Sunday, February 23, 2020

அமெரிக்க தேர்தல் பழகுவோம் 6: ஒரு கட்சியின் உட்கட்சி தேர்தலில் அடுத்த கட்சி வாக்களிக்கலாம்

ந்தப் பகுதியை எழுதிக்கொண்டிருக்கும் நாளில் பெர்னி சான்டர்ச் Nevada Caucus ல்  இமாலய வெற்றியைப் பெற்று டெமாக்ரடிக் கட்சியின் முன்னணி வேட்பாளராக தன்னை நிறுத்திக்கொண்டுள்ளார். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், இந்த நாளின் இது எனக்கு மகிழ்ச்சியான செய்தி. அமெரிக்க அரசியலில், நேரில் சென்று விசில் அடித்து ஆரவாரம் செய்து நான் ஆதரிக்கும் அரசியல்வாதி பெர்னி சான்டர்ச். 

தை எழுதும் இந்த நேரத்தில்தான் "அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்" என்று செய்திகள். மோடியும் ட்ரம்ப்பும் ஒரே மாதிரியான சித்தாங்கள் உடையவர்கள். அமெரிக்காவரும் எந்த இந்திய Prime Minister யும், அமெரிக்க அதிபர், அதிபர் அலுவலகம், தூதர் அலுவலகங்கள் தாண்டி யாரும் கண்டுகொள்வதே இல்லை. அமெரிக்காவில் இருக்கும் காங்கிரசு மற்றும் செனட் சபைகள்கூட கண்டுகொள்ளாது. இங்கிருக்கும் முன்னாள் இந்தியர்கள் FCI (Former Citizen of India ) மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களில் NRI (Non Resident Indian) சிலர் ஏதேனும் கூட்டங்களுக்கு வரவழைத்து பேசுவார்கள். வாசிங்டனில் ஒரு தெருவின் போக்குவரத்தைக்கூட மாற்ற மாட்டார்கள். ஒரு ஓரமாக ஒரு வண்டி போக வழிவிடுவார்கள் அவ்வளவே. வெள்ளைக்காரர்களை (மேற்குலகம்) அருகில் வைத்துக்கொள்வதோ அல்லது அவர்கள் எனக்கும் நண்பர்கள் என்பதோ இந்தியாவில் காலம்காலமாக இருக்கும் ஒரு அடிமை மனநிலை.
ங்கே இருக்கும் இசுகான் தொழில் நிறுவனங்களில் வெள்ளைக்காரன் சிலையைத் தொடலாம். ஆனால் இந்திய வம்சாவழி தாழ்த்தப்பட்ட மக்கள் தொடமுடியாது. 2016 அமெரிக்க அதிபருக்கான பொது தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்பின், பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த அவரின் இரசிகர்கள், கட்சிக்காரர்களைவிட அதிக கூட்டத்தை இந்தியாவில் கூட்ட மோடி & கம்பெனி முயற்சிக்கிறது ஏன்? இது இந்தியாவின் வலிமையைக் காட்டாது. உலக அரங்கில் இது ஒரு சர்க்கசாகவே பார்க்கப்படும்.
டுத்துக்காட்டாக, அதிபர் ட்ரம்ப் பிரான்சு நாட்டுக்குச் செல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்படியான சர்க்கசுகளை அந்த நாடும் , அந்த மக்களும் நடத்துவார்களா? இங்குதான் நாம் வேறுபடுகிறோம். உது ஒரு உளவிய‌ல் பிரச்சனை. சினிமா இரசிகர் மன்றம் தொடங்கி, கத புத்தகங்களின் இரசிகர் மன்றங்கள் தொட்டு அரசியல் தாண்டி, மக்களின் பொது மனநிலையும் இப்படியே உள்ளது. கல்கத்தா பகுதியில் வெள்ளைக்காரர்கள் படையெடுத்த காலத்தில், மக்கள் போரிடாமல் வேடிக்கை பார்த்தே நிலத்தை இழந்த கதைக்குச் சொந்தக்காரர்கள். அது தனிக்கதை.

