லாக்கர் ரூமில் அம்மணம் என்பது சகசம். ஆண்கள் லாக்கர் ரூமில் பல பெருசுகள் தொந்தியும் தொப்பையுமாக மணி மணி என்று நடந்துகொன்டு இருப்பார்கள்.
இருபாலருக்கான இடங்களிலும் நிர்வாணம் ஒரு பொருட்டே அல்ல.
நிர்வாணம் இருந்தாலும் அது ஏதோ கட்டற்ற காட்டுச் சுதந்திரமும் அல்ல. பாதுகாக்கப்பட்ட இடமே. "லாக்கர் ரூம்" என்பது ஒரு குடும்ப சூழல் கொண்டதுதான். அங்கே ஆட்கள் அம்மணமாக உள்ளார்கள் என்பதற்காக எல்லாரும் எல்லாமும் பேசுவது இல்லை. நம்மூர் படித்துறை போல என்று கொள்ளலாம்.
ஆண்களுக்கான லாக்கர் ரூமில் அம்மாக்கள் கதவு தாண்டி வந்து, சுவர் மறைப்பில் இருந்து ,அவர்களின் குழந்தைகளின் பெயரைச் சொல்லி கூப்பிடுவார்கள். அதுபோல பெண்களுக்கான லாக்கர் ரூமிலும் அப்பாக்கள் கதவுதாண்டி சுவர் மறைவில் இருந்து தங்கள் குழந்தைகளின் பெயர் சொல்லி அழைப்பார்கள். உள்ளே போய் வெட்டியாக நேரம் கடத்தும் குழந்தைகளை சத்தம் போட்டு அழைப்பார்கள்.
***
ட்ரம்பின் 2005 வீடியோ https://www.youtube.com/watch?v=IY8FwWwIVyQ வில் , அவர் ஒரு செலிபிரட்டியாக/பணம் படைத்தவராக இருப்பதால் பெண்ணின் யோனியைப் பிடித்துகூட இழுக்க முடியும் என்று சொல்லியுள்ளார். சொன்னதை அவர் மறுக்கவே இல்லை. அப்படியான பேச்சுகள் "லாக்கர் ரூம்" ( அமெரிக்க பாத்ரூம்/குளியலறை/ஓய்வறை/உடைமாற்றுமிடம்) பேச்சு என்று புறந்தள்ளிவிட்டார்.
ஒருவேளை அப்படியே டர்ட்டி விசயங்கள் பேசப்பட்டாலும், ட்ரம்ப் பேசியது லாக்கர் ரூமில் அல்ல . அவரின் தொழில் சம்பந்தப்பட்ட இடத்தில்.
***
"எவாஞ்சலிஃச்ட்" (evangelist) என்று ஒரு பிரிவு உள்ளது. இதுதான் எவாஞ்சலிஃச்ட் கொள்கை என்று சொல்லிவிடமுடியாது. கன்சர்வேட்டிவ் & மதம் என்று கலந்த கலவை இது. இதில் கறுப்பின எவாஞ்சலிஃச்ட் "டெமாக்ரக்டிக்காக" இருக்கவும் வெள்ளை இன எவாஞ்சலிஃச்ட் "ரிபப்ளிகனாக" இருக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.
அப்படியான எவாஞ்சலிஃச்ட்கள் , பெண்கள் குறித்து கேவலாமகப் பேசிய ட்ரம்ப்பை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது.......," கிறித்துவம் மன்னிக்கச் சொல்கிறது. யார்தான் இப்படிச் செய்யலை. மைக் இருப்பது தெரிந்திருந்தால் இப்படி பேசியிருக்க மாட்டார் ட்ரம்ப்"........ என்று சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அதே மக்கள்தான் எக்காரணம் கொண்டும் ,கிளிண்டனை எதற்கும் மன்னிக்கத் தயாராக இல்லை. ஏன் என்பது, பாவ மன்னிப்பு கொள்கை வகுத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை உள்ளது.
சில பிரைவேட் பேச்சுகள் , பப்ளிக்காகும் என்று தெரிந்தால் , அனைவரும் சுதாரித்துக்கொள்வார்கள். இங்கு G+..சோசியல் மீடியாவில் பிரைவேட்டாக பேசும்போது , பாலியல் விசயங்கள் கரடுமுரடாக இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். அந்த பகிர்வு வட்டங்களில் பெண்களும் உள்ளார்கள். அவர்கள் அதை கடந்து போய்விடுகிறார்கள். அல்லது சிரித்து வைக்கிறார்கள். (டமில் சம்முவம் அந்த அளவுதான் அவர்களுக்கு இடம் கொடுக்கிறது) யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சமூகத்தில் பாலினப் பேச்சுகள் ஒரு அங்கம். ஆனால் எங்கு எப்படி என்பதில்தான் சூட்சும/நாகரீகம் உள்ளது.
***
கிணற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுகவும் தயாராகிவிட்ட எவாஞ்சலிஃச்ட் பிரிவு, இப்போது வெளிவந்துள்ள ஆடியோவிற்கு என்ன சமாதானம் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
இதில் ட்ரம்ப் மிகத் தெளிவாக https://youtu.be/xzqCN4wGhJ0?t=109 வானொலியில் ஒருவருக்கு பேட்டியாகவே கொடுக்கிறார். அதன் அடக்கம் இதுதான்.
