அமெரிக்கா சனநாயகத்தை முழுமையாக பின்பற்றும் நாடு என்று சொல்வதைவிட, அந்த சனநாயகத்தை தொய்வடையச் செய்யாமல் காக்கிறார்கள் என்பதே சரியாக இருக்கும். மக்கள் சனநாயகத்தில் இடைவிடாமல் பங்கேற்று, அதை யாரும் அழித்துவிடாமல் காக்கிறார்கள் என்பதே உண்மை. மத்திய அரசின் சட்டங்களை உருவாக்கிய முன்னோர்கள் அதை ஒரு புனிதமாக கட்டமைக்கவில்லை. அப்படி முயற்சிக்கவும் இல்லை எண்ணவும் இல்லை.
பலர் சேர்ந்து உருவாக்கும் எந்தவொரு அமைப்பும் அதற்கான சமரசங்களைக் கொண்டதே.
சுயநலம் இல்லாத பொதுநலம் என்பது ஏமாற்று என்பது என் நிலைப்பாடு.
மாநிலங்களில் இருந்து வரும் பிரதிநிதிகள், அவர்கள் மாநிலம் சார்ந்த உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், அதே நேரம், இருப்பதில் சிறந்த ஒரு அமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, குறைந்த பட்ச செயல்திட்டம்போல சிலவற்றை அப்பொதைக்கு சரி என்று ஏற்றும்கொள்வதே எந்த ஒன்றையும் தொடங்க உதவும். அப்படி தொடங்கிய எந்த ஒரு அமைப்பும் ,தன்னை தொடர் கேள்விகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்படுத்திக்கொண்டால்தவிர,அது மக்களுக்கான் ஒன்றாக இருக்காது.
ஒரு நாட்டின் சனநாயம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களின் பங்கு என்பது ஒருநாள் வாக்களித்துவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டு அரசைக் கேள்வி கேட்பது மட்டும் அல்ல. சனநாயகம் என்பது ஒரு மலர்ச்செடி போன்றது. "நட்டு வைத்துவிட்டேன் அது பாட்டுக்கு வளரும்" என்று நீங்கள் விடுப்பு எடுக்க முடியாது. அதை நீங்கள் அன்றாடம் பராமரிக்க வேண்டும்.
விவாதங்களும், ஓட்டெடுப்புகளும் முடிந்து இதுதான் அமெரிக்க சட்டம் என்று தீர்மானித்தபோது,பெஞ்சமின் ஃபிராங்ளினிடம் ஒருவர் இப்படிக் கேட்கிறார். "டாக்டர், என்ன மாதிரியான அரசாங்கம் கிடைத்துள்ளது. மக்களாட்சியா இல்லை மன்னராட்சி போன்றதா?"
அமெரிக்க மக்களின் அரசியல் பங்களிப்பு, அரசில் அக்கரை என்பது,இந்தியாவின் டீக்கடை அரசியல் பேச்சுகள் போல் பேசி கலைந்துவிடும் பொரணி அல்ல. அது ஒரு நாள் நடந்து முடியும் களப்பணியும் அல்ல. அல்லது தேர்தல்காலத்தில் மட்டும் களப்பணியும் அல்ல. ஏதாவது ஒரு போராட்டம், ஏதாவது ஒரு கூட்டம், என்று இடைவிடாது எல்லா ஊர்களிலும் நடக்கும் . நீதி மன்ற அமைப்புகளில் நீதிபதிகூட மக்களின் நேரடி தேர்தல்மூலமே நிரப்பப்படும். அதுபோல காவல்துறை உயர்பதவிகள் மக்களின் நேரடி தேர்தல மூலம் கவுண்டி (county) அளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Presidential Election Primaries & Caucuses
ஒரு கட்சியின் சார்பில், யார் அதிபர் வேட்பாளராக (Presidential Election Candidate) நிற்கப் போகிறார்கள் என்பதை, அந்தக் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொதுவாக Primary Election என்பார்கள். முக்கியமான இரண்டு கட்சிகளான டெமாக்ரடிக் கட்சியும் , ரிபப்ளிகன் கட்சியும், அதற்கான வழிமுறைகளை வைத்துள்ளது. இவை அமெரிக்கா முழுமைக்கும் பொதுவான அந்த கட்சியின் வழிமுறையாக இருக்கும். இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லை. வெறும் கட்சி சார்ந்த நிலைப்பாடுதான்.
ஆனால், இந்தக் கட்சியானது, அதன் கட்சி தேர்தலை ஒரு மாநிலத்தில் நடத்த விரும்பும்போது, அந்த மாநிலம் சொல்லும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய காட்டாயத்திற்கு உள்ளாவார்கள். அதனால், Primary Election என்ற இந்த உட்கட்சி தேர்தல் அமெரிக்கா முழுமைக்கும் நடந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் வேறு மாதிரி நடத்தும் சுதந்திரம் கொண்டது.
