Monday, October 26, 2015

மதம் குறித்தான‌ ராபி மற்றும் ரிச்சர்டின் விவாதம்

ராபி மற்றும் ரிச்சர்டின் உரையாடல் சிறப்பான ஒன்று. இப்படியான உரையாடல்கள் இரு தரப்பையும் புரிந்துகொள்ள உதவும்.

ரிச்சர்ட் டாக்கின்ஃச் ( Richard Dawkins)

இவர் கிறித்துவ மதத்தை தழுவிய பெற்றோருக்கு பிறந்து , பின்னர் கடவுளின் இருப்பை கேள்வி கேட்ட ஆரம்பித்தவர். இவர் பெரும்பாலும் கிறித்துவ விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ( Old Testament )சொல்லப்படும் கடவுளை ஒட்டி கேள்விகளை எழுப்புபவர். பல புத்தகங்கள் , விவாதங்கள், மற்றும்  உரையாடல்கள் மூலம் அவரின் கருத்தை கொண்டு செல்பவர். இவர் ஒரு உயிரியல் ஆய்வாளர் (Evolutionary Biologist). இவர் தனது அமைப்பின் குறிக்கோளாக சொல்வது   https://richarddawkins.net/aboutus/
//The mission of the Richard Dawkins Foundation is to promote scientific literacy and a secular worldview. Some might see this as two distinct missions: 1) Teaching the value of science, and 2) Advancing secularism.//

ராபி சாக்ஃச் (Rabbi Jonathan Sacks)

இவர் ஒரு யூதர். இவர் தான் ஏன் ஒரு யூதர் என்று அவரே சொல்கிறார்.
"Why I am a Jew”  http://www.rabbisacks.org/why-i-am-a-jew/ . இவரும் பல புத்தகங்களை எழுதியுள்ளவர். இவர் எழுதிய Not in God’s Name ( Confronting Religious Violence) பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று.

தகவலுக்காக:
  • ஆபிரகாமிய மதங்களில் கிறித்துவம் மற்றும் இசுலாம் போலில்லாமல் , யூத மதம் இரண்டு அடையாளங்கள் கொண்டது. அடிப்படையில் அது ஒரு இனம் ( race ). இந்த இனத்தில் பிறந்தவர் தான் இயேசு (Yeshua) .  யூத மத நம்பிக்கைகளை  எதிர்த்து புரட்சி செய்தவரும்கூட‌. பிற்காலத்தில் அவரது பேரில் ஒரு மதம் உருவானது வரலாறு.
  • ஒருவரின் யூத அடையாளம் என்பது இரண்டு வழிகளில் வருவது.  “Descent,”  &  “Consent.” தாய் (mother) யூதராக இருந்தால் , குழந்தையின் யூத அடையாளம் Descent Jew .வேறு மதத்தில்  இருந்து மாறுவதால் வரும் அடையாளம் Consent Jew.

