(https://moldover407.wikispaces.com/file/view/amanda.jpg/501008006/amanda.jpg)
சுண்டைக்காய் வெத்து வேட்டு பொறியியல் பட்டம் வாங்கி வைத்துக்கொண்டு பொட்டி தட்டிக்கொண்டு , அண்ணன் "வடிவேல்" முதல் அக்கா "இராதிகா அப்தே" வரை சவுண்டுவிட்டுக்கொண்டு இருப்போம்.
உள்ளூர் நடிகைகளில் எனக்கு ரோகிணி மற்றும் ரேவதி மேல் அதிக மரியாதை உண்டு. அவர்களின் சோசியல் பார்வைகள்/செயல்பாட்டுக்களுக்காக. அது போல வடக்கே எனக்குப் பிடித்த நடிகர் "நானா படேகர்" (Nana Patekar) நடிகைகளில் "நந்திதா தாஃச்" (Nanditha Das) . சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்.
90 களின் மத்தியில் அம்பத்தூரில் 800 ரூவாய்க்கு இஞ்சினியர் என்ற பெயரில் வெல்டரோடு வெல்டராகவும் ஃபிட்டரோடு ஃபிட்டராகவும் இருந்த காலம் முதல் இன்றுவரை அதுவே ( Interpersonal skills) உதவுகிறது. அம்பேரிக்கர்கள் இதில் சிறப்பாக உள்ளார்கள் ஒப்பீட்டளவில். உதாரணத்திற்கு பிரதமர் மோடியையும் அதிபர் ஒபாமாவையும் எடுத்துக்கொள்ளலாம்.
நம் இளைய தலைமுறைக்கு ஏட்டுக்கல்விதாண்டி Interpersonal skills அவசியம். இன்றைய நாளில் Interpersonal skills என்பது ஒருவகை சோசியல்மீடியா லைக், ஃசேர், கமெண்ட் என்ற அளவில் நீர்த்துப்போகிறதோ என்னவோ என்ற பயம் உள்ளது எனக்கு. மனிதன் நேருக்கு நேர் உட்கர்ந்து பேசும் சந்தர்ப்பங்கள் அருகிவருகிறது.
***
சுசாமி
“He is the Swamy of America,” the 76-year-old Indian lawmaker, who formerly lectured at Harvard University, said of Donald Trump in an interview at Bloomberg’s New Delhi office. “I came much earlier than him.”
https://www.thestar.com/news/world/2016/05/25/just-dont-call-subramanian-swamy-the-trump-of-india.html
கல்லூரிக் காலங்களில் என் அப்பா சுசா வைக் காட்டி (செய்திகள் வாயிலாக) இவர் நல்லா படித்தவர். பொருளாதார நிபுணர். அம்பேரீக்காவரை தெரிந்த திறமைசாலி என்று சொல்லிக்கொண்டு இருப்பார். சின்ன வயதில் நாம் டயப்பருடன் அல்லது டவுசரை நனைத்துக்கொண்டு இருந்திருப்போம். அதற்காக இன்றும் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ என்பது மாதிரி சுசா வகையறாக்கள் பலரின் புத்தியை ஆண்டு கொண்டு இருந்தார்கள். இப்போதுள்ள இணைய/சோசியல் செய்திகளுக்கும் மத்தியில், சுசா அம்பேரிக்க அரசியல் பற்றிச் பேசிக் கொண்டு இருப்பதும் அதையும் நம்ப மக்கள் உள்ளார்கள் என்பதும் ஆச்சர்யமான செய்தி எனக்கு.
இணையம் இருந்தாலும், நாமாக தேடிப்போய் படிக்காவிடில் செய்திகளின் மறுபார்வை தெரிய வாய்ப்பே இல்லை. எல்லாம் என்றும் இருக்கிறது விண்ணில் மாறிக்கொண்டே . நம்மிடம் தொலை நோக்கி இல்லாததே அவைகளின் இருப்பை நாம் அறியாமல் போனதற்கு காரணம்.
பூனைகள் கண்களைத் திறந்தாலும் , எல்லா வண்ணங்களும் தெரியாது. அதுபோல சோசியல் மீடியாவில் குப்பை கொட்டுவதாலேயே அனைத்து பரிணாமங்களும் அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்ல. அது எனக்கும் தான்.
.