Friday, July 02, 2010

தமிழ் நாட்டில் பள்ளிகளில் சாதி, சமயம் (மதம்) கட்டாயம் இல்லை : தமிழக‌ அரசாணையை தரவிறக்கம் செய்து கொள்ள‌

மிழ் நாட்டில் , பள்ளி விண்ணப்ப படிவங்களில்  சாதி , சமயம் (மதம்) குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. அரசாணை 1210    2.7.1973

 து தமிழக அரசின் அதிகாரபூர்வதளம்.  இந்த தளத்தில் அரசாணை உள்‌ளது.
http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/sed/sedums205.htm

நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தமிழக அரசு பயன்படுத்தும் கம்பன் எழுத்துருவை உங்கள் கணனியில் நிறுவ வேண்டும். அது கிடைக்கும் இடம்.http://www.tn.gov.in/tamiltngov/misc/fontdload.htm அரசாணையை தரவிறக்கம் செய்து இங்கே சேமித்து உள்ளேன். இங்கே உள்ள பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 ==> G.O.1210_From_TamilNadu_Gov.pdf






மேலும் கீழ்வேளூர் வட்டாரம் - நாகை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு  ஆசிரியர் , மாணவர்களுக்குத் தேவையான பல அரசாணைகளை தொகுத்து வைத்துள்ளது. http://koottanigo.blogspot.com/  இங்கேயும் அனைத்து படிவங்களும் பள்ளி சம்பந்தப்பட்ட அரசாணைகளும் கிடைக்கும். இவர்கள் தளத்திலும் மேற்கண்ட அரசாணை வண்ணத்தில்  கிடைக்கிறது. அதையும் பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 ==>  G.O.1210_From_Teacher_Website.pdf



***



சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html


அரசாணை 1210    2.7.1973
TamilNadu G.O  1210 Dated     2.7.1973

34 comments:

  1. இதன் மூலம் இடப்பங்கிட்டின் பலனை மக்கள் இழக்க வாய்ப்புள்ளதா..?

    ReplyDelete
  2. தொடர்ச்சிக்காக

    ReplyDelete
  3. இது கல்லூரிகளுக்கும் பொருந்துமா? அப்படியானால் சாதிவாரியான இட ஒதுக்கீடு என்ன ஆகும்?

    ReplyDelete
  4. TBCD , Nadesh


    இன்னும் இரண்டொரு நாளில் இங்கேயே விரிவாக எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  5. நண்பன் பெயர் ஆண்டனி தியாகராஜன்!

    அவனது இரு மகள்கள் திருச்சியில் படித்து வருகிறார்கள், நண்பன் ஒரு ஹோட்டலில் குக்காக வேலை செய்கிறான்!

    குழந்தைகள் இருவரும் நன்றாக படிக்க கூடியவர்கள், பள்ளியில் ஸ்காலர்ஷிப் தர தயாராக இருக்கிறார்கள், ஆனால் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள், கொடுக்க இஷ்டமில்லை என்று சொன்னால் ஸ்காலர்ஷிப் கட்டாம்!

    அதற்கு சட்டத்தில் இடமுண்டா!?
    படிப்புக்கு ஸ்காலர்ஷிப்பா, சாதிக்கா?!

    ReplyDelete
  6. கல்வெட்டு, அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)

    ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )

    ( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது )

    ReplyDelete
  7. //( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )//


    மக்களால் மக்களுக்கு ஏற்படுத்தபட்ட அரசுக்கு நன்றி சொல்லியே ஆகனுமா!?

    அவர் என்ன ராணுவ ரகசியத்தையா வெளியிட்டார், மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசாணை தானே!

    ReplyDelete
  8. வி.சி.டி, டி,வி,டிக்கள் வாடகைக்கு அல்ல, அவை சொந்த உபயோகத்திற்கு மட்டுமே, வாடகைக்கு அல்ல என அச்சடிக்கபட்டிருக்கும்! அதை தான் பத்ரி, தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார், சினிமா தியேட்டர் மாதிரி இன்னைக்கு இன்ன படம் என்று விளம்பரம் வெளியிட்டு திரையிடப்படுவதும், அரசாணையை வெளியிடுவது ஒன்றா!?