Debate - Richard Dawkins vs Jonathan Sacks


விவாதம் குறித்தான எனது பார்வை
  1. இந்த விவாதம் முழுக்க முழுக்க ஒரு யூதருக்கும், கிறித்துவப் பின்னனியில் இருந்து வந்து, தற்போது கிறித்துவம் காட்டும் கடவுளை கேள்வி கேட்கும் ஒருவருக்கும் நடக்கும் விவாதமாகவே உள்ளது. இதனை பொதுவான கடவுள் நம்பிக்கை குறித்தான விவாதமாக என்னால் ஏற்க முடியவில்லை.  ராபி எல்லா இடத்திலும் கிறித்துவத்தைவிட யூதம் சிறந்தது என்ற ஒப்பீடுகளை வைத்தே அவரின் தரப்பை நியாயப்படுத்துகிறார்.
  2. ராபி , உலம்/அண்டம் குறித்த உரையாடலின் போது இவ்வாறு ஒன்றைச் சொல்கிறார்  ..to understand the system you need to be outside of system  ..... இப்படிச் சொல்லி, அதனால் படைத்தவன் ( creator  )  system - ற்கு வெளியேதான் இருக்க முடியும் என்று நிறுவ முயல்கிறார். @ 10:22
  3. கடவுள் உலகைப் படைத்தவர், அவர் உலகிற்கு வெளியே உள்ளவர் என்றால், அந்த கடவுளைப் படைத்தவர் யார்? என்ற  கேள்விக்குள் அவர் போக நினைக்கவில்லை. அதுவே போதும் என்று அவரது பயணத்தை சராசரி மதப் பற்றாளர்கள் போல நிறுத்திக்கொள்கிறார்.  அவர் சொல்லும்   to understand the system you need to be outside of system  முக்கியமானது.  இதை கடவுளுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும். கடவுளைப் பற்றி அறிய , அதையும் தாண்டிப் போக வேண்டும்.
  4. @ 21:29 ‍- 22:30 ராபி,  விவிலியத்தை கிறித்துவத்தின் வழியில் படிக்கக்கூடாது என்கிறார் ( don’t read bible in Christian way  ).  @ 27:02 -27:39 அவர் யூதம் கிறித்துவத்தை, இசுலாத்தைவிடச் சிறந்தது என்கிறார். இங்கே ஒரு சராசரி மதப் பிரச்சார‌ யுத்தியே தெரிகிறது. இவர் பொதுவான "கடவுள்" என்ற கருத்தாக்கம் குறித்து பேசவில்லை. இந்த வாய்ப்பில் தனது ம‌தத்தைச் சரி என்று நிறுவ முயல்கிறார் என்றே நினைக்கிறேன்.
  5. ராபி சொன்னதில் பிடித்த ஒன்று , "அறம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று" சொன்னதே. பெரும்பாலன மத குருக்கள் "மதம் அற்றவன் அறம் அற்றவன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர், "மதத்திற்கும் அறத்திற்கும் தொடர்பில்லை" என்கிறார். @ 31:00-34:20  (  Religion don’t have any role in Moral   )
  6. சல்மான் ருஃச்டி பற்றிய உரையாடலின்  @ 45:03 - 41:00 போது 'ராபி' கருத்துச் சுதந்திரந்தை ஆதரிக்கிறார். "மதங்களை எதிர்த்துப் பேசும் சுதந்திரம் அனைவருக்கும் வேண்டும்" என்கிறார். 'ஒரு மதம் அதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று மூடிவைத்து காலம் தள்ள முடியாது' என்கிறார். இங்கேயும் இவர் யூதம் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது என்று சொல்கிறார். ஆனால் வசதியாக இயேசுவின் கருத்துச் சுதந்திரத்திற்கு யூதம் என்ன செய்தது, என்பதை  மறந்து விடுகிறார். இவரே இந்த உரையாடலின் ஆரம்பத்தில் ரிச்சர்டின் புத்தகம் தனது நம்பிக்கையை புண்படுத்தியது ( offended ) என்றும் புலம்புகிறார்.  இரட்டை வேடம் போல் உள்ளது இவரது பேச்சு.
  7. ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதச் சுமைகளை சுமத்த வேண்டாம் என்று நான் சொல்வது போல , ரிச்சர்டும் ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 28:21 - 29:12 12  (Labeling a child) . ஆனால் இதை ராபி , குழந்தையின் குடியுரிமை மற்றும் மொழி அடையாளம் போல இதுவும் ஒன்று என்று சொல்லி சமாளிக்கிறார்.  @ 30:49 - 31:02   ராபி அதுகுறித்து பேசுவதை அவசரமா தவிர்ப்பது போலவே எனக்கு தெரிந்தது.
  8. "தேங்கிவிடும் குட்டை" என்று நான் அடிக்கடி சொல்வேன். அதுபோலவே ரிச்சர்டும்  super natural  குறித்தான ஒரு கருத்தை முன் வைக்கிறார். @ 42:40- 44:05  "When you admit it is super natural, by definition it is not understandable" .  தெரியாத ஒன்றை தெரியாது என்று சொல்லும்போது,  அதை தேடலுக்கான ஒரு வாய்ப்பாக அறிவியல் எடுத்துக்கொள்கிறது.  மதம் இன்றைய அறிவியலால் நிரப்பமுடியாத கேள்விகளை கடவுள் என்று சொல்லி , துதிப்பாடல் தயார் செய்ய ஆரம்பிக்கிறது.
    The concept (theory) of god
    http://kalvetu.balloonmama.net/2015/10/the-concept-theory-of-god.html
Image courtesy: https://en.wikipedia.org/wiki/African_art
நன்றி சித்தார்த் மற்றும் தமிழழகி (G + வழியாக)

.

Wednesday, October 14, 2015

டெமாக்ரடிக் கட்சி 2016 அதிபர் வேட்பாள‌ர் தேர்விற்கான விவாதம் -1

ரம்பத்தில் இருந்தே தெளிவான பதில்களையும் தெளிவான நிலைப்பாடுகளை சரியான காரணம் கொண்டும் விளக்கி, பலரைக் கவர்ந்தார் 'பெர்னி சான்டர்ஃச்'.  இவர் யார் என்று தெரியாதவர்கள்கூட நேற்று இவரின் பேச்சைக் கேட்டபிறகு அவரைப்பற்றி அறிந்துகொள்ள தேடு தேடு என்று தேடி, ரிபப்ளிகன் கட்சியின்  என்டர்டெயினர் Trump ன்  ட்வீட்டர் ட்ரெண்ட்டையே தாண்டிப்போனார்கள். முதல் முறையாக இவர பேசுவதைக்கேட்ட பலர் , most honest person என்றுதான் சொல்லுகிறார்கள். இவரின் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளில் ஏதும் குறை காண முடியாதவர்கள் , இவரை நாட்டின் எதிரிபோல காண்பிக்க சொல்லும் விசயம் வியட்நாம் போர்.  இவர் வியட்நாம் போரின்போது தான் போரிடமுடியாது என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுவார்கள்.  வியட்நாம் போர் காலத்தில் இவர் அந்த‌ போரில் ஈடுபடாமல் Conscientious Objector Status கேட்டவர்.

Wiki -Conscientious Objector Status
A conscientious objector is an "individual who has claimed the right to refuse to perform military service"on the grounds of freedom of thought, conscience, and/or religion. In general, conscientious objector status is only considered in the context of military conscription and is not applicable to volunteer military forces

நேற்றும் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சுற்றி வளைக்காமல் தெளிவாக தன் பதிலைச் சொன்னார். " நான் வியட்நாம் போரை ஆதரிக்கவில்லை. அதை அந்த வயதில் எதிர்த்தேன். அதனால் போரில் ஈடுபடுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு கேட்டேன்" என்றார். சரியோ தவறோ அதிபர் சொன்னால் போரிடும் அதிகாரவர்க்க இராணுவ நிலைபாடுகள் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியில்லை என்றால் போருக்கு போவது இல்லை என்ற நிலைப்பாடு சுய சிந்தனை பகுத்தறிவு சார்ந்தது. அதைத்தான் அவர் அக்காலத்தில் செய்தார். நேற்று அதைச் சொல்ல அவர் தயங்கவும் இல்லை. அதுபோல 'எட்வர்ஃட் ஃச்னோடன்' பற்றி கேட்டபோதும் தயக்கமே இல்லாமல், "ஃச்னோடன்" மக்களுக்கு  சேவை செய்துள்ளார். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று நேரடியாக்ச் சொன்னார். 'ஃச்னோடன்' பற்றிப் பேசுவதே தேசத்துரோக செயலாக பார்க்கப்படும் இந்தக் காலத்தில் , இவர் அதை விவாத மேடையில் சொன்னது முக்கியமானது.