"நான் அழகிப்போட்டி நடத்தும் நிறுவனத்தின் முதலாளி. என்னால் எந்த இடத்திற்கும் போக முடியும். பெண்கள் அம்மணமாக இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளேன். அவர்களைப் பார்த்துள்ளேன். இப்படி நான் செய்தாலும் எனக்கு ஒரு பயமும் இல்லை ( I can get away with this )" என்று சொல்கிறார்.
இதற்கு மேலும் இவரின் நடத்தையைப் பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாக்களில் தயாரிப்பாளருக்கு (அவர் பணம் போடுவதால்) இப்படியான சலுகைகள் உண்டு என்பது போன்ற வதந்திகள் உண்டு. ஆனால் இதுவரை எந்த நடிகையும் வெளிப்படையாக குற்றம் சாட்டவும் இல்லை. அப்படிச் செய்தவர்கள் "நான் இப்படிச் செய்தேன்" என்று மிர்சி எப்எம்மில் சவடால் அடித்ததாகவும் தெரியவில்லை. ஆனால் ட்ரம்ப் தனியார் முதலாளியாக தான் Power abuse செய்வதை பெருமையாகச் சொல்கிறார்.
***
நம் அனைவருக்கும் (ஆண்கள்) சில அனுபவங்கள் இருக்கலாம். திருமண வீடுகள், குடும்ப விழாக்கள், உற்ற நண்பனின் திருமணம் என்று ஏதாவது ஒன்றின் போது, நீங்கள் மணப்பெண்ணின் அறைக்கு அல்லது அத்தை,பெரியம்மா, பிள்ளைகள் தங்கியிருக்கும் அறைக்கு ஏதேனும் பொருள் தேடி அல்லது அவர்களே உங்களை ஒரு உதவிக்காக அழைத்து இருக்கலாம். எனது நண்பனின் அக்கா திருமணத்தில், அவரின் அறையில் அவர் மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் சென்றுள்ளோம் கல்லூரிக் காலத்தில். "புடவை நல்லாருக்காட" என்று எங்களைப் கேட்டதுண்டு. தோடு காணோம் வளையல் காணோம் என்று சில பசங்களை அழைத்து தேடச் சொல்லும் சம்பவங்களும் நடக்கும்.
இது எல்லாம் அவர்கள் நம்மின் மேல் உள்ள நம்பிக்கை, குடும்பம் என்ற உணர்வில் செய்வது. அதை Privilege ஆக , கொடுக்கப்பட்ட மரியாதையாக எடுத்துக்கொள்ளாமல், வெளியில் வந்து தவறாகப் பேசினால், அங்கு மனிதப் பண்புகள் செத்துவிடுகிறது.
இப்போதும் அமெரிக்காவில் நாடகம், ஆட்டம் என்று மேடையில் நடத்தும் போது , ஆண் பெண் குழந்தைகள் என்று ஒரு இடத்தில் உடை மாற்றுவது , மேக்கப் போடுவது என்று எல்லைகளுக்குள் , ஒரு புரிதலில் , நம்பிக்கையில் நடக்கும் விசயங்கள். இவை எல்லாம் இப்படியான வல்லூறு மனச் சிந்தனைகளால் சிதைக்கப்படுமானால் , என்ன மயிறு வாழ்க்கை என்று ஆகிவிடும்.
***
ட்ரம்ப் அவரின் மகளையே ஒரு பாலியல் பொருளாகவே பல இடங்களில் பாவித்து பேசுகிறார். ஒரு அப்பாவாக, அவர் தெரிந்துதான் செய்கிறாரா அல்லது லூசுத்தனமாக உளறுகிறாரா என்று தெரியவில்லை.
எனது மகளாக இல்லை என்றால் நான் இவாங்காவை டேட்டிங் செய்வேன்
https://www.youtube.com/watch?v=DP7yf8-Lk80
ரேடியோவில் அடுத்தவர் தனது மகளை Piece of a** என்று சொல்ல இவர் கேட்டுக்கொண்டு மட்டும் இல்லாமல் , அப்படி அழைப்பதை ஊக்குவிக்கவும் செய்கிறார்.
https://www.youtube.com/watch?v=tT2byX53PlY
***
அனைவரும் தவறு செய்பவர்கள்தான். எதோ ஒரு வயதில் ஏதாவது செய்து நாம் மறந்து இருந்தாலும் இது போன்ற சமயங்களில் தோண்டி எடுக்கப்படும். அதைக் குற்றம் சொல்லாமல் இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளியாக , "நான் இப்படியானவன். நான் இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று ட்ரம்ப் சொல்லிவிடலாம். ஆனால் மாறாக அவர் பில் கிளிண்டனின் குப்பையைக் கிளறுகிறார்.இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
1.ஏன் வரி செலுத்தவில்லை என்றால். அது என் சமார்த்தியம் என்கிறார்.
2.ஏன் இப்படிப் பெசினீர்கள் என்றால் அது "லாக்கர் ரூம் டாக்" என்கிறார். (லாக்கர் ரூம் டர்ட்டி டாக்கை ஏன் வேலை இடத்தில் செய்கிறார் என்றால் பதில் இல்லை)
3.ஆனால் அவரே வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தெரிந்தே, அவரின் பெண்களின் மீதான "பாலியல் வன்முறைச் செயல்களை" அதிகாரம் உள்ளதால் செய்தேன் என்று ( Power abuse ) பெருமையாகச் சொல்கிறார்.
4.மகளைப் மற்றவர்கள் தவறாகப் பேச அனுமதிப்பதோடு, இவரே ஏதேனும் சொல்லி வைக்கிறார்.

.