Wednesday, June 12, 2019

"கிருசுணசாமி 2.0" ஆக மாறிவரும் ரஞ்சித்: சாதி வேட்பாளர் மற்றும் பொதரவண்ணார்

ந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தேன். பொம்மைத்தனமாக கார்ட்டூன் படங்களில் வந்து போய் கொண்டிருந்த ரசினியை, ரஞ்சித் இதில் நடிக்கவைத்துவிட்டார் என்பதற்காக, ரசினி ரசிர்கள், ரஞ்சித்தை திட்டிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது நான், இந்த ரஞ்சித் வெற்றிபெற வேண்டும் என்றே நினத்தேன்.

மனித‌ அவலங்களை குறியீடுகளாக வெகுசன சினிமாவில் கடத்தத்தெரிந்தவன் மிக அவசியம். அதுவும், ரசினி போன்ற பெரிய ஒலிபெருக்கி வாயிலாக சொல்லப்படும் சின்ன செய்திகளும், அதிக மக்களைச் சென்றடையும். ஆம்,சினிமா வலிமையான ஒன்று.

காலா என்ற படம். அதே ரசினையை வைத்து, அதே ரஞ்சித் எடுத்தார். அதையும் ரஞ்சித்திற்காகவே பார்த்தேன். படு குப்பையான ஒன்று. தன் இலக்கை மறந்துவிட்டார் ரஞ்சித் அல்லது புதிய இலக்கை வகுத்துக்கொண்டார் என்றே எனக்குத் தோன்றியது.

"ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்"
"ரசினி இனிமேல் ரஞ்சித் படத்தில் நடிக்கக்கூடாது" என்றெல்லாம் "ரசினி காவடிகள்" கூவ ஆரம்பித்துவிட்டார்கள். இதில் குறிப்பாக அய்யர் & அய்யங்கார் சாதி வெறியர்கள், "ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்" என்று கொதித்தார்கள். அவர்களின் கவலை,  ரசினி தோற்றுவிடுவாரோ என்று அல்ல. அவர்களின் intent ,"இப்படி ரசினி இவருக்கு ஒலிபெருக்கியாய் இருந்தால், எங்கே ரஞ்சித் வென்றுவிடுவாரோ?" என்ற கவலையே. 

**
ரசினி காசுக்கு நடிக்கும் ஒரு நடிகர். தனக்கு காசு கொடுத்து, யார் நடிக்கக்கூப்பிட்டாலும் போகும் சந்தையில் இருப்பவர். ஒரு கதையில் நடிக்க சரி என்று ஒப்பந்தம் போட்டபிறகு, இயக்குநர் சொல்வதை நடித்துக் கொடுக்க வேண்டிய தொழிலாளி ஒரு நடிகன். படம் என்றுமே இயக்குநரின் படம்தான். மேலும் காசு கொடுத்து ஏமாற்றிவிட ரசினி ஒன்றும் சிறுபிள்ளை அல்ல. நியாயமாக கொடுக்கவேண்டிய வேண்டிய வாடகைப்பண‌த்தையே , "கொடுக்க முடியாது" என்று வழக்குப்போட்டு இழுத்தடிக்கும் குடும்ப பாரம்பரியம் கொண்டவர் அவர்.

கலையுலகில் ரஞ்சித்தின் வெற்றி அவசியமான தேவை, என்பது என் நிலைப்பாடாகவே இருந்தது. அதற்கு ஒரு காரணம்,அந்த பணத்தை ரஞ்சித்முதலீடு செய்த Casteless Collective போன்ற முயற்சிகள். ரஞ்சித் ரசினி என்ற பொம்மையை வைத்து சம்பாரிக்கும் பணம், இப்படியான நல்ல முதலீடுகளாக ஆவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
**

ரஞ்சித்திற்கு திராவிட & பெரியாரிய ஒவ்வாமை உள்ளது என்பதை நான் ஆரம்பத்துலேயே கணித்துவிட்டேன். சீமான் ஒரு மக்கு என்பதை, அவரின் ஆரம்ப காலத்திலேயே கணித்து, சக பதிவர் ஒருவருடன் நீண்ட உரையாடல் நடந்தது. 