    இதுக்கு நன்றி தேவையேயில்ல, சரி இருக்கட்டும் சொல்லிக்கலாம், பத்ரி அந்த பட தயாரிப்பாளருக்கு நன்றி மட்டும் சொல்லிட்டா அது குற்றமற்ற செயலாகிருமா!?

    என்னாங்கய்யா இது சின்னபுள்ளதனமா இருக்கு!

    ReplyDelete
  9. .

    ரங்கன்,
    லூசாப்பா நீங்க?

    யார் அந்த அதிகாரி? நிச்சயம் நான் அவரிடம் பேசத்தயார்.

    அரசாங்கத்தின் அதிகார்வபூர்வ தளத்தில் இருக்கும் ஒன்றை சுட்டி கொடுத்து அப்படியே வெளியிடுவதாலோ அல்லது அதை பிடிஎஃப் கோப்பாக வெளியிடவோ யாருடைய அனுமதியும் தேவை இல்லை.

    இந்தச் சட்டம் மக்களுக்காக போடப்பட்ட ஒன்று. அதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு அதன் தளத்தில் வெளியிட்டு உள்ளது. இது இரகசியக் கோப்போ அல்லது காப்பி ரைட் சட்டத்திற்கு உள்ளானதோ அல்ல.


    இந்த ஆவணத்திற்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி கெளரி சங்கருக்கா? இது என்ன அவர் எழுதிய கதையா? அரசின் ஆவணம் அய்யா. அரசின் கெஜட் பற்றி ஏதாவது தெரியுமா? அது ஒரு பொது ஆவணம். அது போல எல்லா சட்டங்களும் அரசின் பொது ஆவணம்.

    ReplyDelete
  10. .

    Rangan Kandaswamy ,

    தவறுகள் நிச்சயம் திருத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் அரசுடமை ஆக்கப்பட்ட கதைகள், பாடல்கள் போன்றவையும் அரசின் பொது ஆவணக்களும் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும் முயற்சிகளும் களையப்படவேண்டும்.


    நான் அந்த அதிகாரியுடன் பேச வேண்டும். நீங்கள் உங்களின் இமெயிலில் இருந்து நான் செய்துள்ளது சட்டப்படி தவறு என்று சொல்லி அதைச் சொன்ன அரசு அதிகாரியின் அதிகாரபூர்வ இமெயிலுக்கு CC செய்து எனக்கு அனுப்ப இயலுமா?

    kalvetu@gmail.com

    நான் செய்தது தவறு என்று சட்டபூர்வமாக அவர் சொல்லும் பட்சத்தில் நான் இதை எடுத்து விடுகிறேன் ம‌ன்னிப்பும் கோருகிறேன் .

    அவர் உங்களிடம் சொன்னது சட்டபூர்வமாக தவறான தகவல் என்றால் அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டும்.

    ReplyDelete
  11. http://lawforus.blogspot.com/2010/07/blog-post_07.html?showComment=1278505052268#c1936146868177818864

    ReplyDelete
  12. Rangan Kandaswamy said...

    /// கல்வெட்டு, அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)

    ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )

    ( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது ///

    நன்பர் ரங்கன் கந்தசாமியின் பின்னூட்டம் வியப்பளிப்பதாக இருப்பதுடன், தவறான தகவலை தருவதாகவும் உள்ளது.எனவே இவ்விஷயத்தில் சட்டப்படியான உண்மைகளை தருகிறேன்.
    1. அரசு தஸ்தாவேஜுகள் ( ரிக்கார்ட்)முன்று வகைப்படும்.அவை பொதுமக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய, வேண்டியவை.இரண்டாவது அலுவலக உபயோகத்திற்கானது. இதை பொதுமக்கள் பார்க்க முடியாது. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட நபர் பார்க்கலாம். நகல் பெறலாம். உதாரணம் ஒருவர் விஷயத்தில் அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பான கோப்பு. இதை மற்றவர்கள் பார்க்க முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பார்க்கவும், அதன் நகலை எடுக்கவும் உரிமை உண்டு. மூன்றாவது. ரகசிய தஸ்தாவேஜுகள். இவற்றை பொதுமக்களோ அல்லது அத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கூட பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். இது பொறுப்பான அதிகாரிகளால் மட்டுமே பராமரிக்கப்படும் ரிக்கார்டுகள்.( கான்பிடென்ஸியல் & சீக்ரெட் ரிக்கார்ட்ஸ்)
    அரசு ஆணை என்பது கிட்டதட்ட பிட் நோட்டீஸ் மாதிரி. யார்வேண்டுமானுலும் பிரதி எடுக்கலாம். வெளியிடலாம். அரசாணை மூன்றாம் வகையை சேர்ந்தது என ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறினார் என கூறுவது பெரிய காமெடி. உண்மையில் அவர் அப்படி கூறியிருந்தால், அவரை பற்ரிய தகவலை கொடுங்கள். அவர் பணியிலிருந்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதைப்பற்றிய விளக்கத்தை அதிகாரப்பூர்வமாகவே பெறலாம்.
    எந்த சட்டத்தின் கீழ், சட்டப்பிரிவின் கீழ் இது தவறு என்று ரங்கன் கந்தசாமி அந்த அதிகாரியிடம் கேட்டு சொன்னால் நல்லது.

