Sunday, February 09, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம்-1:Iowa Caucus

தை எழுதும் நேரத்தில் இந்தியாவில் டெல்லிக்கான மாநில தேர்தல் நடந்து முடிந்துள்ளது. டெல்லி ஒரு மாநிலமா, இல்லை அரசின் நேரடி கண்காணிப்பில்வரும் பகுதியா (Union Territory) என்பது குழப்பமான ஒன்று. அது இரண்டுமல்லாமல் National Capital Territory of Delhi (NCT) என்பதுதான் சட்டத்தின்படியான விளக்கம். தேர்தலில் மொத்தமாக பதிவான வாக்குகள் என்பதைக்கூட சொல்லாமல், இந்தியத் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை, சனநாயக முறையையே கேலிக்கூத்தாக ஆக்கிக்கொண்டு இருக்கும் நேரம்.

இந்தியாவில் மாநில தன்னாட்சி என்பது இல்லை. அது மாநில தன்னாட்சி போன்றது. அவ்வளவே. அந்த நடைமுறைகள் அதன் குழப்பங்களை நன்கு அறிந்தவன் என்ற முறையில், எனக்கு அமெரிக்க அரசியல் & சனநாயக அமைப்பு ஒரு ஆச்சர்யமானது.

மாநிலத்திற்கு தனிக்கொடி, சட்டங்களை மாநிலங்களே இயற்றிக்கொள்ளும் மாநிலத்திற்கான உரிமை. அதற்கு மத்திய  அரசின் ஒப்புதல் சனாதிபதி கையெழுத்து போன்ற தேவைகளே இல்லாத சுதந்திரம். அமெரிக்காதான் மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை 100% சதவீதம் கடைபிடிக்கிறது.

அமெரிக்காவில், அமெரிக்க முழுமைக்குமான தேர்தல் ஆணையம் என்பது கிடையாது. தேர்தலை எப்படி நடத்துவது என்பது, முழுக்க முழுக்க மாநிலம் சார்ந்தது.

எளிமையான அடிப்படை இதுதான். "மத்திய அரசிற்கு, மாநிலம் சார்பாக  உறுப்பினர்களை (Federal govt Congressman and Senators )எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது, அந்தந்த மாநிலங்களின் உரிமை. குலுக்கல் சீட்டு போட்டுக்கூட தேர்ந்தெடுப்போம், எங்கள் பிரதிநிதியை. எங்கள் மாநிலத்தில் தேர்தல் தேர்தல் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்லத்தேவை இல்லை."

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் என்றாலும், மாநிலங்களின் கவர்னர்கள் தொடங்கி எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதற்கான தேர்தலை, அதை நடத்தும் முறையை, வாக்கு எண்ணும் முறையை அந்த மாநிலங்களே முடிவு செய்யும். இந்த அடிப்படையே அமெரிக்க சனநாயகத்தின் தூண் என்றுகூட சொல்லலாம்.

மெரிக்காவில் இப்போது, நடுவண் அரசுக்கான (Federal Govt) அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் நடந்துகொண்டுள்ளது. இப்போது இருக்கும் "அதிபர் ட்ரம்ப்" (Donald Trump) ரிபப்ளிகன் கட்சியைச் (Republican Party) சேர்ந்தவர். ஒருவர் இரண்டு சுற்றுகள் (Two Term) அதிபராக இருக்கலாம் என்பதால், இந்த முறை ரிபப்ளிகன் கட்சி சார்பாக,களம் காணும் வேட்பாளர் என்ற தகுதி,போட்டியில்லாமல் நடப்பு அதிபருக்கே அந்த கட்சி வழங்கிவிடுவது ஒரு மரபு. சில இடங்களில் போட்டி இருந்தாலும் அது உப்புசப்பில்லாமல் முடிந்துவிடுவது வாடிக்கை.

2020 அதிபர் இந்த தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் (Democratic Party) வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதை, அந்தக் கட்சி தேர்தல்களை நடத்தி முடிவு செய்யும். இப்போது அதற்கான உட்கட்சித் தேர்தல்கள் நடக்கிறது.

இங்கு உட்கட்சிதேர்தல் என்பது, வெளிப்படையாக, ஒரு பொதுத்தேர்தல் போலவே நடக்கும். ரிபப்ளிகன் கட்சியின் உள்கட்சி தேர்தலுக்கும் டெமாக்ரடிக் கட்சியின் உள்கட்சித் தேர்தலுக்கும் மிகச்சிறிய வேறுபாடுகளே உள்ளது.

மெரிக்க‌ முழுமைக்கும் நடக்கும் டெமாக்ரடிக் கட்சியின் உட்கட்சி தேர்தலாகவே இருந்தாலும், அந்தத் தேர்த்கலகள் அந்த மாநிலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதை அந்த அந்த மாநிலங்கள் முடிவு செய்யும். அதற்கான வழிமுறைகள் உள்ளது.

இப்படியான உட்கட்சித் தேர்தல்களில் இரண்டு வகை உள்ளது.
Caucus & Primary

2020 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தல் நடக்க ஆரம்பித்துவிட்டது. முதல் மாநிலமாக, அயோவா மாநில (Iowa) டெமாக்ரடிக் கட்சி, அதற்கான தேர்தலை நடத்தி முடிந்துவிட்டது. அந்த தேர்தல் Caucusing முறையில் நடந்த ஒன்று. அதை முன் வைத்து, Caucusing முறையிலான தேர்தலைப் பேசுவோம்.

தொடரும்...

No comments:

Post a Comment