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html
**
ரஞ்சித் பிற்காலத்தில் ஒரு சீமானாக மாறுவார் என்ற பயம் எனக்கு உள்ளூர இருந்தது . ரஞ்சித் மறந்தும் , 2019 பாராளுமன்ற தேர்தலில் திருமாவிற்காக வாக்கு கேட்டு ரோட்டில் இறங்கவே இல்லை. திருமாவின் வெற்றி இழுபறியாக இருந்து, அனைவருமே கவலையில் இருந்தபோது, ரஞ்சித் எதுவும் பேசவில்லை. வெற்றி அடைந்ததும், சாதி அடையாளத்தை தூக்கிக்கொண்டு தெருவிற்கு வந்து வாழ்த்துச் சொன்னார். அதே சமயம், அவர் மறந்தும் ஆ.ராசாவை வாழ்த்தவில்லை. ஏன் என்றால் ரஞ்சித்தின் திமுக திராவிட ஒவ்வாமை. 

ரஞ்சித்தின் தற்போதைய பேச்சு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அவர் சீமானையும் தாண்டி, "கிருசுணசாமி 2.0" ஆக மாறிவிடுவாரோ என்ற பயம் இப்போது எனக்கு வந்துள்ளது.

"உன் கடவுளைத் தின்கிறேன்" என்கிறார். மகிழ்ச்சி கொண்டாடப்படும் புனிதத்தை, தன் உணவை வைத்து தன்னை இழிவுபடுத்தும் கூட்டத்திற்கு, "உன் கடவுளையே தின்பவன் நான்" என்கிறார். சரியானதே. ஆனால், இதுதாண்டி இவரின் மற்ற சில பேச்சுகள் இவரை வெளிப்படுத்துகிறது.


"எனக்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. அடிப்படையில் நான் கலைஞன். பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்." -- ரஞ்சித்

ஒரு சாதியில் ஒரு மதத்தில் ஒரு வர்ணத்தில் பிறந்ததாலேயே ( Just being born into a caste/varnam) எனக்கு சில திறமைகள் வந்தது என்று நம்புவது பார்ப்பனிசம். சனாதன வர்ணம் என்பது, பிறப்பின் அடிப்படையில் சிலவற்றை பிரித்து, தீண்டாமை ( Discrimination) பாவிக்கும் ஒன்று. Fascism,Racism, Nazisim வரிசையில் சனாதன வேத மததின் (aka Hindu) கொடை இந்த Parppanism என்ற பிறப்பின் அடிப்படை தீண்டாமை ( Discrimination) 

நான் அய்யராக/அய்யங்காராக பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் சிலைகள் உள்ள கட்டிடத்தில் கருவறை பூசை செய்பவன் நான்.
நான் வன்னியராக, தேவராக (முக்குலத்தோனாக‌) பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் நான் ஆண்ட பரம்பரை"
நான் பறையனாகப் பிறந்தேன்,  பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்."

இந்த மூன்றிலும் தெரிவது பார்ப்பனிச அறைகூவல்தான்.

ரஞ்சித்திற்கான கேள்வி?
பொதரவண்ணார் (புதிரை வண்ணார்) என்ற ஒரு சாதி உள்ளது. அது பறையர்களுக்கு துணி வெளுக்கும் சாதி. ஆம், அவர்கள் ஆண்ட பரம்பரைக்கோ, அய்யர் பரம்பரைக்கோ துணி வெளுப்பவர்கள் அல்ல. பொதரவண்ணார் சாதி, ஆண்ட பரம்பரை, அய்யர் பரம்பரையின் அழுக்கு பீத்துணிகளைக்கூட வெளுக்க தகுதியற்றவர்கள். ஏன்,கண்களால்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கீழான நிலையினராம்.

