Saturday, January 28, 2006

இறுதியாக தமிழ்மணம் நண்பர்களுக்கு

நான் காசியிடம் கேள்வி கேட்டமைக்காக உண்மையான பெயரிலும் ,அனானியாகவும் , போலிப் பெயரிலும் வந்து காசி எது தேவை இல்லை என்று முயற்சி செய்கிறாரோ அதே வகைப் பின்னூட்டங்களை என் மீதும் கொட்டியமைக்கு நன்றி. பலரிடம் நேரில் பேச ஆசைதான் ஆனால் அவர்களின் பிளாக் ப்ரொஃபைல் மயில் முகவரி இல்லாமல் இருக்கிறது.
நான் தான் போலி டோண்டு என்று சொல்லி போலி டோண்டுவைத் திட்டுவதாக நினைத்து என்னைத் திட்டி அதே வகைப் பின்னூட்டம் வந்து இருக்கிறது. அது போல் நான் தான் அவர் ,இவர் என்று பல அனுமானங்கள். இருந்து விட்டுப் போகட்டும்.குஷ்பூ,பிராமண மற்றும் மதப் பதிவுகளுக்கு பிறகு ஆக்ரோசமான தாக்குதல்களை காசியிடம் கேள்வி கேட்ட எனது இந்தப் பதிவில் தான் பார்க்கிறேன்.

உங்களது பதிவுகளிலேயே என்னைப்பற்றி விமர்சனம் செய்து நேரிடையாக கல்வெட்டு இப்படி என்று பேர் சொல்லியே எழுதவும். எதற்கு கிசு கிசு பாணியில் பின்னூட்டம் இட வேண்டும்?

இலவச சேவையாக இருந்தாலும் பொதுவில் வந்துவிட்டபின் பதில் சொல்ல வேண்டியது இலவச சேவை செய்பவரின் கடமை. நான் மாதத்தில் பல முறை தெருவில் நின்று பலூன் செய்து பல சேவை நிறுனவங்களுக்கு நிதி திரட்டுபவன். இலவசமாகச் செய்தாலும் போலீஸ் முதல் பல இடங்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டவன். அதுபோல் என்னிடம் வந்து இலவச சேவை பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கும் பதில் சொல்ல கடமைப் பட்டவன். ஓசியாத்தேனே வாங்கிற அப்பால போ என்று சொல்லமுடியாது.

செஞ்சிலுவைச் சங்கம் இலவசமாக பல உதவி செய்கிறது என்பதற்காக அது கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு கிடையாது. மக்களுடன் நேரடியாக களத்தில் இறங்கி சேவை செய்யும் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

நான் என்ன செய்கிறேனோ அதைப் பற்றி கொஞ்சம் இங்கே எழுதுகிறேன் அவ்வளவே. தமிழ்மணத்தின் (அல்லது நிர்வாகியின்) பதிலில் எனக்குத் திருப்தி இல்லாததால் நான் என்னை தமிழ்மணத்தில் இருந்து விலக்கிக் கொண்டு விட்டேன்.

நான் எப்போதும் போல் கல்வெட்டு மற்றும் பலூன் பதிவில் எழுதுவேன்.

நான் காசியுடம் தொலைபேசியில் பேசியும், எனது நிலைமையயும் கூறிவிட்டேன். அவரும் அவரின் நிலையை கூறிவிட்டார்.

காசி யாத்திரை காட்சி முடிந்து விட்டது நண்பர்களே கலைந்து செல்லுங்கள். எதற்கும் நிறைய ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன். :-)))))))))

ரகு மற்றும் ஜோ உங்களுக்கிடையேயான விவாதங்களும் (நல்லவிதமாக இருந்தாலும்) முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதால் நிறுத்தி வைக்கிறேன். மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


****************


****************

Friday, January 27, 2006

இது எதிர்பார்த்ததுதான்

இது எதிர்பார்த்ததுதான்.

பிடிக்கவில்லையா ஓடு என்பதும், நீ இந்தப்பக்கம் இல்லை என்றால் அந்தப் பக்கமே தான் என்று புஷ்த்தனமாகப் பேசுவதும் எதிர் பார்த்த ஒன்றுதான்.

என்ன கேட்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் வேறு விசயங்களைப் பற்றிப் பேசுவது எனது கேள்விக்குப் பதில் அல்ல.

* எனக்குத் தமிழ்மண சட்ட திட்டங்கள் தெரியும். எதற்கெடுத்தாலும் terms பார் என்று சொல்வது தேவை இல்லாதது.

