ஆரம்பத்தில் இருந்தே தெளிவான பதில்களையும் தெளிவான நிலைப்பாடுகளை சரியான காரணம் கொண்டும் விளக்கி, பலரைக் கவர்ந்தார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவர் யார் என்று தெரியாதவர்கள்கூட நேற்று இவரின் பேச்சைக் கேட்டபிறகு அவரைப்பற்றி அறிந்துகொள்ள தேடு தேடு என்று தேடி, ரிபப்ளிகன் கட்சியின் என்டர்டெயினர் Trump ன் ட்வீட்டர் ட்ரெண்ட்டையே தாண்டிப்போனார்கள். முதல் முறையாக இவர பேசுவதைக்கேட்ட பலர் , most honest person என்றுதான் சொல்லுகிறார்கள். இவரின் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளில் ஏதும் குறை காண முடியாதவர்கள் , இவரை நாட்டின் எதிரிபோல காண்பிக்க சொல்லும் விசயம் வியட்நாம் போர். இவர் வியட்நாம் போரின்போது தான் போரிடமுடியாது என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுவார்கள். வியட்நாம் போர் காலத்தில் இவர் அந்த போரில் ஈடுபடாமல் Conscientious Objector Status கேட்டவர்.
Wiki -Conscientious Objector Status
A conscientious objector is an "individual who has claimed the right to refuse to perform military service"on the grounds of freedom of thought, conscience, and/or religion. In general, conscientious objector status is only considered in the context of military conscription and is not applicable to volunteer military forces
நேற்றும் அந்தக் கேள்வி வைக்கப்பட்டது. சுற்றி வளைக்காமல் தெளிவாக தன் பதிலைச் சொன்னார். " நான் வியட்நாம் போரை ஆதரிக்கவில்லை. அதை அந்த வயதில் எதிர்த்தேன். அதனால் போரில் ஈடுபடுத்திக்கொள்வதில் இருந்து விலக்கு கேட்டேன்" என்றார். சரியோ தவறோ அதிபர் சொன்னால் போரிடும் அதிகாரவர்க்க இராணுவ நிலைபாடுகள் இல்லாமல், சுயமாகச் சிந்தித்து தனக்கு சரியில்லை என்றால் போருக்கு போவது இல்லை என்ற நிலைப்பாடு சுய சிந்தனை பகுத்தறிவு சார்ந்தது. அதைத்தான் அவர் அக்காலத்தில் செய்தார். நேற்று அதைச் சொல்ல அவர் தயங்கவும் இல்லை. அதுபோல 'எட்வர்ஃட் ஃச்னோடன்' பற்றி கேட்டபோதும் தயக்கமே இல்லாமல், "ஃச்னோடன்" மக்களுக்கு சேவை செய்துள்ளார். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்" என்று நேரடியாக்ச் சொன்னார். 'ஃச்னோடன்' பற்றிப் பேசுவதே தேசத்துரோக செயலாக பார்க்கப்படும் இந்தக் காலத்தில் , இவர் அதை விவாத மேடையில் சொன்னது முக்கியமானது.
கிளிண்டன் மின்னஞ்சல் குறித்த கேள்விக்கு அது குறித்து கவலை இல்லை என்று சொல்லி கிளிண்டனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தார். கிளிண்டன் உடனே இவருக்கு கைகொடுத்து நன்றி தெரிவித்தார். இது எல்லாம் ரிபப்ளிகன் நாடகத்தில் காணவே முடியாத காட்சிகள்.
இலவச கல்லூரி, சோசியல் செக்யூரிட்டி விரிவாக்கம், பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வரி (nominal financial transactions tax on speculative trading in stocks, bonds, derivatives, and other financial instruments) புவி வெப்பமயமாதல் என்று எல்லாவற்றுக்கும் தெளிவான திட்டங்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை கொண்டவராக இருக்கிறார் 'பெர்னி சான்டர்ஃச்'. இவருக்கு போட்டியாளராக இருக்கும் கிளிண்டனோ, தான் பெண் என்பதை மட்டும் சுட்டிக்காட்டி ஓட்டு சேகரிக்க முயல்கிறார்.