"பிறவி பறைக்கலைஞரான" ரஞ்சித் போன்றோரின் அழுக்குத் துணிகளை, வெளுத்து வெள்ளாவி வைக்கவென்றே பிறந்தவர்கள் பொதரவண்ணார்.
உங்களின் "பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்" என்ற சனாதன வர்ண தியரிப்படி , பொதரவண்ணார் பிறப்பின் அடிப்படையில், உங்கள் அழுக்குத் துணிகளை வெளுக்கப் பிறந்தவர்களா என்ன?


"பிறப்பால் பறை அடிக்கும் கலைஞன்" என்று பறைய இனத்திற்கு ஆள் சேர்க்கும் ரஞ்சித்திற்கு, அதே பறையர் இனம், சக்கிலியர் இனத்தின் மீதும், பொதரை வண்ணார்களிடமும் காட்டும் தீண்டாமை தெரியுமா? 

இவர் பிறப்பால் பறை கலைஞர் என்று ( Just being born into a caste/varnam)  இவருக்கு ஒரு தகுதியைக் கொடுக்கிறது என்றால், சக்கிலியருக்கு just being born into a caste/varnam பீயள்ளவும், பொதரை வண்ணாருக்கு just being born into a caste/varnam பீயள்ளிய சக்கிலியருக்கும் , பறை அடிக்கும் பறையருக்கும் துணி துவைக்கும் தகுதியைக் கொடுக்கிறது என்றுதானே சொல்கிறார் இவர்? 

அதாவது சனாதன வேத மதம்(aka இந்து) சொல்லும் வர்ணாசிரம தீண்டாமை அடுக்கை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்? 
**
பொதரை வண்ணார்களின் வாழ்க்கையை,அவர்களுக்கு பறையர், சகிலியர் இனம் கொடுக்கும் தீண்டாமையை அருகில் இருந்து பார்த்தவன் நான்.
அய்யர்/அய்யங்கார்களுக்கு கவுண்ட‌ர், வன்னியர், பறையர், பள்ளர், பொதரவண்ணார் அனைவருமே சூத்திரர்களே. ஆனால், இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் , பிறப்பால் நான் "இவன்" என்று கூவும்போது, இவர்களின் உள்ளிருக்கும் பார்ப்பனிசம் வெளிவருகிறது.
அய்யர்/அய்யங்கார்கள் வைசிய,சத்ரிய,சூத்திரர்களிடம் காட்டுவது பார்ப்பனிசம். வைசிய,சத்ரிய,சூத்திரர்கள் அவர்களுக்குள் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர்,  just being born into a caste/varnam  எனக்கு ஒரு தகுதியை கொடுக்கிறது என்பதும் பார்ப்பனிசமே.

"கொடிய பார்ப்பனிசம்" எது என்றால்  பறையர் & சக்கிலியர்கள் தனக்கும் கீழ் ஒரு அடிமை சாதி உள்ளது என்று கடைசிக் கட்ட  பொதரவண்ணார்களை மிதிப்பது.

**
ரஞ்சித் வரலாறு தெரிந்தவர் என்று இவர் என்று நினைத்து இருந்தேன். மக்கு சீமானாகி, இப்போது குப்பை கிருச்ணசாமி 2.0 ஆகிவிட்டார். நலங்கெட புழுதியில் விழுந்து பொஉரளும் வீணையாகவே நினைக்கிறேன் இவரை. வருத்தமாய் உள்ளது.

திராவிடம் = சமூகச் சமநிலை
ஆரியம் = சனாதன வர்ண discrimination.

ரஞ்சித், திராவிடம் & பெரியாரை ஏற்காதவர். அது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அவருக்கு எதிரி ஆரியமா அல்லது திராவிடமா என்று அவர் சொன்னால் நல்லது.  சினிமாவில் ரசினி போன்ற மனிதர்களின் வாய்ப்பிற்கான சமரசமாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால், பிறப்பின் அடிப்படையில் தனக்கு ஒன்று வந்தது (just being born into a caste/varnam  ) என்று சொல்வது அம்பேத்காரின் அரசியல் அல்ல. அம்பேத்கர் நிச்சயம் உங்களை ஏற்கமாட்டார்.

