Friday, October 06, 2006

வெட்கமாக இருக்கிறது :-(((

ந்தியாவில் ஒரு காஸ்மாபாலிடன் சிட்டி பெங்களூர். அதுவும் பல சாப்ட்வேர் முதலைகள் வாழும் இடம் .மன நலம் குன்றிய ஒரு சிறுவனை (11 வயது) மனம் நலம் குன்றியவன் என்பதற்காக விமானத்தில் ஏற அனுமதி மறுத்துள்ளது.

அதுவும் ஒரு படித்த இளம் அதிகாரி அவ்வாறு கூறுகிறார். :-(((

இதுபோல் எத்தனை கொடுமைகள் இன்னும் வெளியில் தெரியாதவை.

என்ன படித்தாலும், எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் இந்தியாவில் மனிதப் பண்புகள் பெரும்பாலனவர்களுக்கு கிடையாது என்பது உண்மை.இது பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுச் சொல்கிறேன்.

பிட்சா,பெப்சி சாப்பிடுவதிலும்,கார்-iPOD ,ஜீன்ஸ் போன்ற வஸ்தாதுகளில் வளர்ந்த நாட்டை கேள்வியே கேட்காமல் காப்பி அடிக்கும் நாம் அவர்களிடம் உள்ள நல்ல பண்புகளைக் கண்டுகொள்வது இல்லை.


இவை சிறு வயதில் இருந்தே ஊட்டி வளர்க்கப்பட வேண்டும்.
கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில்,புகை வண்டியில் இன்ன பிற இடங்களில் முதியோர்கள்,உடல்,மனக் குறைபாடு உள்ளவர்களுக்கு பிறர் விரும்பி உதவி செய்ய வேண்டும்.

இதற்கெல்லாம் சட்டம் வேண்டுமா?

சீ.சீ..

செய்திக்கு நன்றி:
ஊசி aka PIN
http://oosi.blogspot.com/2006/10/bangalore-airport.html

CNN - IBN வீடியோ
http://www.indiaabroad.com/video/player.php?url=http://video.tv18online.com.edgesuite.net/cnnibn/flvstore/10_2006/chennai_autism.flv







Wednesday, October 04, 2006

The great OBC myth has been busted!

OBCs outscore general merit students.

The biggest concern of the anti-reservation activists that introduction of castebased reservations in higher education institutes would deteriorate the quality of education has been debunked.

The final report of the Oversight Committee headed by M Veerappa Moily to be submitted to PM Manmohan Singh will be backed by strong case studies from southern states, including Karnataka, to establish how OBC students have been consistently outscoring general category and SC/ST students....

...While OBC students have a pass percentage of 93.01 to 97.4, general merit students recorded just 66.09 to 94.77 from the 1998-2000 batch to 2001-2005 batch. The percentage of first class with distinction among OBC students was between 37.7 and 42.38,while among SC/ST students it was between 9.32 and 11.90 in the same period.
நன்றி: Times of India

முழுமையான தகவலுக்கு:
http://timesofindia.indiatimes.com/articleshow/2070274.cms


இது சம்பந்தமான எனது முந்தைய பதிவு:
இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?




Wednesday, September 27, 2006

Jenna in Chennai !!

Mom! I moved to India and got a job at call center!

Jenna is exploring the Chennai ....here are some

About Chennai Traffic and driving:

Driving here is, as Naresh puts it, like Playstation3. He isn’t far off from the truth. Aside from having to dodge rogue cows, auto rickshaws and those nasty, speeding motorbikes, there is the imminent threat of a large truck coming at you face on as it tries to pass a vehicle by utilizing the lane for oncoming traffic. And the truck won’t courteously get out of the way. It’s your job as the little guy to steer over towards the edge of the road and even drive off the road if you must in order to avoid and head-on collision. Size rules here.

Entertaining insights into India ?????? :-)))

Naresh has lots of entertaining insights into India. He showed me the tiny, foil-covered hole which is on many the paper plates here and then after having me guess and fail to come up with what it was, he explained that it is where the straw is punched through on a juice box. You see, the plates are made of recycled paper juice boxes. I turned my plate over to see the design of the outside of a drink container.

Even more innovative are the plates made out of old bank statements. I am not kidding there are plates with bank accounts, balances, loans and transfers information on the back. Ummmm…is this a good idea? Naresh says it’s India’s solution to paper shredding.***Ok, now this is too funny.

Calls from the US (Is it true Jenaa ?? ..very funny )

I am about to share with you two stories that Naresh told me of phone calls from the US during his time of working as a computer customer support rep in Bangalore. Many operators got to the point where they just started having fun with it.

One time, a guy called and said, “I can’t get the arrow to the top of my computer screen and I’ve reached the end of my mouse pad.”
So the support rep says, “How large is your screen?”
The man says it is 70 inches.
And then the support rep asks “How large is your mouse pad?”
And the man answers with “About 30 inches.”
So the support rep says, “Well there you go! You need to get a 70 inch mouse pad!”

:-)))))))

Another time, a guy calls and says his cup holder is broken.

“Cup holder? Why are you calling us?” replies the support rep.
“Because it came with the computer,” replies the customer.
“Where is this cup holder, next to your computer?” asks the support rep.
“No, it’s in the computer. I push a button and it comes out of the computer.”
He was talking about the disc drive.

:-)))))))))))))))))

For more ....

http://jennainchennai.blogspot.com/






கிழக்குப் பதிப்பகம் Permission? Are you kidding ?

Rather we make excuses when confronted.

உலகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் என்ன செய்யலாம் என்று இங்கே வலைப்பதிவில் கும்மியடித்துக் கொண்டு உள்ளோம் (என்னையும் சேர்த்துத்தான் ). ஆனால் வலைப்பதிவில் உலக மக்களுக்கு அறிவுரை சொல்லும் நம்மில் ஒருவரின் நிர்வாகமே இப்படி இருந்தால்...?

மதி ,
இவர்களின் குற்றங்களை தொகுத்துப் போட்டமைக்கு நன்றி!http://mathy.kandasamy.net/musings/2006/09/26/537


1.நேசமுடன் புத்தகம்
பெயரிலி (இரமணீதரனின் புகைப்படம்) படத் திருட்டு.

பா.ரா விளக்கம்:
....அச்சிடும் அவசரத்தினாலே கேட்காமலே வந்துவிட்டதாகச் சொல்லி, தவறுக்கு வருந்தினார்கள்; “அடுத்தபதிப்பிலே பெயர் சேர்க்கப்படும்” என்றும் என்றும் கூறினார்கள். அதன்பின்னாலே, போட்டதற்கு royalty ஆக, கிழக்குப்பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் என்ற நிலையிலே பா.ராகவன் சன்மானம் தரப்போவதாகச் சொன்னார்.
http://mathy.kandasamy.net/musings/2005/01/16/152


2.மழை ருசி புத்தகம்
ஜீவனின் ஓவியம் திருட்டு.

பா.ரா விளக்கம்:
பல தமிழ் பதிப்பகங்கள் இதைச் செய்கின்றன. நான் இணையத்தில் இருந்துதான் எடுத்தேன். ஆனால், தோழியர் வலைப்பதிவில் இருந்து எடுக்கவில்லை!

பத்ரி விளக்கம்:
நம்மாட்களுக்கு Intelectual property rights குறித்து அறிவே இல்லை என்று கூறிய அவர், தான் ஆவன செய்வதாக உறுதியளித்தார். இதுபோன்ற விஷயங்களில் கிழக்குப் பதிப்பகம் Strict Rules கொண்டு வரும் என்றும் சொன்னார்.
http://mathy.kandasamy.net/musings/2005/02/10/165


3.நாடு கட்டிய நாயகன் புத்தகம்
யெம்.கே. குமார் -ன் எழுத்து திருட்டு.

பா.ரா விளக்கம்/வருத்தம்:
நேர்ந்த பெரும் பிழைக்கு மிகவும் வருந்தி சில தீர்வுகளை முன்மொழிந்துள்ளார்.
http://yemkaykumar.blogspot.com/2006/09/blog-post_26.html

4.கிழக்கு பதிப்பகம் - பதிப்பகத் துறையில் ஒரு குளோனிங் திலீபன்
http://www.keetru.com/vizhippunarvu/jul07/kizhakku.html

தவறு ஒரு முறை நடக்கலாம்..ஆனால் செய்வதும் பின்பு சால்ஜாப்பு சொல்வதும் இங்கே தொடர்கிறது....

கிழக்குப் பதிப்பகம்:
Permission....Are you kidding..? Rather we make excuses when confronted.

பத்ரி,
பா.ராவை இன்னுமா வேலையில வச்சு இருக்கீங்க :-)))))

கிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்
http://padamkadal.blogspot.com/2007/07/blog-post_17.html




Thursday, September 21, 2006

Pl.Vote For Today "CITIZEN ONE AWARD 2006"







The fresh scar across her throat is a chilling reminder of the opposition young Santosh faces everyday. This 20-year-old girl is fighting for the residents of Sundernagari in Shahadra, against the powerful ration shop owner lobby. Born and brought up in Sundernagari, corruption in government departments was a reality her family and neighbours were forced to live with. Says Santosh, “I grew up watching my father run from pillar to post trying to get simple work done out of government officers.’’ ........................

http://www.indiatodaygroup.com/citizenone/anuradha.html

http://www.indiatodaygroup.com/citizenone/gurgaon.html

http://www.indiatodaygroup.com/citizenone/hari.html

http://www.indiatodaygroup.com/citizenone/sachin.html

http://www.indiatodaygroup.com/citizenone/santosh.html









Thursday, September 07, 2006

சமணமும் கோவணமும்

ரு மதம் அல்லது ஒரு சில மக்களின் மதம் சார்ந்த செயல்பாடுகள் அந்த மதம் அல்லது அந்த மக்களை அறிந்தவர்களின் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படமாட்டாது. சமணர்கள் நிர்வாணமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், மக்களினூடே நடந்து செல்வதையும்,ஆண், பெண் அனைவரும் அவர்களை வணங்குவதையும் நேரில் பார்த்து இருக்கிறேன்(சூரத்).

ஒரு இடத்தில் தவறாகப்படாத ஒரு செயல் எல்லா இடங்களிலும் அப்படியே பார்க்கப்படும் என்று நினைப்பது அறியாமை.குளியல் அறையில் நிர்வாணமாக இருக்கும் நாம் வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் அப்படிச் சுற்றித் திரிவது இல்லை.அது போலதான் இதுவும். அதனால்தான் கக்கூஸில் கடவுள் படம் இல்லை.எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்தவன் என்பதற்காக கக்கூஸில் கடவுளின் படத்தை எந்த பக்தனும் வைத்துக் கொள்வது இல்லை.

சூரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தமிழகத்தின் கிராமங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. Due diligence என்பது அனைவருக்கும் பொதுவானது. அது கடவுளாகவே இருந்தாலும்.

Due diligence (also known as due care) is the effort made by an ordinarily prudent or reasonable party to avoid harm to another party or himself. Failure to make this effort is considered negligence.

Gestures - The DO's and Taboos of body language around the worldWritten by: Merkel
http://www.planetpapers.com/Assets/1848.php

ஆண்குறியை மட்டுமே மறைத்து கட்டப்படும் கோவணம் (அதன் மறுபக்கத் துணி பின்புறம் சொருகப்பட்டு இருந்தாலும் அது புட்டங்களின் இடுக்கில் சென்று மறைந்து கொள்ளும்) விவசாய பூமியில் வித்தியாசமாக பார்க்கப்பட மாட்டாது.அங்கேயும் பெண்கள் இருப்பார்கள். அதே விவசாயி கிராமம் தாண்டி நகர எல்லையைத் தொடும் போது வேட்டிக்கு மாறிவிடுவான்.குறைந்த பட்சம் துண்டாவது கட்டுவான்.

தமிழக விவசாயி என்பதற்காக அவனுக்கு கோவணச் சுதந்திரம் எல்லா இடத்திலும் இல்லை. Due diligence என்பது அவனுக்கு தெரிந்த அளவிகூட இந்த சாமியார்களுகுத் தெரியவில்லை.

பார்ப்பணீயச் சாமியார்களின் அரை நிர்வாணத்திலும் சமணச் சாமியார்களின் முழுநிர்வாணத்திலும் மக்களுக்கு என்ன கிடைக்கிறது? சமணத்தில் அனைத்தும் செத்து உடல்-நிர்வாணம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மதங்களால் யாருக்கு இலாபம்?

பிணந்திண்ணி மதங்கள்
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?

