Friday, January 22, 2010

தூசி தட்டிய சில பதிவுகளும் தொக்கி நிற்கும் கேள்விகளும்

சு டர்: இன்னும் எத்தனை நாளைக்கு நம் உயிர்ச்சுடர்?    என்ற பதிவில் உஷா அவர்கள் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
//உங்களிடம் இரண்டு கேள்விகள்.
1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?
2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா?

//
இது குறித்து பதில் எழுத வேண்டும்.
மேலும் காதல், தாலி, இந்து மதம், சனாதனம் குறித்தும்......

                                                                                                                                                             






Image courtesy  http://www.freefoto.com


தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது. சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன்.  திரும்பிக்கூட பார்க்காமல் அந்த பூக்களுக்கு விடை கொடுத்தேன். அவை நாளையும் இருக்குமா என்று தெரியாது.

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.

எல்லோரும்வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.

பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.

 ‍‍‍‍‍‍‍நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும் "எப்படி இருக்கிறீர்கள்?" என்று

2 comments:

  1. //1- பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம் ஏன் தமிழகத்தில் தோற்றுப் போனது?
    2- ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா?//

    முன்னுக்கு பின் முரணான கேள்விகள் !

    ஏழ்மை, வறுமை, மத, இன, சாதி பேதங்கள் இவையெல்லாம் உலகில் என்றாவது மறையுமா? என்ற கேள்விக்கு விடையாக வந்தவர் தானே பெரியார். :)

    ஆலய நுழைவு அனைவருக்கும் ஏதுவாக ஆகி இருக்கிறது. இன்னும் சொல்லுகிறார்கள் பெரியார் தோற்றாராம் ! அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. //இது குறித்து பதில் எழுத வேண்டும்.
    மேலும் காதல், தாலி, இந்து மதம், சனாதனம் குறித்தும்......//

    நானும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்!

    ReplyDelete