**
"சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறீர்களே?" என்று சீமான்/கிச்சாத்தனமான கேள்வியை வைக்கிறார் ரஞ்சித்.

ஓட்டரசியல் குறித்து எதுவும் தெரியாத தற்குறியாகவே உள்ளார் இவர். ஓட்டரசியல் கடுமையான சமரசங்களைக் கொண்டது. திராவிடம் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியான கட்சியில் இருக்கும் தலித் தலைவர்களை நினைத்துப் பார்க்கலாம் இவர்.  திமுக‌ ஆ.ராசா  & திமுக‌ கூட்டணியில் இருக்கும் திருமா. இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. 

அம்பேத்கர் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டவர். அதை எதிர்த்து அழிச்சாட்டிய நாடகம் ஆடியவர் காந்தி. "காந்தி செத்தாலும் பரவாயில்லை, உங்கள் இரட்டை வாக்கு கோரிக்கையில் இருந்து பின் வாங்காதீர்கள்" என்று , அம்பேத்கருக்குச் சொன்னவர் பெரியார்.

இன்று தனித்தொகுதி மட்டுமே உள்ளது. ரஞ்சித்தின் நுனிப்புல் அரசியல், அதற்கும் வேட்டு வைத்துவிடும்போல உள்ளது. அருந்ததியினரை முன்னேறியவர்களாக ஆக்கச் சொல்லி, கிச்சா தூதரகம் முன் போராடிய கூத்தாக உள்ளது இவரின் புரிதல்.

**
சமூகத்தில் சாதி உள்ளது. அம்பேத்கர் சொன்னது போல, வர்ணம்/சாதி என்பது கண்ணுக்குத் தெரியும் சுவரல்ல இடித்து விட்டு வெற்றியைக் கொண்டாட. அது மக்களின் மூளையில் இருக்கும் அழுக்குச் சிந்தனை. அப்படியான சமூகத்தில், சாதி பார்த்துத்தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது.

பெரும்பான்மை அரசியல் ஒரு கொடிய சமரச விளையாட்டு. அதிகாரத்தை பெற சில விளையாட்டுகள் தேவை. Absolute தூய்மைவாதம் தேர்தல் அரசியலில் சாத்தியமில்லை.
ஆனால் யார் பேசுகிறார்கள்? ஏன்? என்ற கேள்விகள் முக்கியம். 

கனிமொழி, முத்துராமலிங்கம் சிலைக்கு மாலைபோடும் intent என்னவாக இருக்கும்?
அப்படியான கட்சியில் கூட்டணியில் இருக்கும் திருமாவின் intent என்ன?
சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்திய கலைஞரின் intent என்ன?

இதுதான் நமது கேள்வியாக இருக்கவேண்டும். சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தி, பெற்ற வெற்றி & அதிகாரமே இன்று இவ்வளவு சீர்திருத்தங்களுக்கு காரணமாய் உள்ளது. பெண் சொத்துரிமை முதல், தேவதாசி ஒழிப்பு தொட்டு இன்றைய "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம" சட்டம் வரை, சாதி பார்த்து திமுக நிறுத்திய அதே அரசியல் வெற்றியின் பயன்களே. வெறுமனே மேம்போக்காக சாதி பார்த்து நிறுத்துகிறீர்களே என்பது 'சீமான்'தனம்.
**
தம்பி ரஞ்சித், திராவிடமோ அல்லது அரசியல் அமைப்பான‌ திமுகவோ வளரவேண்டும் என்ற நோக்கில் விமர்சிக்கவில்லை. ஏதோ ஒரு வன்மத்தில்,அடிமரத்தை வெட்ட பார்க்கிறார் கிளையில் அமர்ந்துகொண்டு. பெரியார், அவரின் தம்பிகள் அதிகாரத்தில் இருப்பதை கொண்டாடியவர். தம்பிகள் வெல்ல வேண்டும் என்று விரும்பியவர். விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் intent தம்பிகளின் தோல்வி அல்ல. ரஞ்சித் திருமாவிற்கு ஓட்டு கேட்டாரா என்ன? ரஞ்சித் கிருச்ணசாமியாக வளர்கிறார்.