சமணர் நிர்வாணம் பற்றி பிறரின் பார்வைகள்:

1. ‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை --விடுதலை ராஜேந்திரன்
2. சமண முனிக்கு கோவணம் கட்டுவதா பகுத்தறிவு? --செல்வன்
3. பகுத்தறிவின் காட்டுமிராண்டித்தனம். --ரோசாவசந்த்




Wednesday, August 09, 2006

"A Day With Sister" ரக்க்ஷா பந்தன்







Dating எனபது மேற்கு கலாச்சாரத்தின் ஒரு முகம்.உறவுகளால் இணைக்கப்பட்ட இரண்டு மனிதர்கள் (ஆண்,பெண்,கணவன் ,மனைவி,நண்பர்கள்,அப்பா,மகன்,மகள்,அம்மா,மாமா,மருமகன்,மருமகள்,ஆசிரியர்,மாணவன்,...) அல்லது தொழில் ரீதியாக இணைக்கப்பட்ட இரண்டு மனிதர்கள் ,ஒரு நாளை அல்லது ஒரு நேரத்தை தங்களுக்காக ஒதுக்கி சந்தித்துப் பேசுதல்.ஒன்றாக சில மணி நேரங்கள் சேர்ந்து இருத்தல் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.

Father-Daughter dance எனபது மேற்கு கலாச்சார திருமணங்களில் காணலாம்.மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கும்.இதற்காக ஒத்திகைகளும் உண்டு.அது போல் அப்பா-மகள் , அம்மா-மகன் என்று Datingம் உண்டு. எல்லாப் பிரச்சனைகளையும் விட்டு விட்டு இந்த உறவுகள் தங்களுக்காக மட்டுமே நேரம் செலவிட எடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியே இந்த Dating. என்ன காதலன்-காதலி, கணவன் -மனைவி Dating -ல் காமம் மெல்லிய பின்னனியில் இசைபாடும் அதுவே அதன் சிறப்பும் , வித்தியாசமும். அதற்காக Dating அவர்களுக்கு மட்டுமேயான ஒன்று என்று முத்திரை குத்துவது அறியாமை.


ஒரு பெண் தன் சகோதரனுக்கு "சகோதரா, உனது சகோதரியாக எனது முழு அன்பும்,அரவணைப்பும் உனக்கு எப்போதும் உண்டு.அதே போல் நீ எனக்குத் தேவையான பாதுகாப்பையும் அன்பையும் வழங்குவாய் என்று நம்புகிறேன்.ஒரு தாய் வயிற்றில் பிறந்த நமது உறவு மிகவும் புனிதமானது.எனது சுக துக்கங்களில் நீ எப்போதும் பங்கு பெற வேண்டும். அதன் அடையாளாமாக நான் இந்தக் கயிற்றை இந்த நாளில் உனக்கு அணிவிக்கிறேன்" என்று சொல்லி கட்டப்படும் கயிறே "ராக்கி". அந்த ஆணும் அவளுக்கு அந்த உறுதியைக் கொடுக்கிறான்.

இந்த உணர்வு இல்லாமல், "தோ பாரு , நா உனக்கு ராக்கி கட்டிட்டேன் இனிமே என்னை சைட் அடிக்காதே" என்ற ரீதியில் விளம்பரப்படுத்தப்படும் கொச்சையான விழா அல்ல இது.கலாட்டாவிற்காக "ராக்கி" கட்டுவதும் கட்டிக் கொள்வதும் இந்த விழாவின் வணிகமயமாக்கப்பட்ட மற்றொரு முகம்.

"ரக்க்ஷா பந்தன்" எனது வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு நல்ல விழா.இதனையும் இந்து விழாவாகக் முத்திரை குத்தி விட்டார்கள்.இனிமேல் எல்லாரும் வாங்க கொண்டாடுங்க என்றால் யாரும் வரப்போவது இல்லை. ரக்க்ஷா பந்தன் விழாவை தமிழகத்தில் இருக்கும் தாய் மாமன் உறவுடனும் அதன் முக்கியத்துவத்துடனும் ஒப்பிடலாம்.இரண்டுமே இப்போது வெறும் சம்பிரதாயமாக நீர்த்துப் போய்விட்டது.

ஒரு நல்ல விழாவும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் வீணடிக்கப்படுகிறது.இந்தியாவில் எதுவுமே ஒரு நல்ல சமுதாய விழாவாக,அனைவரும் சேர்ந்து கொண்டாடும்விழாவாக இருக்க முடியாது.இது இந்தியாவின் சாபக்கேடு.சுதந்திரதினம் குடியரசு தினங்களில்கூட வேற்று நாட்டுக் கொடியை ஏற்றி இந்திய எதிர்ப்பைக் காட்டும் மக்கள் உள்ள பூமி இது.சரி நாடுதான் பிடிக்கவில்லை உனது எதிர்ப்பைக் காட்டுகிறாய் மனிதனாய் ஒரு விழாவை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் வா என்றால்,அதில் பல நடைமுறைச் சிக்கல்கள்.

நாடு ,மாநிலத்தை விடுங்கள். அவைகள் எல்லாம் பெரிய முயற்சி. ஒரு தெருவில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாட முடியுமா? முடியாது மத,சாதி,சமயக் குப்பைகள் தனது கோர முகத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிடும்.

சாஸ்திர,சம்பிரதாய,சாதி,மத,குப்பைகளை எல்லாம் விட்டுவிட்டு மனித உறவுகளில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ரக்க்ஷா பந்தன் கொண்டாடலாம்.

  • இதில் எந்த சம்பிரதாயங்களும் இல்லை.
  • எந்த கடவுளையும் வணங்கத் தேவை இல்லை.
  • எந்த புனித மந்திரங்களையும் பாடத் தேவை இல்லை.
  • எந்த பழைய புத்தகங்களையும் புரட்டத் தேவை இல்லை.
  • அனைத்திற்கும் மேலாக இதனைச் செய்வதால் உங்களின் கடவுள் உங்களை நரகத்தில் தள்ளமாட்டார்.

உடன் பிறந்த சகோதர,சகோதரி இல்லாதவர்கள் இந்த நாளில் ஒருவரை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு புதிய உறவுக்குப் பாலம் அமைக்கலாம். "God Father" போல் இத்தகைய உறவுகளும் ஒரு நல்ல வழிகாட்டியாக ,நண்பனாக இருக்கலாம்.எல்லாமே மனித உறவுகளே.இங்கும் அன்பு,ஏமாற்றம் ,கயமை,புறங்கூறுதல்,கோபம்,கருத்து வேறுபாடுகள் வரலாம். இருந்தாலும் அதையும் மீறி ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதுதான் சிறந்த உறவு.


  • இந்த நாளில் ஒரு மணி நேரத்தையாவது சகோதர,சோதரிகள் ஒரு இடத்தில் சந்தித்து உறவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
  • தொலை தூரத்தில் உள்ளவர்கள் குறைந்த பட்சம் தொலை பேசிக் கொள்ளலாம்.
  • ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதர ,சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சேர்ந்து (குழந்தை,கணவர்,மனைவி எல்லாத்தையும் விட்டுவிட்டு ) எங்காவது சிறிய தூரப் பயணம் செய்யலாம்.
  • சும்மா ஒரு இடத்திற்கு சேர்ந்து மிதிவண்டிப் பயணம் செய்யலாம்.
மனித உறவுகள் இனிமையானவை.



  1. குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
  2. கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
  3. தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
  4. தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
  5. போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
  6. பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.



Friday, July 14, 2006

Mumbai Muslims give blood to bomb victims

எந்த மதத்தில் இருந்தாலும் நல்ல மனங்கள் நல்லதாகவே இருக்கும்.பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதன் உதவ முனைவது சாதாரணமான/இயல்பான நிகழ்வே இருந்த போதும் இது இப்போது இங்கே பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது எனவே...






Mumbai Muslims give blood to bomb victims


http://www.expressindia.com/fullstory.php?newsid=70963
http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=97119&version=1&template_id=40&parent_id=22

மதங்களை மீறிய மனித உணர்வுகள் இருக்கும் அனைவருக்கும் ஒரு
Royal salute !

ஒவ்வொரு மதமும் தீவிரவாதிகளுக்கு மத ரீதியான தடையை பகிங்கரமாக விதிக்க வேண்டும். கோட்பாடுகள்/விதிகள்/மறை/வேதம் என்று வரையறுத்து இயங்கும் மதங்கள் அந்த விதிகளை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பதை முதல் பக்கத்திலேயெ கூற வேண்டும்.

இராணுவ முறைகளை மீறும் இராணுவ வீரர்களுக்கு இருக்கும் Court-martial போல் நிறுவனமயமாக்கபட்ட மதங்களும் ஒரு தெளிவான நடைமுறையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். சும்மா மறுமையில் நரகம் என்பெதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது.

  • ஒரு பெண் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்று கூறும் மடையர்கள் அதே மதத்தைச் சார்ந்த ஒருவன்/ஒருத்தி வேற்று மத மக்களை கொழுத்தினால் அவனது பாவச் செயலால் மதத்திற்கே தீட்டு வந்துவிட்டதாக கூப்பாடு போட்டதாக எங்கும் நான் படித்ததில்லை.

  • அது போல் ஒரு எழுத்தாளன் தனது மதத்தை விமர்சித்து எழுதிவிட்டான் என்று கூப்பாடு போட்டு அவனுக்கு மரணதண்டனை விதிக்கும் மத குருக்கள் அதே மதத்தைச் சார்ந்தவர்கள் 9/11 3/11 7/11 என்று ஊரைக் கொழுத்தும் போது தனது மத கயவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பதில்லை.

  • அமைதியே வடிவான பிட்சுகள் இன்னும் இனக்கொலைகளை அமைதியாகவே பார்க்கிறார்கள்.

பிணந்திண்ணி மதங்கள்


Wednesday, July 12, 2006

மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

தில் மேலும் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.இதற்குமுன் நடந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக கருதப்படும் தாவூத் பக்கத்து நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது உண்மை.அப்படியே பிடித்தாலும் மறுபடி ஒரு விமானத்தை சிறையாக்கி அதில் உள்ள பயணிகளுக்காக குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அப்படியே குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டாலும் இறந்தவர்கள் திரும்ப வரப்போவது இல்லை.

தீவிரவாதமும் உயிர்ப்பலிகளும் மனிதன் உள்ளவரை அழியாது. மதம்,மொழி,சாதி,பொருளாதாரம் ..என்று ஏதோ ஒருவடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.

நாளை என்பது நிச்சயம் இல்லாதது.ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் இருக்கும் உறவுகள்,நண்பர்களை நட்பு பாராட்டுங்கள்.மறந்தும் பகை வேண்டாம்.நாளை அவர்கள் இருப்பார்களா என்று தெரியாது.

மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!







கல்வெட்டு

Thursday, July 06, 2006

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?

தனையும் கேள்விக்குள்ளாக்காமல் கிளிப்பிள்ளைபோல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதுதான் மதத்தின் மூல ஆதாரம்.மனிதனுக்கு உள்ள நவ துவாரங்களில் இருந்து தினமும் கழிவு வெளியேறுகிறது.மனித உடலே ஒரு உற்பத்திக்கூடம் போலத்தான்.உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் வேதி மாற்றங்களை அடைந்து வேர்வையாக,மூச்சுக்காற்றாக,சிறுநீராக,மலமாக,ஆசனவாய் காற்றாக,சளியாக,காதில் இருந்து அழுக்காக,கண்களில் இருந்து கழிவாக,வாயில் இருந்து எச்சிலாக ..

இப்படி ஏதேனும் ஒரு வகையில் தினமும் வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது.இவற்றில் சிலவற்றைத்தான் மனிதனால் கட்டுப்படுத்த முடியும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மேற்சொன்னவை எல்லாம் பொதுவானவை.மனிதனின் உடல் அவன்/அவள் தூங்கும் போதும் சரி ,கடவுள் வணக்கம் செய்யும் போதும் சரி சும்மா தெருவில் சுத்தும் பொதும் சரி மேற்கண்ட வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது.புரியும்படி சொல்வதானால் நமது மலக்குடலும், சிறுநீரகமும் ஒரு நொடி ஓய்வில்லாமல் கழிவு சேகரிப்பை செய்து கொண்டுதான் இருக்கின்றன.எங்கு போனாலும் கூடவே வருகிறது.புனிதமான இடமாக இருந்தாலும் சரி அது பூங்காவாக இருந்தாலும் சரி.

கடவுளின் தூதுவர்களாக ,அவதாரமாக வந்த எல்லா மனிதப் பிறவிகளின் உடல்களும் அன்றாடம் மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுதான் இருந்தன.

ஆணுக்கு உற்பத்தியாகும் விந்துக்கு எந்த சுழற்சி முறையும் கிடையாது.ஒரு அளவுக்கு மேல் சுரந்துவிட்டால் அது தானாக வெளியேறிவிடும் அல்லது கனவு வழியாக வெளியேற்றப்பட்டு விடும்(சொப்பன ஸ்கலிதம் ???).மேலும் வயது ஆக ஆக இதன் உற்பத்தி குறைந்து விடும்.பெண்களின் சினை முட்டை உற்பத்தியும் இது போலவே என்ன,அது ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது.உருவாகும் சினைமுட்டைகள் கருவாக மாறாத பட்சத்தில் கருப்பை அதை வெளியே அனுப்பிவிட்டு அடுத்த முட்டை உற்பத்திக்கு தன்னை தயார் செய்யும் சுய சுத்திகரிப்பே இந்த இரத்தப்போக்கு.

