Wednesday, October 07, 2015

ஃபெர்னி ஃசான்டர்ஃச் - Bernie Sanders For USA President 2016

மீப காலமாக என்னைக் கவர்ந்தவராக இருப்பவர் , அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஃபெர்னி ஃசான்டர்ஃச் (Bernie Sanders ) அவர்கள். எனது அமெரிக்க அரசியல் அறிவு (அறிந்துள்ளது) என்பது கடுகளவுகூட இருக்காது. ஏதாவது ஒரு இடத்தில் விளம்பரம்/செய்தி என்று ஒருவர் வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றினால், அவர் குறித்து அதிகம் தேடி அதன் பின்னர் அறிந்துகொள்வேன். அப்படியான தேடலில் தெரிந்துகொண்ட நபர்தான் ஃபெர்னி ஃசான்டர்ஃச்.

2016 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் , டெமாக்ரடிக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் (Primary Election ) களத்தில் உள்ளார். Primary- ஒரு கட்சி அதற்கான சனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.

ச்சரயப்படுத்துகிறார்   இவர்.  இவர் ஏற்கனவே சொந்த ஊரில் மேயராக இருந்தவர். இப்போது அமெரிக்க செனட்டராக இருப்பவர். (United States Senator from Vermont). இவரின் வயது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. என்னளவில் அதிக வயது என்பது தடை அல்ல. ஒருவேளை இந்தியா போன்ற பரம்பரை அரசியலில் அதை ஒரு குறையாகப் பார்க்கலாம். இவர் மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று இவரின் பேச்சு செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிற‌து.

வர் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுகிறார். அதற்கான தீர்வாக தனது தரப்பு விளக்கம், என்ன செய்யலாம் என்றும் சொல்கிறார். தனக்கு போட்டியாக இருந்தாலும் , மற‌ந்தும் மற்றவர்களின் தனிச் செயல்பாடுகளை விமர்சிப்பது இல்லை. "பிரச்சனையில் மற்றவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள் அதைப்பற்றி பேசுகிறேன் தனிநபரைப் பற்றி அல்ல" என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

வ்வொரு முறை ஃகிலாரி கிளிண்டன் பற்றியும், அவரின் சமீபகால மின்னஞ்சல் பிரச்சனைகள் குறித்தும் இவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. இவர் அதற்காக சொல்லும் பதில், ஃகிலாரி கிளிண்டனையே இவருக்கு ஓட்டுப்போட வைத்துவிடும். அந்த அளவிற்கு தெளிவாக உள்ளார்.

பாமாவின் சமீபத்திய ஈரான் ஒப்பந்ததை ஆதரிக்கிறார். அடுத்த நாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு போர் ஒரு தீர்வு அல்ல என்பதிலும்,  பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதிலும் தெளிவாக உள்ளார். வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சனைகள் அனைத்தும் மதம் சார்ந்த ஒன்று என்றும் ,அதில் அமெரிக்கா முன்னிற்காமல், செளதி போன்ற மதக்காப்பாளர்களை பொறுப்பேற்க வைக்கவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்கச் சரி.

ரு காலத்தில் இலவசமாக இருந்த கல்லூரிப் படிப்புகள் இப்படி விலையேற்றம் அடைந்து இருப்பதற்கு அவர் சொல்லும் தீர்வு சரியானதுதான். "மாணவர்கள் போராடவேண்டும் நான் அவர்களோடி இணைந்தே வெற்றி காண்பேன்" என்கிறார். சோசியலிஃச்ட் என்றால் கெட்டவார்த்தை போல பார்க்கும் மக்களிடம், அதைப்பற்றி பேசி விளக்கிமுய‌ற்சிக்காமல், டென்மார்க் போன்ற அய்ரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டி "அதுபோல இருப்பதுதான் டெமாக்ரட்டிக் சோசியலிஃச்ட்" என்று எளிதாக விளக்குகிறார்.

மெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எனப்படும் (இந்திய பிராவிடெண்ட் பண்டு போல but not same) வைப்புநிதியை ஊற்றி மூடவேண்டும் என்று சொல்லும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்கள் போல் இல்லாமல், அதை விரிவுபடுத்தி , ஓய்வுபெறும் வயதைக் குறைத்து, மக்களுக்கு பயன்கொடுப்பேன் என்கிறார்.

வெர்சினியா சுரங்கத்தொழிர்கள்  ஃகிலாரி கிளிண்டன் ஆதவாளர்களாக இருந்தவர்கள். ஒபாமாவிற்கும் , ஃகிலாரி கிளிண்டன் கிளிண்டனுக்கும் நடந்த பழைய பிரைமரி போட்டிகளில்கூட இவர்கள் அதிக அளவு வாக்குகளில் ஃகிலாரி கிளிண்டனை ஆதரித்தவர்கள் இவர்கள் . இப்போது  ஃபெர்னி ஃசான்டர்ஃச் பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்கள்.



Bernie Sanders Speaks With Katie Couric - Full Interview
https://www.youtube.com/watch?v=XpgJYNaIeqo

Bernie Sanders For President
https://www.youtube.com/channel/UCW4EM_U8f6sXf1IFsTU_DRQ

https://berniesanders.com/