திராவிடத்தின் சமூகச் சமநீதிக்கான பாதை is not a project with an end date. It's a process.அதிகாரம் இல்லாமல் சாத்தியமே இல்லை

தம்பி ரஞ்சித்திற்கு கேட்கும் உரிமை உள்ளது. தடியெடுத்த பாட்டன் பெரியாரும், படித்த பாட்டன் அம்பேத்காரும், அண்ணாவும், கலைஞரும் அந்த உரிமையை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளார்கள். ஆனால், உரிமை மீட்டவனையே விமர்சனம் என்ற பெயரில் அடிப்பது சரியல்ல. சேர்ந்து பயணிப்பது அவசியம்.

3 comments:

 1. அருமை. இதிலிருந்து சில தெளிவுகளை நான் பெற்றேன். நன்றி தோழர்🙏

  ReplyDelete
 2. மிகவும் நுட்பமான, விழி விரிய வைக்கும் கட்டுரை! இப்பேர்ப்பட்ட ஒரு கட்டுரைக்கு இத்தனை காலமாக ஒரே ஒரு கருத்துரை கூட வரவில்லை என்பதைப் பார்த்து வேதனையடைகிறேன்.

  பிறப்பின் அடிப்படையில் வரும் எந்த ஒரு தகுதியையும், சலுகையையும், பெருமையையும் ஏற்பது இகழ்ச்சி எனும் எண்ணம் எனக்கும் உண்டு வெகு காலமாகவே. ஆனால் பறையிசைக்கும் குடும்பத்தில் பிறந்தவன் நான் என்று அவர் சொன்னதைக் கூட நீங்கள் சாதிய அடுக்கை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என எழுதுவது வியப்பாக இருக்கிறது. பறை இசைப்பதை இழிவானதாகக் கருதும் பொதுப்புத்திக்கு எதிராக - அஃது இழிவானதில்லை பெருமைக்குரியது எனச் சொல்லும் விதமான வாக்குமூலமாகத்தானே அதைப் பார்க்க வேண்டும்? அதற்காக நீங்கள் சொல்வதையும் மறுக்க முடியவில்லை.

  சிறப்பான கட்டுரை! தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்!

  ReplyDelete
 3. ரஞ்சித் ரசினி என்ற பொம்மையை வைத்து சம்பாரிக்கும் பணம், இப்படியான நல்ல முதலீடுகளாக ஆவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.//

  கண்டிப்பாக இதுதான் என் நிலைப்பாடும் . உண்மையில் ரஞ்சித் தரையில் இறங்குவதற்கு தயங்குபவராக எனக்கு முதலில் தெரியவில்லை.

  https://youtu.be/jqoZ9YuVJxM

  சந்தையூர் சுவர் விவகாரத்தில் அவரின் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால் பிறப்பின் அடிப்படையில் அவர் பேசியது முற்றிலும் தவரே.

  ஸ்.ராஜாங்கம் ,ஆதவன் தீட்சாண்யா போன்ற சிந்தனையாளர்களின் வட்டத்தில் உள்ளவர்.ஆதாலால் அயோத்தி தாசரை திராவிடம் ஏந்தி கொள்ளாதது,மேள்வளவு சாதிப்படுகொலை,சென்னை நகரின் மாந்தர்களை நகருக்கு வெளியில் அமர்த்தியது,50 ஆண்டு கால திராவிட அரசியலில் மனித கழிவு தொட்டியில் ஏற்படும் சாவுகளுக்கு தீர்வு காணாதது போன்ற நிறைய மனக்குறைகள் உண்டு .

  இதில் பெரியார் ஏன் அயோத்தி தாசரை தூக்கி பிடிக்கவில்லை என்பதை தர்மராஜின் புத்தக வெளியீட்டில் சமஸ் அவர்கள் கொடுத்த காரணங்கள் தெளிவு தந்தது.

  பிழைகள் இருப்பின் திருத்தவும்.நன்றி

  ReplyDelete