ஆண் உடம்பில் இருந்து வரும் கழிவுகள் எல்லாம் மறக்கப்பட்டு பெண்களின் இந்த இரத்தப்போக்கு மட்டும் தீட்டாகிவிட்டது கொடுமை.எல்லாம் பணமும்,அதிகாரமும்,ஆணவமும்,புஜ வலிமையும் கொண்ட ஆணாதிக்கம், மதம் என்ற போர்வையில் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று.கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை என்ற கதையாக ஆண் வர்க்கம் புனிதம் தீட்டு என்ற பெயரில் செய்யும் பெண்ணடிமைத்தனம்தான் தீட்டு/பெண்ணடிமைத்தனம்.

மதம் அதைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை என்றாலும்,பெண்களை சமமாகப் பாவிக்கவில்லை என்றால் அது பச்சையான ஆணாதிக்கமே! இதைச் சொல்வதற்கு மதவாதியாக இருக்கத் தேவையில்லை.மனிதனாக இருந்தாலே போதும்.



Tuesday, June 27, 2006

We killed Rajiv, confesses LTTE

சிதம்பர ரகசியம போல் இருந்த ராஜீவ் கொலை இன்று புலிகளின் அமைப்பினால் பகிங்கரமாக ஒத்துக்கொள்ளப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டு இருக்கிறது.

http://timesofindia.indiatimes.com/articleshow/1686574.cms



  • "As far as that event is concerned...I would say it is a great tragedy... a monumental historical tragedy... which we deeply regret, and we call upon the government of India and people of India to be magnanimous to put the past behind... and to approach the ethnic question in a different perspective," Balasingham said.

அதற்கும் மேலாக பாலசிங்கம் கூறியதும் கவனிக்கப்படவேண்டும்.

  • Asked if the LTTE could promise that it would not commit such acts again, Balasingham added: "We have made pledges to the government of India that under no circumstance will we act against the interests of the government of India."

எனது முந்தைய பதிவில் "...ஒரு வாதத்திற்கு இந்தியாவின் தற்போதைய பிரதமர் புலிகளுடன் பேசி, புலிகளும் ஒத்துக் கொண்டு ஒரு முடிவை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவின் காரணமாக புலிகளுக்கு வேறு வகையில் ஒரு பெரிய இழப்பு வந்தால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இப்போதைய பிரதமரும் கொல்லப்படுவாரா?.." என்ற கேள்வியை எழுப்பி இருந்தேன். அந்த சந்தேகமும் தீர்க்கப்பட்டது.

புலிகளின் போக்கில் இது ஒரு நல்ல மாற்றமே. இருந்தாலும் தேடப்படும் குற்றவாளியாக புலித்தலைமை இருக்கும் வரை இந்தியா உடனடி கொள்கை மாற்றங்களை அறிவிக்காது.

  • In another interview, minister of state for external affairs Anand Sharma said it would be impossible to put the past behind, as Balasingham suggested, because India had "rule of law" and it could not be seen to be condoning the politics of violence by rehabilitating the LTTE.

நான் விரும்பும் ஆறு விசயங்கள் பதிவில் சொன்னது போல் புலித்தலைமை தன்னை முழுவிசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

புலிகளின் அமைப்பு போன்ற எந்த ஒரு அமைப்பும் நல்ல நோக்கத்திலேயே அரம்பிக்கப்படுகின்றன.புலிகளின் செயல்பாட்டிற்கு ஞாயமான காரணங்கள் பல இருந்த போதும் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. புலி ஆதரவாளர்கள் இப்போதும் வைக்கும் வாதங்கள்.

  • நாங்கள் பஞ்சாப் அல்ல, புலிகள்.
  • முதலில் இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும்.
  • இந்தியாவின் உதவி தேவை இல்லை.

"இந்தியா இந்த தவறு செய்தது, அதற்காகத்தான் ராஜிவைக் கொன்றோம் "

என்று இதுநாள் வரை புலிகள் பகிங்கரமாக எங்கும் சொல்ல வில்லை.அதற்காக இந்திய ராணுவம் எதுவுமே செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.இந்திய ராணுவம் செய்த அத்து மீறல்கள் இன்னும் புலிகளால் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்படவில்லை. ஏன் என்ற காரணம் புலித்தலைமை மட்டுமே அறிந்த ஒன்று.புலி ஆதரவாளர்களால் வைக்கப்படும் மேலே சொன்ன வாதங்கள் எந்த வகையிலும் இப்போதுள்ள சூழலுக்கு உதவாது.

இந்தியாவின் தவறுகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.


இந்தியாவின் தவறுகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இந்திரா காந்தி கொலையின் போது சீக்கிய சமுதாயத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு மன்னிப்பு கேட்ட இப்போதைய பிரதமர் நிச்சயம் மன்னிப்பு கேட்பார்.

The LTTE statement comes as the outfit finds itself with virtually no friends, especially after the European Union banned it last month.

காரணம் எதுவாக இருந்தாலும் புலிகள் முதன் முதலாக தாங்கள் செய்த செயலுக்கு மன்னிப்பு கோருவது என்பது நல்ல பாதையே.எனது ஆறு ஆசைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து இருக்கிறது.

IPKF
http://www.rediff.com/news/2000/mar/23lanka.htm

Friday, June 23, 2006

குழந்தைகளின் கல்லறையின் மேல் கோபுரங்கள்

புலிகள் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவைப் படு கொலை செய்ததற்கு இதுவரை நம்பப்படும் காரணம் ஒன்றே. ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட இந்தியப் அமைதிப் படைகள் இலங்கை மண்ணில் நடத்திய கொடுமைகள்.இதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்சசியின் பதிவில் இதனை வேறுவிதமாக பார்க்கிறார்.

//..ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார்.//

அவர் அவர்களுக்கு அவர்களின் அனுபவங்களே பாடம்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இதே புலிகளுக்காக பல முறை தொண்டை கிழிய கத்தி, ஊர்வலம் போய் நிதி சேகரிதவன் நான். அப்போது நான் படித்த அரசாங்கப் பள்ளியே ஜெயவர்த்தேனேக்கு எதிராக ஊர்வலம் ஏற்பாடு செய்தது.என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்த இலங்கைத் தமிழ் நண்பன் ஒருவன் மூலம் அப்போதே இலங்கையைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தது. அப்போது இருந்த தமிழக முதல்வர் (எம்.ஜி.ஆர் ) புலிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.ஒட்டு மொத்த தமிழகமுமே புலிகளைத் தங்களில் ஒருவராகத்தான் பார்த்தது. திண்டுக்கல் அருகே சிறுமலையில் புலிப்பயிற்சி முகாம் இருந்ததாக நான் பள்ளியில் படித்த காலங்களில் ஒரு பேச்சு இருந்தது.ஆனால் இப்போது என்னால் புலிகளை ஒரு நல்ல இயக்கமாகப் பார்க்க முடியவில்லை.அதற்கு ராஜிவ் கொலை ஒரு முக்கியக் காரணம் .

சரி ராஜீவ் என்ன தவறு செய்தார் என்று பார்ப்போம்.

புலிகள்,இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியா ஆகிய மூன்றும் மனம் ஒப்பி செய்த நடவடிக்கையே அமைதிப்படை அனுப்பும் முடிவு. ஒரு இராணுவத்தை நிர்வகிக்கும், அதிலும் பல நாட்டு இராணுவங்களின் போர்க்கால செயல்பாடுகள் பற்றி அறிந்த புலிகளின் விருப்பத்தின் பேரிலேயே அமைதிப்படை இலங்கை சென்றது.மக்களும் அதனை வரவேற்றார்கள். அமைதிப்படை வந்த போது மக்கள் கூட்டம் ஆரவராமாக வரவேற்ற உண்மைகளை மறுத்துவிட முடியாது.இவ்வாறு சென்ற படை தவறு செய்த போது அதற்கான தண்டனை ராஜிவுக்கு மட்டுமே. அதுவும் புலிகளின் வழக்கமான வழியில்.ராஜிவோ அல்லது எந்த ஒரு மனிதனோ அவனால் வழி நடத்தப்படும் ஒரு குழுவின் செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் அதற்கான தண்டனை கொலைதான் என்றால் எவனும் எந்தப் பேச்சு வார்த்தையிலுமே ஈடுபடமாட்டான்.

கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் புலிகள் ராஜிவைக் கொன்றது திட்டமிடப்பட்டு செய்த ஒன்று. இதனால் வரும் எதிர்கால இழப்புகளை சீர்தூக்கிப் பார்க்காமல் இவ்வளவு பெரிய செயலைச் செய்ய புலிகள் முட்டாள்கள் கிடையாது.இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விலக்க வேண்டும் அல்லது அமைதிப் படைகள் செய்த தவறுக்கு பலி வாங்க வேண்டும் அல்லது இரண்டிற்காகவும் புலிகள் நடத்திய கொடூரமே ராஜீவின் கொலை.ராஜீவைக் கொல்வதன் மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க விரும்பிய புலித் தலைமை இப்போது இந்தியாவின் தலையீட்டை விரும்புகிறதா? ஒரு வாதத்திற்கு இந்தியாவின் தற்போதைய பிரதமர் புலிகளுடன் பேசி, புலிகளும் ஒத்துக் கொண்டு ஒரு முடிவை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவின் காரணமாக புலிகளுக்கு வேறு வகையில் ஒரு பெரிய இழப்பு வந்தால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இப்போதைய பிரதமரும் கொல்லப்படுவாரா?

புலிகளின் ஆதரவாளர்கள் எடுத்துக்காட்டும் உதாரணம் இந்தியர்களாலேயே கொல்லப்பட்ட இந்திராவும் ,மகாத்மா காந்தியும். இவர்களின் கொலைக்குப் பிறகும் அதே இன மக்கள் இந்தியாவில் வாழுகிறார்கள்.அவர்களை எல்லாம் மன்னித்த இந்தியா ஏன் புலிகளையும் மன்னிக்கக்கூடாது. இவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திரா மற்றும் மகாத்மா வின் கொலைகளில் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்திய மக்களால் நடத்தப்படும் அரசாங்கத்தின் முன்னால் இது விசாரிக்கப்பட்டது.
ரரஜீவின் கொலை வழக்கிலேயே குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மன்னிக்கப்பட்டவர்கள் உண்டு. கர்ப்பிணி என்பதற்காக நளினிக்கு மனம் இறங்கியதும் அதே ராஜீவின் மனைவிதான்.

நான் ஏற்கனவே சொன்னது போல் காயங்களை மறந்து இனி வரும் சமுதாயம் நன்றாக இருக்க தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

புலிகளின் தலைமை தேடப்படும் குற்றவாளியாகவே இன்னும் இருக்கிறது.சென்ற முறை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஜீவின் கொலை பற்றிய கேள்விக்கு அவர் "அது ஒரு வருத்தமான நிகழ்வு" என்று மட்டுமே சொன்னதாக நினைவு.இது போல் ராஜிவுக்கும் அமைதிப்படையின் செயல்பாடு ஒரு வருத்தாமான நிகழ்வு என்று சொல்ல சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.அப்படி ஒரு விசாரணை நடந்தால் இந்தியப் படைகள் செய்த தவறுகளும் நிரந்தராமாக நீதி மன்றங்களில் பதிவாக ஒரு வாய்ப்பு உள்ளது.


இலங்கையில் துன்புறும் மக்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல விடிவு வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.புலித் தலைமை சொல்லியது போல் என்னால் "இலங்கைப் பிரச்சனையும் ஒரு துன்பமான நிகழ்வு"என்று சொல்லி நழுவதற்கு மனம் வரவில்லை.நல்ல மனிதனால் அப்படி சொல்ல முடியாது.

குழந்தைகளின் வாழ்க்கையில் நெருங்கிப் பழகி வரும் என்னால் அப்பாவி பிஞ்சுகளின் கொலைகளை இனம்/மதம்/மொழி வேறுபாடு காட்டி வருத்தப்பட முடியாது.அது தமிழ் ஈழக்குழந்தையாக இருந்தாலும் சரி சிங்களக் குழந்தையாக இருந்தாலும் சரி ஈராக் குழந்தையாக இருந்தாலும் சரி.குழந்தைகள் குழந்தைகளே.

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு அவர்களைவிட்டால் வேறு வழியும் இல்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக நான் முன்வைப்பவையே ப்போது ங்கே நான் விரும்பும் ஆறு.