கிளிண்டன் மின்னஞ்சல் குறித்த கேள்விக்கு அது குறித்து கவலை இல்லை என்று சொல்லி கிளிண்டனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார். கிளிண்டன் உடனே இவருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார். இது எல்லாம் ரிபப்ளிகன் நாடகத்தில் காணவே முடியாத காட்சிகள்.

இலவச கல்லூரி, சோசியல் செக்யூரிட்டி விரிவாக்கம், பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி (nominal financial transactions tax on speculative trading in stocks, bonds, derivatives, and other financial instruments) புவி வெப்பம‌யமாதல் என்று எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக இருக்கிறார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவருக்கு போட்டியாளராக இருக்கும் கிளிண்டனோ,  தான் பெண் என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க முயல்கிறார்.


னது குடும்ப பெயர் பார்த்து பார்த்து வாக்களிக்க வேண்டாம். ஆனால் நான் பெண் , உங்கள் குழந்தையிடம் அவளும் ஒரு நாள் அதிபராகலாம் என்று நீங்கள் சொல்லலாம். பெண் என்பதால் நான் வித்தியாசமான அதிபராக இருப்பேன். நான் ஒரு பெண் பெண் பெண்....... இப்படித்தான் நேற்று 'ஃகிலாரி கிளிண்டன்' ' பேசிக்கொண்டு இருந்தார். குடும்பபெயரால் வரும் தீமைகள் வேண்டாம் என்ற தொனியில் பேசிவிட்டு, பெண் என்பதால் சலுகை கேட்பதுபோல பேசுவது என்பது இரட்டை வேடம்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சி தேர்தலை ஒட்டி நடந்த விவாதத் களத்தில் ஆரம்பக் கேள்வியே "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எதையும் மாற்றிப் பேசுவீர்களா?" என்று 'ஆண்டர்சன் கூப்பர்' எடுத்த எடுப்பிலேயே கிளின்டணைக் கேட்டார்.  ஆம் சமீப காலங்களில் அவரின் நிலைப்பாடுகள் பல்டியடித்துகொண்டு உள்ளது. விவாதத்தில் எதையாவது உருப்படியாகப் பேசினாரா என்றால் இல்லை. முன்னாள்  First lady அதன்பிறகு ஒபாமவுடன் பிரைமரியில் மோதியது, அதே ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறையை நிர்வாகம் செய்தது போன்ற செயல்களால், மக்களுக்கு அவரது பெயர் நன்கு அறிமுகமாயுள்ளது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று புத்தகத்தில் இடம் பெறலாம் கிளிண்டன். திட்டங்கள், தொலை நோக்குப்பார்வை (Policy based political agenda ) என்று ஏதும் இருப்பதாக  தெரியவில்லை. வால் ஃச்ட்ரீட் மற்றும் பெரிய வங்கிகள் விசயத்தில் அவரின் நிலைப்படு என்ன என்பது அவருக்கே தெரியாதுபோல். பூசி மெழுகினார்.

***

இந்த‌ இருவர் தவிர விவாத களத்தில் இருந்தவர்கள் "மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) "சிம் வெப்"  (Jim Webb )  மற்றும்  "லிங்கன்  ச்சஃவே" ( Lincoln Chafee)

***

மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley )
மார்ட்டின் 2007 இல் இருந்து 2015 வரை மெரிலேண்ட் (Maryland) கவர்னராக இருந்தவர்.  'ஃகிலாரி கிளிண்டன்' ஒபாமைவை எதிர்த்து போட்டியிட்டபோது (2008) அவரை ஆதரித்தவரும்கூட. ஆனால், இப்போது கிளிண்டனின் நிலைப்பாடுகளில் நம்பிக்கையில்லை என்று அவருடன் போட்டியாளராக இருக்கிறார். மெரிலேண்ட்  கவர்னராக இவர் செய்த நல்ல விசயங்களைச் சொன்னார். வால் ஃச்ட்ரீட் , வங்கி போன்ற பிரச்சனைகளில் இவர் கிளிண்டனை கடுமையாக எதிர்த்தார்.முடிவுரையின்போது 'ரிபப்ளிகன் கட்சியைபோல் அல்ல டெமாக்ரடிக் கட்சி 'என்று அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார்.


ஜிம் வெப் (Jim Webb).
முன்னாள் செனட்டர் இவர் வெர்சினியா மாநிலத்தில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்  பல நல்ல சட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தியதாகச் சொன்னார். பெர்னியுடன் சேர்ந்தும் சிலவற்றைச் செய்துள்ளார்போல தெரிகிற‌து.  'சிஎன்என்' விவாதத்தில் இவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று 'ஆண்டர்சன் கூப்பரோடு' மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். ஆண்டர்சனோ "நீங்கள் அனைத்திற்கும் ஒத்துகொண்டே விவாதத்திற்கு வந்தீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மேடையில் யார் நடுவில் இருப்பது போன்றவை வேட்பாள‌ர்களின் செல்வாக்கை வைத்து தீர்மானிக்கப்படும். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் கூட அப்படித்தானா?