எனது குடும்ப பெயர் பார்த்து பார்த்து வாக்களிக்க வேண்டாம். ஆனால் நான் பெண் , உங்கள் குழந்தையிடம் அவளும் ஒரு நாள் அதிபராகலாம் என்று நீங்கள் சொல்லலாம். பெண் என்பதால் நான் வித்தியாசமான அதிபராக இருப்பேன். நான் ஒரு பெண் பெண் பெண்....... இப்படித்தான் நேற்று 'ஃகிலாரி கிளிண்டன்' ' பேசிக்கொண்டு இருந்தார். குடும்பபெயரால் வரும் தீமைகள் வேண்டாம் என்ற தொனியில் பேசிவிட்டு, பெண் என்பதால் சலுகை கேட்பதுபோல பேசுவது என்பது இரட்டை வேடம்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சி தேர்தலை ஒட்டி நடந்த விவாதத் களத்தில் ஆரம்பக் கேள்வியே "வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் எதையும் மாற்றிப் பேசுவீர்களா?" என்று 'ஆண்டர்சன் கூப்பர்' எடுத்த எடுப்பிலேயே கிளின்டணைக் கேட்டார். ஆம் சமீப காலங்களில் அவரின் நிலைப்பாடுகள் பல்டியடித்துகொண்டு உள்ளது. விவாதத்தில் எதையாவது உருப்படியாகப் பேசினாரா என்றால் இல்லை. முன்னாள் First lady அதன்பிறகு ஒபாமவுடன் பிரைமரியில் மோதியது, அதே ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவுத்துறையை நிர்வாகம் செய்தது போன்ற செயல்களால், மக்களுக்கு அவரது பெயர் நன்கு அறிமுகமாயுள்ளது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார். வெற்றி பெற்றால் முதல் பெண் அதிபர் என்று வரலாற்று புத்தகத்தில் இடம் பெறலாம் கிளிண்டன். திட்டங்கள், தொலை நோக்குப்பார்வை (Policy based political agenda ) என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வால் ஃச்ட்ரீட் மற்றும் பெரிய வங்கிகள் விசயத்தில் அவரின் நிலைப்படு என்ன என்பது அவருக்கே தெரியாதுபோல். பூசி மெழுகினார்.
***
இந்த இருவர் தவிர விவாத களத்தில் இருந்தவர்கள் "மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley ) "சிம் வெப்" (Jim Webb ) மற்றும் "லிங்கன் ச்சஃவே" ( Lincoln Chafee)
***
மார்ட்டின் ஒ மாலி" (Martin O’Malley )
மார்ட்டின் 2007 இல் இருந்து 2015 வரை மெரிலேண்ட் (Maryland) கவர்னராக இருந்தவர். 'ஃகிலாரி கிளிண்டன்' ஒபாமைவை எதிர்த்து போட்டியிட்டபோது (2008) அவரை ஆதரித்தவரும்கூட. ஆனால், இப்போது கிளிண்டனின் நிலைப்பாடுகளில் நம்பிக்கையில்லை என்று அவருடன் போட்டியாளராக இருக்கிறார். மெரிலேண்ட் கவர்னராக இவர் செய்த நல்ல விசயங்களைச் சொன்னார். வால் ஃச்ட்ரீட் , வங்கி போன்ற பிரச்சனைகளில் இவர் கிளிண்டனை கடுமையாக எதிர்த்தார்.முடிவுரையின்போது 'ரிபப்ளிகன் கட்சியைபோல் அல்ல டெமாக்ரடிக் கட்சி 'என்று அழுத்தமாக கோடிட்டுக்காட்டினார்.
ஜிம் வெப் (Jim Webb).