1.இந்தியாவிடம் புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.தன்னை முழு விசாரணைக்கு உட்படுத்த தயராக இருக்க வேண்டும்.

2.விசாரணையில் இந்தியாவின் தவறுகள் பதிவு செய்யப்பட்டு நேர்ந்த தவறுகளுக்கு இந்தியா பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3.புலிகள் இந்தியாவின் உதவி தேவை என்று பகிங்கராமாகக் கூற வேண்டும்.(வருங்காலத்தில் நான் இந்தியாவுடன் போரிட நேரிடும் என்று கூறினால், அது தீர்க்க தரிசனம் என்று பலர் சிலாகிக்கலாம். ஆனால் அது இப்போது துன்பப்படும் மக்களுக்கு தீர்வாகாது.)

4.மேலே சொல்லியுள்ள மூன்றும் நடக்கும் பட்சத்தில் இந்தியா புலிகளின் அழைப்பை பரிசீலிக்க வேண்டும். நல்லது நடக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

5.இலங்கை அரசாங்கம் தனி நாடு கொடுக்க எக்காலத்திலும் சம்மதிக்காது. புலிகள் தனி நாட்டைத் தவிர வேறு எதும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பின்பு எதற்கு மண்ணாங்கட்டிப் பேச்சு வார்த்தை?தனி நாடு புலிகளின் இலட்சியமாக இருக்கலாம்.நாடு கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசின் முடிவாக இருக்கலாம்.ஆனால் பேச்சுவார்த்தை என்று வரும் போது Option B என்ற ஒன்றை இருவரும் வைத்து இருக்க வேண்டும்.

6.சண்டைகள் அற்ற அந்த இலங்கை மண்ணில் என்றாவது ஒரு நாள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பலூன்மாமா பலூன் செய்து கொடுக்க வேண்டும்.


போர்தான் Option B என்று ஒரு தரப்பு நினைத்தாலும்....

குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

வெற்றி பெற்றவர்களாலேயே சரித்திரம் எழுதப்படுகிறது.யார் வெல்கிறார்கள் என்பதைப் பொருத்தே இனி வரும் தலைமுறை இப்போது நடந்து வரும் அரசியலைத் தெரிந்து கொள்ளும்.இப்போது செய்யப்படும் குழந்தைக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கனவான்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.உண்மையைச் சொல்ல நம்மில் பெரும்பாலனவர்கள் இருக்க மாட்டோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

இந்தப் பதிவை இலங்கை மண்ணில் செய்வதறியாது பேதலித்துப் போய் இருக்கும் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

=============================================

நான் அழைக்கும் ஆறு பேர்.

1. சிறுவர் பூங்கா பரஞ்சோதி
2. ஜென் கதை கங்கா
3. நிகழ்வுகளின் தாக்கங்கள் ரம்யா
4. இயற்கையின் வினோதங்கள் இயற்கை நேசி
5. விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்திகள் குருவிகள்
6. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்


என்னை அழைத்த விடாது கருப்பு மற்றும் நுனிப்புல் உஷா விற்கு நன்றி!



****************


****************

Sunday, June 18, 2006

தமிழ்மணம் விற்பனைக்கு!!

காலையில் இந்த அறிவிப்பை தமிழ்மணத்தில் பார்த்தேன்.மனதில் இனம் புரியாத ஒரு வருத்தம், வெற்றிடம் என்னவோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்று எண்ணி வாழப்பழகிக் கொண்டவனாய் இருந்தாலும் சில நேரத்தில் மாற்றங்கள் சில கீறல்களை மனதில் ஏற்படுத்தவே செய்கிறது.

தமிழ்மணத்தின் விற்பனை என்பது அதன் உரிமையாளரின் விருப்பம்.இதில் நான் (யாரும்) ஏதும் சொல்ல முடியாது. நான் எனது வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் பட்டியல் இடுவதில் இருந்து விலக்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு வாசகனாக தினமும் தமிழ்மணத்தை வலம் வருவது உண்டு.

காசியின் ஆர்வமும் இந்த திரட்டியை அவர் பார்த்துப் பார்த்து உருவாக்கியதும் (செதுக்கியதும்) அதனால பல சிரமங்களை அவர் சந்திக்க நேர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. எனது பங்குக்கு தமிழ்மண உபயோகிப்பாளர் என்ற முறையில் நானும் சில கேள்விகளை அவரிடம் கேட்டதுண்டு.

எது எப்படி இருப்பினும் ஒரு சிறந்த தமிழ் வலைப்பதிவு திரட்டியை உருவாக்கியவர் என்ற முறையிலும்,எளிதில் அனுகக்கூடிய ஒரு நிர்வாகி என்ற முறையிலும் காசி எனக்குப் பிடித்தவரே.

சக வலைப்பதிவாளர் என்ற முறையில் காசி எடுக்கும் முயற்சிகள் அவருக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் வழங்கட்டும் என விரும்புகிறேன்.


அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

****************


****************

Wednesday, May 31, 2006

தமிழக முதல்வர் அவர்களுக்கு

தேதி: ஜூன் 1, 2006

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,


தாய் மொழித் தமிழை செந்தமிழ் அரியணையில் அமர்த்திய நீங்கள் ஐந்தாவது முறையாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு வாழ்த்துகள்.நீங்கள் இதுவரை போட்ட சட்டங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது, கட்டாய தமிழ்ப் பாடம். இதற்காக உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். நீங்கள் செய்யாமல் யார் இதனைச் செய்வது. யாரும் நீதிமன்றம் சென்று தடை ஏதும் வாங்கிவிடாமல் சட்டப்படி இதனை அமுல்படுத்த உங்களின் தன்னம்பிக்கை துணை இருக்கட்டும்.

இந்த நேரத்தில் நான் உங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன்.தாத்தாவாகிய நீங்கள் உங்களின் பேரப்பிள்ளைகளுக்கு செய்தே ஆக வேண்டிய செயல் இது.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.


பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை. அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

(கூடுவஞ்சேரி ஊராட்சியில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை கிராமப் பெண்களே செய்கின்றனர். (Panchayat : KaduvancheriBlock : SriperumbudurDistrict : Kancheepuram.) அதிக விவரங்களுக்கு http://ddws.nic.in/rev_tamil_04.pdf

அனைவருக்கும் அறிமுகமான ஜனாதிபதி பரிசு பெற்ற கீரப்பாளையம் என்ற ஊர் இந்த விசயத்தில் முதன்மை பெறுகிறது. அது பற்றிய case study http://ddws.nic.in/casestudy_keeraplayam.pdf )

7.தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆணுறை,AIDS,குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசே இதனை முன்னின்று செய்தால்தான் நல்லது.

நீங்கள் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

இது சம்பந்தமாக ஏற்கனவே உள்ள திட்டங்கள்:

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை" திட்டத்தினை தமிழக அரசு ஏற்கனவே RURAL DEVELOPMENT DEPARTMENT ANNOUNCEMENTS 2004-2005 -ல் அறிவித்துள்ளது.மேலும் Total Sanitation Campaign (TSC) என்று 25 க்கும் மேற்பட்ட சிறந்த பல திட்டங்களை வடிவமைத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/policynotes/archives/policy2005-06/performance_budget/pb-social-2004-05.pdf
http://www.tn.gov.in/policynotes/archives/announcement/rural2004-05.htm

ஆனால் இது அனைத்து கிராமங்களையும் சென்று அடைந்ததாத் தெரியவில்லை.மேலும் இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

அனைத்துப் பெண்களுக்கும் தேவையான இந்த சுகாதாரம் கிடைக்க தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.


நன்றிகளுடன்,

http://kalvetu.blogspot.com

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

email sent to : cmcell@tn.gov.in , cmcell@tn.nic.in

CCed to Chief Secretary cs@tn.gov.in , Social Welfare and Nutritious Meal Programme DepartmentEmail swsec@tn.gov.in , Health and Family Welfare Department hfsec@tn.gov.in , Union Minister for Health & Family Welfare hfm@alpha.nic.in , Kumudam Weekly Tamil magazine kumudam@hotmail.com

email informations are obtained from http://www.tn.gov.in and http://rajyasabha.nic.in/

நன்றி கலைஞரே நன்றி !!!

அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக தமிழ்:

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய முதல் பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. 2வது பாடமாக ஆங்கிலமும், 3வது பாடமாக கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும், 4வது பாடமாக பிற மொழிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் தமிழ் நாட்டில் கட்டாயப் பாடமாக்கப்படுகிறது.

இது Internatinal School/ CBSE/ICSE/ களுக்கும் சேர்த்தா?
L.K.G/U.K.G போன்ற சிறார் பள்ளி முதல் நடைமுறைப் படுத்தினால் நல்லது.


நிகர்நிலைப் பல்கலைக்கழகம்/தனியார் கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்டோர் : 30 %
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் : 20 %
பட்டியல் இனத்தோர் : 18 %
பழங்குடியினர் : 1 %

இதில் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்கள் இடம் பெறாதது வருத்தமே. சிறுபான்மையினர் என்றாலும் அவர்கள் மதங்களிலும் (இனங்களிலும்) பிற்படுத்தப்பட்டோர்கள் உண்டு. அவர்களுக்கும் ஏதேனும் வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.

நன்றி கலைஞரே நன்றி !!!

****************


****************

Tuesday, May 23, 2006

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?

பக்கத்தில் இருக்கும் படத்தில் இந்தப் பையன் சொல்ல வரும் கருத்து என்ன? ஒதுக்கீட்டில் வருபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றா?சில சமயம் இந்த சமுதாயத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அல்லது எனக்குத்தான் சிந்தனை மழுங்கிவிட்டதா?இருக்கலாம்.இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களைப் பார்த்தால் எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது.மனிதன் என்ன படித்து, எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவனின் நாய்க்குணம் மாறுவதில்லை. தெரு நாய்கள் அந்த தெருவுக்குள் புதிய நாய்கள் வந்தால், அட அதுவும் நம்ம ஆள்தானே வந்து போகட்டும் , என்று விட்டுவிடுவதில்லை. அவைகள் கடுமையான போரில் இறங்கும்.இது நாய்க்கு மட்டும் இல்லை. மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒரு பொதுவான குணம்.உலகில் மனிதன் முதன் முதலில் நாயைப் பார்த்த காலத்தில் இருந்து இன்றுவரை நாய் நாயாகவே இருக்கிறது. என்னதான் வீட்டு நாய்க்கு சொக்காய் போட்டு அழகு பார்த்தாலும் நாயின் குணம் மாறுவது இல்லை.

மனிதன் அப்படி இல்லை.தனது பகுத்தறிவினால எத்தனையோ மாற்றங்களைக் கண்டு, இன்று மற்ற விலங்கினங்களில் இருந்து வித்தியாசப் பட்டு இருக்கிறான்.ஆனால், அவனுக்கு அவனையும் அறியாமல் இந்த நாய்க்குணம் பல நேரங்களில் வந்து விடும்.

நீங்க எப்பவாவது பதிவு செய்யாமல், பொதுவான இரயில் பொட்டியில் பயணம் செய்து இருக்கீங்களா? அங்க இந்த மாதிரி எல்லாக் கூத்தையும் பார்க்கலாம். சென்னையில் இருந்து இரயில் கன்னியாகுமரி வரை போகுதுன்னு வைங்க.இந்தப் பொட்டியில் பயணம் செய்யும் நம்ம மகா சனங்கள் தனக்கு ஒண்ட இடம் கிடைத்தால் போதும், அடுத்து வரும் நிலையத்தில் ஏறக்கூடிய சக பயணியைப் பற்றிக் கண்டுக்கவே மாட்டாங்க. என்னமோ அவுங்கள வேண்டா வெறுப்பா உள்ள சேத்துக்குவாங்க. இப்படி உள்ளே வந்த ஆசாமியும் அதே மாதிரி குணத்தை அதற்கடுத்த நிலையத்தில் வரும் பயணியிடம் காட்டுவான். இது இப்படியே தொடரும்.அதனாலதான் இதற்கு தொடர் வண்டி என்று பெயர். இதில் கொடுமை என்னவென்றால் சில சமயம் அந்த பொட்டிக் கதவையே பூட்டிவிட்டு படுத்துருவாங்க. என்னதான் தட்டுனாலும் தூங்குறமாதிரி படுத்துக்கிட்டு திறக்க அடம் பிடிப்பாங்க.அடுத்த நிலையத்தில் ஏறும் பயணி, புள்ளை குட்டிகளோட கதவைப் போட்டுத் தட்டுவான்... இது ஒரு தொடர்கதை...


அதே மாதிரிதான் இந்தக் கல்வி,வேலை சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடும். இங்க இப்ப நடக்குற கூத்த மட்டும் பாப்போம்.