அமெரிக்காவில் மத்திய தேர்தல் ஆணையம் அல்லது மாநில தேர்தல் ஆணையும் என்ற ஏதும் இல்லை. ஆனால், மாநிலம் தேர்தல் நடத்தும் வழிகாட்டுவிதிகளை வகுக்கும், அந்த Framework க்குள் கட்சிகள் அவர்களுக்கான விதிகளை அமைத்துக் கொள்ளலாம். அரசு உட்கட்சி தேர்தலில் தலையிடாது.
Presidential Election Primaries என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், பரவலாக அப்படியே அறியப்பட்டாலும், அது இரண்டு முறைகளைக் கொண்டது.
Primaries
Primaries என்பதை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஓட்டுப்போடும் முறை. தேர்தல் நாள் ஒன்றை அறிவித்து, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச் சாவடியை திறந்துவைத்து, ஓட்டுப்போடும் முறை. சில இடங்களில் முன்னதாகவே வாக்குச் செலுத்தும் முறையும் உண்டு (Early voting period) இவை எல்லாம் மாநிலத்திற்கு மாநிலம், மாநிலத்திலேயேயே கவுண்டிகளுக்குள் வேறுபடும்.
அதிபர் தேர்தலுக்கான தங்கள் கட்சியின் வேட்பாளரை அந்தக்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் Primaries முறையை சுருக்கமாக , நம்மூர் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் முறை என்று புரிந்து கொள்ளலாம்.
Caucus
இதுதான் நம்மவர்களுக்கு புதியதாக இருக்கும். இதுவும் அதிபர் தேர்தலில் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு முறையே. இந்த முறை மிகவும் சிக்கலானதும், பல தலைமுறைகளாக இருக்கும் அமெரிக்கர்களையே குழப்பும் ஒன்று.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான ஒரு கட்சியில் வேட்பாளரை Caucus முறையில், தேர்ந்தெடுக்கும் மாநிலங்கள்
1. Alaska, Kansas, Hawaii, Maine, and Washington மாநிலங்களின் இருந்த Caucus முறை மாற்றப்பட்டு, அவர்களும் இப்போது primary முறையையே கடைபிடிக்கிறார்கள்.
2. சில மாநிலங்களில் primaries and caucuses இரண்டு வகை தேர்தல்களும் நடக்கும். எந்த முறையில் தங்கள் கட்சி தேர்தலகளை நடத்தலாம் என்று கட்சிகள் முடிவு செய்யலாம்..
Ex: In Kentucky, Democrats hold a primary and Republicans a caucus.

Benjamin Franklin in his final speech before the Constitutional Convention: "…when you assemble a number of men to have the advantage of their joint wisdom, you inevitably assemble with those men, all their prejudices, their passions, their errors of opinion, their local interests, and their selfish views."https://constitutioncenter.org/learn/educational-resources/historical-documents/perspectives-on-the-constitution-a-republic-if-you-can-keep-it
He thought it impossible to expect a "perfect production" from such a gathering, but he believed that the Constitution they had just drafted, "with all its faults," was better than any alternative that was likely to emerge.
ஒரு நாட்டின் சனநாயம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களின் பங்கு என்பது ஒருநாள் வாக்களித்துவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டு அரசைக் கேள்வி கேட்பது மட்டும் அல்ல. சனநாயகம் என்பது ஒரு மலர்ச்செடி போன்றது. "நட்டு வைத்துவிட்டேன் அது பாட்டுக்கு வளரும்" என்று நீங்கள் விடுப்பு எடுக்க முடியாது. அதை நீங்கள் அன்றாடம் பராமரிக்க வேண்டும்.
Benjamin FranklinAt the close of the Constitutional Convention of 1787, Franklin was queried as he left Independence Hall on the final day of deliberation. In the notes of Dr. James McHenry, one of Maryland’s delegates to the Convention, a lady asked Dr. Franklin “Well Doctor what have we got, a republic or a monarchy.” Franklin replied, “A republic . . . if you can keep it.”http://www.whatwouldthefoundersthink.com/a-republic-if-you-can-keep-it
விவாதங்களும், ஓட்டெடுப்புகளும் முடிந்து இதுதான் அமெரிக்க சட்டம் என்று தீர்மானித்தபோது,பெஞ்சமின் ஃபிராங்ளினிடம் ஒருவர் இப்படிக் கேட்கிறார். "டாக்டர், என்ன மாதிரியான அரசாங்கம் கிடைத்துள்ளது. மக்களாட்சியா இல்லை மன்னராட்சி போன்றதா?"