    ReplyDelete
  13. .


    பொதுவான சட்டங்கள் , அரசாணைகள் மக்களை அடைந்தால் தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ள வசதியாய் இருக்கும் என்ற எண்ணத்திலேயே, சட்டத்திற்கு உட்பட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டது. மற்றபடி அரசின் சட்டத்தையோ அல்லது காப்பிரைட் உரிமைகளையோ தெரிந்தே மீறுவது நோக்கம் அல்ல.

    **

    எனது வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பிரச்சனைக்கு சட்டப்பார்வை அளித்த "திரவிய நடராஜன்" அவர்களுக்கு நன்றி!

    திரவிய நடராஜன்-சட்டம் நம் கையில்
    http://lawforus.blogspot.com/

    ReplyDelete
  14. .

    அன்புள்ள Rangan Kandaswamy,

    உங்கள் ஐ.ஏ.எஸ் நண்பரிடம் தெளிவான விளக்கம் கேட்டு பதில் சொன்னால் தவறை திருத்திக் கொள்ள எனக்கு வாய்ப்பாக இருக்கும்.

    அவர் சொல்லும்படியே அரசாணையை பிரதியெடுப்பது சட்டப்படி குற்றம் என்றால், 'திரவிய நடராஜன்' அவர்கள் சொன்னது போல அதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கொண்டுவது நாம் சரிபார்த்துக் கொள்ளலாம். இது இலாகா பூர்வ விளக்கங்களைப் பெற உதவியாய் இருக்கும்.

    ஏன் என்றால் நான் மட்டும் அல்ல கீழ்வேளூர் வட்டாரம் - நாகை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆசிரியர் , மாணவர்களுக்குத் தேவையான பல அரசாணைகளை தொகுத்து வைத்துள்ளது. http://koottanigo.blogspot.com

    அனைவருக்கும் உதவியாய் இருக்கும்.

    .

    ReplyDelete
  15. வால்பையா நீங்க வளரலே. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உங்களை சந்திக்கணும். நீங்க ரொம்ப குசும்பான ஆளுங்க. நல்ல எழுதுறீங்க.

    கல்வெட்டு

    முகம், பெயர், இருப்பிடம் தெரியாத நீர்.... எனக்கு எந்த விவரமும் கொடுக்க இஷ்டம் இல்லை. ஒரு முறை சந்திக்கலாம் பிறகு சொல்கிறேன். நீங்க நம்மூர் பக்கம்னு நினைக்கிறேன். ( என் எழுத்து ஸ்டையில் அப்படியே.. )

    ஆனாலும், நேர்மையா ஒன்று சொல்கிறேன்.... ( ராம் ஜெத்மலானிக்கே மாவோவிஸ்டுகள் பற்றி காரமாக மெயில் அனுப்பியவன் நான்.. )

    என் நண்பருடைய பாயிண்டே, அந்த அரசு தளத்திற்கு நன்றி போடுவது பற்றி தான். என்னுடைய பாயிண்டும் அது தான். இஷ்டத்திற்கு எடுத்து நீங்கள் வெளியிடுவீர்கள்... உங்கள் தளத்திற்கு விளம்பரம் ஆகுது.... நோய்கூறு மனநிலை.... நான் உதவுகிறேன் என்ற நல்லெண்ணம் மட்டும் போதாது. நன்றியும் சொல்லுங்கள்... அதற்கு எந்த ஆர்.டி.ஐயும் வேண்டியது இல்லை... குட் சமரிடன் சட்டம் ஒன்று போதும். ( ஆர்.டி.ஐ வைத்து மிரட்டும் சிலரை பற்றியும் சில தளங்களில் நீங்கள் பார்க்கலாம்... ஆனாலும் கீழ் ஜாதி முகத்திரை வைத்துக்கொண்டு நில வியாபாரம் செய்து வரும் எம்.எல்.ஏ ஒருவரை பற்றி யாரும் ஆர்.டி.ஐ. போடக்காணோம்...)