  • மனிதன் என்பவன் படிப்பதால் வரும் அறிவுக்குப் பெயர் படிப்பறிவு(கல்வியறிவு).
  • பல விசயங்களைக் கேட்பதால் வரும் அறிவு கேள்வியறிவு.
  • தானே தனது அனுபவத்தில் இருந்து அறியும் அறிவு பட்டறிவு.

இவை அனைத்தையும் தாண்டி Common sense அப்படீன்னு ஒன்று இருக்கு. தமிழில் இதை பகுத்தறிவுன்னு சொல்லலாமா? இது என்னன்னா படித்த,கேட்ட மற்றும் அனுபவித்த எல்லாத்தையும் சீர்தூக்கிப் பார்த்து,இங்கே , இப்போது எது தேவை,எது சரி என்று தனது சொந்தப் புத்தியால் சிந்திக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைத்து அறிவாளிகளும் அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.அப்படிச் செய்தால் இப்படிப் பேசமாட்டார்கள்.இதுவரையில் நான் படித்த அனைத்து எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்கள்....


உதாரணத்திற்கு கரண் தாபரின் கேள்விகள்:
http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

//the NSSO is correct in pointing out that already 23.5 per cent of the college seats are with the OBC, then you don't have a
case in terms of need.//

//For example, a study done by the IITs themselves shows that 50 per cent of the IIT seats for the SCs and STs remain vacant and for the remaining 50 per cent, 25 per cent are thecandidates, who even after six years fail to get their degrees. So,clearly, in their case, reservations are not working.//


கரணின் கேள்விகளையும் மற்ற எதிர்ப்பாளர்களின் கேள்வியையும் தொகுத்தால் நமக்கு கிடைப்பது

  • இட ஒதுக்கீட்டில் கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.
  • ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.
  • அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.
  • ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

இந்த கரண், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடும் மாணவர்களிடம் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்டு,OBC பக்கம் இருக்கும் எதாவது நியாத்தை பட்டியலிட்டு இருந்தால் யாரவது சொல்லவும்.கரணின் பார்வையில், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இல்லை, நாடு கல்வியறிவில் சமத்துவமாக எல்லாத் தரப்பினரையும் சென்று அடைகிறது. செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகி விட்டது. இன்னும் எதற்கு என்ற தொனியே இருகிறது. இட ஒதுக்கீடு கேட்பவர்களிடம் ஒரு நியாமும் இல்லை, என்ற கருத்தும் மறைமுகமாக முன் வைக்கப்படுகிறது.

இப்படி இவரின் செய்தியை மட்டுமே படிப்பவர்களுக்கு இவர் சொல்வதெல்லாம் சரி என்றே படும். உண்மை அதுவல்ல.


இவரின் குற்றச் சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் முன் மற்ற சில அடிப்படைக் கேள்விகளைப் பார்க்கலாம்.

  1. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?
  2. சாதி அடிப்படையில் இருக்கும் போது மத அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா?
  3. பொருளாதார அடிப்படையில் இருந்தால் என்ன குறைச்சல்?

இப்படி பல கேள்விகளை அடுக்கலாம்.எல்லாம் ஒரே கோணத்தில் இருந்து பார்க்கும் போது சரியாகவும், வேறு இடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு கேணத்தனமாகவும் இருக்கும்.எந்த முறையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சிகள் எல்லாம் குப்பையாக இருந்தாலும் எப்படி நாம், நல்ல குப்பையாக தேர்ந்தெடுக்கிறோமோ அது போலத்தான் இதுவும். இருப்பதில் ஒரு முறையை கையாளவேண்டும்.அந்த முறை அனைவருக்கும் பயன்படும் வண்ணம் செயல் படுத்தப் படவேண்டும்.

இந்தியாவில் இந்தியர்கள் இருக்கும் வரை சாதியும் மதமும் இருக்கப் போகிறது. நாம் என்ன சீனர்களா?( பார்க்க1 பார்க்க2 )சாதி மதத்தை குப்பையில் போட்டு விட்டு, வேறு உருப்படியான வேலையைப் பார்க்க.அட போங்க சார்.

இப்போது,இங்கே உள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படை இட ஒதுக்கீடு இன்னும் தேவை.இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்றால் ஒதுக்கப்பட்ட SC/ST எல்லாம் நிரம்பி,அதில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பட்டம் பெற்று வரும் வரை.இப்போது எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்குப் போவோம்.


இட ஒதுக்கீட்டில் கல்வியை கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.

இதுதான் Common sense இல்லாமல் கேட்கப்படும் கேள்வி வகை. எல்லாரும் சொல்கிறார்கள் என்று அனைவரும் சொல்லும் Stereo type விவாதம். இதை விரிவாகப் பார்ப்போம். உதாரணமாக IIT ஐ எடுத்துக் கொள்வோம். அங்கு சேரும் வரைக்குத்தான் இட ஒதுக்கீடு. அதாவது சேருவதற்குத்தான் இட ஒதுக்கீடு. சேர்ந்தபின் அனைத்து மாணவர்களும் (Irrespective of the quota they used to join) ஒரே பாடத்திட்டத்தையும் ,ஒரே தேர்வு முறையையும்தான் சந்திக்கிறார்கள். இந்த முறையில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் எப்படி தரத்தில் குறைய முடியும்.

இட ஒதுக்கீடு என்பது வாய்புகளற்ற மாணவனுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு முடிவடைகிறது. அவனின் படிப்புக்கும் ,அவனது தேர்ச்சிக்கும் அது உதவுவது இல்லை. கொட்டாம்பட்டி கண்மாயில் நன்றாக நீச்சல் அடிக்கும் ஒருவனுக்கு,நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள சலுகை செய்கிறது அரசு அவ்வளவே. அந்தப் போட்டியில் அவன்தான் நீச்சல் அடிக்கப் போகிறான்.அங்கே அவன் எல்லா தரப்பு ஆட்களுடன் ஒரே களத்தில் ஒரே விதியின் கீழ் விளையாடப் போகிறான். இங்கே எப்படி தரம் குறையும். புரிந்தால் சொல்லுங்கள்.


ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.

சொல்வதற்கு வெட்கமாய் இல்லை? அரசு அறிவித்த சலுகைகள் இன்னும் சரியாக மக்களுக்குச் சேரவில்லை என்றுதானே அர்த்தம். இந்த இடங்களுக்கு SC/ST மாணவர்களை நிரப்ப அந்த கல்லூரி என்ன செய்தது? பள்ளிகளுக்கு பசங்கள் வரவில்லை என்றதும்,அவர்கள் ஏன் வரவில்லை?அவர்களைத் தடுப்பது எது? என்றெல்லாம் சிந்தித்து, அதனை அரசுக்குத் தெரியப்படுத்தாமல், SC/ST மாணவர்களுக்காக எந்த சுய முயற்சியும் எடுக்காமல், இபோது குற்றம் சொல்லும் இவர்கள் இந்த நாள் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

கல்வி என்பது சமுதாயத்திற்கு பயன்படுவதாய் இருக்க வேண்டும். IIT ல் படித்தவன் NASA வில் வேலை பார்க்கிறான் என்று சொல்லுவதுதான் பெருமை என்றால் அந்தப் பெருமை எனக்குத் தேவை இல்லை.இங்குள்ள SC/ST இடங்கள் போதவில்லை இன்னும் ஒதுக்கீடு செய்யுங்கள் ,மாணவர்களின் விண்ணப்பம் குவிகிறது, என்று ஒரு IIT சொல்லும் நாள் வருமேயானால் ,அப்போதுதான் அதை நல்ல சமுதாய கல்வி நிறுவனமாகக் கருதுவேன்.


அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.

நீ என்ன செய்தாய்? அவர்கள் முன்னேற வேண்டும் என்றுதானே சலுகை கொடுத்து அனுப்பினோம்.அவர்களுக்கு தனிப்பட்ட கவனம் கொடுத்தால் நீ என்ன குறைந்தாய் போவாய்.SC/CT மாணவர்களுக்கு அதிகப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அரசே! இன்னும் நிதியையும் ஆசிரியர்களையும் ஒதுக்கு என்று எந்த IIT யாவது குரல் கொடுத்து இருக்கிறதா? இல்லை உண்ணாவிரதம் இருந்திருகிறதா? சமுதாய அக்கறை இல்லை உங்களுக்கு. குற்றம் சொல்லும் அனைவரும் சேர்ந்து உதவ வேண்டும். அரசு மட்டும் சட்டத்தால் இதனை சாதித்து விட முடியாது.

ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

புள்ளி விவரங்கள் தேவைதான். ஆனால் இது IIT போன்ற கல்வி நிலையங்களில் OBC க்கு 23.5 சதவீதம் இல்லை என்றே நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.அப்படியே புள்ளி விவரங்களில் தவறு என்றால் அரசு அது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு குழப்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக...

'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால்

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?

இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக! விண்ணப்பம்

Soho Saxo மாமாமீடியா

நியூயார்க் வயலின் பெண் தொடர்ச்சி


மாமாமீடியா அப்படீன்னு ஒன்னு இருக்கு. யாருக்காவது தெரியுமா? வீட்ல குழந்தைகளுக்குப் பொழுதுபோலேன்னா இங்க போய் கொஞ்சம் விளையாடச் சொல்லுங்க.என்னடா இந்த பலூன்காரன், இப்படி மாமாமீடியான்னு ஒரு இடத்துக்கு பிள்ளைகளப் போகச் சொல்றானேன்னு பயப்பட வேண்டாம்.இது குழந்தைகளுக்கான இணையத்தளம்.நான் கொஞ்சநாள் இங்க குப்பை கொட்டி இருக்கேன்.நியூயார்க்கின் இன்னொரு பரிணாமத்தை Soho ஏரியாவுலதான் பாக்கணும்.அப்படி ஒரு அரதப் பழசான கட்டடங்களைப் பார்க்கலாம்.இது கார்ப்போரேட் கலாச்சாரம் உடைய Manhattan பகுதிக்கு நேர் மாறான இடம். மாமாமீடியா புண்ணியத்தில்தான் எனக்கு இந்த ஏரியா அறிமுகமானது.இங்க நான் வேலை பார்த்த இந்த மாமாமீடியா ஒரு அசாதரணமான அலுவலகம்.வேலை செய்பவர்கள் ஒரு உன்னத மகிழ்வுணர்வோடு வேலை செய்து வந்தார்கள்.

அமெரிக்காவுல யாரும் "நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?"ன்னு கேட்க மாட்டாங்க. அவர்கள் கேட்கும் கேள்வி "What you do for living?" என்று அர்த்தம் பொதிந்ததாக இருக்கும். புரியுதா? அட மக்கா உங்களத்தேன் புரியுதா? இங்கே வாழ்வதும் (living) வாழ்வதற்காக செய்யும் வேலையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கப்படும். நம்மூர்மாதிரி வேலையே வாழ்க்கையாக இருக்க மாட்டார்கள். இங்கே பெரும்பாலானவர்களுக்கு வாழ்வது (வாழ்ககை) என்பது தனி. செய்யும் வேலை, வாழும் வாழ்க்கைக்கு பொருளீட்ட மட்டுமே. பலர் தனக்குப் பிடித்த மற்ற ஒரு தொழிலை, தங்களுக்கு அது பிடித்து இருக்கிறது என்பதற்காகவே செய்வார்கள்.இவ்வாறு செய்யப்படும் வேலை (?) அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் ஒரு நிறைவையும் தருகிறது

நான் பார்த்த வயலின் பெண்ணும் அப்படித்தான். அன்று அவரை நேரில் பார்த்தவுடன், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் நோக்கில், ஆர்வம் பொங்க நேரில் பேசிவிட முடிவெடுத்து அவரை அணுகினேன். நான் அவரிடம் அவரைப் பார்த்த இடங்கள் , அவரின் வயலின் வாசிக்கும் நேர்த்தி போன்ற பலவற்றை சுருக்கமாகச் சொல்லி அவரிடம் பேச வேண்டும் என்ற விருப்பத்தைச் சென்னேன். (யாரங்கே ஜொள்ளுன்னு சிரிக்கிறது?) அவர் முதலில் என்னை நம்பவில்லை.ஒரு கேள்விக்குறி கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தார், பின்பு எப்படியோ நம்பிகை வந்தவராக, என்னுடன் பேச சம்மதித்தார்.அன்று மதியம் Soho ஏரியாவில் உள்ள ஒரு ரோட்டோர கடையில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது.




