும். இப்படி அதிகப்படியாக வாங்கிய பொருட்களை பயன்படுத்தாமல், வாங்கிய கடையிலேயே திருப்பிக் கொடுத்து (
Return) மேலும் கடைகளுக்கு சிரமத்தைக் கொடுப்பார்கள். ஒருமுறை Hurricane ன்போது , வாங்கிய தண்ணீர் பாட்டில்களை திருப்பிக்கொடுக்க ஒரு மைல் நீளத்திற்கு வரிசை நின்றது. தண்ணீர்தானே, அதுவும் $3 டாலருக்கு 24 பாட்டில்கள்தானே வைத்துப் பயன்படுத்துவோம் என்று இருக்கலாம் மனிதர்கள். ஆனால் இல்லை. அதையும் திருப்பிக் கொடுத்து கடைகளுக்கு சிரமத்தைக் கொடுப்பார்கள்.இதில் முதலிடம் வகிப்பவர்கள் NRI (Non Resident Indian) & FCI (Former citizen of India) என்றால் அது மிகையாகாது. ஆம் மனிதன் மகாத்தான சல்லிப்பயல். இந்தமுறை இந்தப் பேரங்காடிகளில் இப்படியான பொருட்களை திரும்ப வாங்கமோட்டோம் என்று, இந்த சூழ்நிலையில் அறிவித்து உள்ளார்கள். நல்லது. வரவேற்கத்தக்கது.
அன்றாடம் வரும் காய்கறிகள் தட்டுப்பாடு உள்ளது. ஆனால் ஏதாவது ஒரு கடையில் கிடைத்துவிடுகிறது. குடிதண்ணீர், மின்சாரம் போன்றவை எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் எப்போதும் போலவே கிடைத்துக்கொண்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கிவிட்டார்கள். அமெரிக்கா முழுமைக்கும் சில அவசரகால நடவடிக்கை விதிகள், மாநில அளவில் அவசரகால நடவடிக்கை விதிகள் செயல்படுத்தப்பட்டாலும், City,Town அளவில் அந்தந்த ஊருக்கு ஏற்ப மேலும் கடுமையான விதிகளும் உள்ளது.
எங்கள் North Carolina மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது.
Gov. Cooper: NC schools will be closed for a while as crisis increases
https://www.wbtv.com/2020/03/19/gov-cooper-nc-schools-will-be-closed-while-crisis-increases/
//Over the weekend, Cooper ordered public K-12 schools in the state to close for at least two weeks. Thursday, after confirming the first case of community spread COVID-19 in the state, Cooper said students will "likely be out of school for a longer period of time.”//
வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய வேலைகள் அனைத்தும் வீட்டில் இருந்து செய்ய பணிக்கப்பட்டுவிட்டது தனியார் நிறுவனங்களால். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களாவது பரவாயில்லை. அவர்கள் இதற்கான கட்டமைப்பைக் கொண்டவர்கள். அவர்களின் பணியாளர்களும் இதற்கு பழகியவர்கள். ஆனால், சிறு நிறுவனங்கள் மிகவும் தத்தளிக்கின்றன.
