அமெரிக்காவில் , எனது அனுபவத்தில் , நான் பார்த்த "இலவச கடலை" கொடுக்கும் கடைகள்.
Five Guys என்ற "பர்கர்" கடையும் Guys' Place என்ற "பார்பர்" கடை & Texas Road House என்ற உணவகம். இங்கு , வறுத்த கடலை இலவசம். இத்தனைக்கும் கடலைக்கும் இவர்கள் தொழிலுக்கும் தொடர்பு இல்லை.
Five Guys என்ற "பர்கர்" கடையும் Guys' Place என்ற "பார்பர்" கடை & Texas Road House என்ற உணவகம். இங்கு , வறுத்த கடலை இலவசம். இத்தனைக்கும் கடலைக்கும் இவர்கள் தொழிலுக்கும் தொடர்பு இல்லை.
காத்திருக்கும் நேரத்தில் , கொறிப்பதற்காக வறுத்த கடலை வைத்திருப்பார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் திங்கலாம். கடலைப் பிரியனான எனக்கு ,இது ஒரு போனசு. இதற்காகவே நான் இந்த கடைகளுக்குப் போவேன்.
Texas Road House என்ற உணவகத்தில் கடலையை சாப்பிட்டு அதன் தோலை நீங்கள் சுதந்திரமாக தரையில் எறியலாம். அமெரிக்காவில்தான் "Peanut Allergy" என்ற "கடலை ஒவ்வாமை" அதிகம் உள்ளது. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு அமெரிக்கா வந்தவுடன்தான் தெரியும்.
"Peanut Allergy" உள்ளவர்களால் இந்தக் கடைகளுக்குள் வரவே முடியாது. இது ஒரு குறிப்பிடத்தக்க வருமான இழப்பு இந்த நிறுவனங்களுக்கு. ஆனால் , இதையும் கணக்கில் கொண்டு அல்லது இதையும் தாண்டி , "இப்படித்தான் நாங்கள்" , என்று உள்ளது இவர்களின் பிசினசு மாடல்.
எல்லோருக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டும் என்பது, மனிதனை சாம்பாராக்கிவிடும்.
இழப்புகள் இருக்கும் என்பதை உணர்ந்தே (with consciousness) , தேர்ந்தெடுக்கும் பாதையில், இழப்பு என்பது, சுய சமநிலைக்கு அவசியம் என்றே நினைக்கிறேன்.