இந்த மக்களின் வாழ்க்கை முறையே அலாதியானது.குளிர்காலத்தில் பனியுடன் மண்டை காஞ்சு(?) போன மக்கள் கோடை காலத்தை ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். என்னிக்காவது "sunny day" என்றால் மக்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். இந்த ரோட்டோர உணவுக்கடைகளில் இதற்காகவே வெளியே நல்ல வசதி செய்து கொடுப்பார்கள். திறந்த வெளியில் (நடைபாதையில்) அப்படியே பராக்கு பார்த்துக்கிட்டு சாப்பிடலாம்.Soho பகுதியில் இப்படி நிறைய கடைகள் இருக்கும்.எனக்கு நியூயார்க்கில் ரொம்பப் பிடித்த விசயம், காலை வேளையில் தள்ளுவண்டியில் விற்கும் "bagel" ம் காப்பியும்தான். சும்மா google ல்ல bagel ன்னு தேடிப்பாருங்க . நம்ம ஊர் இட்லி மாதிரி இந்த நியூயார்க் பேகல் பிரசித்தி பெற்றது. என்ன மொத மொத சாப்பிடறவங்களுக்கு இது ஏதோ வேகாத சப்பாத்தி மாவு போல இருக்கும். பல்லுல பூராம் ஒட்டிக்கும். ஆனா பிடிச்சுப்போச்சுன்னா நீங்க ரொம்ப பாக்கியவான். பின்ன ஒரு டாலர் கொடுத்தால் கிரீம் போட்ட பேகலும் ஒரு சுடச்சுட ஒர் காப்பியும் தருவார்கள்.பேகல் பிடித்த எனனைய மாதிரி ஆளுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

காலையில ஒரு பேகல், காப்பி மத்தியானம் இப்படி ஏதேனும் ஒரு பிளாட்பாரக் கடையில் பாதி வெந்தும் வேகாத பீன்ஸ், கொஞ்சம் Rajma (red kidney bean) கலந்த சோறு சாப்பிட்டால் ஆண்டி கூட ஒரு நாளை சிக்கனமாக ஓட்டிவிடலாம் இங்கே.அன்றைக்கும் அப்படியே நான் ஒரு சாப்பாட்டை சொல்லிவிட்டு அவருடன் பேச ஆரம்பித்தேன். அவர் bake செய்யப்பட்ட உருளைக்கிழங்கும், கீரைகள் நிறைந்த காய்கறிக் கலவைவையும் (salad) வாங்கிக் கொண்டார்.எங்கள் பேச்சு எங்கெங்கோ சுத்திவிட்டு கடைசியில் அவரின் வயலின் விசயத்தில் வந்து நின்றது.

அவர் சொன்ன தவல்கள் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.அறிவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்.சில காலம் ஒரு பெரிய நிறுவனத்தில், பெரிய அதிகாரம் வாய்ந்த பதவியில் இருந்தவர்.இவை எல்லாத்தையும் உதறிவிட்டு பகுதி நேர வேலையாக தாபால் நிலையத்தில் வேலை செய்கிறார். காரணம் கேட்டால். "எனக்கு இது மகிழ்வைத் தருகிறது" என்கிறார். முன்னர் இருந்த வேலையில் அதிக வேலைப்பளு வாழ்க்கையை வாழ முடியவில்லை, என்றும் இப்போது தன்னால் காலையில் மனதுக்குப் பிடித்த வயலின் வாசிக்கவும்,மதியம் தபால் நிலையத்தில் வேலை செய்யவும்,இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சுற்றுவும் முடிகிறது என்கிறார்.வருடம் ஒரு முறை ஏதேனும் ஒரு புதிய நாட்டுக்குச் செல்கிறார்.அதற்காக எவ்வளவு பணம் தேவையோ அதை தனது கடன் அட்டை மூலம் செலவு செய்துவிட்டு அதை திருப்பிச் செலுத்தும் வரை மட்டும் இரண்டு வேலை பார்க்கிறார்.

இங்கே ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலை பார்ப்பது மிகச் சாதாரணம்.இவர் தனக்கு எது தேவை என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். அதற்காக மட்டுமே உழைக்கிறார். அதிகப் பணம் சேர்க்கும் ஆர்வமோ , பணம் சம்பந்த்ப்பட்ட கனவுகளோ கிடையாது. அவரைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருந்தது எனக்கு. பணத்திற்காக எது வேண்டுமானலும் செய்பவர்கள் மத்தியில், அதுவும் உலகின் பொருளாதாரத் தலை நகரில் இப்படியும் சிலர்.இவ்வளவுக்கும் இடையில் இவர் ஒரு முதியோர் இல்லத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்கிறார்.சம்பளம் கிடையாது.எதையும் எதிர்பார்க்காமல் ஒரு தவம் போல் செய்து வருகிறார்.அவரிடம் எனக்கு இருந்த பிரமிப்பு மிகவும் கூடியது. என்னிடம் அவர் இந்தியா பற்றி பல சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

அதற்குப்பிறகு நான் அவரை பலமுறை அதே பாதாள இரயில் பாதையில் பார்த்து இருக்கிறேன். இப்போதெல்லாம் ஒரு சிநேகப் புன்னகையையுடன் என்னைப்பார்த்து வயலின் வாசிப்பிற்கு இடையேயும் தலையசைப்பார்.எனக்கும் அவர் போல மனமகிழ்வுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.நம்ம குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கிறகாரியமா? மாமா மீடியாவில் எனக்கு இருந்த வேலை ஒப்பந்தம் முடிந்து (அதாவது சீட்டைக் கிழித்து) அனுப்பிவிட்டார்கள்.

அதற்கு பிறகு வேலை கிடைத்த இடம் வேறு மாநிலம்.மூட்டை முடிச்சுகளோடு வீட்டைக் காலி செய்து வடக்கு கரோலைனா வந்து விட்டோம்.இருந்தாலும் எனக்கு நியூயார்க் பாதாள இரயில் பாதையில் அவரைப்போல பொழுது போக்கும் ஆசை விடவே இல்லை.என்ன செய்யலாம் என்று யோசித்த போது "saxophone" வாசிக்கலாம் என்று தோன்றியது.எனக்கு ரொம்ப காலமாக இந்த "saxophone" ல் ஒரு ஆசை. அதன் பளப்பளா கலரும் அதன் வடிவமும் ஒரு கவர்ச்சியாக இருக்கும்.என்ன கற்றுக் கொள்ளலாம் என்று குழம்பிய போது இந்த "saxophone" கனவில் வந்து ஆசை காட்டினார்.

நானும் இந்த "saxophone" வுடன் என்னை நியூயார்க் பாதாள இரயில் பாதையில் கற்பனை செய்து கொண்டேன்.எனக்கு சந்தோசம் பிடிபடவில்லை.உடனேயே ஒரு "saxophone" குருவைத் தேடி பாடம் படிக்க இயலவில்லை. நம்ம நினைக்கிறதெல்லாம் நடக்குதா என்ன? காலம் செல்லச் செல்ல நான் இந்தக் கனவையே மறந்து விட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு திடீரென்று அந்தக் கனவு நனவாகத் தொடங்கியது.எனக்கும் ஒரு குரு கிடைத்தார்.



தொடரும்.....

****************


****************

Friday, May 12, 2006

தேர்தல் அலசல்2: You too Vaikoo?


னுசன் இப்படி ஆவாருன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல.நடைப் பயணம், ஊரில் கண்மாய் வெட்டுதல், பிரதமர் மற்றும் எல்லா அரசியல் பிரமுகர்களிடம் நல்ல உறவு.நல்ல பேச்சாற்றல் இப்படி பல இருந்தும் தேர்தல் என்று வந்ததும் இவர் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை.சரி அதுதான் தேர்தல் நேரம் எல்லாரும் மனட்சாட்சியை தூக்கி பரணில் போட்டுவிட்டு தேர்தல் கூட்டணிகள் அமைக்கலாம். ஏனென்றால் தேர்தல் கூட்டு என்பது வெட்கம் அறியாதது.

ஒருவர் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றால் பிற்காலங்களில் அதுவே சாணக்கியத்தனமாகவும், தோல்வி அடைந்தால் கேவலாமாகவும் பார்க்கப்படும். சரி இப்போதுதான் தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் ஏன் அம்மா புராணம். கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தால் போதும். தேவை இல்லாமல் அங்கேயே குடியிருப்பது நல்லதல்ல.

எப்படியோ முதல் முதலாக சட்டசபையில் கணக்கு தொடங்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

ஏற்கனவே தமிழகத்தில் தனி மனிதப் பண்புகள் செத்து சுண்ணாம்பாகி விட்டது.போன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல தலைவர், முதல்வராக இருந்தால்தான் சட்டசபைக்குப் போவேன் இல்லாங்காட்டி கையெழுத்து மட்டும் போடுவேன் என்று புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்தார்.அப்போது இருந்த முதல்வரோ மத்தியில் இருக்கும் பிரதமர்,மற்றும் அமைச்சர்களை மதிப்பது, பார்ப்பது தன்க்கு இழுக்கு என்று இருந்தார்.தமிழகம் அரசியல் பண்புகளை இழந்து குப்பையாகி விட்டது.

தனது தந்தையின் இறுதிக் காரியத்துக்குப் போகாத இன்பத்தமிழனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

அது என்ன அந்தக் கூட்டணியில் இருந்தால் எல்லாரும் மாறி விடுகிறார்கள்?
அய்யா, தமிழக இளைய தலைமுறைக்கு நல்ல பண்புகளைக் காட்டுங்கள்.

புரியவில்லை ?

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு நேரில் சென்று வாழ்த்துச் சொல்லுங்கள்.

அவரின் கொள்கையும்(?) உங்களின் கொள்கையும்(?) வேறாக இருக்கலாம்.அதற்காக இப்படி எல்லாம் நீங்கள் மாறிப் போனது உங்களுக்கே வெட்கமாக இல்லை?ஒருவேளை நீங்கள் வாழ்த்து தந்தி அனுப்பி இருக்கலாம். அது போதாது.

தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்காக என்ன உருப்படியாக செய்யலாம் என்று சிந்தித்து தொண்டாற்றுங்கள். நீங்கள் இப்போது செய்யும் செயல்கள் உங்களின் வருங்காலத்திற்கு அடித்தளமாக மாறும்.பொட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு வெளியே வாருங்கள் போதும் தேர்தல் அலசலும் அறிக்கைகளும்.

****************


****************

விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க வால் முடியுமா?


தேர்தல் அலசல்1:
விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க- வால் முடியுமா?

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப் படுபவர் கேப்டன் விஜயகாந்த்.சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் பா.ம.க நிறுவனர் கூட்டணி வைத்து இருப்பது அன்று வந்த "பராசக்தி" முதல் நேற்று வந்த "கண்ணம்மா" வரை திரைப்படத்திற்கு வசனம் எழுதும் ஒரு மூத்த, சினிமாத்துறையுடன் பலகாலம் தொடர்பு உள்ள கலைஞர் கருணாநிதியுடன்.அது போல, அதே கூட்டணியில் நெப்போலியன் , சந்திரசேகர் போன்ற பல சினிமாத் தலைகள் உண்டு.சினிமாத்துறையில் உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே விஜயகாந்தை அவரது துறையைக் காட்டி விமர்சித்தது சந்தர்ப்பவாதம். அதன் பலனை இப்போது அவர் அறுவடை செய்கிறார்.

ஜெயலிதாவுடன் பா.ம.க கூட்டணி வைத்த காலங்களில் ஜெயலிதாவும் அரிதாரம் பூசிய ஒரு முன்னாள் நடிகை என்பதை வசதியாக மறந்து விட்டு "அரிதாரம்" பூசியவர்கள் அரசியலுக்கு வரலாமா? என்று கேட்பது இவர்களால் மட்டுமே முடியும்.என்னதான் கூட்டணி வென்றாலும், மாம்பழத்தில் ஒரு உள்ள "கரு வண்டு" போல் விஜயகாந்தின் வெற்றி பா.ம.க வை உறுத்தத்தான் செய்யும்.அதுவும் பா.ம.க விருத்தாச்சலத்தை ஒரு மானப் பிரச்சனையாக கருதியது என்று கார்த்திக் தேவருக்கு கூடத்(?) தெரியும்.

சினிமா என்பது ஒரு கலை. அதற்காக கல்லூரியும் அரசின் விருதுகளும் உண்டு.மருத்துவத்துறையை தவறாகப் பயன்படுத்தும் மருத்துவர்கள்போல் இந்த சினிமாத்துறையிலும் அதை தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு.இது எல்லாத் துறையிலும் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவை முக்கியமாகக் கருதி பா.ம.க நடத்திய போராட்டங்கள், அவர்கள் விஜயகாந்தை விமர்சித்த விதம் இவைகள்தான் விஜயகாந்தை இந்த விருத்தாச்சலத்தில் (பா.ம.க கோட்டை) நிற்க வைத்து வெற்றியையும் கொடுத்திருக்கிறது.