    தமிழக அரசு வெப்சைட்டுக்கு நன்றி என்று எழுதினாலும் நீங்கள் சாமானியன் தான். எந்த மாற்றமும் இல்லை. ( இதற்கு உங்கள் பத்ரியுடன் விவாதத்தினை மீண்டும் படிக்கவும். )

    ஒரு ஜோக், மேலும் நீங்க சொல்றதை பார்த்தால், யார் வேண்டுமினாலும் கவர்ன்மென்ட் அடிக்கும் நோட்டை கூட நீங்கள் காப்பி அடித்து யூஸ் பண்ணலாம் போல? ( நோட்டடித்துவிட்டு வெறும் "அரசுக்கு" நன்றி போட்டால்... கம்பி தான்... இல்லே திருப்பூர் கருப்பண்ண சுவாமி கண்ணை பறிச்சிடும் ).

    ***

    திரவிய நடராஜன்

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    கல்வெட்டு ( யார் இவர், இதுவரை தெரியாது ) செய்த விவாதத்தின் ஒரு பகுதியாக நான் சொன்னது, அவர் தனது வலைப்பூவில் போட்ட பி.டி.எப் கோப்புக்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்லவில்லை என்பது தான்... காபிரைட் பற்றி ஒன்றும் பேசவில்லை. என் தமிழ் அப்படி புரிந்துக்கொண்டுள்ளார். ( என் செகண்ட் லேங்குவேஜ் ஹிந்தி ஆகையால்... தெளிவான தமிழ் எழுத எனக்கு கஷ்டம். )

    ஒரு பெர்சனல் க்வேச்டியன், ( இங்கு சம்பந்தமில்லாத ஒன்று )
    கிளையன்ட் லாயர் ரிலேசன் இல்லாமல் மேம்போக்காக ஒருவருக்கு சட்ட அறிவுரை கொடுப்பது சட்டப்படி செல்லும்மா? தெரிந்துக்கொள்ளதான்... ( லாயர் - கிளையன்ட் பிரிவிலேஜ் என்று ஒன்று உண்டு. பொதுவில் பேசக்கூடாது அல்லவா? )

    ReplyDelete
  16. Rangan Kandaswamy,

    அரசின் தளத்திற்கு எதற்கு நன்றி போட வேண்டும்? அது என்ன தனியார் தளமா?

    அரசின் அரசாணைகளை பிரதியெடுத்து அலுவலகங்களில் சான்றுக்காக கொடுக்கும்போது அரசிக்கு நன்றி என்று அரசிற்கு நன்றி என்று ஓரமாக எழுதிக் கொடுக்க வேண்டுமா?

    ***

    இது நன்றி சொல்லும் விசயம் என்றால் எதற்கு பத்ரி சார்ந்துள்ள நிறுவனத்தில் நடந்த இணையத் திருட்டு மற்றும் காப்பிரை வயலேசன் குற்றங்களுடன் ஒப்பிடுகிகிறீர்கள்?

    நன்றி சொல்லாத ஒன்றும் சட்டப்படி குற்றமான ஒன்றும் எப்படி ஒப்பிட முடியும்?

    ***

    உங்களை எனக்கோ அல்லது என்னை உங்களுக்கோ தெரியாத பட்சத்தில் நீங்கள் என்மீது எந்த அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்?

    முகம் அற்ற என்னை குற்றம் சுமத்தும்போது அதை உணர்ந்து இருக்க வேண்டும்.

