Thursday, February 13, 2020

மெல்லச் சொருகும் கத்தி 2: I-PAC நாம் கேட்க வேண்டிய கேள்விகள்

George Demetrios Papadopoulos
சூலை 2016 லேயே ஆரம்பித்துவிட்டது இந்த வேலைகள். ஆனால் இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. டொனால்டு ட்ரம்ப் அப்போது அவருக்கான தேர்தல் வேலைகளின் இருந்தார். அந்த தேர்தல் வேலைகளின்போது கிடைத்த தகவல்களின்படி அமரிக்காவின் மூன்று முக்கிய பிரிவுகள் FBI, Central Intelligence Agency (CIA),National Security Agency (NSA) களத்தில் இறங்கின. அவர்களின் இந்த இரகசிய புலனாய்வு திட்டத்திற்கு பெயர் "Crossfire Hurricane" என்பதாகும்.

George Papadopoulos என்பவர் ட்ரம்பின் தேர்தல் களத்தில் அவருக்கு வெளியுறவுதுறை சார்ந்த ஆலோசகராக இருந்தார். கவனிக்க, இப்போது ட்ரம்ப் அதிபர் அல்ல. அதிபருக்கான தேர்தலில் வேட்பாளர். ட்ரம்பின் 2016 presidential campaign க்கு வெளியுறவுதுறைக்கான ஆலோசகராக இருந்தவரே Papadopoulos.

மெரிக்காவை இன்றுவரை ஆட்டிப்படைக்கும், 2016 தேர்தலில் ரசியாவின் தொடர்பு என்ற ஒரு பெரிய வரலாற்று பிரச்சனைக்கு 1987 ல் Chicago (Illinois) வில் பிறந்த George Papadopoulos  காரணமாவார் என்பது யார் போட்ட முடிச்சு? வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. இன்று நீங்கள் எதிர்பாராமல் ஒரு காஃபிக்கடையில் சந்திக்கும் ஒருவர், உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடலாம். அதனோடு சேர்ந்து ஒரு நாட்டின் தலையெழுத்தையும் மாற்றிவிடலாம். "பேரறிவாளன் வாங்கிய பேட்டரி" அவரையும் , இந்தியாவையும் உலுக்கும் ஒன்றாக ஆனது நாம் அறிந்ததே.

டிப்பை முடித்துவிட்டு George Papadopoulos இலண்டனில் London Centre of International Law Practice (LCILP) என்ற இடத்தில் 2016 ல் வேலைபார்க்கிறார். அங்கு வேலை பார்க்கும்போது, இவர் அவரது நிறுவனம் சார்பாக Link Campus University (Rome) க்கு சென்ற ஒரு குழுவில் உறுப்பினர். அங்குதான் வரலாற்றின் ஒரு முக்கிய முடிச்சு விழுகிறது. அங்கு வைத்து இவர், Joseph Mifsud என்ற ஒருவரை சந்திக்கிறார் எதிர்பாரதவிதமாக. இந்த Joseph Mifsud, அப்போது  University of Stirling (Scotland) ல் ஆசிரியராக உள்ளார். இந்த சந்திப்பு March 12, 2016 ல் நடக்கிறது. March 21, 2016 ல் வேட்பாளர் ட்ரம்ப் Papadopoulos ஐ தனது தேர்தல் பணிக்குழுவின் வெளியுறவுதுறை (campaign's foreign policy advisers) ஆலோசகராக அறிவிக்கிறார். அப்போது ட்ரம்ப் இவரைப் பற்றி சொன்னது "He's an oil and energy consultant, excellent guy".

March 24 ல் Papadopoulos மறுபடியும் Mifsud ஐ இலண்டனில் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் Mifsud உடன், ஒரு ரசியப் பெண்மணியும் வந்து சேருகிறார். அவரது பெயர் Olga Polonskaya. அவரை, ரசிய அதிபர் புடினின் சொந்தக்காரர் என்று அறிமுகப்படுத்துகிறார். 

March 31, 2016 ல் ட்ரம்பின் ஓட்டலில் ஒரு கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் Papadopoulos, தான் ட்ரம்பிற்கும் அதிபர் புடின் க்கும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியும் என்கிறார்.

இதுதான் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும், 2016 தேர்தலில் ரசிய நாட்டு தலையீடு தொடர்பான வரலாற்றுச் சிக்கல்.