சினிமாக் கவர்ச்சி மட்டும்தான் விஜயகாந்தின் வெற்றிக்கு காரணம் என்று இவர்கள் சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.சினிமாவில் இருந்து வந்த அனைவரும் அரசியலில் சாதிக்கவில்லை. M.G.R க்கு அடுத்து வந்த சிவாஜி,பாக்யராஜ், விஜய ராஜேந்தர் போன்ற அனைவரும் அரசியலில் நிற்க முடியவில்லை.விருத்தாச்சலத்தில் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னிறுத்திய சாதீயம் மற்றும் அந்தப் பகுதி மக்கள் விரும்பிய மாற்றம்.விருத்தாசலத்தில் பா.ம.க விஜயகாந்திற்கு எதிராக செய்த தேர்தல் சித்து விளையாட்டுகள் அதிகம்.அதையும் மீறி விஜயகாந்த் வெற்றி பெற்று இருப்பது பா.ம.க விற்கு ஒரு எச்சரிக்கைதான்.

பா.ம.க சினிமாவிற்கு எதிரான போக்கை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான போராட்டங்களிலும், உண்மையான மக்கள் தொண்டிலும் தன்னை இணைத்துக் கொள்ளாதவரை அவர்கள் கூட்டணியுடனேயே வாழவேண்டியதுதான். தனது இன மக்களுக்குச் சலுகைகளை மட்டும் பெற்றுத் தறுவதே அந்தக் கட்சியின் நோக்கம் என்றால் ஏதும் புதிதாகச் செய்யத்தேவை இல்லை.உண்மையில் நல்ல மாற்று அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்றால் முதலில் தனது கோட்டையில் வெற்றி பெற்ற தனது எதிரிக்கு வாழ்த்துச் சொல்லி அவரைப் பாரட்டுவதே நல்லது.தனது இன மக்களுக்காக சிந்திப்பவர் மருத்துவர் இராமதாஸ் என்றால் அதே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியுடன் சேர்ந்து உழைக்கத் தயங்கக் கூடாது.

எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே கல்லூரித் தொழில்,குடும்ப அரசியல்,தேர்தல் கால இலவச அறிவிப்புகள் என்று சகலத்துடன் வந்து களம் இறஙகியிருக்கும் விஜயகாந்த்தினை தமிழகக் காவல் தெய்வமாக நினைக்கவும் முடியாது. வரும் காலங்களில் இவரும் பழைய மொந்தையில் புது கள்ளாக மாறிவிடலாம்.

சினிமாவில் எல்லாம் சாத்தியம். நிஜத்தில் பல அரசியல் தடைகள் உண்டு.விஜயகாந்த் வெற்றி பெற்றாலும் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு நலல பிரதிநிதியாக இருக்க வேண்டும். இவருக்கு இது முதல் அனுபவம் என்பதால் இவரை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைதத விஜயகாந்திற்கு வாழ்த்துகள். விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் தோற்று இருந்தால் கூட பா.ம.க வை அதன் தொகுதியிலேயே சந்திக்க நினைத்த தைரியத்தை பாராட்டித்தான் இருப்பேன். ஏனென்றால்....

பா.ம.க வின் நிறுவனரோ அல்லது அக்கட்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கியப் பிரமுகரோ எந்தக் கூட்டணித் துணையும் இல்லாமல், தனியாக தென் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் எதேனும் ஒன்றில் நின்று ஜெயிக்க முடியாது.தனியாக தென் மாட்டங்களில் நிற்பதற்கே இவர்களால் யோசிக்க முடியாது.வட மாவட்டங்களில் மட்டுமே இவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் உள்ளது.அதிலும் கூட இவர்களின் முக்கிய பலம் கூட்டணி.கூட்டணி இல்லாமல் எப்படி பார்வட் பிளாக்கால் ஆண்டிபட்டி உசிலம்பட்டியில் (தேவர் இனம் அதிகம் உள்ள பகுதி) கூட வெற்றி பெற முடியவில்லயோ அது போல் பா.ம.க வாலும் வட மாவட்டங்களில் இந்த அளவு வெற்றி பெற முடியாது.

தனது வெற்றி மாம்பழங்களை எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் விருந்து வைக்கிறதோ அதைப் பொறுத்தே வரும் காலங்களில் பா.ம.க வின் அரசியல் வாழ்க்கை இருக்கும். இல்லை என்றால் விஜயகாந்தை நோக்கி மக்கள் போவதை தவிர்ப்பது சிரமமே.

****************


****************

Monday, April 24, 2006

படித்ததில் பிடித்தது

Where is India going wrong?

5 Ways to Make India Inc Great

Copyright © 2003 rediff.com India Limited


****************


****************

Friday, February 17, 2006

சர்வர் பிள்ளையார்

சர்வர் பிள்ளையார்.
ஹுசைன் பெண் தெய்வத்தை நிர்வாணமாக வரைந்தார் என்பதெல்லாம் பழைய செய்தி. இங்க பிள்ளையாரே வந்து பரிமாறுகிறார். ம்ம்.... வேண்டினாலும் எளிதில் வரம் கொடுக்காத விநாயகா இப்படி வெளியூர்க் காரங்களுக்கு மட்டும் பரிமாறலாமோ?

//சென்ற வினாயக சதுர்த்தியன்று, சென்னை அண்ணாசாலையிலுள்ள பிரபல ஓட்டலொன்றின் சர்வர்களுக்கும், மேஜை துடைப்பவர்களுக்கும் வினாயகர் வேடமிட்டு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற வைத்துள்ளனர். இதன் வண்ணப் புகைப்படத்தைத் தமிழகத்தின் பிரபல தினசரியான ‘தினமணி’ பத்திரிகை, அதன் 8.9.2005 ம் தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது.//

படம் மற்றும் தகவல்:
குமுதம் சோதிடம். 23/12/2005
இனியும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?
http://www.kumudam.com/jothidam/231205/231205-01.php

****************


****************

Friday, February 10, 2006

இங்கு இப்பொழுது படித்ததில் பிடித்தது


பல விசயங்களில் இப்போது தமிழ் வலைப் பதிவு நண்பர்கள் விவாதம் செய்கிறார்கள். பின்னூட்டம் பெறுவது எப்படி என்பது முதல் தன் கட்டிலுக்கு அடியில் இருந்து வரும் "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்" அண்ட் "உள்குத்து மேட் ஈஸீ" வரை பல அறிவுரைகள். இங்கே இப்பொழுது நடைபெறும் விவாதம் (அ) சண்டை(க்கோழி)யில் படித்ததும் பிடித்ததும்.



1.இப்போதும் பெரியார் வந்திருக்காவிட்டால், நம்மிடம் சொல்வதற்கு காருண்யக் கதைகளே எஞ்சியிருக்கும். அவர் நாம் முதுகுகளில் சுமந்து திரிந்த புனிதங்களை உடைத்து அவலங்களைச் சொன்னார்.

2.புத்தரின் அன்பும் கருணையும் வெறும் வார்த்தைகளாக்கப்பட்டது.

3.எனக்குத் தேவை இல்லாத ஒன்றை பெற்றுக்கொள்வதோ, மற்றவர்க்கு தேவையில்லாத ஒன்றைக் கொடுப்பதோ நான் செய்வது கிடையாது
--தங்கமணி.

4...கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன், கொஞ்சம் பெரிதான அமைப்பை உருவாக்கி அதற்கு அடுத்த நடவடிக்கையை கொள்ளவேண்டும். இப்படித்தான் உலகம் மாறுகிறது. இப்படித்தான் அடிமைத்தனம் அகன்றது. பெண்கள் வோட்டுரிமை பெற்றார்கள். நீங்கள் பெற்றீர்கள். அப்படித்தான் உழைக்கும் வர்க்கம் தற்காப்பு பெற்றது. எந்தவொரு பலன்களும் அந்தமாதிரியான உழைப்பால் வந்தது தான்.. அது ஒரு கூட்டதிற்குப் போய், பின்னால் நழுவியவர்களால் வந்ததல்ல. நாலு வருடத்திற்கு ஒருமுறை ஓட்டுமட்டும் போட்டவர்களால் வந்ததில்ல்லை. ஒரு தேரும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதால் மட்டும் அமையப் போவதில்லை. அது ஒரு ஆரம்பமாக வேண்டுமானல் இருக்கலாம்.
--அனாதை

5.'இங்கு-இப்போது' என்பதில் அனேக பாடங்கள் உள்ளன.

--புத்தரின் மேற்கோளில் இருந்து மு.மாலிக்

மேலே கண்ட மேற்கோள்கள் தங்கமணியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.

6.என்னை உனக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள நான் விரும்பவில்லையெனில், நீ என்னைப்பற்றி என்ன தெரிந்துகொண்டாலும் புரிந்துகொண்டதாக நினைத்தாலும் அதுகுறித்த அக்கறையோ மரியாதையோ எனக்கில்லை என்பதே.

--சன்னாசி

மேலே கண்ட சன்னாசியின் மேற்கோள் முகமூடியின் இந்தப் பதிவில் இருந்து இங்கே சேமிக்கப்படுகிறது.


****************


****************

Thursday, February 02, 2006

நியூயார்க் வயலின் பெண் - Soho & Solow


கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நண்பருடன் தொலைபேசிக் கொண்டு இருந்தேன். நண்பர் கொஞ்சம் வருத்ததில் இருந்தார் போல இருக்கு, "உலகத்துலேயே பெரிய பணக்காரனா இருந்தாத்தான் நல்லது. அவங்களாலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , பணக்கார குடும்பத்துல அப்பா புள்ள சந்திக்கணும்னாக்கூட முன் கூட்டியே தேதி வாங்க வேண்டியிருக்கும். பணத்துக்கும் விலை இருக்கு. ஆனா பணத்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்காது" ன்னு சொன்னேன்.

வாழ்க்கையில பணம் முக்கியம் தான், ஆனா பணம் மட்டுமே வாழ்க்கைய நிறைவு செய்யாது. எனக்குத் தெரிஞ்ச இன்னொரு நண்பர் இப்படித்தான், பணம் இருந்தா எல்லாம் கிடைச்சுடுமின்னு பணத்துக்காக வெளிநாடு போனார். நினைச்ச பணம் வந்தது. சொந்த பந்தமெல்லாம் சந்தோசமா இருந்திச்சு. அவர் எப்ப ஊருக்கு வந்தாலும் அவருக்கு தடபுடல் கவனிப்புதான். ஆறு வருசம் கழிச்சு அவருக்கு பணம் சலிப்புத்தட்டி ஊர் வரத் தீர்மானிச்சார். வந்தும் விட்டார். இப்ப பாருங்க அவர யாரும் கண்டுக்கிறது இல்ல. சொந்த மனைவியே பொழைக்கத் தெரியாத மனுசன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு அலையும் கொடுமை.

குடும்ப வாழ்க்கை அப்புறம் இந்த மனித சமுதாயத்துல நாமும் ஒருத்தரா வாழ்றதுக்குன்னு இன்னபிற தேவைகள் பலவற்றை நிறைவு செய்ய உழைப்பு அவசியம். கடின உழைப்பு அவசியம்தான். ஆனா எதற்காக கடினமாக உழைக்கிறோம் அப்படீன்றதும் ரொம்ப முக்கியம். உழைப்பின் வழியா வரும் இந்தப் பணம் இருக்கே, அது ஒரு போதை மாதிரி. சில சமயம் நம்மள முழுங்கிடும். வண்டிக்கு வேகக்தடை இருக்குற மாதிரி பணத்துமேலே நம்ம செய்ற சவாரிக்கும் ஒரு வேகத்தடை இருக்கணும். இல்லாங்காட்டி நம்ம கீழே இறங்கி இளைப்பாரவே முடியாது.

வேகமாப் போகப் போக நிறையப் பணம் கிடைக்கும்தான் ஆனா வாழ்க்கைய நிதானமா அனுபவிக்க முடியாது. பணத்தேவை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமா இருக்குறதால எப்ப நிறுத்தனும், நிதானிக்கனுங்றத மத்தவங்க யாரும் சொல்லவோ தீர்மானிக்கவோ முடியாது. நாமளே சுயாமா சிந்திக்க வேண்டும். வேணுமின்னா பாருங்க ஒரு சக்கரவர்த்தி எல்லாம் இருந்தும் சாகும் போது எப்படி புலம்பியிருக்காருன்னு அவுரங்கசீப் ன் உயில்.

நியூயார்க்கில வேலை பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்த ஊரோட பாதாள இரயில் சவாரி ரொம்பப் பிடிக்கும். நம்ம சென்னை மின்சார இரயிலில் பார்க்கும் எல்லா சுவராசியமான காட்சிகளும் இங்கேயும் பார்க்கலாம். அதுவும் காலை, மாலை இந்த அலுவலக நேரத்துல ஒரே கூட்டம்தான். நின்று நிதானமாக எங்க போணும்னு கூட யோசிக்க முடியாது. எல்லாம் அனிச்சைச் செயலா நடக்கும்.