லிங்கன் ச்சஃவே ( Lincoln Chafee )
முன்னாள் ரோஃட் அய்லேண்ட் (Rhode Island)  கவர்னரான இவர் மிகவும் பரிதாபமாகவே இருந்தார். அவருக்கே அவர் வேட்பாளராக இருப்பது சந்தேகமாக உள‌ளது போல. "வங்கிகள் சார்ந்த சட்டம் (Glass-Steagall  provisions) சார்பான ஓட்டெடுப்பில் வங்கிகளை மேலும் பெரிதாக்கும் ஒன்றிற்கு ஏன் சாதகமாக ஓட்டுப்போட்டீர்கள்?" என்ற கேள்விக்கு, "அது வந்து இங்க பாரு தம்பி நான், அப்பத்தான் மொத தபாவா செனட்டுக்கு வந்தேன். எல்லாரும் கூட்டமா ஓட்டுப்போடும்போது நானும் எதுக்கோ போட்டேன்" என்ற‌ ரீதியில் சொன்னபதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள அவரை வறுத்து எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.

********
வ்வொரு விவாதத்தின் முடிவிலும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் 'இவர்தான் இந்த விவாத வின்னார்' என்று சம்பிரதாயமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் போல. மில்லியனர்கள், பெரிய வங்கிகளுடன் ,கார்ப்பரேட் ஊடகங்களையும் எதிர்க்கிறேன் என்று சிஎன்என் அமைத்துக்கொடுத்த மேடையிலேயே விளாசிய சான்டர்ஃச் நிச்சயம் இவர்களுக்கு டார்லிங்காக இருக்க மாட்டார். நினைத்தபடி கிளிண்டனே விவாத வெற்றியாளர் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் கிளிண்டன்?  என்று இதுவரை எனக்குப் புரியவில்லை.

முதல்முறையாக பெர்னி சான்டர்ஃசின் பேச்சைக் கேட்ட என் மகன் , அரைமணி நேரத்தில் அவரின் தொண்டராகிவிட்டான். "நான் ஒரு மில்லியனர் கிடையாது. என் தேர்தல் செலவிற்கு வரும் பணம் அனைத்தும் மக்களிடம் இருந்து ஐந்தும் பத்துமாக வரும் நன்கொடையே. நீங்களும் உதவுங்கள்"  என்று பெர்னி சொன்னவுடன், ஒரு போட்டியில் அவன் வென்ற‌ $100 யில் இருந்து , $50 டாலரை இவருக்கு இப்பவே அனுப்புங்கள் என்று அடம் பிடித்தான். இல்லாவிட்டால் " FEEL THE BERN" என்று இருக்கும் அவரின் பிரச்சார டிசர்ட் ஆவது வாங்கி அவருக்கு உதவுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். இடையிடையே விவாதம் சார்ந்த சிஎன்என் இணைய வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டு பெர்னிக்கு வாக்கைச் செலுத்தினான். காலையில் எழுந்து அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நிற்கிறான்.

இன்னும் அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தால் பெர்னி அதிக இளைஞர்களைக் கவர்வார் என்பது உறுதி. 

Tuesday, October 13, 2015

சர்வரோக நிவாரணி ஆதி பல்பொடி

ணவே மருந்து என்பது நம் முன்னோர்களின் வாக்கு. இங்கே முன்னோர்கள் எனப்படுபவர்கள்,  ஆதி ஆதி ஆஆஆ ஆதி அந்தம் எல்லாம் தாண்டிய ஆதிமனிதர்கள். இந்த ஆதி காலம் என்பது ஆத்தீசூடிக்கு முன்னால் உள்ள காலம். ஆதி காலம் என்பது இந்த ஆதாமுற்கு முந்திய முன்னால் உள்ள காலம். காலங்களுக்கு முந்திய காலம். கலாமாலும் கண்டுபிடிக்கமுடியாத காலம்.ஆத்திச்சூடியும் இருந்தாலும் இது அவை எல்லாவற்றுக்கும் முந்திய காலம். அக்காலத்தில் இருந்தவர்கள் வாயால்தான் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை எங்களது பேசு புக் மடத்தில் பேசிப் பேசிக் கண்டுபிடித்தோம்.

சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புதான் இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த அனைத்திலும் சிறந்தது என்று "தாமசு ஆல்வா எடிசன்" ( ஆல்வா -வில் உள்ள "ஆ" வை கவனிக்க) இன்று கனவில் அனைவருக்கும் செய்தியைச் சொன்னார். இதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" . சுமார் 20 ஆயிரம் பேசு புக் பயனாளிகள் பேசிப் பேசியே கண்டுபிடித்த சிற‌ப்புக்கொண்டது இது. பேசிப் பேசி கண்டுபிடிக்க முடியாத அல்லது பேசு பொக் கணக்கு இல்லாத சாதரண மனிதர்கள் பலநேரம் "ஆதி என்றால் எந்த ஆண்டு என்று கி.மு வில் ஒரு எண் சொல்லு" என்கிறார்கள் இவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம் என்று அவசரச் செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையாளர்கள் பேசு பொக் பக்கம் வந்து எங்கள் பசனைக் கூட்டத்தில் சேர்ந்து பேசிப் பேசி பலவற்றைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்.

