Sunday, March 22, 2020

COVID-19 Respiratory droplets , Restaurant, Coffee shop, Brewery and my Pollen allergy

 னக்கு முன் மூன்று சிறுமிகள் நடந்துகொண்டு இருந்தார்கள். நடுநிலைப்பள்ளி மாணவிகளாக இருக்கலாம். பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதால் குழந்தைகள் சும்மா பொழுதைப் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைக் கடந்து ஓடினேன். கடக்கும்போது நகர காவல்துறை வாகனமும் கடந்து போனது. கலகலப்பாக இருக்கும் ஊர் வெறிச்சோடிக்கிடந்தது. ஊரில் இரண்டு முக்கியமான பேக்கரிகள். அவர்களின் கடையை வாசலுக்கு கொண்டுவந்துவிட்டார்கள். எந்தக் கடையிலும் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. கடைகள் இயங்குகின்றன. ஆனால், எல்லாம் Curb Side Pick-up Drive Thru தான். கடைகளையும் அடைத்துவிடமுடியாது. அதை நம்பி பலர் வாழ்கிறார்கள். சமூக வாழ்க்கை ஒரு சக்கரம்போல அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

மெரிக்கா வந்து 20 வருடங்களில் இதுவரை ஒரே ஒருமுறைதான் நான் Drive Thru வில் சென்று வாங்கியுள்ளேன்.அதுவும் என் மகனின் நச்சரிப்பு தாங்காமல். எனக்கு கடைக்குள் போய் அமர்ந்து சாப்பிடுவதுதான் பிடிக்கும். அது காஃபி என்றாலும். ஒவ்வொரு கடையும் ஒரு அனுபவம். அந்தக் கடையில் உள்ளவர்களுடன் உரையாடுவது ஒர் அனுபவம். வெறும் பசிக்காக தின்பது என்றால், restaurant  களுக்கு போகவே தேவை இல்லை. அதை நானே வீட்டில் செய்துவிடுவேன். Restaurant  களில் உண்பது, அங்கு கிடைக்கும் ஒரு அனுபவத்திற்காகவே தவிர சுவைக்காக அல்ல. இதுவரை "இந்தைக்கடையில் இது சிறப்பாக இருக்கும்" என்று எந்த உணவும் அந்த உணவுக்காக ஈர்த்தது இல்லை. ஆனால், சில கடைகளின் உள் அலங்காரம், அவர்களின் theme , அங்கு இருப்பவர்கள் இப்படி ஏதாவது வேறு ஒரு காரணத்திற்காவே restaurant செல்வேன்.

காஃபிக் கடைகளும் , பீர் கடைகளும் அப்படியே. ஊரில் உள்ள அனைத்து காஃபி கடைகளுக்கும் போய் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் மகிழ்ச்சி. பீர் Brewery களுக்கும் அப்படியே. ஏதோ ஒரு கிராமத்தின் உட்பகுதியில் இருக்கும் Brewery க்கு சென்று அவர்களின் ஊரில், அந்தக் கடையில் சிறப்பாக இருக்கும் ஒன்றை சுவைத்துவிட்டுவருவதே எனக்கு இனிமை.

Primary purpose of me dining out is for the overall dining experience not for the taste of the food. This applies to Restaurant, Coffee shop and Brewery . 

தனால் , நண்பர்கள் மத்தியிலும் சரி எனக்கு சிக்கல்தான். "ஒரு பீருக்காக அவ்வளவு தூரமா? ஏதாவது பக்கத்து கடைக்கு போவோம்" என்பார்கள் நண்பர்கள். அப்படியான தருணங்களில், நான் சரி என்று சொல்லிவிடுவேன். ஆனால், நான் தனியாக இருக்கும்போது தேடித்தேடி கடைகளுக்கு செல்வேன்.