    **

    எனது இமெயில் கொடுத்துள்ளேன். உங்கள் ஐ.ஏ.எஸ் நண்பரின் அலுவல் முகவரியுடன் என்னைத் தொடர்பு கொள்ளலாம். தேவையெனில் பொது வழக்காக இதைச் சந்திக்கலாம். அப்படிச் செய்யும்போது எனது முகமும் உங்களின் ஐ.ஏ.எஸ் நண்பரின் முகமும் சட்டப்படி வெளிப்படுத்திக் கொள்ளலாம். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இல்லையே?

    .

    ReplyDelete
  17. // Rangan Kandaswamy said...
    மேலும் நீங்க சொல்றதை பார்த்தால், யார் வேண்டுமினாலும் கவர்ன்மென்ட் அடிக்கும் நோட்டை கூட நீங்கள் காப்பி அடித்து யூஸ் பண்ணலாம் போல? ( நோட்டடித்துவிட்டு வெறும் "அரசுக்கு" நன்றி போட்டால்... கம்பி தான்... இல்லே திருப்பூர் கருப்பண்ண சுவாமி கண்ணை பறிச்சிடும் ).//

    என்னமாதிரியான ஒப்பீடு இது?

    இது சும்மா நன்றி சொல்லாத ஒன்றிற்கான உரையாடல் என்றால் ..நான் இந்த அரசாணைக்கு அரசின் இணையத்தளத்திற்கு நன்றி சொல்லாததும் பத்ரியின் காப்பி ரைட் வயலேசனும் ஒன்று என்று நீங்கள் கருதினால் அது உங்களின் கருத்து ..மேற்கொன்டு உரையாட ஒன்றும் இல்லை.

    ***
    பத்ரியின் பதிவிற்காக நீங்கள் வக்காலத்து வாங்கியமையால் அவரிடமும் உங்களின் பின்னூட்டம் குறித்து கேட்டுள்ளேன். அவர் எந்த அடிப்படையில் இதை ஒப்பிட்ட பின்னூட்டத்தை அனுமதித்தார் என்று. மற்றபடி உங்களின் உரையாடலில் எனக்கு நன்மையே. நன்றி!

    .

    ReplyDelete
  18. //வால்பையா நீங்க வளரலே. அடுத்த முறை ஊருக்கு வரும் போது உங்களை சந்திக்கணும். நீங்க ரொம்ப குசும்பான ஆளுங்க. நல்ல எழுதுறீங்க.//

    ஆமாங்க நான் இன்னும் வளரல, வரும் போது உரம் வாங்கிட்டு வாங்க ப்ளீஸ்!

    (சும்மா குசும்பு தான்)

    ReplyDelete
  19. .


    //Rangan Kandaswamy said...
    இஷ்டத்திற்கு எடுத்து நீங்கள் வெளியிடுவீர்கள்... உங்கள் தளத்திற்கு விளம்பரம் ஆகுது.... நோய்கூறு மனநிலை.... நான் உதவுகிறேன் என்ற நல்லெண்ணம் மட்டும் போதாது.//

    Rangan Kandaswamy
    நிச்சயம் விளம்பரத்திற்காக அல்ல.
    நான் எனது பதிவை எந்த திரட்டியிலும் சேர்க்கவில்லை அது போல விளம்பரப்படுத்தவும் நோக்கமும் விருப்பமும் இல்லை. கூகிள் வழி விளம்பரங்களைத் தவிர வேறு விளம்பரங்களைச் சேர்க்கவில்லை. அதுவும் ஒரு சோதனை முயற்சிக்காகச் சேர்த்தது.

    **

    நான் எழுதுவதை என்னையும் சேர்த்து சிலர் படிக்கலாம். ஏன் படிக்கிறார்கள் என்பது அவர்களின் உரிமை. பொது வெளியில் உள்ள எழுத்து இது காரித்துப்பும் உரிமை அனைவருக்கும் உண்டு.

    **

    நான் எழுதுவதே நோய்கூறு மனநிலை என்று சொன்னால் அது உண்மைதான். ஒருவித உந்துதலால் எழுதுவதால் அந்த உந்துதல் நோய இருக்கலாம்.

    **

    நான் யாருக்கும் உதவுவது இல்லை. இது யாருக்காவது பயன்படலாம் என்ற நோக்கில் மட்டுமே போடப்பட்டது. ஒரு திசைகாட்டிபோல அதைத்தாண்டி நான் சாமான்யனைவிட மிக குறைந்த மன நிலை கொண்டவனே. என்னைவிட சாதரணச் சாமான்யர்கள் மேல்.