முன்னாள் செனட்டர் இவர் வெர்சினியா மாநிலத்தில் இருந்து செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல நல்ல சட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்தியதாகச் சொன்னார். பெர்னியுடன் சேர்ந்தும் சிலவற்றைச் செய்துள்ளார்போல தெரிகிறது. 'சிஎன்என்' விவாதத்தில் இவருக்கு நேரம் கொடுக்கப்படவில்லை என்று 'ஆண்டர்சன் கூப்பரோடு' மல்லுக்கட்டிக் கொண்டு இருந்தார். ஆண்டர்சனோ "நீங்கள் அனைத்திற்கும் ஒத்துகொண்டே விவாதத்திற்கு வந்தீர்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். மேடையில் யார் நடுவில் இருப்பது போன்றவை வேட்பாளர்களின் செல்வாக்கை வைத்து தீர்மானிக்கப்படும். வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் நேரம் கூட அப்படித்தானா?
லிங்கன் ச்சஃவே ( Lincoln Chafee )
முன்னாள் ரோஃட் அய்லேண்ட் (Rhode Island) கவர்னரான இவர் மிகவும் பரிதாபமாகவே இருந்தார். அவருக்கே அவர் வேட்பாளராக இருப்பது சந்தேகமாக உளளது போல. "வங்கிகள் சார்ந்த சட்டம் (Glass-Steagall provisions) சார்பான ஓட்டெடுப்பில் வங்கிகளை மேலும் பெரிதாக்கும் ஒன்றிற்கு ஏன் சாதகமாக ஓட்டுப்போட்டீர்கள்?" என்ற கேள்விக்கு, "அது வந்து இங்க பாரு தம்பி நான், அப்பத்தான் மொத தபாவா செனட்டுக்கு வந்தேன். எல்லாரும் கூட்டமா ஓட்டுப்போடும்போது நானும் எதுக்கோ போட்டேன்" என்ற ரீதியில் சொன்னபதில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள அவரை வறுத்து எடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
********
ஒவ்வொரு விவாதத்தின் முடிவிலும் கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் 'இவர்தான் இந்த விவாத வின்னார்' என்று சம்பிரதாயமாக சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் போல. மில்லியனர்கள், பெரிய வங்கிகளுடன் ,கார்ப்பரேட் ஊடகங்களையும் எதிர்க்கிறேன் என்று சிஎன்என் அமைத்துக்கொடுத்த மேடையிலேயே விளாசிய சான்டர்ஃச் நிச்சயம் இவர்களுக்கு டார்லிங்காக இருக்க மாட்டார். நினைத்தபடி கிளிண்டனே விவாத வெற்றியாளர் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி என்ன சொன்னார் கிளிண்டன்? என்று இதுவரை எனக்குப் புரியவில்லை.
முதல்முறையாக பெர்னி சான்டர்ஃசின் பேச்சைக் கேட்ட என் மகன் , அரைமணி நேரத்தில் அவரின் தொண்டராகிவிட்டான். "நான் ஒரு மில்லியனர் கிடையாது. என் தேர்தல் செலவிற்கு வரும் பணம் அனைத்தும் மக்களிடம் இருந்து ஐந்தும் பத்துமாக வரும் நன்கொடையே. நீங்களும் உதவுங்கள்" என்று பெர்னி சொன்னவுடன், ஒரு போட்டியில் அவன் வென்ற $100 யில் இருந்து , $50 டாலரை இவருக்கு இப்பவே அனுப்புங்கள் என்று அடம் பிடித்தான். இல்லாவிட்டால் " FEEL THE BERN" என்று இருக்கும் அவரின் பிரச்சார டிசர்ட் ஆவது வாங்கி அவருக்கு உதவுங்கள் என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். இடையிடையே விவாதம் சார்ந்த சிஎன்என் இணைய வாக்கெடுப்பிலும் கலந்துகொண்டு பெர்னிக்கு வாக்கைச் செலுத்தினான். காலையில் எழுந்து அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நிற்கிறான்.
இன்னும் அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தால் பெர்னி அதிக இளைஞர்களைக் கவர்வார் என்பது உறுதி.