இதற்கு ஃபிராங்ளின், "மக்களாட்சி, உங்களால் அப்படியே பராமரிக்க முடிந்தால்" என்கிறார். ஆம், இதுதான் மக்களாட்சியின் அடிப்படை.**
அமெரிக்க மக்களின் அரசியல் பங்களிப்பு, அரசில் அக்கரை என்பது,இந்தியாவின் டீக்கடை அரசியல் பேச்சுகள் போல் பேசி கலைந்துவிடும் பொரணி அல்ல. அது ஒரு நாள் நடந்து முடியும் களப்பணியும் அல்ல. அல்லது தேர்தல்காலத்தில் மட்டும் களப்பணியும் அல்ல. ஏதாவது ஒரு போராட்டம், ஏதாவது ஒரு கூட்டம், என்று இடைவிடாது எல்லா ஊர்களிலும் நடக்கும் . நீதி மன்ற அமைப்புகளில் நீதிபதிகூட மக்களின் நேரடி தேர்தல்மூலமே நிரப்பப்படும். அதுபோல காவல்துறை உயர்பதவிகள் மக்களின் நேரடி தேர்தல மூலம் கவுண்டி (county) அளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Presidential Election Primaries & Caucuses
ஒரு கட்சியின் சார்பில், யார் அதிபர் வேட்பாளராக (Presidential Election Candidate) நிற்கப் போகிறார்கள் என்பதை, அந்தக் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை பொதுவாக Primary Election என்பார்கள். முக்கியமான இரண்டு கட்சிகளான டெமாக்ரடிக் கட்சியும் , ரிபப்ளிகன் கட்சியும், அதற்கான வழிமுறைகளை வைத்துள்ளது. இவை அமெரிக்கா முழுமைக்கும் பொதுவான அந்த கட்சியின் வழிமுறையாக இருக்கும். இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பே இல்லை. வெறும் கட்சி சார்ந்த நிலைப்பாடுதான்.
ஆனால், இந்தக் கட்சியானது, அதன் கட்சி தேர்தலை ஒரு மாநிலத்தில் நடத்த விரும்பும்போது, அந்த மாநிலம் சொல்லும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய காட்டாயத்திற்கு உள்ளாவார்கள். அதனால், Primary Election என்ற இந்த உட்கட்சி தேர்தல் அமெரிக்கா முழுமைக்கும் நடந்தாலும், ஒவ்வொரு மாநிலமும் வேறு மாதிரி நடத்தும் சுதந்திரம் கொண்டது.
அமெரிக்காவில் மத்திய தேர்தல் ஆணையம் அல்லது மாநில தேர்தல் ஆணையும் என்ற ஏதும் இல்லை. ஆனால், மாநிலம் தேர்தல் நடத்தும் வழிகாட்டுவிதிகளை வகுக்கும், அந்த Framework க்குள் கட்சிகள் அவர்களுக்கான விதிகளை அமைத்துக் கொள்ளலாம். அரசு உட்கட்சி தேர்தலில் தலையிடாது.
Presidential Election Primaries என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், பரவலாக அப்படியே அறியப்பட்டாலும், அது இரண்டு முறைகளைக் கொண்டது.
Primaries
Primaries என்பதை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்குச் சீட்டில் உள்ளவர்களில் ஒருவருக்கு ஓட்டுப்போடும் முறை. தேர்தல் நாள் ஒன்றை அறிவித்து, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச் சாவடியை திறந்துவைத்து, ஓட்டுப்போடும் முறை. சில இடங்களில் முன்னதாகவே வாக்குச் செலுத்தும் முறையும் உண்டு (Early voting period) இவை எல்லாம் மாநிலத்திற்கு மாநிலம், மாநிலத்திலேயேயே கவுண்டிகளுக்குள் வேறுபடும்.
அதிபர் தேர்தலுக்கான தங்கள் கட்சியின் வேட்பாளரை அந்தக்கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் Primaries முறையை சுருக்கமாக , நம்மூர் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் முறை என்று புரிந்து கொள்ளலாம்.
Caucus
இதுதான் நம்மவர்களுக்கு புதியதாக இருக்கும். இதுவும் அதிபர் தேர்தலில் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு முறையே. இந்த முறை மிகவும் சிக்கலானதும், பல தலைமுறைகளாக இருக்கும் அமெரிக்கர்களையே குழப்பும் ஒன்று.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான ஒரு கட்சியில் வேட்பாளரை Caucus முறையில், தேர்ந்தெடுக்கும் மாநிலங்கள்
- Iowa
- Nevada
- North Dakota
- Wyoming
- Kentucky (Republican only)
The US territories conducting caucuses are: - American Samoa
- The US Virgin Islands
- Guam