வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.
இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.
எல்லோரும் ஓ வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.
பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.
நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும. எப்படி இருக்கிறீர்கள? என்று.