இப்படியெல்லாம் வாழமுடியுமா? வாழ்கிறார்களா? என்றால், ஆம் வாழ்கிறார்கள். நமது நீரோட்டத்தில் இருந்து விலகிய, அதே நேரம் நாம் அன்றாடம் "பார்க்கும்" மனிதர்களே அவர்கள். நாம்தான் அவர்களை "கவனிப்பது" இல்லை. கரகாட்டம் ஆடிவிட்டு கூட்டம் கலைந்தவுடன, பவுடரைக் கலைந்து, ஒரு பையுடன் பேருந்துஏறிப் போகும் பெண்ணிற்கும் ஒரு வாழ்வு உள்ளது. ஏதோ ஒரு பொம்மையை சாலையின் ஓரம் விற்றுக்கொண்டு இருக்கும் ஒருவன், இரவில் எங்க்கு தங்குகிறான்? எங்கே குளிக்கிறான் அவனின் எதிர்காலத்திட்டம் என்ன? என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கையுள்ளது.
எங்கள் ஊர்ச் சந்தையில் பாம்பாட்டி, கிளி சோசியம், தெருவோர லேகிய விற்பனை, செய்பபவர்களைப் பார்த்துள்ளேன். பீீீமபுசுடி லேகியம் என்று ஊர் ஊராய் அலைபவர்களின் வாழ்க்கையை நினைத்து வியந்ததுண்டு.
சந்தையில் கூடாரம் அடித்து இரவு முழுக்க மிதிவண்டி ஓட்டும் வித்தைக்காரர், கயிற்றுமேல் வயிற்றுக்காக நடக்கும் அவரின் குழந்தை, ஓரமாக அமர்ந்து கொட்டடடிக்கும் அவரின் மனைவி.இவர்கள் எல்லாம் யார்? எங்கு தங்குகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி சிறுவயதில் வந்துபோகும்.
இன்றுவரை எனக்கு ஒரு ஆசையுண்டு. நரிக்குறவர்கள் , இரவில் குறிசொல்லவரும் குடுகுடுப்பை கம்பளத்து நாயக்கர்களுடன் தங்கி பயணிக்க வேண்டும் என்று. அவர்களின் வாழ்க்கை என்றுமே எனக்கு வியப்பைத் தருவது. சிறுவயதில் நரிக்குறவப்பெண் ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வருவாள். அம்மா கொடுக்கும் (போடும்) உணவை வாங்கிச் செல்வாள். அவளின் பாவாடையும், ரவிக்கையும், வானவில் கலைந்தது போல கிடக்கும் மாராப்பும் சேர்ந்து, அவளை உலகில் உள்ள அனைத்து வண்ணங்களையும் அழகுற கோர்த்த மாலைபோல காட்டும். அவளை வேடிக்கை பார்க்க வரும் என்னை, பிடித்துக்கொண்டு போய்விடுவதாக அவள் மிரட்டுவதும், எனது அம்மா, "இவனை நீயே கட்டிக்கோடி" என்று அவளைச் சீண்டுவதும் வாடிக்கை. ஆம் பேரழகிகள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
இரவில் குறிசொல்லி முடித்துவிட்டு, பகலில் வீட்டுமுன் வந்து நிற்பார் ஒருவர். ஆறடி உயரமும், நேர்கொண்ட பார்வையும், தாடியும், மீசையுமாக கருப்பு சிவப்பு வண்ணங்களில் கம்பளி போர்த்தி, கைலியுடன் வருவார். சமைத்த உணவை பிச்சையாக வாங்கமாட்டார். சமைக்காத காய், பருப்பு மட்டுமே பிச்சையாக வாங்குவார்.அல்லது பணமாக வாங்கிக்கொள்வார். அவர் எங்கள் ஊரில் இருந்த் புளியமரத்தோப்பில் கூடாரம் அடித்து தனியாக தங்கியிருந்தார். அந்த வயதில் எனக்கு அவரின் வாழ்க்கைமுறை வியப்பாகவே இருந்தது.
நாடோடி வாழ்க்கை என்பதும் மக்களைச் சார்ந்ததே. மக்களே இல்லாத இடத்தில் நாடோடியாக அலைவது பொருளற்றது. நாடோடி என்பது நாட்டைச்சுற்றுவம் மக்களைச் சுற்றுவதும்தான். எந்த இடத்திலும் நிலையற்ற ஒரு அருவிபோல வாழ்க்கை என்று வைத்துக்கொள்ளலாம்.