நான் நடனம் பயிலும் நிறுவனம், நடனம் சொல்லிக்கொடுத்து அதன்மூலம் வரும் சொற்பவருவாயில் பலர் காலம் தள்ளும் நிறுவனம். அவர்களுக்கு எந்த IT தொழில்நுட்ப கட்டமைப்பும் இல்லை. அப்படியே மூடிவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் முதலாளி கண்ணீர் மல்க ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
"வகுப்புகளை நிறுத்திவிட்டோம். நீங்கள் வகுப்பிற்கு பதிவு செய்த பணத்தை திருப்பிக்கேட்டால்கூட கொடுக்க வழியில்லை எங்களுக்கு. அதை வைத்து சில குடும்பங்கள் வாழுகிறது. எனவே திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுவிடாதீர்கள்.உங்களுக்கான வகுப்பை இந்த பிரச்சனைகள முடிந்தவிடன் நிச்சயம் நடத்திக்கொடுக்கிறேன்"
நான் Drum பயிலும் இடம் கனவிலும், அவர்கள் வகுப்பை online ல் நடத்துவார்கள் என்று அவர்களே நினைத்துப் பார்க்காத ஒன்று. எல்லாரையும் போல அவர்களும் ஒரு மாதத்திற்கு கடையை அடைத்துவிட்டு போய்விட முடியாது. சுமார் 10 ஆசிரியர்களும், சில அலுவலக பணியாளர்களும், இந்த வருவாயை நம்பியே வாழ்பவர்கள். வகுப்புகள் நடத்தப்படாவிட்டால் அவர்களுக்கு பணம் இல்லை. இது அவர்களின் சாப்பாட்டு தட்டையே பாதிக்கும் அளவிற்கு கொடியது. எனவே, அவர்கள் Skype வழியாக முடிந்தவரை செய்கிறார்கள். அவர்கள் யாரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை. ஆனால் முடிந்தவரை பாடம் எடுக்கிறார்கள். வீட்டில் இருந்து பாடம் எடுப்பது அவர்களுக்கு பிடித்தமானது இல்லை. மேலும் பயில்பவர்களுக்கும் அது சிக்கலானது.
ஆனால், இந்த பணச்சுழற்சி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலாகிவிடும்.
இப்படி திடீரென்று ஏற்பட்ட Skype, zoom,Web-ex போன்ற இணையச் சேவைகளின் தேவை அதிகரிப்பால், அந்த செயலிகளின் இயங்குதிறன் மிகவும் குறைந்துவிட்டது. அந்த நிறுவனங்களும் முடிந்த அளவிற்கு சிறப்பான சேவையை வழங்குகிறார்கள்.
எப்போதும் கலகலப்பாக, ஆரவாரமாக இருக்கும் நகரத் தெருக்கள் வெறிச்சோடிவிட்டன. அனைத்து உணவகங்கள், காஃபி, பீர் கடைகளும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இது அரசு உத்தரவுகாரணமாக. உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தொலைபேசியில் அல்லது வெளியில் இருந்து சொன்னால், அதை உங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். Contact Free/ Touch Free சேவையாக மாறிவிட்டது.
சோசியல் காரணங்களுக்காகவே, அமர்ந்து பருகும் அனுபவத்திற்காகவே போகும் என்போன்றவர்களுக்கு இது பெரிய சிக்கல்.
இவையாவும் இந்த ஒரு வாரத்தில் நடந்துவிட்டது. ஆம் இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாளை இது இன்னும் மோசமாகலாம்.
நாம் செய்ய வேண்டியது....
Most Important
Don't panic but at the same time don't be stupid either.
- Social isolation மிக முக்கியமானது.
- கைகளை கழுவுங்கள்.
- எனக்கு வராது என்று இருக்காதீர்கள். கடவுள் என்ற கற்பனை பாத்திரமோ, உங்களின் யோகா போன்றவை எதுவும் உங்களைக் காக்காது.
- அரசு, மருத்துவர்கள், அறிவியலாளர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
- இந்தியாவில் அரசு கைதட்டி கும்மியடிக்கச் சொல்லும் அரசு வாய்த்திருப்பது உங்களின் போதாதகாலம். இருந்தாலும் அரசு சுகாதரத்துறையில் சிறப்பான மருத்துவர்கள் உள்ளார்கள். அவர்கள் உங்களை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
- நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் வாட்சப்பு நிலவேம்பு,பாலிடால், மாட்டு மூத்திரம், கொரங்கு விதை லேகியம், பிராண்யநாமம், அய்யரின் பிண்டம், அண்டாவுக்குள் தண்ணி, சக்கியின் யோகா, ராமுதேவு பதஞ்சலி, சாமியாரின் குரளிவித்தை, அய்யங்கார் மந்திரம், ஆண்டாள் பாவை குப்பைகளை பார்வேர்டு செய்யாமல் கட்டுப்படுத்துங்கள்.