ஆதி மனிதனின் பெயரே ஆதிதான். ஆதி1 ஆதி2 ஆதி 3 என்று பெயர் இருக்கும். ஆதி மனிதன் எப்படி எண்களைப் பயன்படுத்தினான் என்று நீங்கள் கேட்பீர்களேயானல் உங்களைப் பார்த்து சிரிப்பதைத்தவிர‌ வேறுவழியில்லை. எல்லாம் தெரிந்தவன்தான் ஆதி. அடுத்த தலைவர் படத்திற்குகூட "ஆதி" என்றுதான் பெயர் வைக்கப்பட உள்ளது. ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான் என்ற கண்டுபிடிப்பைக் பேசு பொக் மடத்தில் ஆதிக் கடவுள் அறிவித்த தருணம் ஆதி உலகில் முக்கியமானது. அவர்  சொன்னபோது அனைவரும்

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். ஆதிமனிதன் போலவே ஆனால் ஒரே ஒரு "ஆதி ஆடு" மட்டும் ஆப்பிள் சாப்பிட்ட காரணத்தால் எதிர்த்து கேள்வி கேட்டது. "நாமும்தான் வாயால் சாப்பிடுகிறோம் எல்லாப் பக்கிகளும்தானே வாயால் சாப்பிடுது. நீங்க என்ன புச்சா கண்டுபிடிச்சிட்டீக?" என்றது அந்த ஆதி ஆடு சாரி கறுப்பு ஆடு. ஒரு கேள்வியால் காண்டாகிப்போன ஆதிக்கடவுள், அவரை பேசு போக் மடத்தில் இருந்து விலக்கிவிட்டார். இருந்தாலும் ஏதாவது ஒரு பதில் சொல்லி கூட்டத்தைக் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உண‌ர்ந்தார் ஆதிக்கடவுள்.

மருதையில் மண்டபம் பிடித்து "ஆதி மனிதன் வாயால் சாப்பிட்டான்" என்ற உண்மையை விளக்கிக்கொண்டிருந்த தனது செயலாளரை புறாவைவிட்டு வரவ‌ழைத்தார். (ஆதி ஆதி ஆதி எல்லாம் ஆதிமுறை) . புஃச்ப வாகனத்தில் வந்து இறங்கிய செயலாளர், இறங்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாக் தெரிந்தார். என்னவென்று நேரடியாகக் கேட்டால் கடவுளின் பதவிக்கு இழுக்கு என்று எண்ணி,  ஆதி கடவுள் மோந்து பார்த்தார். உரேகா ..ஆம் மருதையில் இருந்து வந்திறங்கிய செயலாளரின் வாயில் இருந்து ஒருவித புதிய‌நெடி வந்துகொண்டு இருந்தது. அது என்ன என்று கேட்ட ஆதிகடவுளிடம் , தான் மருதை அரசரடி டீக்கடையில் வாங்கிய பல்பொடி பாக்கெட்டைக் குடுத்தார் செயலாளர். அந்தக் கணமே அதற்கு ஆதி பல்பொடி என்று நாமகரணம் சூட்டினார் ஆதி கடவுள். 

அடுத்த நாள் பேசு பொக் கூட்டத்தில் இவ்வாறு ஆதிக் கடவுள் அறிவித்தார்.

உணவே மருந்து.
ஆதி வாயால் சாப்பிட்டான்.
ஆதி பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.
ஆதி பல்பொடியில் பல்வெளக்கிய பிறகு சாப்பிட்டான்.

என்ன வேணுமினாலும் சாப்பிடலாம் .
எவ்வளவு வேணுமினாலும் சாப்பிடலாம்.
ஆனால் ஆதி பிராண்ட் பல்பொடியில் பல்வெளக்கிய பிறகே சாப்பிட வேண்டும்.

அனைத்து தொண்டர்களும் ஆரவரம் செய்தார்கள்.

ஆதி ஆதி ஆஆ தீ
ஆதி ஆதி ஆத்தாடி
ஆதி ஆதி ஆடிப் பாத்தாடி
ஆதி ஆதி எல்லாம் ஆஆ தீ!

என்ற பசனைப்படலை கூக்குரலிட்டு மகிழ்ந்தார்கள். 

அனைவருக்கும் பலவித பேனர்கள் வழங்கப்பட்டது. 


  • ஆதி பல்பொடியே அனைத்திற்கும் மருந்து.
  • மார்சியன் படத்தில் கீரோ ஆதி பல்பொடியை எடுக்காமல் போனதாலே பிரச்சனை வந்தது.
  • ஆதி பல்பொடியில்  பல்வெளக்கிய பிறகு பச்சைப் பாம்பை, கருநாகம் விசத்தில் வறுத்து சாப்ப்பிட்டாலும் ஒன்னியும் ஆவாது.
  • முடவர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு நடக்கிறார்கள்.
  • குருடர்கள் ஆதி பல்பொடியில் பல் வெளக்கிய பிறகு பார்க்கிறார்கள்.
  • பல் இல்லாத பாட்டிகளுக்கு பல் முளைக்கிறது ஆதி பல்பொடியால்.


மூட்டை முடிச்சுகளுடன் புதிய ஆதிச் செய்தியை பரப்ப மேற்கண்ட பேனர்களுடம் தொண்டர்கள் கெளம்பினார்கள்.