**********************

பிரசாந்த் கிசோர் பற்றிய தகவல்கள் குறைவாகவே இணையத்தில் கிடைக்கின்றது. இத்தனைக்கும் இவர் பொது அரசியலுக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. ஒருவித ரகசிய அமைப்பு போலவே. இதுவரை இவர் என்ன மாதிரியான வேலைகளை கட்சிக்குச் செய்கிறார் என்பதை இவரால் பலனடைந்த அல்லது இவரை வாடகைக்கு அமர்த்திய கட்சிகள் சொல்லவே இல்லை.

வர் பல வருடங்கள் ஒருங்கிணைந்த நாடுகள் அமைப்பில் (United Nations) வேலை செய்துள்ளார். அங்கே அவரின் தொடர்புகள், அவர் செய்த வேலையின் தொடர்பாக சென்ற ஊர்கள் என்று ஏதும் பொதுவெளியில் இல்லை. இணையத்தில் கிடைப்பது எல்லாம், இவர் 2011 ல் மோடியை இரண்டாவது முறையாக குசராத் தேர்தலில் வெற்றி பெறச் செய் சாணக்கிய மகான் என்றுதான் அறிமுகமாகிறார். அதற்கடுத்து 2014 நாடளுமன்ற தேர்தலில் அதே மோடிக்கு வேலை செய்கிறார். என்ன வேலை என்று பார்த்தால் Formulating an innovative marketing & advertising campaign 
social media programmes என்றே வருகிறது. 

சோசியல் மீடியாவில் என்ன தகவல்கள் யாரை நோக்கி எந்த targeted audience க்கு பரப்பப்பட்டது என்பதை, இந்திய அரசு என்றுமே விசாரணைக்கு கொண்டுவராது.

இதற்கிடையில் இவர் 2013 ல் Citizens for Accountable Governance (CAG) என்ற அமைப்பை தொடங்குகிறார். 2015 ல் அதை I-PAC Indian Political Action Committee ஆக மாற்றுகிறார். PAC என்பது அமெரிக்காவில் செயல்படும் லாபியிங் அமைப்புகள் வைத்துக்கொள்ளும் அதே பெயர். 
2015 ல் சனதா தள Janata Dal (United) கட்சிக்காக நிதிச் குமாருடன் (Nitish Kumar) சேருகிறார். அவரின் வெற்றியிலும் இவருக்கு பங்கு வருகிறது.

2017 ல் காங்கிரசு கட்சிக்காக பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் உழைக்கிறார். (Amarinder Singh's campaign)
அந்த வெற்றியிலும் இவருக்கு பங்கு வருகிறது. அதே சமயம் உத்திரபிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு இவர் வேலை செய்தாலும் காங்கிரசு தோற்றுவிடுகிறது.

2019 ல் ஆந்திர பிரதேச சட்டசபைத் தேர்தலுக்கு செகன்மோகன் (YSRCP) உடன் சேருகிறார். அந்த வெற்றியிலும் பங்காளியாகிறார்.

2020 ல் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி பார்ட்டிக்கு போகிறார். அந்த வெற்றியிலும் பங்காளியாகிறார்.

2021 ல் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு , திமுக இவரை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

ந்த நேரத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்.

  1. யார் இந்த‌ இந்த பிரசாந்த் கிசோர்?
  2. இவர் கட்சிகளுக்கு செய்யும் வேலைதான் என்ன?
  3. அது ஏன் வெளியில் பேசப்படுவதே இல்லை?
  4. இந்தியாவிலுள்ள அனைத்து கட்சிகளிலும் வேலை பார்க்கும் இவர், என்ன தகவல்களை சேர்க்கிறார்?
  5. தகவல்கள் எங்கே சேமிக்கப்படுகிறது?

தற்கு விடைகள் கிடைக்கப்போவதே இல்லை. ஏன் என்றால் இந்தியா அமெரிக்கா போல அதிபரின் மேலேயே சந்தேகம் கொண்டு Counterintelligence Program விசாரணைகளை நடத்தும் ஒரு நாடு இல்லை.

ந்தியாவிலேயே தனித்துவமாக, சமூகச் சமநீதிக்காக இடைவிடாது போராடும் ஒரே அரசியல் இயக்கம் திமுக தான். வடக்கே மம்தாவாகட்டும் , கேரள கம்யூனிசமாகட்டும் அவர்களின் பார்வைகள் வேறு. எடுத்துக்காட்டாக‌ 10 சதவீத இட ஒதுக்கீடு என்று வரும்போது அவர்களின் கொள்கைகள் பல்லிளித்துவிடும்.


தகவல்கள்:
https://en.wikipedia.org/wiki/George_Papadopoulos
https://en.wikipedia.org/wiki/Prashant_Kishor

No comments:

Post a Comment