புதுசா ஊருக்கு வந்தவங்கதான் பராக்குப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. மத்த எல்லாரும் பறந்து கொண்டு இருப்பாங்க. நம்மள்ள 90 சதவீதம் இப்படி ஓடுறவங்கதான்.இதில கவனிக்கப்பட வேண்டியது மேலும் நான் சொல்ல வந்தது எப்பயுமே ஓடிக்கிட்டு இருக்கிர இவங்களப் பத்தி இல்ல. ஒரு ஓரமா ஒக்காந்து வாழ்க்கைய அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறவங்களப் பத்தி.

ரொம்பப்பேரு இவங்களப் பாத்து இருக்கோம். அடப் பாவமே இப்படி இருக்காங்களேன்னும் நாம அவங்களப் பாத்து அனுதாபப் பட்டு இருகோம். ஆனா அவங்க பக்கத்துல இருந்து நாம நம்மள பார்த்தது இல்ல. அந்த மகிழ்ச்சிக்காரர்களின் பார்வையில் நாமதான் பரிதாபப் பிராணிகளா இருக்குறோம். நான் சொல்ற மகிழ்ச்சிக்காரங்க யாருன்னு கேட்குறீங்களா? எல்லாம் பாதள இரயில் பாதையில் பாட்டுப்பாடியும், சும்மா "God Bless You" அப்படீன்னு சொல்லியும் இன்னும் பல வித்தைகளைச் செய்தும் வாழ்க்கைய ஓட்டும் மக்கள்தான். அதாவது பிச்சைக்காரர்கள்.

நம்ம எல்லாரும் இவங்களப் பிச்சைக்காரர்கள் அப்படீன்னுதான் நினைச்சுக்கிட்டு இருக்கோம். உண்மை அதுவல்ல. அதுல பல கலவைகள் உண்டு. பாதிக்கு மேல பணத்துக்காக மட்டுமே இந்த மாதிரி பாட்டுப்பாடி வித்தை காட்டும் மக்கள் இருந்தாலும் சில வித்தியாசமான ஆட்களும் உண்டு.இந்த கூட்டத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்தவர் ஒரு பெண். யாருப்பா அங்க ஜொள்ளுன்னு சிரிக்கிறது? இவர் பெண் என்பதால் ஒரு கவர்ச்சி இருந்தாலும் இவர் வயலின் வாசிக்கும் விதமே அழகு. தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியான நேரத்திற்கு வந்து விடுவார். வந்து ஏதோ ஒரு முற்றும் துறந்த ஞானிபோல அமைதியாய் வயலினை எடுத்து சாந்தமான இராகத்தை இழுக்க ஆரம்பித்து விடுவார். பெரும்பாலும் கண்ணை மூடியே வாசிப்பார். அவர் முன்னே இருக்கும் அந்த வயலின் பொட்டியில் எப்போதாவது நாணயமோ டாலர் நோட்டோ தென்படும்.


தினமும் இவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என்ன பணம் வந்துவிடப்போகிறது? எதற்காக இம்மாம் பெரிய ஊரில் வேறு வேலை பார்க்காமல் இப்படி பிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்? இப்படிப் பல கேள்விகள். சென்ட்ரல் பார்க் அருகில் நான் வேலை பார்த்து வந்த அலுவலகம் "Big 9 " என்று நியூயார்க் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் அழகான Solow கட்டிடத்தில் இருந்தது. எனது அலுவலத்துக்கு அருகில்தான் நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் இருக்கிறது. மத்தியான நேரத்தில் சாப்பாடு முடித்து நேரம் இருந்தால் அப்படியே கொஞ்ச நேரம் இங்க சுத்திக் கொண்டு இருப்பது வழக்கம்.ஒரு நாள் அதே பெண்ணை இங்கேயும் பார்க்க நேர்ந்தது. ஆனால் வயலின் வாசிப்பாளராக இல்லை. யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.


இவரைப் பலமுறை பாதாள இரயில் பாதையில் பார்த்து இருப்பதால் சட்டென்று அடையாளம் காண முடிந்தது. சரி இவர் பாட்டுப்பாடி பிச்சை மட்டும் எடுக்கும் இரகம் அல்ல. நம்மைப் போல் ஒரு சமுதாய வாழ்க்கையும் கொண்ட ஒரு சக மனிதர் என்று வகைப்படுத்திக் கொண்டேன். அதற்குப் பிறகும் இவரைப் பலமுறை அதே பாதாள இரயில் பாதையில் பார்த்து இருக்கிறேன்.நாளாக நாளாக இவரிடம் ஒரு தலை நட்புக் கொள்ள ஆரம்பித்தேன். நேரடியாக பேசுவதற்குப் பயமோ தயக்கமோ இல்லை. எப்பப் பாத்தாலும் கண்ணை மூடிக்கிட்டே ஒரு ஞானி தோரணையில் சாந்தமாக வாசிக்கிம் இவரைம் போய் "எஸ்சுக்கூசுமீ" என்று சொல்லி மிரள வைக்க விருப்பம் இல்லை.


தினமும் ஓடிக்கொண்டும் பொருளீட்டும் பொருட்டு ஊர்,நாடுவிட்டு வந்து இப்படி பரதேசியாய் அலையும் எனக்கு , அதே நியூயார்க்கில் கவலையே இல்லாமல் சாந்தமாய் தினமும் மகிழ்ச்சியாய்த் தோன்றும் இந்த பெண்ணைப் பார்த்தால் ஒரே பொறாமையாய் இருக்கும்.





ஒரு சுபயோக சுபதினத்தில் நான் வேலை செய்துவந்த புராஜக்டடுன் நான் வேலை பார்த்து வந்த அலுவலகம் தன்னையும் ஊத்தி மூடிக்கொண்டது. அப்புறம் நாமல்ல வேலை செய்றோம். கொஞ்சநாள் பெஞ்சத் தேச்ச பிறகு, Greene Street பக்கம் உள்ள Soho ஏரியா பக்கம் ஒரு பொட்டிக் கம்பெனியில் வேலை கிடைத்தது. இந்த Soho ஏரியா சினிமாவில் காணும் நியூயார்க் பிம்பத்தில் இருந்து ரொம்பவும் வித்தியாசமானது. நிறைய ஓவியக் கண்காட்சிகளும் இன்னும் பல கலைச் சமாச்சாரங்களும் அடங்கிய ஒரு அரதப் பழசான ஏரியா. நம்ம கொத்தவால் சாவடி மாதிரியே ஆனால் கொஞ்சம் பிரமாண்டமாய் இருக்கும். ஒரு நாள் இந்த ஏரியாவில் அதே வயலின் பெண்ணை ஒரு ஓவியக் கண்காட்சியில் பார்த்தேன். ஒரு ஓவியத்தின் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தார். என்னால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஆனால் இருந்த கூட்டத்தில் ஒன்றும் பேச முடியவில்லை.

அப்படியே நாட்கள் ஓடிவிட்டது. அந்தப் பெண் வழக்கம் போல் பாதாளப் பாதையில் வயலின் வாசித்துக் கொண்டுதான் இருந்தார்.ஒருநாள் இந்த வயலின் பெண்ணை எனது அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு தபால் அலுவலகத்தில், அங்கே பணி செய்பவராக பார்த்தேன் எனக்கு மறுபடியும் கிறுக்குப்பிடித்தது. யார் இவர்? ஒருவழியாக அன்று அவரிடம் நான் பேசினேன்...

(தொடரும்)

****************


****************

Saturday, January 28, 2006

இறுதியாக தமிழ்மணம் நண்பர்களுக்கு

நான் காசியிடம் கேள்வி கேட்டமைக்காக உண்மையான பெயரிலும் ,அனானியாகவும் , போலிப் பெயரிலும் வந்து காசி எது தேவை இல்லை என்று முயற்சி செய்கிறாரோ அதே வகைப் பின்னூட்டங்களை என் மீதும் கொட்டியமைக்கு நன்றி. பலரிடம் நேரில் பேச ஆசைதான் ஆனால் அவர்களின் பிளாக் ப்ரொஃபைல் மயில் முகவரி இல்லாமல் இருக்கிறது.
நான் தான் போலி டோண்டு என்று சொல்லி போலி டோண்டுவைத் திட்டுவதாக நினைத்து என்னைத் திட்டி அதே வகைப் பின்னூட்டம் வந்து இருக்கிறது. அது போல் நான் தான் அவர் ,இவர் என்று பல அனுமானங்கள். இருந்து விட்டுப் போகட்டும்.குஷ்பூ,பிராமண மற்றும் மதப் பதிவுகளுக்கு பிறகு ஆக்ரோசமான தாக்குதல்களை காசியிடம் கேள்வி கேட்ட எனது இந்தப் பதிவில் தான் பார்க்கிறேன்.

உங்களது பதிவுகளிலேயே என்னைப்பற்றி விமர்சனம் செய்து நேரிடையாக கல்வெட்டு இப்படி என்று பேர் சொல்லியே எழுதவும். எதற்கு கிசு கிசு பாணியில் பின்னூட்டம் இட வேண்டும்?

இலவச சேவையாக இருந்தாலும் பொதுவில் வந்துவிட்டபின் பதில் சொல்ல வேண்டியது இலவச சேவை செய்பவரின் கடமை. நான் மாதத்தில் பல முறை தெருவில் நின்று பலூன் செய்து பல சேவை நிறுனவங்களுக்கு நிதி திரட்டுபவன். இலவசமாகச் செய்தாலும் போலீஸ் முதல் பல இடங்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப் பட்டவன். அதுபோல் என்னிடம் வந்து இலவச சேவை பெறும் குழந்தைகளின் பெற்றோருக்கும் பதில் சொல்ல கடமைப் பட்டவன். ஓசியாத்தேனே வாங்கிற அப்பால போ என்று சொல்லமுடியாது.

செஞ்சிலுவைச் சங்கம் இலவசமாக பல உதவி செய்கிறது என்பதற்காக அது கேள்விக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு கிடையாது. மக்களுடன் நேரடியாக களத்தில் இறங்கி சேவை செய்யும் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

நான் என்ன செய்கிறேனோ அதைப் பற்றி கொஞ்சம் இங்கே எழுதுகிறேன் அவ்வளவே. தமிழ்மணத்தின் (அல்லது நிர்வாகியின்) பதிலில் எனக்குத் திருப்தி இல்லாததால் நான் என்னை தமிழ்மணத்தில் இருந்து விலக்கிக் கொண்டு விட்டேன்.

நான் எப்போதும் போல் கல்வெட்டு மற்றும் பலூன் பதிவில் எழுதுவேன்.

நான் காசியுடம் தொலைபேசியில் பேசியும், எனது நிலைமையயும் கூறிவிட்டேன். அவரும் அவரின் நிலையை கூறிவிட்டார்.

காசி யாத்திரை காட்சி முடிந்து விட்டது நண்பர்களே கலைந்து செல்லுங்கள். எதற்கும் நிறைய ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன். :-)))))))))

ரகு மற்றும் ஜோ உங்களுக்கிடையேயான விவாதங்களும் (நல்லவிதமாக இருந்தாலும்) முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதால் நிறுத்தி வைக்கிறேன். மன்னிக்கவும். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.


****************


****************

Friday, January 27, 2006

இது எதிர்பார்த்ததுதான்

இது எதிர்பார்த்ததுதான்.

பிடிக்கவில்லையா ஓடு என்பதும், நீ இந்தப்பக்கம் இல்லை என்றால் அந்தப் பக்கமே தான் என்று புஷ்த்தனமாகப் பேசுவதும் எதிர் பார்த்த ஒன்றுதான்.

என்ன கேட்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ள விரும்பாமல் வேறு விசயங்களைப் பற்றிப் பேசுவது எனது கேள்விக்குப் பதில் அல்ல.

* எனக்குத் தமிழ்மண சட்ட திட்டங்கள் தெரியும். எதற்கெடுத்தாலும் terms பார் என்று சொல்வது தேவை இல்லாதது.

*ஆபாசப் பின்னூட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டியவை. நிறுத்தப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப் படவேண்டியவை.இதில் மாற்றுக் கருத்து இல்லை.

*எனது பதிவில் இதுவரை யாரையும் தாக்கிப் பின்னூட்டங்கள் வந்ததும் இல்லை. அப்படி வந்து இருந்தால் காசி என்ன வேறு யாரும் சொல்லாமலே நான் இவைகளைச் செய்து இருப்பேன்.

நான் எழுப்பிய கேள்விகளே வேறு. நான் என்ன கேட்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே நான் ஏதோ தேசத்துரோகமான கேள்வி கேட்டுவிட்டேன் என்று கேள்விகளைத் திசை திருப்புவதும்,காசியை கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக அவரது அபிமானிகள் என்னை தனிமனிதத் தாக்குதல் செய்வதும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது.

தமிழ்மணத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

http://kalvetu.blogspot.com/
http://balloonmagic.blogspot.com

முறைப்படி adm@thamizmanam.com -க்கு மயில் அனுப்பியாகி விட்டது.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

****************


****************