    **
    நன்றி!

    ReplyDelete
  20. Rangan Kandaswamy said...

    //என் நண்பருடைய பாயிண்டே, அந்த அரசு தளத்திற்கு நன்றி போடுவது பற்றி தான். என்னுடைய பாயிண்டும் அது தான். //


    நீங்கள் சொன்னது இரண்டு கூறுகளைக் கொண்டது

    உங்கள் வார்த்தைகள் அப்படியே...

    1. //அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, //

    2. //ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )//

    ***

    எனது கேள்விகள்:

    #1. இங்கே வெளியிட்டுள்ள அரசாணை நகலுக்கு (பி.டி.எஃப் காப்பி)ஏன் அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    #2: ஐ.ஏ.எஸ் அதிகாரி அவர்கள் "நன்றி சொன்னால் நல்லாயிருக்கும்" என்று சொன்னாரா? அல்லது "அனுமதி வேண்டும்" என்று சொன்னாரா?


    .

    ReplyDelete
  21. ஹஹ்ஹஹ்... யாருப்பா அந்த காமெடி பீஸு.. ரங்கன்கந்தஸ்வாமி? இதுக்குப் பேருதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிகிறதா?

    ”காஷ்மீரத்துப் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால், கன்னியாகுமரி பார்ப்பானுக்கு நெறி கட்டும்” என்பார் பெரியார். சரியாகத்தானிருக்கிறது.

    ReplyDelete
  22. பத்ரி தளத்தில் கல்வெட்டு பேசிய ஒரு சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லைதான்.

    ஆனால் ரங்கன் இங்கே வந்து இந்த அரசாணை விஷயத்தில் நீங்கள் குற்றம் காண நிற்பது அற்பத்தனமாய் இருக்கிறது.

    அடிப்படத் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகள், மக்களுக்கு பல அரசாணைகள் சரிவர போய் வராத இந்த நிலையில் இதன் மூலம் கல்வெட்டிற்கு அறுகதை இல்லை என்று சொல்வது ”உங்களுக்கு இப்போ என்ன பிரச்சினை” என்று கேட்கத் தோன்றுகிறது

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. நந்தா,

    // பத்ரி தளத்தில் கல்வெட்டு பேசிய ஒரு சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லைதான்.//
    நந்தா உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன். நான் பத்ரியிடம் தொடுத்த கேள்விகள் அவருடை சில அடிப்படை கொள்கைகள் தொடர்பானது. அது பற்றி மேலும் பேசவிரும்பவில்லை. இருந்தாலும் அது பலருக்கும் ஏற்புடையதாக இல்லை என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.

    ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகிறீர்கள். நன்றி !

    ReplyDelete
  25. அன்புள்ள கண்ணன்,
    முடிந்தவரை தனிமனித சச்சரவுகள் வேண்டாம் என்று நினைக்கிறேன்

    உங்கள் பின்னூட்டத்தை எடிட் செய்து வெளியிடுகிறேன்... மன்னிக்க . உடன்பாடு இல்லை என்றால் இதையும் எடுத்து விடுகிறேன்.

    ‍‍‍‍‍‍‍‍===========

    Blogger Kannan said...

    யாருயா , பொது தளத்தில் (பப்ளிக் டொமைன்) னில் இருக்கும் விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கு அனுமதி கேட்க சொல்றது....?

    ‍‍‍‍‍‍‍‍===========

    ReplyDelete
  26. வால்பையா
    வயல்
    எங்க ஊரிலே காலை கண்டுகளிப்பது தான் செடிகளுக்கு உரம் - நிஜமாங்க மனுஷனுக்கு காம்ப்ளேன் மாதிரி. வெளிக்கு போறது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே? உங்களுக்கு ஒரு பேக்கட் காம்ப்ளேன் பார்சல். ( இதுவும் சும்மா குசும்பு தான்! )