- உங்களை நம்பி இருக்கும் பிற வேலைகளுக்கு தொடர்ந்து உதவுங்கள். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டுக்கு பாத்திரம் கழுயும் வேலைக்கு வரும் 'கிரிசா பத்மநாபனு'க்கு , வேலைக்கு வராவிட்டாலும் சம்பளம் கொடுங்கள்.
- உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் , அந்த ஆட்டோ ஓட்டுநர் பத்ரி, பள்ளிகள் மூடிவிட்டால் எப்படி பிழைப்பார்? அவருக்கும் வேலை இல்லாவிட்டாலும் சம்பளம் கொடுங்கள்.
- அவர்களை செல்போனில் அழைத்து, "ஓய்வெடுங்கள் சம்பளம் கொடுத்துவிடுகிறேன்" என்று உறுதிதாருங்கள். அல்லது கொண்டுபோய் முன்பணமாக கொடுங்கள்.
- உங்களால் முடிந்த அளவிற்கு இந்த பணச்சுழற்சியை உயிரோடு வைத்திஇருங்கள்.
ஒரு மனிதன் உணவின்றி 15 நாட்கள் வாழமுடியும். ஆம் நான் காட்டில் தொலைந்துபோனால்கூட பயப்படமாட்டேன் 15 நாட்களுக்கு எப்படி பாதையை கண்டுபிடிப்பது என்பதே என் வேலையாக இருக்கும் சோறு அல்ல. எனவே தயவுசெய்து வாங்கி குவித்து செயற்கை தட்டுப்பாட்டை கொண்டு வராதீர்கள்.
கண்மாயில் குண்டி கழுவிவிட்டு அல்லது கல் எடுத்து துடைத்துவிட்டு வீட்ர்டுக்கு வந்து ஒரு டப்பாவில் நீர் எடுத்து குண்டிகழிவுவிட்டு வாழ்ந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரனே நான். பெரியாறு வாய்க்காலோடும் பகுதி என்பதால், ஆற்றில் நீர் வரும் நேரங்களில், படித்துறையில் ஒருபுறம் பெண்கள் குழந்தைகளின் பீத்துணிகளை அலச, மறுபுறம் எருமைமாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருக்க, ஆதே ஆற்றில் முங்கியபடி நீந்தி, சாணியோ, ஏதோ ஒரு குப்பையோ தலைக்குமேல் மிதந்துபோக எழுந்து வந்தவர்களே நாங்கள்.
ஆனால், காலம் பலவற்றைக் கற்றுக்கொடுத்துவருகிறது. அப்பலாச்சியன் மலையில் தனியாக நடக்கும்போதுகூட, கவனிக்க ஆள் இல்லாத கட்டுப்பாடற்ற சுந்ததிரத்தில்கூட, நான் காட்டிற்கு வலிக்காதபடி, கவனமாய் கக்கூசு விசயங்களை கையாளுகிறேன். ஆறு முதல் ஏழு இஞ்ச் அளவிற்கு குழி தோண்டி பேண்டுவிட்டு , அதையும் மூடி, பிறர் யாரும் அங்கு மறுபடியும் தோண்டிவிடாதபடி, கற்குவியலையோ, மரக்கிளையையோ பரப்பிவிட்டு வருகிறேன்.
இன்று வந்துள்ள கொரானோ வைரசும் அதனால் வரும் கோவிட்19 நோயும், மக்களை சுகாதாகாரத்தை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது அல்லது கைகழுவுவதையாவது திணித்துள்ளது. கெட்டதில் ஒரு நல்லது என்று சுகாதாரவரவுக் கணக்கில் வைப்போம்.
Take Care & Be safe
இதை வாசித்திருக்காவிட்டால் வாசித்துவிடுங்கள்.
SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ
https://kalvetu.blogspot.com/2020/03/sars-cov-2-covid-19-faq.html
இதை நீங்கள் வாசித்து, இது உங்கள் அறிவிற்கு சரியானது என்றுபட்டால் மட்டுமே பிறருக்கு அனுப்புங்கள்.