பக்கவாட்டு குறிப்பு: 
"தமிழ் பேலியோ" மதத்திற்கும் இதற்கும் தொடர்பு அல்ல. இது முழுக்க முழுக்க புனைவு.


Friday, October 09, 2015

வண்ணங்களில்தான் எண்ணம் - ஒடிலி டொனால்ட் ஒடிட்டா

ள்ளூரில் இருக்கும் டுயூக் (Duke) பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகம். இது பலசிறப்புகளைக் கொண்டது. அமெரிக்காவில் மருத்துவத்துறையில் முதல் பத்து முக்கிய கல்லூரிகள் என்று எடுத்தால் இது அந்த பட்டியலில் வந்துவிடும். அதுபோல வணிக மேலாண்மைப் படிப்புகளிலும். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) டிம் குக்  (Tim Cook)  இங்கு வ‌ணிக மேலாண்மைப் மேற்படிப்பு படித்தவர். இந்த பல்கலைக்கழகம் குறித்தும் அது தோன்றிய வரலாறும் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறது.

Duke University: A Brief Narrative History
http://library.duke.edu/rubenstein/uarchives/history/articles/narrative-history

நான் பேசப்போவது இந்தப் பல்கலையில் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கலைக் காட்சியகம் குறித்தானது. மருத்துவம், மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம்,  கலைத்துறையிலும் சிற‌ந்து இருக்க வேண்டும் என்று, 10 வருடங்களுக்கு (2005) முன் புதிய பெயருடன் புதுப்பிக்கப்பட்டது. 

Nasher Museum  Of Art At Duke University
http://nasher.duke.edu/about/

ப்போது அது 10 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிற‌து. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  "ஒடிலி டொனால்ட் ஒடிட்டா" (Odili Donald Odita) என்ற ஓவியர் வரைந்த சுவரோவியம் ( Mural ) முக்கியமானது.  "ஒடிலி ஒடிட்டா" அமெரிக்கர். ஆப்ரிக்க கறுப்பினத்தவர்.  இவர் பாணி ஓவியம் ஒருவித சீரான வடிவங்கள் கொண்டது. "நேர்த்தியில் வண்ணம்" என்று சொல்லலாம்.

http://www.odilidonaldodita.com/  
“Color in itself has the possibility of mirroring the complexity of the world as much as it has the potential for being distinct.” -Odili Donald Odita

டுயூக் பல்கலை அமைந்துள்ள இடம் "டுர்ஃகாம்"  (Durham) ஆகும். இது 45% வீத கறுப்பின மக்கள்தொகை கொண்ட ஊர்.  இந்த ஊரைப்பற்றிய ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒடிட்டா வரைந்த ஓவியமே எனக்கு அவரைப்பற்றிய அறிமுகம். இவரின் சிறப்பு இவர் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களில் உள்ளது. 



2007 ல் இவர் வரைந்த ஃபுளோ (FLOW) என்னும் சுவரோவியம் அசத்தியடிக்கும் ஒன்று. 
FLOW @  Kaplan Hall, the lobby of the Lois & Richard Rosenthal Center for Contemporary Art
http://www.odilidonaldodita.com/exhibitions/flow/index.html



Wednesday, October 07, 2015

ஃபெர்னி ஃசான்டர்ஃச் - Bernie Sanders For USA President 2016

மீப காலமாக என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் , அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஃபெர்னி ஃசான்டர்ஃச் (Bernie Sanders ) அவர்கள். எனது அமெரிக்க அரசியல் அறிவு (அறிந்துள்ளது) என்பது கடுகளவுகூட இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் விளம்பரம்/செய்தி என்று ஒருவர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினால், அவர் குறித்து அதிகம் தேடி அதன் பின்னர் அறிந்துகொள்வேன். அப்படியான தேடலில் தெரிந்துகொண்ட நபர்தான் ஃபெர்னி ஃசான்டர்ஃச்.

2016 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் , டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் (Primary Election ) களத்தில் உள்ளார். Primary- ஒரு கட்சி அதற்கான சனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

ச்சரயப்படுத்துகிறார்   இவர்.  இவர் ஏற்கனவே சொந்த ஊரில் மேயராக இருந்தவர். இப்போது அமெரிக்க செனட்டராக இருப்பவர். (United States Senator from Vermont). இவரின் வயது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. என்னளவில் அதிக வயது என்பது தடை அல்ல. ஒருவேளை இந்தியா போன்ற பரம்பரை அரசியலில் அதை ஒரு குறையாகப் பார்க்கலாம். இவர் மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று இவரின் பேச்சு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிற‌து.

வர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுகிறார். அதற்கான தீர்வாக தனது தரப்பு விளக்கம், என்ன செய்யலாம் என்றும் சொல்கிறார். தனக்கு போட்டியாக இருந்தாலும் , மற‌ந்தும் மற்றவர்களின் தனிச் செயல்பாடுகளை விமர்சிப்பது இல்லை. "பிரச்சனையில் மற்றவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் அதைப்பற்றி பேசுகிறேன் தனிநபரைப் பற்றி அல்ல" என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

வ்வொரு முறை ஃகிலாரி கிளிண்டன் பற்றியும், அவரின் சமீபகால மின்னஞ்சல் பிரச்சனைகள் குறித்தும் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இவர் அதற்காக சொல்லும் பதில், ஃகிலாரி கிளிண்டனையே இவருக்கு ஓட்டுப்போட வைத்துவிடும். அந்த அளவிற்கு தெளிவாக உள்ளார்.