காஃபிக்கோ, பீருக்கோ செலவழிப்பது $1 முதல் $10 வரைதான் இருக்கும். மது கொடுக்கும் போதை எனக்கு இரண்டாம் பட்சம்தான். அந்த ஊர் ,அந்த இடங்களின் அனுபவமே எனக்கு முக்கியம். இந்த கொரானோ வைரசால் எனக்கு வாரம் ஒருமுறை காஃபிக்காக வெளியில் போவதற்கு தடை வந்துவிட்டது. கடைகள் இருந்தாலும், காஃபியை contact free & touch free ஆக வெளியில் இருந்தே Curb Side Pick-up Drive Thru வாங்குவது எனக்கு உகந்தது அல்ல.

எனவே , இப்போது அதிகமாக ஓடுகிறேன் நகரத் தெருக்களில். அதுவே பொழுதுபோக்கு.

னக்கு இந்த வசந்தகாலத்தில் (spring season) ஒரு ஒவ்வாமை (allergy) உண்டு. ஆம் pollen allergy. North Carolina மாநிலத்தில் இந்தக் காலத்தில், ஊரே பச்சை & மஞ்சள் நிற மகரந்த துக‌ளால் மூடுப்படும். மரங்களின் மகரந்தச் சேர்க்கைக்காலம் இது. இந்த துகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வகை ஒவ்வாமையை  (allergy) உண்டாக்கும். சிலருக்கு கண் எரிச்சல் & கண் வீங்குதல், சிலருக்கு தோல் அரிப்பு, சிலருக்கு மூக்கு மற்றும் சுவாசம் தொடர்பான சிக்கல். இன்று நான் ஓடிவிட்டு வந்தபோது என் சட்டை முழுக்க மஞ்சள் ஆகி இருந்தது. நான் சுவாசித்த காற்றில் எவ்வளவு மகரந்தத்தூளை உள்வாங்கி இருப்பேன்?

ந்த மகரந்தத்தூள் என் மூக்கின் உட்புற தசைகளில் ஒட்டி, தசைகளை புண்ணாக்கிவிடும். இடைவிடாத தும்மலும், பல நேரம் மூக்கின் உட்புறத் தசைகள் சிவப்பாகி , தொடர் தும்மலில் புண்ணாகி இரத்தம் வரும். "மே" மாதம் தொடங்கி "ஆகசுடு" மாதம் வரை  எனக்கு இந்த தொந்தரவு நீளும் . பலவிதமான மருந்துகள் எடுத்தும் பயன் இல்லாமல், இப்போது இதனோடு வாழப்பழகிவிட்டேன்.

கொரனோ வைரசு காலத்தில் எனக்கும் என் போன்ற  pollen allergy மூக்குப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஒரு சிக்கல். பொதுவில் இடைவிடாமல் தும்ம முடியாது. பிறர் கவலையுடன் அல்லது பயத்துடன் அல்லது திகிலுடனே பார்க்கிறார்கள். குடும்பம் நண்பர்கள் வட்டங்களுக்கு இது புதிதல்ல. அவர்களுக்கு என் நிலைமை பல ஆண்டுகளாக தெரியும். ஆனால், பொதுவெளியில் அதுவும் COVID-19 respiratory droplets வழி பரவும் இந்த நேரத்தில், எங்களைப் போன்றவர்களின் pollen allergy  தும்மலை யாரும் வேறுபடுத்திவிட முடியாது.

முடிந்தவரை ஆளில்லாத ஓரமாகப் பார்த்துப் போய் தும்மிக்கொண்டுள்ளேன் கடைகளில். அருகில் யாராவது இருந்தால் மிகவும் சிரமங்களுக்கு இடையே அடக்கிக்கொண்டு ஓட்டி வருகிறேன். எனக்கே இப்படி என்றால், முதியவர்கள், ஏற்கனவே நுரையீரல் மர்றும் சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்களின் நிலைமை மிகவும் சிக்கலானது.

இந்த மாநில pollen  பற்றி பிறர் பகிர்ந்துள்ள சில வீடியோக்கள்.

North Carolina residents plagued by pollen burst (2019 News)
https://www.youtube.com/watch?v=7BFqNp3PQ8o


Pollen Season @ The South (NC)
https://www.youtube.com/watch?v=tNnoQxraYow


Seven Lakes North in West End, NC
https://www.youtube.com/watch?v=PR_mnNM7zp8