    கல்வெட்டு

    நோட்டடிபதை பற்றி ஜோக்கடித்தால் - புரியாமல் எதோ எழுதுகிறீர்கள். கொடுமைங்க. இலவசம் குறித்து விவாதம் நடந்த போது, டாகுமென்ட் எடுத்த இடத்திற்கு நன்றி சொல்ல எவ்வளவு கஷ்டம் பாருங்க! நேரடி , மறைமுக வரி கட்டினாலும், நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று ( நன்றி - திருவள்ளுவர் அய்யா ) இத்தோடு அந்த "நன்றி" டாபிக்கு முடிவடைகிறது. யாருக்கும் நான் சப்போர்ட் லேது. ( மேலும் காபிரைட் சட்டப்படி - ப்ரிவியு செய்வதற்கு கூட அனுமதி பெற வேண்டும் என்று விவாதம் செய்த இருவருக்கும் தெரியலே - ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்தாலே, ஐ அக்ரீ க்ளிக் பண்ணுறீங்க இல்லையா? அது மாதிரி - ஒரு வாதத்திற்கு அந்த சாப்ட்வேர் உங்கள் கணினியை சிதைத்தால் அவர்கள் பொறுப்பல்ல என்று எழுதியிருப்பார்கள், அதற்கு என்ன பதில்? ஒரு சினிமாவை பார்த்து ஒன்பது கொலைகள் செய்தானாம் ஒருவன் ( நிஜமா தெரியலே) அப்போ அந்த சினிமா கதை, டைரக்டர், தயாரிப்பாளர் மீது தப்பா? )

    உங்கள் மொபையில் நம்பர் கொடுங்கள் பேசுவோம். பெங்களூர் என்றால் ஆகஸ்ட் 1 சந்திக்கலாம். புது நண்பர்கள் ( நல்ல )அடைவது மகிழ்ச்சியே!

    ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன், ( மேலும் )

    திரவியம் நடராசன் ரொம்ப நேர்மையான ஆளுங்க. இலவச சட்ட உதவியால் மென்மேலும் பலர் பயன்பெறட்டும். நன்றிகள். ( என் தமிழ் அறிவு ரொம்ப கம்மி, டைப் செய்தது தப்பிருந்தால் மன்னியுங்கள் )

    காமடிபீசு என்று எழுதும் இன்னொரு பெயர் தெரியாத முகமே... வால்பையன் பதில் தான் உனக்கும், வளர்ந்திடு. போடா அண்டங்காக்கா, நன்றியுள்ள ஜந்து என்று சொல்ல தோணுது தானே... சாரி ... முடியலே... நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  27. //வால்பையா
    வயல்
    எங்க ஊரிலே காலை கண்டுகளிப்பது தான் செடிகளுக்கு உரம் - நிஜமாங்க மனுஷனுக்கு காம்ப்ளேன் மாதிரி. வெளிக்கு போறது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் தானே? உங்களுக்கு ஒரு பேக்கட் காம்ப்ளேன் பார்சல். ( இதுவும் சும்மா குசும்பு தான்! )//


    நீரும், நானுமே பிரபஞ்சத்தின் கழிவு தான், இன்னும் சில வருடங்கள் காய்ந்த வெளிக்கி ஆய் விடுவோம்!(என்னாங்கடா ரெண்டு வாட்டி வருது).

    உமது குசும்பு நாறுவதால் ரசிக்கமுடியவில்லை, அதே நேரம் எதை சொல்வதற்கும் உமக்கு உரிமை இருப்பதால், புன்னகைத்துவிட்டு நகர்கிறேன்!

    ReplyDelete
  28. .
    Blogger Prabhu Rajadurai said...

    http://marchoflaw.blogspot.com/2010/06/blog-post_24.html#6722525799662534781


    Kalvettu,

    There is absolutely no bar in reproducing, whatever information or orders published in TN Government Website. It is not made illegal by any legislation.

    10:39 AM


    ---

    ReplyDelete
  29. // இது தமிழக அரசின் அதிகாரபூர்வதளம். இந்த தளத்தில் அரசாணை உள்‌ளது. //

    இது பதிவிலேயே இருக்கின்றது.

    அவர் ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்லிவிட்டார்.

    இப்ப பிரபு ராசதுறை சொன்னதில், நன்றி போடத்தேவையில்லை என்று சொல்லவில்லை என்று சொன்னாலும் சொல்லலாம் :-)

    இட ஒதுக்கீடுக் குறித்து பதில் சொல்லுங்க :-)

    ReplyDelete
  30. .