பாமாவின் சமீபத்திய ஈரான் ஒப்பந்ததை ஆதரிக்கிறார். அடுத்த நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு போர் ஒரு தீர்வு அல்ல என்பதிலும்,  பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதிலும் தெளிவாக உள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மதம் சார்ந்த ஒன்று என்றும் ,அதில் அமெரிக்கா முன்னிற்காமல், செளதி போன்ற மதக்காப்பாளர்களை பொறுப்பேற்க வைக்கவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரி.

ரு காலத்தில் இலவசமாக இருந்த கல்லூரிப் படிப்புகள் இப்படி விலையேற்றம் அடைந்து இருப்பதற்கு அவர் சொல்லும் தீர்வு சரியானதுதான். "மாணவர்கள் போராடவேண்டும் நான் அவர்களோடி இணைந்தே வெற்றி காண்பேன்" என்கிறார். சோசியலிஃச்ட் என்றால் கெட்டவார்த்தை போல பார்க்கும் மக்களிடம், அதைப்பற்றி பேசி விளக்கிமுய‌ற்சிக்காமல், டென்மார்க் போன்ற அய்ரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டி "அதுபோல இருப்பதுதான் டெமாக்ரட்டிக் சோசியலிஃச்ட்" என்று எளிதாக விளக்குகிறார்.

மெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எனப்படும் (இந்திய பிராவிடெண்ட் பண்டு போல but not same) வைப்புநிதியை ஊற்றி மூடவேண்டும் என்று சொல்லும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்கள் போல் இல்லாமல், அதை விரிவுபடுத்தி , ஓய்வுபெறும் வயதைக் குறைத்து, மக்களுக்கு பயன்கொடுப்பேன் என்கிறார்.

வெர்சினியா சுரங்கத்தொழிர்கள்  ஃகிலாரி கிளிண்டன் ஆதவாளர்களாக இருந்தவர்கள். ஒபாமாவிற்கும் , ஃகிலாரி கிளிண்டன் கிளிண்டனுக்கும் நடந்த பழைய பிரைமரி போட்டிகளில்கூட இவர்கள் அதிக அளவு வாக்குகளில் ஃகிலாரி கிளிண்டனை ஆதரித்தவர்கள் இவர்கள் . இப்போது  ஃபெர்னி ஃசான்டர்ஃச் பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்கள்.



Bernie Sanders Speaks With Katie Couric - Full Interview
https://www.youtube.com/watch?v=XpgJYNaIeqo

Bernie Sanders For President
https://www.youtube.com/channel/UCW4EM_U8f6sXf1IFsTU_DRQ

https://berniesanders.com/

The concept (theory) of god

The concept (theory) of god is not a definite one. This allows anyone to say "yes there is god", or "no, there is no such thing called god". Unless someone defines, "what is god?", and that definition is acceptable (to you /me/ anyone) , then only can they (who got convinced by the definition of god) start searching for god. Once you found the meaning of the word, god, you can look for its existence.

This is how I see the concept of God.

When science was at 100th mile mark, people said, "our god is at 200th mile mark. Can your science explain what is at 200th mile mark?". At one point science did reach that 200th mile mark. That pissed of many people, so they moved their god's existence to 300th  mile mark by saying,  "no, our god is at the 300th mile mark. You see a misty object there, can your science explain that? "

The beauty of science is,  it won’t stop at any point assuming anything as a definite answer.  Science will disprove its own discovery/theory as it travels/explores  more.

The so called. "fictional god", only lives in the gaps of science. As you know, the Bible was written by folks who thought the Earth was flat. This makes the bible useless after the discovery of the Earth being round.  The Bible is just an example of all the "fictional" holy books that fall into this category.

Science is trying to explore the unknown. On the other side, the unknown is being labeled as "God." Have fun with your label!
-Kalvetu

God of The Gaps - Neil DeGrasse Tyson
https://www.youtube.com/watch?v=ytaf30wuLbQ




Thursday, October 01, 2015

A Sinner In Mecca - Movie

கனின் பள்ளியில் "உலக வரலாறு" என்ற பாடம் உள்ளது. அதில் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி யூதர்களின் வரலாறு என்று எல்லாம் படிக்கிறார்கள். அது குறித்து பேசும்போது எனது தரப்பு கருத்துக்களையும் சொல்வேன் என் மகனிடம்.  நேற்று திடீரென்று "அப்பா என்னோடு மெக்காவிற்கு வருவீர்களா? என்றான். நான் சின்னவயதில் நடைபயணமாக பழனி மலை போக நினைத்த போது, என்னுடன் என் அப்பா வந்தார். பக்திமாலை, மண்ணாங்காட்டி ,மூத்த சாமியார் , பசனை ,சடங்குகள் இல்லாமல் நான் எனக்கே ஒரு துளசி மாலையைப் போட்டுகொண்டு அப்பாவுடன் நடக்கத்துவங்கிவிட்டேன். தேர்தல் காலம் அது. அப்பா வழிநெடுக டீக்கடையில் நின்று நின்று செய்தி கேட்டுவருவார். "கன்னிவாடி" என்று நினைக்கிறேன், அதுதாண்டி அப்பாவால் நடக்க முடியவில்லை. நான் மட்டும் தனியாக நடக்க, அப்பா பேருந்தில் ஏறி அடுத்த கிராமத்தில் இறங்கி எனக்காக காத்து இருப்பார். செல்போன்கள் இல்லாத காலம். வெறும் நம்பிக்கையுடன் அப்பா காத்து இருக்க, நானும் அதே நம்பிக்கையுடன் ஓட்டமும் நடையுமாக அப்பாவை வந்தடைவேன்.

