Friday, October 09, 2015

வண்ணங்களில்தான் எண்ணம் - ஒடிலி டொனால்ட் ஒடிட்டா

ள்ளூரில் இருக்கும் டுயூக் (Duke) பல்கலைக்கழகம் ஒரு தனியார் பல்கலைக்கழகம். இது பலசிறப்புகளைக் கொண்டது. அமெரிக்காவில் மருத்துவத்துறையில் முதல் பத்து முக்கிய கல்லூரிகள் என்று எடுத்தால் இது அந்த பட்டியலில் வந்துவிடும். அதுபோல வணிக மேலாண்மைப் படிப்புகளிலும். ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) டிம் குக்  (Tim Cook)  இங்கு வ‌ணிக மேலாண்மைப் மேற்படிப்பு படித்தவர். இந்த பல்கலைக்கழகம் குறித்தும் அது தோன்றிய வரலாறும் இணையத்தில் படிக்கக்கிடைக்கிறது.

Duke University: A Brief Narrative History
http://library.duke.edu/rubenstein/uarchives/history/articles/narrative-history

நான் பேசப்போவது இந்தப் பல்கலையில் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கலைக் காட்சியகம் குறித்தானது. மருத்துவம், மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளில் சிறந்து விளங்கும் இந்த பல்கலைக்கழகம்,  கலைத்துறையிலும் சிற‌ந்து இருக்க வேண்டும் என்று, 10 வருடங்களுக்கு (2005) முன் புதிய பெயருடன் புதுப்பிக்கப்பட்டது. 

Nasher Museum  Of Art At Duke University
http://nasher.duke.edu/about/

ப்போது அது 10 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிற‌து. இதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,  "ஒடிலி டொனால்ட் ஒடிட்டா" (Odili Donald Odita) என்ற ஓவியர் வரைந்த சுவரோவியம் ( Mural ) முக்கியமானது.  "ஒடிலி ஒடிட்டா" அமெரிக்கர். ஆப்ரிக்க கறுப்பினத்தவர்.  இவர் பாணி ஓவியம் ஒருவித சீரான வடிவங்கள் கொண்டது. "நேர்த்தியில் வண்ணம்" என்று சொல்லலாம்.

http://www.odilidonaldodita.com/  
“Color in itself has the possibility of mirroring the complexity of the world as much as it has the potential for being distinct.” -Odili Donald Odita

டுயூக் பல்கலை அமைந்துள்ள இடம் "டுர்ஃகாம்"  (Durham) ஆகும். இது 45% வீத கறுப்பின மக்கள்தொகை கொண்ட ஊர்.  இந்த ஊரைப்பற்றிய ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஒடிட்டா வரைந்த ஓவியமே எனக்கு அவரைப்பற்றிய அறிமுகம். இவரின் சிறப்பு இவர் தேர்ந்தெடுக்கும் வண்ணங்களில் உள்ளது. 



2007 ல் இவர் வரைந்த ஃபுளோ (FLOW) என்னும் சுவரோவியம் அசத்தியடிக்கும் ஒன்று. 
FLOW @  Kaplan Hall, the lobby of the Lois & Richard Rosenthal Center for Contemporary Art
http://www.odilidonaldodita.com/exhibitions/flow/index.html