**
சிப்சி (Gypsy 2020 Tamil Film)
சன்னலின் திரைசீலை தொடங்கி, மரத்தில் கட்டப்பட்டு இருக்கும் கயிறுவரை வண்ணங்களை குழைத்து அழகாக விரவி இருக்கிறார்கள் படமெங்கும். சின்னச் சின்ன கவிதைகளாக வண்ணங்கள். கதையின் நாயகி வாழும் வீடு அப்படியொரு அழகு. தேர்ந்தெடுத்த வண்ணங்கள். படமுழுக்க வண்ணங்களில் கரைந்து போனேன்.
படத்தின் தொடக்கத்தில் இருந்து வண்ணங்கள் அழகாய் கோர்க்கப்பட்டுள்ளது. எனக்கு அதுவே அதிகம் பிடித்தது. அடுத்து இந்த கதை. ஒரு நாடோடியுன் வாழ்க்கைப் பின்னணியில் சமூக அரசியல் சொல்லப்படுகிறது. தனது கால அரசியலை, சமூகத்தை பேசாத, தன்னுள் வாங்கி வெளிப்படுத்தாத, மக்களின் வாழ்க்கையைச் சொல்லாதவை இலக்கியமே அல்ல. அது வெறும் பொழுதுபோக்கு கதைகள். இந்தப்படும் இலக்கியம். இதற்கென்று ஒரு இலக்கு உள்ளது. அது மக்களின் சமூகஅரசியலை, சமகால அரசியலை பேசுகிறது.
நாடோடி வாழ்க்கை அதற்கான அழகியலைக் கொண்டது. ஆம் அது அதற்கான துன்பங்களையும் கொண்டதே. ஆனால், எதை எங்கிருந்து பார்க்கிறோம் என்பதில் நமக்கான் விடைகள் உள்ளது. இந்தப்படும் எனது ஆசைகளையும் தொட்டுச்செல்வதால் பிடித்துள்ளது.
எனக்கு சில இடங்களில் குறைகளும் , அது குறித்த விமர்சனமும் உள்ளது. அது என் நிலைப்பாடுகள் மற்றும் கதை சொல்லலில் எனக்கான ஒரு நீரோட்டம் என்று என் விருப்பு வெறுப்புகள் சார்ந்தது.விமர்சனம் என்ற பெயரில் கதையைச் சொல்லமனம் வரவில்லை. அழகியல், காதல், அரசியல், சமூகச் சிந்தனை , சமகால அரசியலில் கவலை கொண்ட அனைவரும் பார்க்க வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய அழகியல் படம்.
அந்த பஞ்சவர்ணக் கிளி பறந்த பின்னாலும், ஐஞ்சு வண்ணமும் என் நெஞ்சில் இருக்கு.
***
இதற்கு முன் என்னை வண்ணங்களில் தோய்த்து எடுத்த படம் Gabbeh எனும் ஈரானியப்படம்
// பொறாமைப்படத்தக்க இயற்கைச் சூழலில், சிறிய ஓடையில் அமிழ்ந்து செல்லும் கார்பெட் (Rug) -ன் நீர்ப்பாதையில் படம் ஆரம்பிக்கிறது. அந்த நீரோடையையும், அதன் இயற்கைச் சூழலையும் காட்டிய வண்ணம் அருகில் உள்ள ஒரு குடிசையில் இருந்து வரும் இரண்டு முதியவர்களின் அறிமுகத்தோடு Gabbeh நமக்கும் அறிமுகமாகிறது. Gabbeh என்பதே Persian rug . இங்கே அதன் வழியாக வரும் கதையின் நாயகியின் பெயரும் Gabbeh.//
Gabbeh -வானவில்லின் வண்ணங்களை போர்த்தியவள் அல்லது பூக்களில் இருந்து பறிக்கப்பட்ட நிறங்களின் மீது தூங்குபவள்.
http://kalvetu.blogspot.com/2008/02/gabbeh.html
Thanks for sharing the blog.
ReplyDeleteInternational holiday packages
international tour packages
holiday packages in india
best travel agency
tours and travels in hyderabad
cheapest Kerala Tour Packages
Kerala Houseboat
Goa or Kerala
Kerala Tour Guide
Kerala in January
kerala beaches
Kerala In December
kerala Trip