*ஆபாசப் பின்னூட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவை. நிறுத்தப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப் படவேண்டியவை.இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*எனது பதிவில் இதுவரை யாரையும் தாக்கிப் பின்னூட்டங்கள் வந்ததும் இல்லை. அப்படி வந்து இருந்தால் காசி என்ன வேறு யாரும் சொல்லாமலே நான் இவைகளைச் செய்து இருப்பேன்.

நான் எழுப்பிய கேள்விகளே வேறு. நான் என்ன கேட்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே நான் ஏதோ தேசத்துரோகமான கேள்வி கேட்டுவிட்டேன் என்று கேள்விகளைத் திசை திருப்புவதும்,காசியை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக அவரது அபிமானிகள் என்னை தனிமனிதத் தாக்குதல் செய்வதும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது.

தமிழ்மணத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

http://kalvetu.blogspot.com/
http://balloonmagic.blogspot.com

முறைப்படி adm@thamizmanam.com -க்கு மயில் அனுப்பியாகி விட்டது.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

****************


****************

Thursday, January 26, 2006

காசி, முடிந்தால் இவைகளை விளக்கவும்

அன்புள்ள காசி,
முடிந்தால் இவைகளை விளக்கவும்

1.சின்னவன், நல்லடியார்,குசும்பன் போன்றவர்களின் பதிவுகளை பல காரணங்கள் காட்டி விலக்கி வைத்து இருந்தீர்கள். இப்போது அவர்களின் பதிவுகள் இங்கே காணக்கிடைக்கிறது.

அவர்கள் எல்லாம் திருந்தி விட்டார்களா?

அதாவது நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் எழுத்தத் தொடங்கி விட்டார்களா?

எந்த அடிப்படையில் மறுபடியும் அனுமதித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?

நீங்கள் அப்போது இவர்களை விலக்கியது தவறு என்று சுட்டிக்காட்டியவர்களில் நானும் ஒருவன்.

பார்க்க: காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றிhttp://kalvetu.blogspot.com/2005/10/13.html


சிலரை விலக்கும் போது வரும் அறிவிப்பும் அதற்குத் துணையாக நீங்கள் அடுக்கும் வாதங்களும் ஏன் மறுபடி சேர்க்கும் போது வரவில்லை. நீங்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் மன்னிப்பல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஒரு வேளை நீங்கள் அவ்வாறு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டு இருக்கலாம். ஆனால் அனைவரும் அறியும்படி அவர்களின் பச்சை விளக்கை அணைத்த நீங்கள் அதே போல் அனைவரும் அறியும்படி அவர்களை மறுபடியும் சேர்த்த காரணத்தையும் சொல்லவேண்டும்.


2.போலிப் பின்னூட்டங்கள் பற்றி டோண்டு பல காலமாக புலம்பி வருகிறார். அப்போதெல்லாம் நீங்களும் ,பல எக்கியவாதிகளும் சொன்னது.

-பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை.

-தமிழ்மணம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு திரட்டி மட்டுமே.


இப்போது மட்டும் ஏன் "comment moderation" ஐ கட்டாயப் படுத்த வேண்டும்?பாதிக்கப்பட்டது நீங்கள் என்று வரும்போது நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே?

திரட்டி உங்களதாக இருந்தாலும்,என்னதான் இலவசமாக சேவைகள் வழங்கினாலும் உங்களின் இந்த செயல்கள் ஏற்புடையவை அல்ல.


திரட்டுவதில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்பதற்குப் பயந்தும்,தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,சக பதிவாளர்களை திட்டி வரும் பின்னூட்டங்களைத் கண்காணிக்க முடியும் என்பதாலும் நானும் "comment moderation" செய்து விட்டேன்.

பி.கு:மேலே உள்ள கடிதம் "thamizmaNam. com" <adm@thamizmanam.com> க்கு மயில் வழியாக அனுப்பியாகிவிட்டது.



****************


****************

Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து


பதிவு 25: பொங்கல் வாழ்த்து

எல்லாருக்கும் வணக்கம்பா. பொங்கல் கொண்டாட்டம் பற்றி மிக விரிவாக எப்படிக் கொண்டாட வேண்டும் என்று எழுத நினைத்து இருந்தேன். பல காரணங்களால் அதை எழுத முடியவில்லை. சமயம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன். இந்த கொண்டாட்ட நேரத்தில் எதிர்மறையான எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுத்து உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் இதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும் கவலை இல்லை. ஆனால் இந்துக்கள் என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் , இந்தப் பொங்கல் கொண்டாட்டத்தில் செய்யும் இறைவழிபாட்டு முறைகளைக் காரணம் காட்டி மற்ற மதத்தினர் இந்த நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.

அன்புடன்.
கல்வெட்டு (எ) பலூன் மாமா

பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
http://kalvetu.blogspot.com/2005/10/09.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html