    TBCD ,

    :‍))

    அவர் சும்மா சொல்லியிருந்தால் பரவாயில்லை. இந்திய ஆட்சிப்பணித் துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சொன்னபடியால் (//அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு//) எனக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. :-((

    அதனால் 'பிரபு இராஜதுரை' மற்றும் 'திரவிய நடராஜன்' அவர்களிடம் சட்ட ரீதியான விளக்கம் கேட்டேன்.

    **

    இட ஒதுக்கீடு மற்றும் இதைப் பயன்படுத்துவதில் ஏழைகள் , நடுத்தர வர்க்கத்திற்கு உரிய நடைமுறைச் சிக்கலை அடுத்து தெளிவாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  31. //Rangan Kandaswamy said...
    கல்வெட்டு, அரசாங்கத்தின் பி.டி.எப் கோப்புகளை உங்கள் தளத்தில் அனுமதி பெறாமல் வெளியிட்டு, நீங்களும் ஒரு சாமானிய தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். நன்றி. :-)

    ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிய பின்னே இதை எழுதுகிறேன். ( குறைந்தபட்சம் தமிழக அரசுக்கு நன்றி என்று எழுதியிருக்கலாம்! )

    ( ஒருவேண்டுகோள் , நீங்கள் இது வரை இங்கு விவாதித்ததை எடுத்து விடுங்கள். அருகதை கிடையாது )

    Wednesday, July 07, 2010 8:33:00 AM//

    யோவ் என்னாயா கேக்குறீங்க. மக்களால் அமைக்கப் பட்ட அரசு, அதற்கு எதுக்குய்யா நன்றி சொல்லனும். இந்த நன்றி கூட லஞ்சம் மாதிரிதான்.

    ReplyDelete
  32. யோவ் புலிகேசி , இந்த நன்றி கெட்ட உலகம் தான் இவ்வளவு புகைச்சலுக்கும் காரணம். நீ உன் பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம், அவர்கள் உனக்கு ஏதாவது செய்தால் - தேன்க்சோ, நன்றியோ சொல்லிப்பாரு. உலகம் உருப்படும். :-) (ஹோட்டல் டிப்மாதிரி )

    திருப்பூரில் முப்பது வருடங்களாக லாயராக இருக்கும் என் அப்பா ( ஜோக் விசயத்தில் பிரபலம் ) சொன்ன ஒரு ஜோக் மீண்டும் இங்கே, அரசாங்க பேன்க், நம்மது மாதிரி தானே? உள்ளே புகுந்த மாட்டிய திருடன் சொன்னானாம் ஜட்ஜிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடத்தும் வங்கியுள் நான் பணம் எடுப்பது எப்படி குற்றமாகும், என்ற வாதம் ஒன்றும் நன்றி மாதிரி இல்லை. :-)))

    மேலுமேன் அப்பா சொன்னது.... லாயர் கிளையன்ட் பிரிவிலேஜ் இல்லாமல் மேம்போக்காக ஒரு லாயரிடம் உதவி பெற்றால், தவறாக இருந்தாலும், அந்த லாயரை நாளை சுட்டிக்காட்ட முடியாது.

    Damn, you cannot hold him responsible for any judicial mishap.

    அப்புறம் வீரப்பன் புகழ் விஜயகுமார் கூட அவர் ப்ளாகில் அரசாங்க வெப்சைட்டை மேற்கோள் காட்டினால், நன்றி போடுகிறாராம்.

    ReplyDelete
  33. திரு மதிப்பிற்குரிய TBCD, பி.டி.எப்பாக செய்து போட்டது - நன்றியில்லாமல் - மாங்காய் புளித்த கதை தான். :-) நான் சாப்பிடுவது எப்போதும் மாம்பழம் தாம்.

    ReplyDelete
  34. //யோவ் புலிகேசி , இந்த நன்றி கெட்ட உலகம் தான் இவ்வளவு புகைச்சலுக்கும் காரணம். நீ உன் பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம், அவர்கள் உனக்கு ஏதாவது செய்தால் - தேன்க்சோ, நன்றியோ சொல்லிப்பாரு. உலகம் உருப்படும்.// ஐயா நன்றி கெட்ட உலகம்னு சொல்லாதீங்க. மக்களை முடக்கி வைத்திருக்கும் அரசாங்கம் நடத்தும் அரசியல்வியாதிகளுக்கு ஜால்ராவும் அடிக்காதீங்க.

    ReplyDelete