நீங்கள் அதிமுக உறுப்பினர். ஆனால் நீங்கள் திமுக உட்கட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்றால் எப்படி இருக்கும்? ஆம் அப்படியான நடைமுறைகள் அமெரிக்காவில் உண்டு. ரிபப்ளிகன் கட்சி உறுப்பினர் ஒருவர் , டெமாக்ரடிக் உட்கட்சித் தேர்தலில் வாக்களிக்கலாம். இவை எல்லாம் அந்தந்த மாநிலங்களின் நடைமுறை சார்ந்தது. அமெரிக்கா முழுமைக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இல்லை. தேர்தலை நடத்துவது கண்காணிப்பது எல்லாம் மாநிலங்களின் அதிகாரம். அது அமெரிக்க அதிபரின் தேர்தலேயானாலும் அதை எப்படி நடத்துவது என்பதை ஒவ்வொரு மாநிலமும் அதன் வசதிக்கேற்ப தீர்மானிக்கலாம்.

மெரிக்காவில் இருக்கும் முக்கியமான கட்சிகளான டெமாக்ரடிக் மற்றும் ரிபப்ளிகன் என்ற இரண்டு கட்சிகளும் loosely coupled framework போன்றது. இதுதான் எங்களின் கொள்கை என்ற திட்டவட்டமான இலக்கோ நோக்கமோ இருக்காது. அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கனும் (Abraham Lincoln), இன்று இருக்கும் அதிபர் டொனால்டு ட்ரம்பும் (Donald Trump) அதே ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் , வரலாறு வெட்கப்படும். ஆம், நம்மூரில் இன்று எம்சியாரும் எடப்பாடியாரும் ஒரே அதிமுக கட்சி என்றால், எம்சியாருக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்குமோ அப்படித்தான்.

யாரும் எந்தக் கட்சியாகவும் அவர்களே அறிவித்துக்கொள்ளாலம் என்று பார்த்தோம்.
அமெரிக்க தேர்தல் பழகுவோம் 4: கட்சித் தலைமை உங்களை விலக்க முடியாது!
https://kalvetu.blogspot.com/2020/02/4.html

அதைவிட இன்னொரு விசயம் ஒரு உட்கட்சி தேர்தலில் அந்த கட்சி உறுப்பினர்கள் தவிர மற்றவர்களும் வாக்களிக்கலாம் என்ற விசயங்கள். இந்திய அரசியல் அமைப்பில் இருந்து இதைப் பார்க்கும் போது பேரதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இதுதான் அமெரிக்க உட்கட்சி தேர்தல்களில் சிக்கலும் , சிறப்பும் ஆகும். உட்கட்சி தேர்தலில் யார் ஓட்டுப்போடலாம் என்பதில் மூன்றுவிதமான முறைகள் உள்ளது. ஒரே கட்சியின் தேர்தல்கூட, மாநிலத்திற்கு மாநிலம் அது நடத்த‌ப்படும் முறைகள் வேறுபடும். எனவே இதை டெமாக்ரடிக் அல்லது ரிபப்ளிகன் என்றோ அல்லது ஏதோ ஒரு மாநிலத்திற்கான முறை என்றோ அணுகாமல் பொதுவான ஒரு முறையாகப் பார்ப்போம்.


உட்கட்சி தேர்தலில் Caucus & Primary என்ற இரண்டு முறைகள் உள்ளது. அவை இரண்டுக்குமான வேறுபாடுகளை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.
அமெரிக்க தேர்தல் பழகுவோம்-2:Presidential Election Primaries & Caucuses
https://kalvetu.blogspot.com/2020/02/2presidential-election-primaries.html

இந்த  Caucus & Primary என்ற இரண்டு முறைகளிலும்  உட்பிரிவாக 
  1. Open Caucus/Primary
  2. Closed Caucus/Primary
  3. Semi-Closed Caucus/Primary
Open
A registered voter may vote in any party regardless of his or her own party affiliation. 

Closed 
People may vote in a party only if they are registered members of that party prior to election day.

Semi-closed. 
Semi-closed systems, allow unaffiliated voters to participate as well.



டியாப்பச் சிக்கல் போன்றது இவை. நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள அதிக குழப்பமே மிஞ்சும். இந்த முறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஒரு மாநிலம் Open Caucus முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தும், அருகில் உள்ள இன்னொரு மாநிலம் Closed Caucus முறையில் நடத்தும். நீங்கள் எந்தக் கட்சியிலும் உறுப்பினர் இல்லாவிட்டாலும், அந்தக் கட்சியின் தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே , உறுப்பினராக  பதிவு செய்து Same-Day Registration  ஓட்டும் போடலாம்.