என் பார்வையில் படும் வண்ணம் ஊரின் முகப்பிலேயே அப்பா இருப்பார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு , சாப்பாடு தண்ணீர் குடித்துவிட்டு, நான் மறுபடியும் நடக்க ஆரம்பிப்பேன். அப்பா பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்ததில் இறங்குவார். இப்படி தொடர்ந்தது எங்கள் பயணம். நான் நடக்கும்போது என்னைக்கடந்து செல்லும் சின்ன மோட்டார் வாகனக்காரர்கள் என் அருகே நிறுத்தி என்ன என்று விசாரித்துச் செல்வார்கள். தனியா நடக்கும் சிறுவன் என்பதால். அவர்கள் மறக்காமல் என் அப்பாவைப் பார்த்தால் பையன் இங்கே வருகிறான் என்றும் சொல்லிச் செல்வார்கள் அவரிடம்.  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் அந்தப் பயணத்தின்போது நான்.

அதற்கு அடுத்து திருச்செந்தூருக்கு நடக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் மதுரை தாண்டியவுடன் நின்றுவிட்டது. அப்பாவால் நடக்கமுடியவில்லை. எனவே நாங்கள் அப்படியே ஊருக்கு திரும்பிவிட்டோம். என் அண்ணனுடன் சேர்ந்து பலமுறை திருப்பரங்குன்றம் நடந்து சென்றுள்ளேன். அத்தகைய பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகச் செல்வதே.

இப்போது என் மகன் மெக்கா செல்ல வேண்டும் என்ற‌வுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மெக்கா இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாத இடம் என்று அவனிடம் சொன்னவுடன் அவனுக்கு மகிழ்ச்சி போய்விட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் பல இசுலாமியர்கள் கடை வைத்து இருப்பார்கள். கோவில் உள்பிரகாரத்தில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதுவே தவறு. கடவுள் என்ற ஒரு கான்செஃப்ட்டிற்கு இது முரணானது. கடவுள் மதம் பார்த்தா அருள் பாலிக்கிறார்?

இசுலாம் அதைவிட அடுத்தபடிக்கு எடுத்துச் செல்கிறது. ஊர்பக்கமே வரக்கூடாது, இடத்தை பார்க்கவேகூடாது என்று சொல்கிற‌து. மதங்கள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை. ஒரு கட்சிக்காரன் மாற்றுக்கட்சி தலைவரை அவர் வீட்டில் வைத்துக்கூட பார்க்கமுடியும். ஆனால் ஒரு மதத்துக்காரன் அடுத்த மதத்தின் முக்கிய/புனித இடம் / ஊருக்குள்ளேகூட போகமுடியாது.

****
சமீபத்தில் நடந்த மெக்கா விபத்து குறித்து பேச‌ Parvez Sharma   ( https://en.wikipedia.org/wiki/Parvez_Sharma  ) என்பவர் ஒரு பண்பலை நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வழியாக எனக்கு இந்தப்படம் அறிமுகமானது. அந்தப்படம் குறித்த Dr Joy ன்  பார்வை.http://www.drjoy.com/movie_reviews/a-sinner-in-mecca/

http://asinnerinmecca.com/

http://www.imdb.com/title/tt4666618/

இந்தப் படத்தின் இயக்குநர் "பெர்வேஃச்"  "ஒருபால் ஈர்ப்புள்ள" ஒரு இசுலாமியர்.  த‌ன்னை ஒருபால் ஈர்ப்பாளராக பொதுவில் அறிவித்துக்கொண்டவர் 'பெர்வேஃச்'. மதவாதிகளிடம் இருந்து இதற்குமுன்னரே பல சிக்கல்களை அனுபவிப்பவர் . இசுலாத்தில் ஒருபால் திருமணங்கள் அல்லது ஒருபாலினச் சேர்க்கை தடை செய்ய‌ப்பட்ட ஒன்று. ஒருபாலினச் சேர்க்கையாளர் என்றவுடனே மத அடிப்படையில் இவருக்கு மெக்காவும் மறுக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஆனால் கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லை என்று இவர் துணிந்து செல்கிறார் மெக்காவிற்கு தன்மத கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று.

http://asinnerinmecca.com/about/
//
Every able-bodied Muslim is commanded by Allah to embark on this spiritual Hajj pilgrimage to Mecca at least once in a lifetime. Islam’s heart beats here. Equipped with nothing more than my faith and my iPhone, I leave my 21st-century life in America and arrive in Saudi Arabia, where the Islamic calendar, much like its subjugated citizenry, is stuck in the 1400s. In Mecca, I weep as I behold the sight indelibly marked on my mind and on every prayer rug I have known since I was a child: millions of devotees in white robes circling a large black cube, the Kaaba. As I gather courage to film on my iPhone I ponder: “Surely Allah allowed me here, because he accepts me as I am.”
//

மெக்காவில் யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது. இவர் தனது மெக்கா பயணத்தின் போது எடுத்த ஆவணப்படம் நிறைய கதைகளை சொல்லும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் September 4, 2015அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு சொல்கிறது. இந்தப்படம் எப்படியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிடும். எனவே இதை நாமும் இந்தியாவில் தடை செய்யக்கோருவோம் இப்போதே.

.